சத்யா
(அத்யாயம் 10)

இது வரை…

ஆதவனும், சத்யாவும் கிட்டதட்ட 5 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்தனர், ஆதவனுக்கு திருமணவயது எட்டியதிலிருந்தே அவன் பெற்றோர்கள், திருமணத்திற்காக நிர்பந்திக்க, ஒரு கட்டத்திற்கு மேல் ஆதவனால் திருமணத்தை தள்ளிப்போட முடியாத படி சிக்கலில் சிக்கினான். ஆதவனும் சத்யாவை அவன் அப்பாவிடம் வந்து பேச சொல்லி நிர்பந்திக்க, ஒரு ஞாயிற்றுகிழமை சத்யா ஆதவன் வீட்டுக்கு வருவதாக கூறி, ஆதவனும் இரவு வரை காத்திருக்க, சத்யா வரவே இல்லை. ஏமாற்றத்துடனே அன்றைய இரவு கழிந்தது ஆதவனுக்கு. இரவு முழுக்க யோசித்தவன், ஆதவன் உதிக்கும் நேரத்தில் நமது ஆதவனுக்கும் ஒரு முடிவு உதித்தது, ஓடிப்போவதற்காக தயார் செய்துவைத்த லக்கேஜ்களும் அதே ரூமில் தான் இருந்தது, அதை சில நிமிடங்கள் பார்த்தவன் பிறகு…..

இனி….

எழுந்து சென்ற ஆதவன் அந்த லக்கேஜ்களில் இருந்த துணிமணிகளை எடுத்து மீண்டும் தனது கப்போர்ட்டில் அடுக்க ஆரம்பித்தான். காலை 7 மணிக்கு டைனிங்க் டேபிளில் காலை காப்பியை குடித்துக்கொண்டே, அன்றைய தினசரியை மேய்ந்துகொண்டிருந்த அப்பாவிடம்,

“அப்பா….”

“என்ன?”

“அது வந்து….”

“மென்னு முழுங்காம விஷயத்தை சொல்லு…”

“அப்பா உங்களுக்கும் அம்மாவுக்கும் இந்த சம்பந்தம் புடிச்சிருந்தா, எனக்கும் ஓகே பா, எனக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இனிமே இல்லை, நீங்க பார்த்து எது செஞ்சாலும் எனக்கு ஓகே தான் பா”

“என்ன திடீர் இந்த ஞான உதயம்?”

“ஒன்னும் இல்லை பா, நான் இவ்வளவு நாளா ஒரு நிழல் உலகத்துல இருந்துட்டேன் அது தான் உண்மைனு நம்பி ஏம்மாந்துட்டேன், இப்பதான் நான் சில விஷய்ங்கள் எனக்கு புரிஞ்சுது”

ஆதவனின் அம்மா, “என்னங்க, அவனே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான், சட்டுபுட்டுனு ஆகவேண்டியதை பாக்குறதை விட்டு அவங்கிட்ட போய் காராணம் எல்லாம் கேட்டுகிட்டு”

“இல்லடி எல்லாத்தையும் கண்பார்ம் பன்னிக்கனும் இல்லை, கடைசியில எல்லா ஏற்பாடும் பன்னினதுக்கு அப்புறம், இவனால எந்த பிரச்சனையும் வந்துடகூடது இல்லை, அதுக்கு தான் கண்பார்ம் பன்னிகிட்டேன்”

ஆதவனின் அம்மா, “அந்த பொண்ணு பேரு அனு, பிஎஸ்சி படிச்சிருக்கு, உனக்கு ரொம்ப ஏத்த பொண்ணு, பொறுமை அதிகம், அதிர்ந்துகூட பேசாது, ஐயோ எனக்கு இப்ப என்ன செய்யுறதுனே தெரியலை, மொதல்ல, அனு கலர்க்கு ஏத்த மாதிரி 2 பட்டு பொடவை எடுக்கனும் நகை எடுக்கனும்….” ஆதவனின் அம்மா தனக்குள்ள ஏற்பட்ட உற்சாகத்துக்கு அளவே இல்லாம ஓடிவிட்டாள்

உடனே ஆதவனின் அப்பாவும் அம்மாவும் பெண் வீட்டில் பேசி அந்த வார புதன் கிழமையே பெண் பார்க்க சென்றனர், அந்த வெள்ளிகிழமையே நிச்சய தாம்பூலமும், அடுத்து வந்த 3 மாதத்தில் ஒரு முகூர்த்த நாளில் திருமண தேதியும் குறிக்கப்படது.

இளவேனிலுக்கும் விஷயம் தெரிந்து ஆதவனை தனிமையில் சந்தித்து “ஏன் இப்படி ஒரு முடிவு” என கேட்டதற்கு

ஆதவன் “எதை நம்பி நான் சத்யவுக்காக காத்திருக்க சொல்லுறே, இரவு மட்டும் வந்து செல்லும் சத்யாவை நம்பி எதற்கும் பலன் இல்லை, அப்பாவும் அம்மாவும் கேக்குறது அவங்களோட நியாமான ஆசைதானே, சத்யாவுக்கு தைரியம் இல்லை போல அது தான் வரமாட்டிங்குறான், இவனை நம்பியா என் வாழ்கைய ஒப்படைக்க சொல்லுறே, என்னால முடியாது, அது தான் அப்பா அம்மா பார்த்த இந்த பெண் யாராக இருந்தாலும் சரினு சொல்லிட்டேன், கல்யணம் பன்னிகிட்டு விதியேனு வாழ்ந்துட்டு போறதுனு முடிவு பன்னிட்டேன்”

இளவேனில் “நானும் யோசிச்சு பார்த்தேன், இதை விட பெட்டர் சொல்லியூசன் கிடைக்குமானு எனக்கு தெரியலை, அதோட உன் வாழ்கை இப்படிதானு நீ முடிவு பன்னிட்ட, இதுக்கு மேல நான் சொல்லி என்ன ஆகப்போகுது, எப்படியோ நீ சந்தோசமா இருந்தா சரிதான்”

திருமணமும் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள், வயிறு நிறைய சாப்பிட்டு, கை நிறைய பரிசு பொருட்களும், மனமக்களை மனசு நிறைய வாழ்த்திவிட்டு சென்றனர். திருமணம் முடிந்த கையோடு. அன்று இரவே முதலிரவுக்கு ஏற்பாடு நடப்பதை பார்த்து, ஆதவனுக்கு தான் அவசரப்பட்டு இந்த கல்யாணத்துக்கு ஓத்துக்கொண்டோமோ என தோன்ற ஆரம்பித்துவிட்டது.

அன்றை முதலிரவில் மணப்பபெண் அனு, ஆதவனிடம் கொஞ்சம் பேசவேண்டும் என்று ஆரம்பித்து “இல்லை 4 மாசம் முன்னாடி வரைக்கும் நீங்க கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தீங்க, திடீர்னு இப்ப என்னைய கல்யாணம் பன்னிருங்கீங்க, இது என்னைய புடிச்சு நீங்க எடுத்த முடிவா இல்லை, உங்க அப்பா அம்மாவுக்கா எடுத்த முடிவானு எனக்கு கண்டு புடிக்க தெரியலை, மொதல்ல கொஞ்சம் பேசனும் பழகனும் மத்தது எல்லாம் அதுவா, நடக்கும் போது நடக்கட்டும்னு, இதுக்கு எல்லாம் எனக்கு கொஞ்சம் டைம் வேணும், நீங்க என்ன சொல்லுறீங்க?”

“நான் சொல்ல நினைச்சதையே நீயும் சொல்லிட்ட” ஆதவனும் அவன் மனைவியும் அனுவும் அன்றை இரவு, கல்யாண அலுப்பு போக குறட்டைவிடாத குறையாக நன்றாக தூங்கிவிட்டனர்.

அடுத்த நாள் முதல் ஆதவனும் அவன் மனைவி அனுவும் தோழன் தோழி போல கொஞ்சம் கொஞ்சம் பழக ஆரம்பித்தனர். கிட்டதட்ட 3 மாதங்கள் ஆகியும் இன்னும் ஆதவனும் அனுவும் தோழன் தோழி என்ற கட்டத்திலேயே இருந்து வந்தனர். அனுவுக்கு ஆதவன் மீது ஒரு ஆர்வமும், பிடிப்பும் வந்துவிட்டது, ஆனால் ஆதவனுக்கு அனு தன் அருகில் மிக அருகில் வந்தாலே கொஞ்சம் படபடப்பும் பயமும் தன்னாலே வந்துவிடுகிறது, போதாகுறைக்கு அனுவிற்கு அவர்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எண்ணி அவ்வ பொழுது கட்டி அணைப்பதும் மெல்லியதாய் முத்தமிடுவது என முன்னேற ஆதவனுக்கு அவஸ்தையாய் இருந்தது. ஆதவன் முன்னேறாமல் அதே இடத்தில் இருப்பதை கண்டு அவ்வபொழுது, அனுவுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டாள்.

அனு ஆதவன் திருமணம் முடிந்து கிட்டதட்ட ஆறு மாதங்கள் முடிந்த பிறகு, இந்த சமூகமும் சொந்தகாரர்களும் வழக்கமாக புது மண தம்பதிகளிடம் கேட்கும் கேள்வியை அனுவிடம் எடுத்து வீச அவளிடம் எந்த ஒரு பதிலும் இல்லை மெல்லிய புண்னகை ஒன்றை வீசிவிட்டு கடந்து சென்றுவிட்டாள், ஆதவனின் அம்மாவும் கேட்கும் சொந்தகளிடம் பூஜை, விரதம், உடம்புக்கும் முடியலை, சொந்தகாரங்க நல்லது கெட்டதுனு அலைஞ்சுகிட்டே இருக்கோம்னு சொல்லி சமாளித்தாள். அடுத்த இரண்டு மாதங்களுக்கு இதே நிலமை நீடிக்க ஆதவனின் அம்மா, நேரடியாகவே ஆதவனிடம், “என்ன டா ரொண்டு பேரும் ராத்திரியானா இழுத்து போர்த்துட்டு தூங்கிடுவீங்களா, எனக்கு இன்னும் ஒரு வருஷத்துல பேரகுழந்தைய பார்க்கனும, வேன்னா சொல்லு டாக்டர்கிட்ட ஏதும் போலாமா?” என்ற கேள்வியை வீச

ஆதவன், “என்ன மா இப்படி கேக்குறே, கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம, இப்படித்தான் அனுகிட்ட கேட்டியா?”

“கேக்க வேண்யது அனுகிட்ட இல்ல உங்கிட்ட தான் எனக்கு தெரிஞ்சு போச்சு, அது தான் நேரடியாவே உங்கிட்ட கேட்டேன்”

“சரி இப்ப என்ன உனக்கு பேரக்குழந்தை வேணும் அவ்வளவு தானே, சரி விடுமா”

என தன் அம்மாவை சம்மாதானம் செய்துவிட்டு தனக்குள்ளே, தெரியும் இப்படி என்னிக்காவது நடக்குனும்னு நினைச்சேன், அதே மாதிரி நடந்துடுச்சு என மனதுக்குள்ளே புலம்பிக்கொண்டே, ஒரு நல்ல நாள் பார்த்து அனுவிடம் அடுத்த கட்டத்திற்கு நெருங்க, ஆதவனால் எவ்வளவு முயற்சித்தும் அவன் படபடப்பும் பயமும் அடங்கவில்லை. இந்த மாதிரி இருக்கும் நேரத்தில் தான் ஆடி மாதம் பிறக்க அனு அவள் அம்மாவீட்டிற்கு ஒரு மாதத்திற்கு சென்றுவிட்டாள். இந்த கேப்பில் ஆதவன் அப்பாடா தப்பித்தோம் என்று ஒரு பக்கம் சந்தோசப்பட, மறு புறம் ஐயோ சீக்கிரம் ஆடி மாசம் நகருதே என கவலையும் பட, ஒரு நாள் ஆதவனுக்கு ஒரு யோசனை தோன்ற பக்கத்து (அதாவது, சத்யா வேலை பார்த்த) ஊரில் ஒரு மன நல மருத்துவர் இருப்பதாக கேள்விபட்டு, அவரிடம் சென்று தன் பிரச்சனையை கூறி ஆலோசனை கேட்பதற்க்காக உள்ளே சென்ற பொழுது, மருத்துவமனை கேண்டீனில், மளிகை பொருட்களை சப்ளை செய்துவிட்டு வெளியே வந்த சத்யாவை எதேச்சையாக கண்டவுடன் இருவருக்கும் கண்களில் கண்ணீர். சில நிமிடங்கள் செலவழித்து ஆதவன் தனக்கு திருமணம் ஆனதையும், தன்னால தன் மனைவியிடன் சகஜமாகவும் மற்ற விஷயங்களில் ஈடுபட முடியவில்லை எனவும் எப்பொழுதும் நான் உன் நினைப்பாகவே இருக்கிறேன், அவசரப்பட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டுஇருந்திருக்க கூடாது” என கூறி அழ

சத்யா, “இங்க பாரு, மொதல்ல அழதே, நான் சொல்லுறதை பொறுமையா கேளு, இப்ப இங்க நாம எதுவும் பேசவேண்டாம், உன் வைப், ஊருக்கு தானே போயிருக்காங்க, வழக்கம் போல இன்னைக்கு இந்த வாரம் சனிக்கிழமை நான் உன் ரூமுக்கு வரேன், வந்து உங்கிட்ட பேசுறேன்” என கூறி ஒருவரும் அவர் அவர்கள் திசையில் சென்றூவிட்டனர்.

எதிர் பார்த்த படியே சனிக்கிழமை இரவும் வந்தது, சத்யாவும் ஆதவனின் அந்த மேல் மாடி அறைக்கு வர முதலில் இருவரும் கட்டியனைத்து கொஞ்சம் விட்ட கதை தொட்ட கதை என பேச ஆரம்பித்து, பிறகு இருவரும் காதல் மொழி பேசி, பிறகு காமத்தில் திளைத்து களைத்த பின் மீண்டும் ஆதவன், சத்யாவின் செஞ்சில் சாய்ந்த நேரம், சத்யா ஆதவனுக்கு தைரியம் கூற இறுதியில்

சத்யா, “இங்க பாரு, ஆதவா, உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, உனக்கு ஒரு பிரச்சனைனு தெரிஞ்சுதான் நான் வந்தேன், இப்ப உனக்கு ஒரு தைரியம் வந்துருக்கும் அப்படியே வழ வேண்டியது, இனி நான் உன் வாழ்கையில வர மாட்டேன், போதும் இதுவே நாம சந்திக்குறது கடைசி முறையா இருக்கட்டும், நமக்குள்ள ஏற்பட்ட இந்த உறவு முடிஞ்சு போச்சு, இதுக்கு எந்த ஒரு எதிர் காலமும் இல்லை, அதே மாதிரி உனக்கு ஒரு எதிர் காலம் இருக்கு, நீ குடும்பம் குழந்தைனு வாழனும், அதை நான் ஓரமா இருந்து பார்த்துட்டு போய்டுவேன் அதுவே எனக்கு போதும், உங்க அப்பாவ பார்த்து பேச தைரியம் இல்லாத நான் இனி உன் வாழ்கையில வேண்டாம்” என கூறும் பொழுது சத்யாவின் கண்களிலும், ஆதவன் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்க, ஒருவருக்கு ஒருவர் கண்ணீரை துடைத்துவிட்டுக்கொள்ள

“என்ன டா இப்படி சொல்லிட்டா, நீ திரும்ப வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும், நீ சொன்ன போதே, நான் ஓடி வந்திருந்தா, இப்ப எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலையும் இல்லை, தயவு செஞ்சு நீ என்னை விட்டு போறேனு மட்டும் சொல்லாதா, நான் நல்லா வழனும்னு உண்மையிலேயே நீ ஆசைப்பட்டா, கண்டிப்பா என கூட எனக்கு ஒரு துனையா நீ இருந்தே ஆகனும் இல்லாட்டி என் முடிவை நான் தேடிக்குவேன், என் வாழ்கையை நான் முடிச்சுக்குவேன்” என மிரட்டும் தோனியில் பேச, சத்யாவுக்கு வேறு வழியில்லாம, சரி உங்கூட ஒரு நல்ல நண்பனா, நான் இருப்பேன் என தலையில் அடித்து சத்யம் செய்ததால் மட்டுமே, ஆதவன் சிரிக்க ஆரம்பித்தான்.

ஒரு வழியாக ஆடி மாதம் முடிந்த பின் அனுவும் வீட்டுக்கு வந்தாள், கொஞ்சம் கொஞ்சமா, ஆதவன் அனுவுடன் நெருங்க, அடுத்த சில மாதங்களிலேயே அனு கர்பம் தரித்தாள், முதல் மூன்று மாதங்கள் முக்கயமான மாதம் என்றதால், அனுவின் அப்பா அனுவை வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர். இந்த இடைவெளியில் ஆதவன் சத்யாவின் உறவும் பழை படி வளர்ந்தது. அடுத்து வந்த பத்தாவது மாதத்தில் அனு ஆதவனின் சாயலில் ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள், மொத்த குடும்பமும் சந்தேசத்தில் திளைத்தது, ஆனால் ஆதவன் மட்டும் சத்யாவின் நினைப்பிலேயே இருந்துவந்தான், நாளடைவில் அவன் 6 மாத ஆண் குழந்தை அவனிடம் விளையாட விளையாட ஆதவனுக்கு மகன் ஜீவாவின் மேல் உயிரையே வைத்தான். இவர்களின் வாழ்க்கையில் அவ்வபொழுந்து வீட்டில் மனையியும் குழந்தையும் இல்லாத சனிக்கிழமைகளில் இவர்களின் சந்திப்பு தொடர்ந்துகொண்டே தான் இருந்தது.

கிட்டதட்ட 5 வருடங்கள் கழித்து, ஆதவன் அனுவின் திருமண நாள் அன்று அனுவின் கட்டாயத்தின் பேரில் பக்கத்து ஊரில் உள்ள மலை கிராமம் ஒன்றுக்கு பைக்கில் சுற்றி பார்க்க சென்றிருந்தனர். காலை முதல் மாலை வரை அங்கிருந்துவிட்டு, மாலை மலை விட்டு இறங்கி வரும் பொழுது சற்று நிலை தடுமாறிய ஆதவனின் ராயல் என்பீல்டு விபத்துக்குள்ளானது, அனு, ஆதவன் இருவருக்கும் தலையில் பெரிய அடி ரத்தம் நிறைய போயிற்று.

ஐந்து நாட்கள் கழித்து ஆதவன், மருத்துவ மனையில் ICUவிலிருந்து கண் விழித்த பொழுது, ஆதவனின் அம்மா, அப்பா, அனுவின், அம்மா, அப்பா குழந்தை ஜீவா என சுற்றி நின்றிருக்க, ஆள் மாற்றி ஆள் அழ ஆரம்பித்தனர். பிறகு அங்கிருந்த டாக்டர், எந்த ஒரு அதிர்சியான விஷயத்தையும் இப்பொழுது கூறவேண்டாம் என கூயிருந்தபடியால் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, கிட்டதட்ட 15 நாட்கள் கழித்து ஆதவன் டிஸ்சார்ஜ் செய்யபட்டு வீட்டுக்கு வந்த பொழுது தான் ஆதவனுக்கு அனு இறந்த விஷயம் தெரிந்தது. பேர் அதிச்சியானவன், யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, கண்ணீரும் விடவில்லை அமைதியாக அவனது ரூமுக்குள் சென்று தாழிட்டுக்கொண்டான்.

ஆதவனை யாராலும் சமாதானம் செய்யவே முடியவில்லை, ஆதவனி மகன் ஜீவா சொன்னால் மட்டும் கேட்பான், அதனால் ஆதவனின் அம்மா, ஜீவாவை வைத்தே ஆதவனுக்கு சாப்பாடு பரிமாறுவாள், வீட்டில் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ஆதவன் வேலைக்கும் செல்லவில்லை, அந்த ரூமுக்குள்ளேயே முடங்கி கிடப்பான், பசித்தால் கீழிறங்கி வந்து சப்பாப்பிட்டுவிட்டு மீண்டும் ரூமுக்குள் சென்று அடைந்து கொள்வான். அவ்வ பொழுது ஆதவனின் அப்பா, ஜீவாவைக்காட்டி ஆதவுடன் விளையாட வைக்கும் பொழுது கொஞ்சம் சிரிப்பான் பிறகு மீண்டும் ரூமுக்குள் சென்று அடைந்துக்கொள்வான். கிட்டதட்ட ஆறு மாதங்கள் கழித்து ஒரு சனிக்கிழமை அன்று: சத்யா வந்து ஆதவனுக்கு தைரியம் கூறிவிட்டு உனக்காக இல்லாவிட்டாலும் நீ உன் மகன் ஜீவாவுக்கக வேண்டி நீ வாழ்ந்து தான் ஆகனும், என்று கூறிவிட்டு செல்ல ஆதவன் மீண்டும் தன் கேட்ரிங்க் கல்லூரிக்கு வேலைக்கு சென்றான்.

ஆதவன் சரியாக வேலைக்கு செல்ல ஆரம்பித்து, சரியாக மூன்று நாட்கள் கடந்து முடிந்து, என்ன நினைத்தானே ஆதவன் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை, பழைய படி ரூமுக்குள் அடைந்து கொண்டான். ஆதவனின் அப்பா இளவேனிலிடம் விஷயத்தை கூற, அவனும் வீட்டிற்கு வந்தான், கொஞ்சம் நேரம் ஜீவாவுடன் விளையாடிவிட்டு மேல் மாடிக்கு சென்று ஆதவனின் ரூம் கதவை தட்ட கதவு திறக்கவே இல்லை, பதறிபோன இளவேனில் மேலும் ரூம் கதவை பலமாக கத்தி தட்ட, சத்தம் கேட்டு கீழிருந்து வந்த ஆதவனின் அப்பாவும் அம்மாவும் மாடிக்கு வந்து கேக்க, அதற்குள் இளவேனில் ஜன்னல் வழியே உள்ளே பார்க்க ஆதவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான் ஆதவன். உடனே கதவை உடைத்து ஆதவனை மீட்டு மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிக்கிச்சையில் இருந்தான்.

டாக்டர் இளவேனிலிடமும், ஆதவனின் பெற்றொர்களிடத்தில் பேச ஆரம்பித்தார், “உள்ளங்கை மணிக்கட்டில் பிளேடால கிழிச்சு நிறைய ரத்தம் போயிருக்கு, நல்ல வேலை சரியான நேரத்துக்கு கொண்டு வந்துனால என்னால காப்பாத்த முடிஞ்சுது, சரி தற்கொலை பன்னிக்குற அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனை, பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுறாங்க”

இளவேனில் ஆதவனின் பெற்றோர்களை வெளியே அனுவிப்பிட்டு, ஆதவனுக்கு திருமணம் ஆனதும், 4 வயதில் மகன் இருப்பதும், சமீபத்தில் அவன் மனைவி அனு இறந்து பற்றியும் அதற்க்கக அவன் அழாமல் இருந்ததும், அதற்கு பதிலாக கோவமாக இருக்கிறான், யாரிடமும் பேசுவதில்லை என்று கூற,

டாக்டர் “இது சரி இல்லை மனைவி இறந்துனால இவர் வாழ்கை மேல பயங்கர கோவத்துல இருந்திருக்கார், அதோட வாழ புடிக்காம தன்னையும் அழிச்சுக்க பார்த்துருக்கார், கண்டிப்பா இவருக்கு ஒரு மனநல மருத்துவர்கிட்ட ஒரு கவுன்சிலிங்க் கண்டிப்பா தேவை, இது தற்கொலை முயற்சி பன்னி பொழைச்சு வரவங்களுக்கு வழக்கமா கொடுக்குறது தான், இவருக்கு கண்டிப்பா இப்ப தேவை” இந்த டாக்டரை போய் பாருங்க, இவர்கிட்ட எல்லாம் நான் பேசிட்டேன்”

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றிய பொழுது, ஒரு முறை டிரிப்ஸ் மாற்ற வந்த நர்சிடமிருந்து அந்த ஊசியை புடுங்கி ஏறிந்து, “ஏதுக்கு என்னைய காப்பாத்துனீங்க, எனக்கு வாழவே வேண்டாம், நானு என் சத்யா போன இடத்துக்கே போறேன், என்னையாரும் ஒன்னு காப்பாத்தவேண்டாம்” கத்தி கலாட்டா செய்து சில நிமிடங்களி அங்கிருந்தவர்களை பயமுறுத்திவிட்டான்

பிரச்சனையின் தீவிரத்தை அறிந்த டாக்டர், உடனடியாக, அந்த மல்ட்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டலில் இருந்த மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர். உடன் இளவேனிலும் சென்றான். அந்த மனநல மருத்துவர் ஆதவனிடம் பேச ஆரம்பித்தார், அவன் தற்கொலைக்கான காரணம் தெரிந்துகொள்ள முயற்சி செய்த பொழுது ஆதவன் சரியாக ஒத்துழைக்காததால், அவனை மன நல மருத்துவ முறைப்படி அவன் ஆழ் மனதுடன் பேச ஆரம்பித்தார். ஆதவனும் நன்றாகவே ஒத்துழைக்க

டாக்டர், “ஆதவன் எதுக்காக நீங்க தற்கொலை முயற்சி பன்னுனீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா”

“…..” பதில் இல்லை

டாக்டர், “ஆதவன், உங்க மனைவி இறந்தது ஒரு விபத்து, அதுக்கு நீங்க மட்டும் காரணம் இல்லை, அதுக்காக உங்களை நீங்களே இப்படி தண்டிச்சுக்குறதுப் சரியும் இல்லை, சொல்லுங்க உங்க மனைவி இறத்துட்டாங்கனு அதுக்கு தண்டனை கொடுத்துக்க தான் நீங்க இப்படி பன்னீங்களா”

சில நிமிடங்கள் கழ்ழித்தே ஆதவனிடமிருந்து பதில் வந்தது, “இல்லை, என்னால சத்யா இல்லாத இந்த உலகத்துல வாழ முடியாது, அதுக்காக தான் நான் என் கைய அறுத்துக்கிட்டேன்”

“சத்யா யாரு?”

“சத்யா என் காதலன், அன்னைக்கும் இன்னைக்கு என்னிக்கு அவன் என் காதலன் தான்”

“எனக்கு புரியலை கொஞ்சம் விளக்கமா சொல்லுறீங்களா”

உடனே ஆதவன் சத்யாவை முதன் முதலில் தன் அத்தை மகன் கல்யாணத்தில் பார்த்தில் தொடங்கி, காதலித்தது, அப்பா அம்மாவிடம் பேச சொல்லியது அவன் மறுத்தது, கோவத்தில் கல்யாணத்திற்கு சம்மதித்தது, மேற்கொண்டு சத்யா சம்பந்த பட்ட அத்துனை விஷயங்களும் ஒன்றுவிடாமல் ஆதவன் கூற கூற டாக்டர், மற்றும் இளவேனிலுக்கும் ஆச்சரியம்”

டாக்டர், “சத்யா இறந்துட்டான்னு உங்களுக்கு யார் சொன்னது”

“யாரும் சொல்லலை, வியாழக்கிழமை பேப்பர் பார்த்து தெரிஞ்சுகிட்டேன், அதுல நாலாவது பக்கத்துல்ல கண்ணீர் அஞ்சலினு போட்டோ இருந்துச்சு, அது பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்”

“உங்களுக்கு ஒன்னும் இல்லை சின்ன குழப்பம் தான் அந்த பேப்பர்ல இருந்த சத்யா உங்க சத்யா இல்லை வேற யாரோ”

“இல்லை என் கூட வாழ்ந்த சத்யாவை எனக்கு அடையாளம் தெரியாதா, அது என் சத்யா தான்?”

“இல்லை நான் பேப்பர் காரங்களை விசாரிக்க சொல்லி ஆள் அனுபிருக்கேன், உங்க சத்யா இப்ப தான் போன் பன்னினார், சாயுங்காலம் உங்களை பார்க்க வரதா சொன்னாரு”” இளவேனிலும் கூட தலையாட்ட, ஆதவன் முகத்தில் தானாகவே அந்த குருஞ்சிரிப்பும் கூடவே வெட்கமும் வந்து சேர்ந்துக்கொண்டது. ஆதவனை அவனது வார்ட்டுக்கு அனுப்பிவிட்டு, இளவேனிலுடன் டாக்டர்

“உங்களுக்கு அந்த சத்யாவை பத்தி தெரியுமா?”

“தெரியும், ஆனா அவனை நான் நேர்ல பார்த்தது இல்லை, பேசினது இல்லை”

“சரி எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க, என்ன ஏதுனு நான் சொல்லுறேன், முடிஞ்சா அந்த பேப்பர்ல உள்ள் போட்டோடவை வச்சுக்கிட்டு அந்த சத்யாவை பத்தி விசாரிக்க பாருங்க”

இளவேனிலும் உடனடியாக அந்த குறிப்பிட்ட நாள் இதழில் அந்த சத்யாவின் போட்டோ கட்டிங்கை எடுத்துக்கொண்டு, நாள் இதழ் மூலமாக அந்த சத்யாவின் வீடிற்கு சென்று இறந்த சத்யாவின் நண்பன் என்று கூறி விசாரித்தால், அவன் ஒரு MBA பட்டதாரி, சிறிய அளவில் துணிக்கடை ஒன்றை நடத்திவருவதாக கூறினார்கள். ஆதவன் சத்யாவை பற்றி கூற வேலைக்கும் இதுக்கு துளி கூட சம்பந்தமே இல்லாமல் இருந்தது. என்ன செய்யுறது என யோசித்துக்கொண்டிருந்தவன் ஆதவன் கூற ஒவ்வொரு சம்பவமாக விசாரிக்க ஆரம்பித்தான், முதலில் ஆதவனின் அப்பாவின் நண்பரிடம் கேட்டால், எந்த ஒரு உருப்படியான பதிலும் கிடைக்கவில்லை, பிறகு ஆதவனுக்கு கல்லூரி நண்பர்களிடம் விசாரிக்க யாருக்கும் தெரியவில்லை, ஆனால அகிலன் மட்டும், “எங்கிட்ட சொல்லிருக்கான், ஆனா ஆதவன் ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் தனியாத்தான் உட்காந்து தனக்கு தானே பேசிக்கிட்டு இருப்பான்” இளவேனிலுக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது.

தொடர்ந்து, இளவேனில் தான் படித்த கல்லூரிக்கு சென்று அங்கு தனக்காக காத்திருக்கும் சமயத்தில் தான் சத்யாவை சந்தித்தாக பல முறை கூறியது நினைவுக்கு வர அந்த டீக்கடை ஒனரிடம் ஆதவன் சத்யா போட்டோவை காட்டி விசாரிக்க,

இளவேனிலை அடையாளம் கண்டு கொண்ட அந்த ஓனர், “ஆமா தம்பி, இந்த போன்ல உள்ள போட்டோல இருக்குற பையன் நீங்க படிச்சு முடிக்குற வரைக்கும் தினமும் இங்க வருவான், ஒரோ நேரத்துல ரெண்டு டீ பக்கத்துல பக்கத்துல வாங்கி வச்சுக்கிட்டு, டீவி பார்த்துக்கிட்டே பக்கத்துல யார்கிட்டயோ பேசுறமாதிரியே பேசுவான்” இளவேனிலுக்கு சந்தேகம் சற்று வலுக்க ஆரம்பித்தது. ஆதவனும் டிரெயினிங்க் சென்றதாக கூறிய ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று அங்க்குள்ள ஹெட் குக்கை விசாரித்த பொழுது,

“அந்த சத்யா யாருனு எனக்கு தெரியாதும், ஆனா ஒரு நாள் ஸ்டோர் ரூம்ல மளிகை சாமான் எடுக்க போனவன், திரும்ப வரவே இல்லை, வந்து எட்டிபார்த்தா பேச்சு சத்தம் கேட்டுச்சு, அங்க ஆதவனை தவிற யாரும் இல்லை அவன் அங்க யாரோ இருக்குறதா நினைச்சு பேசிக்கிட்டு இருந்தான், அது பார்த்து கொஞ்சம் பயமகிடுச்சு, அதனால அன்னைக்கு நேரத்துலயே அணுப்பிவச்சுட்டேன் மறுபடியும் இதே போல நடந்தா, அவங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லலாம்னு இருந்தேன் ஆனா அதுக்கு அப்புற இது மாதிரி எப்பவும் நடக்கலை” இளவேனிலுக்கு சந்தேகம் சற்றும் உறுதியானது, ஆதவனும் சத்யாவும் ஒன்றாக தங்கி இருந்தாக கூற வீட்டு ஓனரிடம் கேட்ட பொழுது,

ஓனர், ” மொதல்ல இங்க ஒரு குடும்பம் தங்கி இருந்து அதுல ஒரு வயசு பொண்ணு தூக்கு போட்டு செத்து போச்சு அதனால யாருமே வாடகைக்கு வரலை, அதனால, நீங்க சொல்லுற ஆதவன் வந்து ரூம் வாடகைக்கு கேட்டதும் அவர் என்ன சொல்லுறார் ஏது சொல்லுறானு எல்லாம் நான் கவனிக்கலை, நான் விட்டுட்டேன். அக்கம் பக்கம் விசாரிக்க ஆரம்பிக்க யாரும் பார்த்தது இல்லை என்று கூறிவிட்டார்கள். ஆனால் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு முதியவர் மட்டும் இளவேனில் தனது போனில் காட்டிய ஆதவனின் போட்டோவைப்பார்த்து,

“ஆமா தம்பி எப்ப பார்த்தாலும் இவன் சத்யா சத்யானு சொல்லிட்டே இருப்பான் சத்யா வேலைக்கு போயிருக்கான், சாப்புடவருவான், ஆனா இந்த ரூம்ல இவனை தவிற நான் வேற யாரையுமே பார்த்தது இல்லை” இளவேனிலுக்கு சந்தேகம் ஊர்ஜிதம் ஆனது.. ஆனாலும் மீதம் உள்ளவற்றையும் விசாரிக்க எண்ணி, ஆதவன் ஒரு மன நல மருத்துவரிடம் கவுன்சிலிங்க் சென்ற பொழுது அந்த ஹாஸ்பிட்டலில் இருந்த செக்கியூரிட்டி கேமராவில் உள்ள புட்டேஜ்களை பார்வையிட அங்கு ஆதவன் தனியாக ஹாஸ்பிட்டல் வாசலில் பேசியது, பிறகு கேண்டினில் அமர்ந்து தனியாக ஏதோ சாப்பிட்டதும் பக்கத்தில் யாரோ இருப்பது போல அவர்களிடத்தில் பேசுவது போல அவனது செய்கைகள் இருந்தது.

ஆதவன் முழுக்க முழுக்க ஆரம்பத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை உறுதி செய்து கொண்டு அந்த மனநல மருத்துவரிடம் தான் விசாரித்ததும் அந்த செக்யூரிட்டி புட்டேஜ்களை காட்ட

மருத்துவரோ, “நீங்க கிளம்பின 30 நிமிஷத்துல, மறுபடியும் ஆதவனே இங்க வந்து நின்னு எனக்கு இப்பவே சத்யாவை பார்க்கனும், இல்லாட்டி உங்களை எல்லாம் கொண்ணுடுவேன்னு மிரட்டி, இங்க உள்ள பொருள் எல்லாம் கலைச்சு ஒரே ஆர்ப்பாட்டம், அதனால அவருக்கு ஹிப்னாட்டிசம் பன்னி அவர் மூளைகிட்டயும் ஆள் மனசுகிட்டயும் துருவி துருவி விசாரிச்சப்ப, அவர் மூளை, அவன் காதலிக்கனும் சேர்ந்து வாழனும்னு நினைச்சு அவனோட எதிர் பார்ப்புகளை நீங்க கேட்டப்போ அவன் சொன்னது எல்லாம் உண்மை, ஆனா அந்த கல்யாண மண்டபத்துல யாரோ யாரையோ சத்யானு கூப்பிட்டது இவருக்கு அந்த பெயர் ரொம்ப புடிச்சு போச்சு, அதனால இவரோ எதிர்ப்பார்ப்பு உருவத்துக்கு அந்த பேர் வச்சு கற்பனையா அவனை வடிச்சு அந்த உருவத்துகிட்ட பேசுறதும் பழகுறது, அவருக்காக உதவி செய்யுறதும் அவரோட வாழ்ந்ததும் எல்லாமே கற்பனை தன் ஆசை எல்லாம் அந்த கற்பனை உருவத்து மேல தினிச்சு தான் இத்தனை வருஷமா வாந்துகிட்டு இருந்துருக்கார்”

இளவேனில், “சரி டாக்டர், அவன் திடீர்னு ஏன் தற்கொலை?”

“அவன் கற்பனை வடிவத்துல வடிச்ச முகம் அப்படியே பேப்பர்ல கண்ணீர் அஞ்சலி, போட்டோவை பார்த்துட்டு, கூடவே இருந்த சத்யாங்குற பேரையும் பார்த்துட்டு, என் காதல் இறந்து போய்ட்டான்னு இன்னும் மனசு வேதனை அடைஞ்சு தான் இப்படி எல்லாம், இப்ப கூட அவர் மூளைக்கு அந்த சத்யா ஒரு கற்பனை உருவம்னு தெரியும், ஆனா மனசு அதை ஏத்துக்கலை, மூளைக்கும் மனசுக்கும் நடுவே நடந்த போராட்டம் அதோட வெளிப்பாடு தான் இன்னிக்கு நாம பார்த்த ஆதவனோட பிஹோவியர்”

“சரி டாக்டர் இதை குணப்படுத்தவே முடியாதா?”

“முடியும், ஆனா அதுக்கு ஆதவனோட ஒத்துழைப்பும் அவங்க குடும்பத்தோட ஒத்துழைப்பும் வேனும்” இளவேனில், ஆதவனின் அம்மா அப்பாவுக்கு விஷத்தை பக்குவமாக நெடுத்து சொல்ல அவர்கள் சம்மதிக்க, ஆதவனுக்கு கவுன்சிலிங்க் கொடுக்கபட்டு, இறுதியாக டாக்டரும் அவனை சுற்றி இருப்பவர்களும் “நியூஸ் பேப்பர்ல, வெளி நாடு போகபோகும் சத்யாவின் வாழ்த்து செய்திக்கு பதிலா, போட்டோவை மாத்தி போட்டுட்டாங்க, என்று கூறியதோடு மட்டும் இல்லாமல், சத்யா என்ற ஒருவன் இருப்பது போலவும் அவன் அடிக்கடி போனில் பேசுவது போலவும், ஆதவனை பற்றி விசாரித்தது போலவும்” ஆதவனிடம் பேச ஆரம்பித்தனர். ஆதவனும் அதை நம்பி இன்றளவும் தன் கற்பனையில் வடித்த ஆசைக்காதலன் “சத்யாவின் வருகைக்காக தனது ரூமில் ஒவ்வொரு சனிக்கிழமையின் இரவும் காத்துக்கொண்டிருக்கிறான்”

————-
அன்பு பெற்றொர்களே இது உங்களுக்குகாக தான் உங்கள் மகன்/ மகள், இது போல தங்களுக்கு ஏற்படும் இயற்கையான உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவர்களிடம் நீங்க ஒரு நல்லுறவை வளர்த்துக்கொள்ளுங்கள், எது எப்படி இருந்தாலும் நீ என்னுடைய மகன்/மகள், உனக்காக நான் இருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டுங்கள். நாலு பேர் என்ன நினைப்பான் என்று யோசிப்பதைவிடுத்து உங்களால் இந்த பூமிக்கு எடுத்துவரப்பட்ட உங்கள் மகள்/மகனை புரிந்துகொள்ள முயற்சி செய்து அவர்களுக்காக வாழ முயற்சி செய்யுங்கள், இது பெற்றோர்களாகிய உங்கள் கடமை
————
– இனியவன்

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன