உலகம் முழுக்க பல ஒடுக்குமுறை நிகழ்ந்து கொண்டிருக்கிறது அதில் இந்திய சமூகம் பிற சமூகத்தில் இருந்து மிகவும் மாறுபட்டது ஒடுக்குமுறையின் பிறப்பிடம் என்று கூறலாம்.
இங்கு சாதி, மதம், ஆணாதிக்கம், பாலினம், நிறம், உடல், ஊனம் என்று இன்னும் பல ஒடுக்குமுறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பலர் குரல் எழுப்பிக் கொண்டும், போராடிக் கொண்டும், களபணியாற்றி கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால் அப்படியாக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பி கொண்டிருகிறோம் என்று கூறும் பலர் முற்றிலும் மூட தனமாகவும், சனாதனவாதிகள் போலவும் ஒடுக்குமுறை செய்து வருகின்றனர் (LGBTQAI+) பால்புதுமையினர் மக்கள் மீது.
சமூகநீதி என்பதே அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் எழுப்புவது. பாலின விடுதலை என்பதே சமூக விடுதலைக்கான மிகப்பெரிய அங்கமாகும்.
இங்கே சமூக வளைதளங்களில் மீம், ஃபன் என்ற பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கும் பால்புதுமையினர் மீதான வன்முறைகளை கண்டு சிரிப்பது மூலமும், கேள்வி எழுப்பாமல் நகர்வது மூலமும் ஏன் பல ரேஸ்னலிட் கனவான்களே அப்படியான மீம்களையும் க்ரியேட் செய்து நக்கலடித்து கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் சாதிய ஒடுக்குமுறையாளர்களை மீம் வழியே கேள்வி எழுப்ப வேண்டும் என்றால் கூட அதில் பாலின / பால்புதுமையினர் மக்களை இழிவுபடுத்தும் வகையிலான மீம்களை உருவாக்கி அதை பதிவிட்டு சிரிக்க தயங்குவதில்லை. இதில் பெரும்பான்மையாக வன்முறைக்கு உள்ளாவது Gay மக்களும் திருநர்களும் தான்.
இத்தகைய கூட்டம் ஒரு பக்கம் என்றால் எது LGBTQAI+ மக்களின் விடுதலை என தீர்மானிக்கும் Cis-Het ரேஸ்னலிஸ்ட்கள் கூட்டம் ஒரு பக்கம். கிளப் ஹவுஸ் போன்ற சமூக பொது தளங்களில் (LGBTQAI+) பால்புதுமையினர் மக்களை முன்னிறுத்தி அவர்களை தலைமை ஏற்க செய்து கலந்துரையாடாமல். இவர்கள் இப்படி செய்ய வேண்டும் இவரக்ளின் விடுதலைக்கான வழி இதுவே என்று Cis-Het (ஆண்கள்) கூட்டம் தலைமையில் தவறான புரிதல்களையும், கருத்துளையும் தயக்கமே இன்றி பதிவு செய்து வருகின்றனர்.
மிஸ்ஜெண்டர் செய்ய கூடாது என்று எடுத்துக் கூறினாலும் வேண்டுமேன்றே தவறாம பாலின அடையாளத்தை பால்புதுமையின மக்கள் மீது திணிப்பது, சங்கிகளை எதிர்கிறோம் என்று கெட்ட வார்த்தைகளாக பால்புதுமையின மக்களை குறிக்கும் சொற்களை இழி வார்த்தையாக பயன்படுத்துவதென்று பல வன்முறை செய்து வருகின்றனர்.
ஆனால் இத்தகைய ஒடுக்குமுறைகளை (LGBTQAI) பால்புதுமையின மக்கள் மீது நிகழ்த்திவிட்டு வெறுப்பை உமிழ்ந்துவிட்டு அதே நாவால் அம்பேத்கர் வாழ்க , பெரியார் வாழ்க, மார்க்ஸ் வாழ்க என்று எப்படி கூற முடிகிறதோ தெரியவில்லை.
சமூக போராளிகள் என்று கூறி கொள்பவர்களுக்கே (LGBTQAI+) பால்புதுமையின மக்கள் மீது புரிதல் இல்லை, ஒடுக்குமுறை செய்வார்கள் எனில் சமூகநீதி பேசி துளியும் பயனற்ற செயல்.
சமூக நீதி போராளிகள் மட்டுமன்றி பல நீதி மன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்குமே பால்புதுமையினர் மக்கள் பற்றிய புரிதலோ, பாலினங்கள் பற்றிய புரிதலோ துளியும் இல்லை.
பின்பு சமூகமாற்றம் சமூக விடுதலை எப்படி நிகழும் ஒடுக்குமுறையாளர்கள், பால்புதுமையின வெறுப்பாளர்கள் தினம் தினம் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள்.
இவை அனைத்தும் மாற வேண்டும் என்றால் பாலின/பாலியல் கல்வியை அடிப்படையில் இருந்தே பிள்ளைகளுக்கு சொல்லி தரவேண்டும். பாலியல் கல்வி என்பது பள்ளிகூடங்களில் தனி பாட பிரிவாகவும், அதில் (LGBTQAI+) பால்புதுமையினர் மக்களை பற்றி தனி தொகுப்பாகவும் உருவாக்க வேண்டும்.
அது மட்டும் போதாது அத்தகைய புரிதல்களை வெறும் எழுத்து வழியாக போதிப்பது பயனற்ற செயல். அனைத்து அரசு / தனியார் பள்ளி கூடங்களிலும் அப்பிரிவிற்கு (LGBTQAI+) பால்புதுமயினர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
ஒடுக்கபடும் மக்கள் சொல்லி தரும் இடத்திற்கு வரும் போதுதான் சமூகத்திற்கான சமூகநீதி பாலின விடுதலையை பற்றி தெளிவான புரிதலை சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இங்கே எத்தனை திருநர்கள் ஆசிரியர்களாக, மருத்துவராக, வழக்கறிஞ்சராக அல்லது இதர அரசுத்துறையில் அரசு அதிகரிகளாக இருக்கின்றனர்.
தாங்கள் இந்த பாலினம்/ பாலின ஈர்பு கொண்டவர்கள் என்பதை வெளிபடுத்தவே இங்கே மிகப்பெரிய போராட்டமாக உள்ளது.
இவை அனைத்தும் மாற வேண்டும் அரசு இதற்காக தனி துறை அமைத்து அதில் பால்புதுமையினரை அரசு பணியமர்த்தி தேசிய/ மாநில பால்புதுமையினர் நலத்துறை அமைத்து இதன் மூலம் சமூகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் குழந்தையிலையே பாலின ரீதியாக தூக்கியெறியபடும் பால்புதுமையின குழந்தைகளின் எண்ணிகைய தடுத்து.
கல்வி, வேலை வாய்ப்பு என்று இடஒதுக்கீடு ஏற்படித்தி ஒடுக்கபடும் மக்களான பால்புதுமையின மக்களை மேற்கொண்டு வர வேண்டும்.
அது மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும், முதல் மந்திரியாகவும், பாரத பிரதமராகவும் பால்புதுமையின மக்கள் மேல் வர அரசியல் தளத்தை ஏற்படுத்த வேண்டும்.
பால்புதுமையின மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் முழங்கியது போல்
“நீ பிறந்த சமூகத்தின் விடுதலைகாக பேசவில்லை எனில் அச்சமூகத்தின் மிகப்பெரிய சாபகேடு நீதான்”
அவ்வாறு பால்புதுமையின மக்களின் போராட்டங்களை, குரல்களை, வலிகளை புறக்கணிப்பவர்கள் அத்தனை பேரும் சமூக நீதிக்கான போராட்டத்தில் மிகப்பெரிய நச்சு கிருமிகள் ஆவர்.
மேற்கூறியது போல் வெறும் சாதி ஒழிப்பு எந்த வகையிலும் சமூக நீதிக்காம சமூக விடுதலைக்கான வழியை ஏற்படுத்தாது பாலின / பால்புதுமையின விடுதலையே சமூக மாற்றத்தின் திறவு கோள்.
பாலின/ பால்புதுமையினர் புரிதல் சமூகத்தில் மூழுமையாக ஏற்படும் போது ஒடுக்குமுறைகள் ஒடைந்திருக்கும் ஆணாதிக்க கூட்டம் ஒழியிந்திருக்கும் மக்கள் பகுத்தறிவு பாதையில் நகர்த்தபட்டிருப்பனர்.
சாதி, மதவாதம், மூடநம்பிக்கைகள் தன்னாலே அதன் மூலம் அழிவின் விளிம்பு நிலைக்கு தள்ளபட்டிருக்கும்.
பாலின / பால்புதுமையின விடுதலையே சமூக விடுதலை என்று முழங்குவோம்
அண்ணல் அம்பேத்கர் வாழ்க!
பெரியார் வாழ்க!!
பால்புதுமையின மக்கள் வானவில் குரல் உலகமெங்கும் ஓங்க!!!
– கிஷோர் குமார்