சுயமரியாதை பேரணியில் நாங்கள் (ஜெயா-பொது மேலாளர், சகோதரன்)

கரோனா தளர்வுகளுக்குப் பிறகு கிடப்பில் இருந்த பணிகள் இரு மடங்கு அதிக தீவிரத்துடன் தொடங்கியுள்ளதாகவும், சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதாகவும் அறிமுகமானார் ஜெயா அம்மா.

ஜெயாம்மாவை பற்றி

பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது சகோதரன் அமைப்பிற்கு வந்தேன். என்னுடைய ஒப்பனைத்திறனைக் கண்டு பொறுப்பு வழங்கப்பட்டது. புதிய மக்களை அறிமுகப்படுத்த வேண்டும். எச்.ஐ.வி. தொற்று இருப்பவர்களை மருத்துவமனை கொண்டுசென்று கண்காணிக்க வேண்டும் போன்ற ஆரம்ப நிலை பொறுப்புகளை திறம்பட செய்தேன். அதன் விளைவாக Field officer பணி கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து Field co-ordinatior, Project co-ordinator, Project Manager என்றுபல பணிகளை செய்த்தன் தற்போது Project Director –ஆகவும் இருக்கிறேன். கிராஸ் ரூட் மக்களை நன்கு புரிந்துகொண்ட நபராக இருந்ததால், என்னை பலருக்கு தெரியவந்தது.

புத்தகம் விற்பது, ஒப்பனை செய்துகொள்வது என் மீது எனக்கு மேலும் நம்பிக்கையூட்டும். நம்மை நாம்தானே நம்பிக்கையூட்டிக்கொள்ள வேண்டும் என்று புன்னகை பூத்து நேர்காணலுக்கு ஆயத்தமானார்.

எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதனை மற்றவர்களுக்கும் பயிற்றுவிப்பேன். எனது நிர்வாகத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு என்னப்போன்று அடுத்தக்கட்டத்திற்கு உயர உதவி செய்வேன். இதன் மூலம் அதிகமானோரும் பயன் அடைந்தனர். பலருக்கு பேச்சாற்றல், நிர்வாகத்திறன் போன்றவை அதிகமானது.

மேலும், அவர்களுக்கு என்ன வருமோ அதில் கவனம் செலுத்தி அவர்களுக்கு வேண்டியதை சொல்லித் தர முயற்சி செய்வேன்.

நமக்கு வழங்கப்பட்டது என்ன புராஜக்டாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நம்மை நாடி வருபவர்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். நமக்கு வழங்கப்பட்டது  ரிசர்ச் புராஜக்ட்டாக இருந்தாலும் சரி, எச்.ஐ.வி. புராஜக்ட்டாக இருந்தாலும் சரி. அதில் அவர்களை கட்டாயப்படுத்தினால் ஆரம்பத்தில் அவர்களுக்கு விருப்பம் இருக்காது. அதற்காக அவர்களுக்கு முதலில் ஆர்வத்தை கொடுக்க வேண்டும். நமது விவாத்ததிற்குள் கொண்டு வர வேண்டும். அதற்கு முதலில் அவர்களுக்கான தேவை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப பணிபுரிந்தால் அவர்கள் பயன்பெறுவார்கள்.

அவர்களது பிரச்சனைக்கான காரணத்தை அறிந்து அதனை நிறைவேற்றினால், நாம் சொல்ல வருவது என்ன என்பதை அறிய அவர்கள் விரும்புவார்கள். இதற்கு நமது ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவதால் சகோதரன் தொடர்ந்து இயங்கி வருகிறது.

இதற்கு மிக முக்கிய காரணம் சுனில். எங்களுக்கு சுதந்திரம் வழங்கினார்.  கட்டுப்பாடுகள் விதிக்காமல் சுதந்திரம் வழங்கினார். நமது பணி மக்கள் நலன் சர்ந்த்தாக இருக்க வேண்டும் என்பதில் கவனமுடன் இருப்பார்.

நீங்கள் சிறந்த ஆசிரியர். எல்லோரிடமும் அன்புகாட்டும் சிறந்த நபர். உங்களைப்போன்று யாரும் இல்லை. நீங்களே சிறந்தவர். அதுவே பலர் உங்களை விரும்புவதற்கான காரணமா?

ஆம். இருக்கலாம். நான் எப்போதும் என்னுடைய அறையில் உள்ள நாற்காலியில் அமராமல், வரவேற்பறையில் தான் எப்போதுமே அமர்ந்துகொண்டிருப்பேன். மக்கள் பிரச்சனைகளை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்வேன். அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். முகத்தில் தாடியுடன் பெண் தன்மையுடன் வருபவரை ’வாடி பெண்ணே’… என்று அழைக்கும்போது அவர்களின் உச்சி குளிந்துபோகிறது. அவர்களை புரிந்துகொள்ள அவர்களில் ஒருத்தியாக இருக்க வேண்டும்.

நீங்கள் என்னையும் அப்படிதான் அழைப்பீர்கள், அது எனக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. அது உளவியல் ரீதியாக நல்ல மாற்றங்களை உருவாக்குவதாக நினைக்கிறீர்களா?

ஆமா. எல்லோருக்கும் அது பிடிக்கும்மா. என்னை அப்படி அழைத்தால் எனக்கு பிடிக்கும் இல்லையா. அனைவரும் ஆணுடைகளை அணிந்திருந்தாலும், உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வாடி போடி என்று அழைப்பது ஆனந்த்த்தை அளிக்கிறது.. குட்டி குட்டி ஆனந்தங்கள் தானே மனிதர்களை உயிர்ப்போடு வைத்துள்ளது.

வானவில் சுயமரியாதைப்பேரணி அதன் வரலாறு குறித்து சொல்லுங்களேன்

வானவில் பேரணியானது, 2009-ல் ஆரம்பிக்கும்போது சென்னை வானவில் பேரணி என்றுதான் இருந்த்து. பெங்களூருவின் தங்கம்மா தான் இதை கொண்டுவந்தது. இது குறித்து எனக்கு இருக்கும் நினைவு வைத்து சொல்கிறேன்.

பெங்களூருவில் நடக்கும் பேரணி போன்று சென்னையில் பேரணி நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்காக LGBTQ ஆதரவாளர்கள் குறித்து ஆராய்ந்து ஆலோசனைக்காக கூடினோம்.

பேரணிக்காக கூடிய எல்லோருக்கு மத்தியிலும், ஓரின ஈர்ப்பாளர்கள், மாற்று பால் ஈர்ப்பாளர்கள் போன்ற பல பாலினத்தை சேர்ந்தவர்கள் இருப்பது தெரியவந்தது.

2009 பேரணி முடியும் போது  சந்தோஷமாக இருந்தது. 2010 பேரணிக்கு ஏழு நிறங்களில் துணிகளை வாங்கி அதில் உடை தைத்துக்கொண்டு நடந்தேன். அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நாடக கோமாளி மாதிரி இருந்ததாக பலர் சொல்லும்போது கூட எனக்கு அது பற்றி கவலையில்லை. பிறகு பலர் நகைப்புடன் கூடிய விமர்சனமாகவும் அதை முன்வைத்தனர்.

ஒவ்வொரு பேரணி முடியும்போது கருத்து சொல்வது போன்று இருக்க கூடாது என்பதை யோசித்து, காவலர்களிடம் அனுமதி பெற்று கலந்துரையாடல் நடத்தினோம். பலரிடம் இருந்து பெறப்பட்ட நன்ககொடைகள் மூலம் பொருள்கள் வாங்கி மேடை அமைத்து, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும், சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசினோம்.

சகோதரன் அமைப்பு இதற்கு பெரிதும் உதவியது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே பெயர் கொடுத்துவிடுவார்கள்.

வண்ணங்கள் இப்போது வந்தது. அதற்கு முன்பு நிறங்கள் என்று இருந்தது. மிகப்பெரிய ஆர்வமுடன் துள்ளலுடன் பேரணி நடக்கும்.

2009-ல் ஜூன் 26-ல் பேரணி நடந்தது. பேரணி முடிந்து ஆறு நாள்கள் கழித்து வரலாற்று தீர்ப்பு வருது. ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து பலர் தைரியத்துடன் வெளிவந்தனர். மிகுந்த மகிழ்ச்சியான தருணங்களாக அவை இருந்தன. அதன் பிறகு மேல்முறையீடு, விசாரணை என்பதை கடந்து மீண்டும் 2018-ல் மீண்டும் அதே தீர்ப்பு வந்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் தில்லி உயர்நீதிமன்றம் ஆகிய இரு தீர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு தீர்ப்பு வந்தது. அதனை நாம் மறக்க முடியாது. இந்திய தண்டனைச் சட்டம் 377 சட்டத்தை மாற்ற முடியாது. அதனை நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்துதான் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது கருப்பு நாளாக இருந்தது.

ஆனால் ஏழு ஆண்டுகளில் நாம் விரும்பியவாறு நல்ல தீர்ப்பு கிடைத்தது. அதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டோம்.

இவ்வாறு ஜூன் மாதம் துள்ளலான மாதமாக அமைந்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு பேரணி நடக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு கொடி ஏற்றி பேரணியை உற்சாகமாக்க் கொண்டாடினோம். அலுவலகத்தில் கொடி பறப்பதை பார்க்கும்போதே உற்சாகம் மேலோங்கும்.

பின்னர் சென்னை வானவில் பேரணி, தமிழ்நாடு வானவில் பேரணி ஆகியது. பிறகு அது சுயமரியாதை வானவில் பேரணியாக மாற்றம் பெற்றது. நிறம், சாதி, மதம் என்று எந்த வட்டத்திற்குள்ளும் சுருங்காமல் சுயமரியாதை என்ற வார்த்தைக்கு யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத்து பேரானந்தமாக இருந்த்த.

சுயமரியாதை வானவில் பேரணியில் சகோதரன் அமைப்பின் பங்களிப்பு மிகப்பெரியது. அது குறித்து

சுயமரியாதை பேரணிக்கு கவிதை வாசிப்பு, சினிமா நிகழ்ச்சி, நடனம், பாடல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை சகோதரன் அமைப்பு எப்போதும் முன்னெடுக்கும். ஜூன் மாத்ததில் கல்லூரி மாணவர்களுக்கு அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். புராஜக்ட் பணிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இருந்தாலும் கூட, ஜூன் மாதத்தில் சிறப்பு அனுமதி பெற்று அதிக அளவிலான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளோம்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு LGBTQ மக்களை அனைவரும் ஏற்றுக்கொண்டனர் என்று நினைக்கிறீர்களா?

நீதிமன்றத்தின் ஒற்றைத் தீர்ப்பு பெருவாரியான மக்களின் மனதை மாற்றி விடாது. உதாரணத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளது. பெண்களுக்கு வன்கொடுமை நடக்காமலா உள்ளது. வரதட்சணை தடுப்புச் சட்டம் உள்ளது. வரதட்சணை வாங்காமலா உள்ளனர்.

ஆனால் அந்த பெண்ணுக்கு விழிப்புணர்வு இருந்தால் அந்த சட்டங்களின்படி அப்பெண் வழக்கு தொடராலாம். அதற்கு அப்பெண்ணுக்கு விழிப்புணர்வு தேவை. அதனை நாம் ஏற்படுத்துவோம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது என்பதற்காக பொதுமக்களுக்கு தெளிவான பார்வை உள்ளது என்று நினைக்க முடியாது. அது தவறில்லை. காலம் காலமாக நம் மக்கள் இப்படி பொதுப்புத்தியுடன் தான் வாழ்ந்து வருகின்றனர்.

ஆண் என்றால் இப்படி, பெண் என்றால் இப்படி என்று ஸ்டீரியோ டைப்பாக வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டது சமூகம். ஆண் இப்படிதானே இருக்க வேண்டும். நீ ஏன் இப்படி இருக்குற?. பெண் இப்படிதானே இருக்கனும். நீ ஏன் இப்படி இருக்குற? இந்த கேள்விகள் நம் சமூக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

நம் சமூக மாற்று பாலினத்தவரும், மாற்று பால் ஈர்ப்பாளர்களும் அவர்களுடைய துணையை சமூக வலைதளம் மூலம் தேடி கண்டடைந்துகொள்ளலாம். ஆனால் பெற்றோர்களுக்கு அவர்களுடைய பழமை வாய்ந்த கற்றல் மட்டுமே உள்ளது. அதனை மாற்ற நாம் தான்  முயற்சிக்க வேண்டும்.

என்னுள் ஏற்படும் மாற்றங்களை குடும்பத்திடம் சொல்வது சரியா?, அவர்களிடம் முறையிடலாமா?. அது சரியாக இருக்குமா?. குடும்பத்திடம் சொல்லாமல்போனால் என்ன ஆகும்?. என்பது போன்றவற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் எல்லோரும் நம்மை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால் அவர்கள் புரிந்துகொள்வதற்கு ஏற்ற சூழலை நாம் கொடுத்தோமா என்று யோசிக்க வேண்டும். நாம் நிச்சயம் நாம் அதை ஏற்படுத்தவில்லை. அதை ஏற்படுத்த வேண்டும்.

கலாசாரம் என்பது வேறு. சட்டம் என்பது வேறு. கலாச்சாரத்தின் பிடியில் சிக்குண்ட சமூகத்திற்கு எடுத்துரைக்க மிக நீண்ட உரையாடல் தேவைப்படும். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியது போன்று LGBTQ மக்களுக்கு இணக்கமான சூழலை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை அரசு கல்வி நிலையங்கள், கல்லூரிகளில் கொண்டுவர வேண்டும்.

அனுமதி கிடைக்காவிட்டாலும் அலைந்து அலைந்து குறைந்தபட்ச மக்களிடமாவது உரையாட வேண்டும். அது நாளடைவில் நிச்சயம் பெருகும்.

உதாரணத்திற்கு பெரியாரை எடுத்துக்கொள்வோம். சாதி மறுப்பு பற்றி அவ்வளவு பேசினார். ஆனால் அவர் பிறந்த இந்த பூமியில் தான் இன்னும் சாதிக்கரை மறையாமல் உள்ளது. ஆகவே ஆண், பெண் குறித்து புரோயோடிய பழமை வாயந்த சிந்தனை உடைய சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்பது அத்தனை சுலபமல்ல. அதற்கு மிகப்பெரிய உரையாடல் தேவை.

பேச பேசத்தான் புரிதல் ஏற்படும். உதாரணைத்திற்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தில் அக்காலத்தில் புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்று விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

இது மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியது. எய்ட்ஸ் என்றால் என்ன என்ற கேள்வியை அது எழுப்பியது. எச்.ஐ.வி. என்ற கிருமி உடலில் வரும். அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். அது பல நோய்க்கிருமிகளை உருவாக்கும். அந்த நோய்க்கிருமிகளின் கூட்டுத்தொகுப்பு எய்ட்ஸ். இந்த விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும்பொருட்டு புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா என்ற ஒன்றை உருவாக்கினர்.

ஆக, நம்மைப் பற்றி நாம் தான் பொதுமக்களிடம் பேச வேண்டும். நாம் பேசாமல் வேறு யார் பேச வருவா?

புரிதலற்ற பெற்றோர்கள் நம் சமூக மக்களை ஏற்காமல் இருப்பதற்கு சாதிமதம் காரணமா?, சமூகம் காரணமா?

இரண்டும் தான் காரணம் என்று நினைக்கிறேன். தன் மகனுக்க, மகளுக்கோ ஒரு கட்டத்திற்கு மேல் ஏன் இன்னும் திருமணம் ஆகலை என்ற சமூகத்தின் கேள்வி பெற்றோர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது.

இதன் விளைவாக மந்திரக்காரர்களிடமும், மருத்துவர்களிடமும் கொண்டு சென்று நிலைமையை இன்னும் இறுக்கமாக்குகின்றனர்.

இவன் என் மகன், இவள் என் மகள். என் வயிற்றில் பிறந்தவள். இப்படிதான் இருக்கிறாள். என்ன இப்ப என்று சர்வ சாதாரணமாக பெற்றோர்கள் எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. பாதி பிரச்சனை தீர்ந்த்துபோலதான். ஆனால் அந்த சூழல் உருவாவதே இல்லை.

வலியுடைய வேதனை நமக்குதான் தெரியும். வலி கொடுக்கும் சம்பவங்கள் நம்மை சுற்றி வந்தால் அதனை நிராகரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

கட்டுப்பெட்டிக்குள் வாழ்வபர்களுக்கு இவ்வாறு வெளி வருவது கடினம். முன்பு சொன்னதை போல நாம்தான் அதனைப் பற்றி சிறிது சிறிதாக பேச வேண்டும்.

இயற்கை என்று சிலர் கூறுகின்றனர் ஆனால். இயற்கைக்கு மாறான செயல்களும் நடந்துகொண்டுதான் உள்ளன.  குழந்தை பெற்றுக்கொள்வது இயற்கையானது. ஆனால் ஆணுறை பயன்படுத்தி குழந்தை பிறப்பை தடுக்கின்றனர். இது செய்ற்கைதானே.

டெஸ்ட் டியூபில் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். அது எல்லாம் மக்களுக்கு நன்மை பயப்பதால், அவற்றை ஏற்றுக்கொள்கின்றனர். இதெயெல்லாம் ஏற்றுக்கொண்டவர்கள், உணர்வும், சதையும், உணர்வுகளாலும் உடலில் நடந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

பழங்காலத்திலும் ஆண் – ஆண் உறவு குறித்தும், பெண் – பெண் உறவு குறித்தும் எண்ணற்ற சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. அது கற்பனை என்று கூறுகின்றனர். நிஜத்தில் நடக்காமல் எப்படி கற்பனை பிறக்கும். எங்கோ நடந்த நிஜத்தை சிற்பமாக வடித்து வைத்துள்ளனர் என்பதை ஏற்க பலர் மறுக்கின்றனர். பழங்காலம் முதலே தன்பால் ஈர்ப்பாளர்கள் இருந்துகொண்டுதான் இருந்தனர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

ஊடகங்கள் LGBTQ மக்களுக்கு ஆதரவுடன் செயல்படுகிறதா?

இதில் இரு மாதிரியும் தான் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் இழிவாக காட்டிய ஊடகங்கள்தான் பிற்காலத்தில் மரியாதை கொடுக்கும் பல நிகழ்ச்சிகளையும் செய்தது. திரைப்படங்கள் வாயிலாக பெரிய திரையிலும், இப்படிக்கு ரோஸ், ரோஸ் உடன் பேசுங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையிலும் முற்போக்கான செயல்களை ஊடகங்கள் மேற்கொண்டன.

ஆனால் ‘ஐ’ போன்று மிகப்பெரிய பொருள் செலவில் உருவான திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு பாராட்டுக்குரியது. ஆனால் வளர்ந்துவரும் சமூகத்தை திரையில் தவறாக காட்டியது அவர்கள் வளர்ச்சியை மேலும் மேலும் அழுத்திடாதா என்ற கேள்வி எழுந்தது. இவ்வாறு இரு வகையிலும் ஊடகங்கள் செயல்பட்டுள்ளன. ஊடகங்கள் மிக வலிமையானவை. அவற்றை கவனத்துடன் கையாள வேண்டும்.

சமூக மக்களுக்கும், பொதுமக்களுக்கும் நீங்கள் சொல்ல வேண்டிய கருத்து?

பெரிய கருத்து ஒன்றும் இல்லை. நாம் நிறைய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்களில் நல்லவர்களும் உள்ளனர். சமூக விரோதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அதேபோன்றுதான் பெண்களும். ஆனால் திருநங்கை என்று எடுத்துக்கொண்டால் பிச்சை எடுப்பார்கள், பணம்பறிப்பார்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் சிறுவயதுடையவர்களை கவர்வார்கள் என்பது போன்று பொதுக்கருத்து உள்ளது. அது மாற வேண்டும்.

LGBTQ சமூக மக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்.  அவர்களிடம் அதிக திறமைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தவில்லை எனில் அது பொதுசமூக மக்களுக்குத்தான் இழப்பு.

நம் சமூக மக்கள் என்று வருகையில், பொது இடங்களில் மிகக் கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதுதேவையற்றது. அதில் கவனம் செலுத்த வேண்டும்.

தன்பால் ஈர்ப்பாளர்களிடையே முகம் சுழிக்காத வண்ணம் காதல் இருக்க வேண்டும். அனைவரும் உள்ளடங்கிய சமூகத்தில் அளவை மீறி காதலை காமத்தோடு வெளிப்படுத்த முடியாது. அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம் சந்ததிகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் பாதை அனுபவித்து கொடுக்க வேண்டும். மாறாக சிக்கலை ஏற்படுத்தி வைத்துவிட்டு போகக்கூடாது.

நம் முன்னோர்கள் கஷ்டத்தை மட்டுமே சந்தித்தனர். ஆனால் நம் எதிர்கால சந்த்தியினர் மகிழ்ச்சியை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். இதை நினைவில் வைத்து நாம் செயல்பட வேண்டும்.

-நிஜெய் வேம்பரசி

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன