சிறுவயதிலிருந்து அனைத்து பால்புதுமை குழந்தைகளும் படும் கஷ்டங்களை நானும் பட்டதுண்டு. ” நான் ஏன் இவ்வாறு பிறந்தேன்?”. “எனக்கு மட்டும் ஏன் அனைவரை போலவும் எதிர்பாலின ஈர்ப்பு இல்லை? ” இந்த கேள்விகள் என்னை பல நாட்கள் துளைத்தது உண்டு.
எனக்கு இவ்வாறு ஈர்ப்பு உள்ளது…. அது சரிதானா? ஏதும் பிரச்சினையா என்னிடம்? என்று சொல்லி கேள்வி கேட்டு விடைபெறுவதற்கு கூட ஆளில்லலை. இதை வெளிப்படையாக கேட்க எனக்கே சங்கோஜமாக இருந்தது. இவ்வாறு பல இன்னல்களை சந்தித்ததால் என்னால் என்னையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 19 வயது ஆகியும் கூட என்னால் நான் அகனன் என்று என்னை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்தேன்.
நான் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரை என்னால் ஒரு சாதாரண பதின் வயதினரைப் போல மனம் விட்டு சிரிக்கவோ அழவோ கோபப்படவோ முடியவில்லை . ஒவ்வொரு நாளும், அனைவருக்கும் அன்று என்ன செய்ய போகிறோம் என்ற எண்ணத்தோடு ஆரம்பம் ஆகும். எனக்கோ முதல் 2 நிமிடம் அந்த எண்ணம் வரும், பிறகு நாள் முழுக்க “நான் என் இவ்வாறு பிறந்தேன்?” என்று என்னை நானே சபித்துக்கொண்டு அந்த நாளை கடத்துவேன். அந்த எண்ணம், சாப்பிடும் போதும் , வேறு யாருடனோ பேசும் போதும் , அல்லது படிக்கும் போதும் விடாது துரத்தும். மனம் விட்டு சிரிக்க முயற்சி செய்தால் கூட, “ரொம்ப சிரிக்காதே! ஏற்கனவே நீ எந்த நிலைமைல இருக்கனு நெனச்சு பாரு ம்” என்று என் மனமே என்னை வசைபாடும். பத்தாத குறைக்கு நான் வீட்டில் நடந்த பிரச்சனைகளால் உருக்குலைந்து போயிருந்தேன். குறைந்தது 3 முறையாவது தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன்.
நான் பாக்கியம் செத்தவன் போல; தூக்கு கயிற்றுக்கு முன்பு ஒவ்வொரு முறை நான் நின்ற போதும், என்னை ஆதரித்து அன்பு செலுத்திய நல்ல உள்ளங்களுடைய பாசத்தினால் என் காலை அந்த இடத்தில இருந்து தடுமாற செய்து என்னை காப்பாற்றியது . எப்படியோ பிழைத்து கொண்டேன். சரி! வாழும் வரையாவது எதையாவது நன்றாக செய்வோம் என்று நன்றாக படித்தேன். நல்ல மதிப்பெண் எடுத்தேன், என் ஆங்கில ஆசிரியர்களின் ஊக்கத்தால் நல்ல பேச்சு புலமை பெற்று பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வாரி குவித்தேன். மாவட்ட அளவிலான போட்டிகளில் இரண்டு முறை முதலிடம் பெற்றேன். பத்தாம் வகுப்பில் 10/10 மதிப்பெண்கள் பெற்றேன். 12ஆம் வகுப்பில் 1137/1200 மதிப்பெண்கள் பெற்றேன். மருத்துவம் பையில வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போது தான் “நீட்” கட்டாயமானது. முதல் தேர்வில் நான் “பாஸ்” ஆனேன். ஆனால் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை.
பிரச்னை வெளியே உள்ளது! நான் வாழும் இடம் சரியில்லை என்று நினைத்தேன். நான் வாழும் இடத்தை விட்டு எங்காவது தூர ஓடினால் போதும் நிம்மதி வரும் என்று நினைத்தேன். பிரச்சனையே நான் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளாதது தான் என்று தெரியாமல் இருட்டில் மூழ்கி கிடந்தேன். பெங்களூருவுக்கு சென்று நீட் கோச்சிங் எடுத்தேன். 2017ஆம் ஆண்டுக்கான நீட் கோச்சிங் எடுத்தும் என்னால் தக்க மதிப்பெண் எடுக்கமுடியவில்லை. பத்தாத குறைக்கு உணர்வுகளற்ற ஜடம் போல் இருந்த என்னை நீட் கோச்சிங் மற்றும் கடினமான என் வாழ்வு நடைபிணம் ஆக்கியது. வேலூரில் இருந்து பெங்களூருவுக்கு இரண்டாவது முறையாக 2018ஆம் ஆண்டு மீண்டும் சென்றேன். என்ன படித்தும் என்னால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை பெற முடியவில்லை. எனினும் “குடும்பத்தின் முதல் டாக்டர்” ஆக நான் வரவேண்டும் என்ற வைராக்கியத்தில் “தெலுங்கு மினாரிட்டி”கான நிர்வாக ஒதுக்கீட்டில் பணம் செலவழித்து என்னை என் அம்மா படிக்க வைத்துக்ககொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு ஜடம் போல் இருந்த எனக்கு உயிர் அளித்த 2 விஷயங்கள்: ஒன்று மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது, இரண்டாவது செப்டம்பேர் 6, 2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய 377 ஐபீசி மீதான தீர்ப்பு.
என்னை நான் அப்படியே ஏற்று கொள்வதற்கான விதை அங்கே விதைக்கப்பட்டது. குயர் மக்களுக்காக பாடுபட்ட பல தோழர்களின் யூ டியூப் விடியோக்கள் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது. என்னை அதில் மிகவும் ஈர்த்த குயர் நபர்கள் தனுஜா சிங்கம், ஹரிஷ் ஐயர், மேனகா குருஸ்வாமி, அருந்ததி கட்ஜூ மற்றும் த்ரிநேத்ரா கும்மராஜூ அவர்கள். இவர்கள் எனக்கு கொடுத்த ஊக்கத்தால் நான் என் நெருங்கிய தோழர் மற்றும் தோழிகளிடம் என்னை பற்றி கூறினேன். என் மூத்த சகோதரனிடம் சொன்னேன். அனைவரும் என்னை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு சலுகைகள்(privilige) உள்ள நபராக நான் இருந்தேன். ஆனால் என்னை போன்று சலுகைகள் இல்லாத குயர் மக்களின் குரலாக நான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். என்னை ஆதரித்த கரங்களின் பாசத்தாலும் அன்பாலும் நான் நன்றாக படித்தேன். என்னை பார்த்து “minority quota” நிர்வாக இடஒதுக்கீட்டில் வந்தவன் தானே நீ! என்று ஏளனம் செய்தவர் முன்பு நான் மூன்றில் 2 பாடங்களில் முதலாமாண்டில் distinction(above 75%) வாங்கி பதில் சொல்லாமல் சொன்னேன்.
நான் படிக்கும் மருத்துவ துறையை சேர்த்த புத்தகங்களே நிறைய transphobic மற்றும் homophobic இழிசொற்களை பயன்படுத்தியிருக்கின்றன. முக்கியமாக FORENSIC AND TOXICOLOGY பாடப்புத்தகங்களில் திருநர் சமூகத்தை சார்தவர்களை மரியாதை அல்லாத வார்த்தைகளால் வருணித்து இருப்பார்கள். பொதுவாகவே “standard books” எனப்படும் சர்வதேச அளவிலான மதிப்பை போற்ற மருத்துவ புத்தகங்களில் இவ்வாறு homophobic மற்றும் transphobic வசைச்சொற்கள் இடம்பெறுவதில்லை. இதை விட மோசமான விஷயம் sex(பால்), gender (பாலினம்) மற்றும் sexual orientation ( பாலீர்ப்பு ) ஆகியவற்றுள் உள்ள வித்யாசம் 90% மருத்துவ மாணவர்களுக்கு தெரிவதில்லை. இவ்வாறு அறியாமையிலும் தெளிவற்ற நிலையிலும் பயிலும் இளம் மருத்துவ மாணவர்கள் வருங்காலத்தில் குயர் சமூகத்தை சார்தவர்களை “conversion therapy” எனும் படுகுழிக்குள் தள்ளும் அவல நிலையும் இருக்கிறது. national medical commission இடம் நிறைய குயர் NGOகல் எழுதிய கடிதத்திற்கு வந்த ஒரே பதில் “புதிய மாற்றப்பட்ட புத்தகங்கள் வெளியாக நேரமாகும். அதுவரை காத்திருங்கள்!. என்ற ஒற்றை பதிலே! அவர்களுக்கு தெரியவா போகிறது அந்த மாற்றப்படாத புத்தகங்களால், அதை படித்து மருத்துவராகப்போகும் மருத்துவர்கள் கையில் சிக்கி நாசமாக போவது என் குயர் சமூகத்தை சேர்ந்த அப்பாவி உயிர்களென்று. 2ஆம் ஆண்டு பயில்கிறேன் என்றாலும் 4ஆம் ஆண்டு பாடமான “psychiatry” புத்தகங்களை படித்து எனது நண்பர்களுக்கு குயர் சமூகம் பற்றிய அறிவியல் விளக்கங்கள் கொடுத்துள்ளேன். kaplan and sadock’s copmprehensive textbook of psychiatry என்ற மருத்துவ புத்தகமும், டாக்டர் சைமன் லீவே எனும் குயர் நரம்பியல் ஆராச்சி மருத்துவர் எழுதிய gay, straight and reasons why என்ற புத்தகங்கள் குயர் சமூகம் பற்றிய சில அறிவியல் விளக்கங்களை கொடுத்துள்ளன. இதில் சைமன் லீவே அவர்களின் ஆராய்ச்சி புத்தகத்தை சற்று உயிரியல் தெரிந்தவர்ர்கள் வாங்கி வாசிக்கலாம். இப்புத்தகங்களால் நான் பெற்ற அறிவு மிகவும் அளப்பரியது.
சில அறிவியல் ரீதியான விளக்கங்கள் (ஒரு உதாரணம்)
Q: being queer is unnatural.
ans: anything that exists in nature cannot be unnatural by default. if you break some natural laws to prepare food by photosynthesis from your body or if you travel at the speed of light(both of which are not possible within natural limits) that is unnatural because those things are simply impossible to be defied within natural limits. hence the very existence of homosexuality in more than 500+ species is in itself ஐஸ் a testimony that being queer/ homosexual is natural. ( a conclusion/ answer inspired from yuval novah harari)
இவ்வாறு பல தரப்பட்ட கேள்விகளுக்கு அறிவியல் சார் புத்தகங்கள் பதில் அளித்துள்ளன. அதை ஆயுதமாக கொண்டு குயர் சமூகமாக நாம் பகுத்தறிவு புத்தியோடு நாம் பொது ஜனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நான் இதை மிகைப்படுத்தவில்லை clubhouseஇல் முதுநிலை மனோதத்துவம்(psychiatry) படிக்கும் மாணவரே நான் அவர்கள் படிக்கும் அறிவியல் சார் புத்தகங்களிலிருந்து குயர் சமூகம் பற்றிய அறிவியல் சார் விளக்கங்களை standard textbooksஇல் இருந்து மேற்கோள் காட்டியபோது திக்குமுக்காடிய தருணங்களும் உண்டு.அறிவியலை கேடயமாக கொண்டு நம் குயர் சமூகம் பற்றி பரவிக்கிடக்கும் “stereotype”களை நாம் களைய வேண்டும். இந்த அறிவியல் விளக்கங்ககள் comprehensive sexuality education எனப்படும் பாலின கல்வி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். இந்த அறப்போராட்டத்தில் நமக்கு முன்னோடிகளாக இருந்த அண்ணல் அம்பபேத்கர் ( ரகுநாத் கார்வே வழக்கில் குயர் சமூக மக்களுக்காக 1940ஆம் ஆண்டுக்கு முன்பே போராடிய ஒரே இந்திய வழக்கறிஞர்) மற்றும் பெரியார் அவர்களின் வழியில் நமது pride marchகளில் (சுயமரியாதை பேரணிகளில்) நமது சுயமரியாதை குறள்கள் ஓங்கி ஒலிக்கட்டும். நன்றி.
-விக்னேஷ், மருத்துவ மாணவர்
