குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டோ அல்லது தன் விருப்பத்தால் வீட்டை விட்டோ வெளியே வரும் மாற்றுப் பாலினத்தினரின் முதல் பிரச்சனை உணவும் உறைவிடமும்தான்.
அதற்கு வழியில்லாமல் தான் பெரும்பாலானவர்கள் பிச்சையெடுப்பதிலும் பாலியல் தொழிலும் ஈடுபடுகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டும், மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் விதத்திலும்
Ministry of Social Justice and Empowerment, Garima Grey என்ற பெயரில், டெல்லி, மஹாராஷ்டிரா, பீகார், ஒரிசா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் 12 Pilot Transgender Shelter homes என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
சென்னையில் மார்ச் 2019ல் தொடங்க இருந்த இந்த தங்குமிடம் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தாமதமாகி மார்ச் 2021ல் சென்னை கொளத்தூரில் ஆரம்பமாகியுள்ளது. இதுவே தமிழ்நாட்டில் மாற்றுப் பாலினத்தாருக்காக நடத்தப்படும் முதல் தங்குமிடம் என இதை பொறுப்பேற்று நடத்தும் Transgender associationன் நிறுவனர் மற்றும் இயக்குனரான ஜீவா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் இங்கு வந்து தங்கும் மாற்றுப்பாலித்தினருக்கு தங்குமிடம் உணவு மற்றும் மருத்துவப் பராமரிப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் அடுத்த கட்டமாக அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் டெய்லரிங் பயிற்சி, அழுகுக்கலை பயிற்சி, Jewellery making, Tally, spoken english, driving போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
தற்போது கொஞ்ச காலமாகத் தான் நம் சமூகத்தில் மாற்றுப் பாலித்தினர் பற்றிய புரிதல்களும் விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது என்று நம்பக்கூடிய அதே நேரத்தில், திருநங்கைகளின் நிலமையை விட திருநம்பிகளின் நிலை இன்னும் மோசமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த Transgender Shelter homesன் சிறப்பம்சம் என்னவென்றால். இங்கு திருநங்கைகள் மட்டுமல்லாது திரு நம்பிகளும் தங்க முடியும்.
-தினேஷ்