கிர்ர்ர்…….என்று ரீங்காரமிட்ட ஸ்கூல் பெல் சத்தம் கேட்டு சரி நாளைக்கு இந்த அறிவியல் பாடம் மீதியை பாக்கலாம்னு ஆசிரியர் வகுப்பை விட்டு கிளம்பி போறாரு…….

அவர் வெளியேறிய தருணத்துக்காக வெயிட் பண்ணிட்டிருந்த தினேஷ் வேகமா கழிவறையை நோக்கி போறான்…….

 

டேய் வாங்கடா இன்னைக்கு எல்லோரும் … இன்னைக்கு ஒரு கை பாத்துடலானு பசங்கள்ல சில பேரு அவன் பின்னாடியே போறாங்க…..

 

இதெல்லாம் கவனிக்காம வேகமாக கழிவறையை நெருங்கிய தினேஷ் ரொம்ப நேரமா அடக்கி வச்சுருந்த சிறுநீர கண்மூடி வெளியேத்தி பெருமூச்சு விட்டு எதையோ சாதிச்ச களைப்போட கண்ணை தொறந்தப்போ சுத்தி பசங்க….. எல்லோரும் இவன் ஆண்குறிய பாக்குறாங்க……. டேய் இவனுக்கும் நம்மளுக்கு மாதிரி தான்டா இருக்கு.‌..

அட ஆமடா …..

இதை கேட்ட தினேஷ்க்கு ஒன்னும் புரியல…. ஏன் எல்லோரும் இப்டி பாக்குறீங்க ..‌

இல்லை நீ நடந்துக்குறதெல்லாம் பையன் மாதிரி இல்லை …..நீ பையன் இல்லையாமே அதான் உனக்கு ஒன்னுக்கு போறது எப்புடி இருக்கும்னு பாக்க வந்தோம்னு சொல்லும் போது தினேஷ் கலங்கிப்போயிட்டான்……. உடனே அந்த ஸ்கூல விட்டு வெளியேறும் தினேஷுக்கு வாழ்க்கையின் படிக்கல்லாக மற்றொரு ஸ்கூல் தன்னை அரவணைத்தது பிடித்துப்போய் நன்றாக படித்து பள்ளிப்படிப்பு கடந்து இப்போ

Mcom MSW MPhil முடிச்சுட்டு மேனேஜராக இருக்க தினேஷ் தனது வாழ்வில் பட்ட பல துயரங்களை நம்ம கிட்ட பகிர்ந்திருக்காரு…

 

என்னதான் pride Month இந்த வருடம் ஓரளவுக்கு மக்களை போய் சேர்ந்திருந்தாலும் அதனோட வரலாறு பெரும்பாலும் நிறைய  பேருக்கு தெரியல.

அதனோட வரலாறு தினேஷ் மூலமா நம்ம தெரிஞ்சுக்கலாம்…

 

28 ஜூன் மாதம் 1969 ஆம் ஆண்டு நடந்த Stone Wall போராட்டம் தான் இந்த Pride monthற்கு காரணம்.. அந்த போராட்டத்தில் பல LGBTQ மக்கள் கொல்லபட்டுருக்காங்க…. நாங்களும் உங்களை மாதிரி மனுசங்க தான் எங்களுக்கு எல்லா உரிமையும் வேண்டும் எங்கள் மீது நடத்த படும் வன்முறைய நிறுத்துங்க… எங்களுக்கும் வலியும் வேதனையும் இருக்குனு கத்தி போரடுனவுங்க மேல நடத்துன தாக்குதல். இந்த போராட்டத்துக்கு தூண்டுதலாக இருந்த பார்ட்டி தாக்குதலை  விட இந்த தாக்குதல் பெரியதாகவே இந்த மக்கள் மீது அரங்கேறியது..

ஆமாம் தன்னை மாதிரி இந்த ஊர்ல (New York City / Greenwich village ) இருக்க அத்தனை LGBTQIA+ மக்களும் சந்திக்கிற ஒரு ரகசிய விடுதி இருக்கு.  அந்த விடுதில  திருநங்கையை ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துச்சு. அங்க LGBTQIA+ சேர்ந்து எல்லோரும் வந்து அந்த கொண்டாட்டத்துல இருந்தப்போ கட்டுக்கடங்காத சூக்களின் சவுண்ட் கேட்டு எல்லோரும் திரும்பி பாக்க ஒரு போலிஸ் குழு அந்த இடத்தை சூழ்ந்து சட்டவிரோதமா நீங்கள் எல்லோரும் கூடியிருக்கிங்கனு அடிக்க ஆரம்பிக்கிறாங்க…‌பீர் பாட்டில்ல இருந்த பீரோட சிறுநீர கலந்து குடிக்கச் சொல்லியும் பாலியல் ரீதியா துன்புறுத்திய போலீஸை எதிர்த்து அடிச்சு நாங்களும் மனுசங்க தான் எங்களை ஏன் வேற்று மனிதராப் பாக்கறீங்கனு அப்போ தொடங்கின pride தான் இந்த போராட்டத்திற்கு காரணமாக அமைஞ்சது. இந்த pride 28 ஜூன் – 3 ஜூலை 1969 தொடர்ந்து ஆறு நாள் Christopher Park இல் நடந்தது.  எதுக்கு இந்த இடத்துல நடந்துச்சுனா. LGBTQIA+ மக்கள் மீதான தாக்குதல் இந்த Christopher தெருவில் தான் நடந்தது.

 

அதை நினைவு கூறும் விதமாகத் தான் உலக நாடுகள் இந்த மாசத்த பிரைட் மந்த்தா கொண்டாடுறாங்க.

இந்த கொண்டாட்டம் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தாங்களும் மனுஷங்கதான் எங்கள மாதிரி இங்க கோடி பேர் இருக்காங்க அப்படின்னு இந்த உலகத்திற்குக் காட்டுறாங்க.

 

இதான் நீங்க கேட்ட Pride monthதோட வரலாறு என நமக்கு பதில் தர்ராரு நம்ம தினேஷ்.

 

மேலும் போன வருடம் Pride Monthக்கும் இந்த வருட  Pride Monthக்கும் மக்களிடையே பால்புதுமை மக்களை நடத்தும் விதத்தில ஏதாவது மாற்றம் இருக்காங்கற கேள்விக்கு அவர் சொல்ற பதில் பரவாயில்லை முன்னே இருந்த என்னோட Straight நண்பர்கள் என்னை மாதிரி நிறைய பேரை என்கூட இருப்பதை பார்த்துவிட்டு இதுவும் இயற்கை  படைப்புதான் அப்படிங்கறத கொஞ்சம் ஏத்துக்கறதப் பாத்து கொஞ்சம் சந்தோசமா தான் இருக்கு.  எனக்கு ஒருத்தனைப் புடிச்சுருக்கு அப்படின்னு சக தோழி கிட்ட என்னால  சொல்ல முடியுது .அத அவங்க வித்தியாசமா பாக்கல. அதற்கு ஒரு உதாரணம் சொல்லுறன்.

“என்ன மச்சான் அந்த பொண்ணை சைட் அடிக்கிற போல” அப்படின்னு சொல்லிட்டு இருந்த என்னோட நண்பர்கள் நான் இருக்கும் பொழுது “என்னடா மச்சான் அந்த பையனை சைட் அடிக்கிறியா” அப்படின்னு செல்லமா கேலி கிண்டல் செய்யும் அளவுக்கு மாறி இருக்காங்க. என்னோட உணர்வுகளை மதிக்குறாங்க அப்பிடின்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு…. இதற்குக் காரணம் இந்த பிரைட் மந்த் தான்.

ஆனாலும் மக்கள் அந்த அளவுக்கு ஒன்னும் மாற்றம் அடையல ஏதோ கொஞ்சம் ஆகிருக்காங்க… இருந்தாலும் இந்த மாற்றமே உங்களுக்குள்ள வர இத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கு. இதனை எங்க முயற்சிக்கு கிடைத்த வெற்றியாதான் பார்க்கிறேன். ஆனாலும்  பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பாலியல் கல்வியை, பால் பாலிர்ப்பு மற்றும் பாலின சமத்துவத்தை கற்றுத் தருவதுதான் வருங்கால சந்ததியினர் LGBTQ மக்களும் தம்மைப் போன்றவர்களே என புரிந்து கொள்வதற்கு அது வழிவகுக்கும் என்கின்றார் நம்ம தினேஷ்.

 

அவரை ஒரு ஸ்கூல் ரொம்ப அவமானப்படுத்தி இருந்தாலும் இன்னொரு ஸ்கூல் அவரை அன்பாக அரவணைத்து தன்னோட வாழ்க்கையை மாற்றியதுனு ரொம்பவே அந்த ஸ்கூலை பத்தி பெருமையாகவும் சந்தோஷமாகவும் பகிர்ந்துக்கிறாரு. அந்த பள்ளி ஆசிரியர்களால தான் என்னோட படிப்பு தொடர்ந்தது என அந்த ஆசிரியர்களுக்கு தன்னுடைய நன்றியையும் தெரிவிச்சுக்கிறாரு.

 

அவருக்கு பல பாலியல் சீண்டல்கள் நடந்திருந்தாலும் உச்சபட்சமாக விளையாட்டு மைதானத்தில் ஒரு கும்பலிடம் மாட்டிப் பல பேர்களின் மத்தியில் ஆடையின்றி பாலியல் ரீதியா ரொம்பவே துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்த தருணத்தை தான் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதத் தருணமா இப்ப வரை நினைச்சிட்டு இருக்காரு. மற்றும் என்னை ஒரு நபர் அவரது நண்பர் வீட்டில் என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர். அது நான் சொன்ன போது அந்த நபரின் நண்பர்கள் என்னை ஒரு பார்க்கக்கு வரச்சொல்லி என்னை சரமாரியாக கேள்வி எழுப்பினர். நான் சொன்னேன் அண்ணா அவர்தான் என்னை அப்பிடி பண்ணாரு நான் இல்லை அதற்கு அவர்கள் சொன்னது என் நண்பனை அப்பிடி இல்லை நீதானு ( அப்போ எனக்கு வயது 7 அந்த நபருக்கு 19). அந்த தருணம் என்னை நானே வெறுத்த தருணம்.

இந்த சமூகம் குயர் ஏத்துக்கல. ஆனால், அவர்களுக்கு பாலியல் சீண்டல் குடுக்கறத மட்டும் ஏத்துக்குதா?!

 

LGBTQIA+ மக்களுக்கு காதல் வந்தா மட்டும் அது முழுக்க முழுக்க காமத்தில கொண்டுபோய் முடிக்கிறாங்க. ஏன் எங்களுக்கு காமம் தவிர ஒன்றுமே தெரியாதா?!.

அப்படியே காதலித்தாலும், எல்லாம் சரி, நீங்க  ரெண்டு பேரும் எப்படி உறவு வைச்சு குழந்தை பெத்துக்கறிங்க?!.

இதான் இந்த சமூகத்தோடு மிகப்பெரிய கேள்வியா இருக்கு.

 

 

இதோட இல்லாம, வார்த்தைகளாலும் எங்களை ரொம்பவே புண்படுத்தறீங்க உங்களுக்கே தெரியாம நீங்க நிறைய வார்த்தை பயன்படுத்தி, அது அடுத்தவங்க மனசை ரொம்ப புண்படுத்தும் அப்படின்னு தெரிந்தோ தெரியாமலோ தினமும் பல பேரை மனரீதியா காயப்படுத்தறீங்க.

“உங்கள் பாதம் தொட்டு நான் வணங்குகிறேன்” என்ற உயர்வான வணக்கத்துக்கு பயன்படுத்தும் “பாம்படுத்தி” அப்படிங்கிற அந்த வார்த்தையை குயர் சமூகத்தைக் கிண்டல் பன்றதுக்கு, அந்த வார்த்தையே கேலிப் பொருளாக்கி, அவங்களறியாமலே பல பேர்களை துன்பப்படுத்தி இருக்காங்க.

இப்போ ரீசண்டா வந்த அந்த வெப் சீரியஸ் மூலம் தங்கமே என்கின்ற அந்தப் பாடல் ரொம்ப பிரபலமா ஓடிட்டு இருந்துச்சு. கூடிய சீக்கிரம் அந்த தங்கமே என்கின்ற வார்த்தையும் இந்த சமூகம் கேலி பொருளாகத்தான் கொண்டு வரப் போகுது.

ஒரு வார்த்தை உபயோகிக்கும் போது, அது மத்தவங்களைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக, கொஞ்சமாச்சும் அந்த வார்த்தையோடப் பொருளை உணர்ந்து அதை பயன்படுத்துங்கள்.

 

இது பொது சமூகத்துக்கும் மட்டும் இல்லாம என்னோட LGBTQ மக்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது . ஒருத்தன் கருப்பா இருக்கிறதானாலயோ குண்டாயிருக்கிறதனாலயோ அவங்களைக் கேலியாக சித்தரிக்கிறத  தயவு செஞ்சு

நிறுத்துங்க. பொது சமூகம் காட்டும் வெறுப்பை விட இந்த வெறுப்பு ரொம்பவே நம்ம மக்களைப் புண்படுத்தும்.

 

மேலும் ஒருத்தன் கொஞ்சம் பெண்மைத் தன்மை இருக்கிறதனாலயே  அவன் திருநங்கையா மட்டும் தான் இருக்கனுமா?!  அவன் Gay  வா கூட இருக்கலாமே. அவனோட பாலினத்த அவன் தேர்ந்தெடுத்துக்கட்டும் என தனது சமூக மக்களுக்கும் ஒரு அறிவுரையை குடுக்கிறாரு தினேஷ்.

 

பல இன்னல்களையும் பல அவமானங்களையும் சந்தித்த நம்ம தினேஷ் ஒரு விதத்தில் மட்டும் போதுமான அளவுக்கு திருப்தி அடைந்தார்ணா, அவங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் கொடுத்த அந்த பேரன்பு தான். தினேஷோட அப்பா அம்மா மனதுக்குள்ளே தன் பிள்ளையை ஏத்துக்கிட்டாலும் இந்த வெளி உலகம் ஏதாச்சும் சொல்லுமேனு இன்னும் ஏதாவது ஒரு இடத்தில் கலங்கிட்டுதான் இருக்காங்க. அது அவங்க மேல உள்ள தப்பு கிடையாது பொதுச் சமூகம் தன்னோட பார்வையை இன்னும் மாற்றிக்கல அப்படிங்கறத காட்டுது.

நான் என் மக்களுக்காகப் போராட போறேன். உங்களுக்கு ஆதரவா வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப் போறேன். விழிப்புணர்வை ஏற்படுத்தப் போறேன் அப்படின்னு தன் அப்பாகிட்ட சொல்லும்போது, என்னைய கூட்டிட்டு போயி, அதற்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கிக் கொடுத்து, என்னை ஊக்கப்படுத்தினார் என அப்பா அம்மாவைப் பத்தி ரொம்பவேப் பெருமையா பகிர்ந்திருக்கார். என் வாழ்வில் எனக்கு கிடைத்த இன்னொரு அம்மா என் மாமி  திருமதி. மஹாலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் என்னும் என் அன்பான லட்டு. என் அடையாளத்தை இவரிடம் தான் முதலில் சொன்னேன். பல மணி நேரம் அழுது பின்ன என்னை நான் உன்னோடு இருகுகிறேன் என்று கூறி என் அப்பா அம்மாவும் புரிதல் தர எனக்கு மிக்வும் துணையாக இருந்த என் லட்டு. இவரை போல எல்லாருக்கும் ஒரு அம்மா கிடைக்கணும். புரிதல் இல்லனாலும் தான் குழந்தை சொல்லுவதை கேட்டு அவர்களுக்கு துணையாக நிற்கும் என் மாமி என் வாழ்வின் முழு அர்த்தம். என்னது ஆடை வடிவமைப்பாளரும் என் மாமிதான். எனக்கு பிடித்த மாதிரி ஆடையை வடிவமைப்பதில் மிகவும் எனக்கு பிடித்தவர். என்னோட pride dress இவங்கதான் எப்போவும் design பண்ணுவாங்க. நிஷாந்தி மற்றும் தரணி ஜெய் ராஜ் இவர்கள் தான் என் புன்னகை. என்னை இவர்கள் உடன் இருக்கும் போது என் வலிகள் மறைந்து விடும்…

என்னது MPU பள்ளி மற்றும் கல்லுரி ஆசிரியர்ளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். Dr. கோபிநாத், காமேஷ்,  மினி,  பானு பிரியா நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

 

அணியம் அறக்கட்டளையின் பற்றி

சொல்லணுனா ஒரு வார்த்தைல சொல்லுறன் என்னோ அடையாளம் அழகு ஜெகன் தான் founder. இவர பற்றி சொல்லணுனா நிறைய இருக்கு ஒரு நல் போதாது. என்னை பொறுத்த வரை இவர் உண்மையில் ஒரு மனிதன்.

அணியம் அறக்கட்டளையின் பாபாசாகிப் டியூஷன் சென்டரின் co ordinator ஆகவும் இருக்கும் தினேஷ், அணியம் அறக்கட்டளையின் செவிகள் எனும் சேவை மையத்தை co ordinatorவும் இருக்குறாரு. ஆம் தன்னை மாதிரி பிரச்சனையில் இருக்கும் பல அழுகும் குரலுக்கு செவிமடுத்து, அவர்களுக்கு பிரச்சினையை தீர்த்து வைத்து, ஆதரவு ஒளியாக தனது சேவையை தொடர்ந்து வரும் தினேஷ் உலக உயிர்கள் அனைத்தும் இயற்கை தானே‌ அதில் என்ன வேற்றுமை பாரபட்சம் அனைத்து உயிர்களும் இங்கே சமமே …..

இதனை கற்பி ஒன்று சேர் புரட்சி செய் என அம்பேத்கர் சொல்லாடலுன் முடித்துள்ளார்….

இந்த சமுதாயம் குயர் மக்களுக்கு செமிமடுத்திடும் என்ற நம்பிக்கையில்…..

-அருண் தர்ஷன்

 

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன