நாங்களும் ஆண்கள் தான்
இந்த சட்டைய போடாத..இந்த மாதிரி Trouser போட்டுட்டு வெளியே வராத.இந்த மாதிரி bracelet போடாத.இப்படி நடக்காத,இப்படி உட்காரக்கூடாது.இப்படி எல்லாம் பண்ணா இந்த உலகம் என்ன சொல்லும்? இந்த உலகம் உன்ன பத்தி என்ன பேசும்? இது என் அம்மா சொல்லி இருந்தா கூட பரவாயில்லை. என் உற்றார்,உறவினரான பக்கத்து அக்கா,பாட்டியோட திட்டு வாங்கிக்கொண்டே வளர்ந்து வந்தேன்.
என் அம்மாவும் சரி,என் அப்பாவும் சரி,என் விருப்பப்படியே என்னை வளரவிட்டாங்க.அதற்கு எல்லாம் சேர்த்து நான் Comeout ஆகும் போது என் அம்மாவை Brainwash பண்ணியே சாகடிச்சிட்டாங்க..
உன் பிள்ளைக்கு இவ்வளவு செல்லம் கொடுத்ததால் தான் இவ அப்படி பண்றாள்.அவள கால உடைச்சு கல்யாணம் பண்ணி இருக்கணும்னு சொன்னாங்க.அம்மாவும் First பயந்து அவங்க சொல்றத கேட்டு அது மாறி பண்ணாங்க.But,இப்ப வர வர தான் என்ன புரிந்து நடந்துகிராங்க.
நான் ஒன்னும் time எடுத்து யோசிக்காம எந்த முடிவும் எடுக்ககல.நிறைய யோசிச்சு இருக்கேன்..நிறைய Counselling Attend pannen.
எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு நிறைவு இருக்காது.
எனக்கு தெரியும் ஏதோ ???? ஆகுதின்னு..But என்னன்னு சொல்லி புரிய வைக்கிற அளவுக்கு ஆளுங்க என் பக்கத்துல இல்ல.
அம்மா கிட்ட இத பத்தி பேசுனா ‘ அப்ப சரியாகிடும்,இப்ப சரியாகிடும்னு’ எனக்கு ஆறுதல் சொல்லுவாங்க.நானும் College முடிச்சேன்.But, எனக்கு தீர்வு யாரும் கொடுத்த மாதிரி தெரியல.எல்லாரும் என்னுடைய குறைகளை மட்டுமே காட்டி என்னைய கஷ்டப்படுத்தனாங்களே தவிர, அதற்கான தீர்வு யார்கிட்டேயும் கிடைக்கல. அதுக்கு அப்புறம் நானே ஒரு முடிவுக்கு வந்தேன்.எனக்கான தீர்வு என்கிட்ட தான் இருக்கு.நமக்கான தேவையை நாம்தான் தேடி போகனும்னு..
நான் யார்கிட்ட சொல்லமுடியும்.என்னையெல்லம் போட்டு வச்சி பூ வச்சி கண்ணாடில பாக்கும் போது எனக்கே என் மேல அறுவருப்பா இருக்குதுன்னு நான் யார்கிட்ட சொல்லுவேன்.எனக்கு முண்டால் பனியன் போட்டு லுங்கி கட்டி ஊர சுத்தி வர ஆசையா இருக்குன்னு.
நான் யார்கிட்ட சொல்லுவேன்.என்னைய என் பொண்ணு வாய்நிறைய அப்பான்னு கூப்பிடனும்னு.நான் யார்கிட்ட சொல்லுவேன்..சிங்கம் சூரியா மாதிரி பெரிய மீசை வச்சி வெட்டி சட்டை போட்டு அப்பா,தம்பி கூட ஒரு Photo புடிகணும்னு.இப்படி எல்லாம் தோனுதின்னு Google அடிச்சதிக்கே 4 வருசத்துக்கு முன்னாடி Result சூனியம் மாயைன்னு வந்தது.அந்த நேரத்துல எனக்கு தெரிந்த English Google ku புரிய அதுவும் குழம்பி என்னையும் குழம்பி விட்டுறிச்சி.
ஆனால், அதுக்கு எல்லாம் பலனா கடைசியாக நம்ம பசங்க Contact கிடைத்து ஆசையா ஆசையா அவங்ககிட்ட “நான்தான் First Transman Tamilnadu nu சொல்லிட்டு மொக்க வாங்கினேன். அப்புறம் புள்ளிவிவரம் தெரிந்தும் அடப்பாவிங்களா யாராவது ஒருத்தர் ஒரு Interview கொடுத்து இருந்தா நல்லா இருந்திருகும்னு தோணுச்சு.But,பரவாயில்லை.இப்ப எல்லாரும் வெளிய வந்து பேசுறத கேட்கும் போது சந்தோசமா இருக்கு.
என்னை இந்த சமூகம் இன்னும் பழைய கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது என்பதற்கு என் ஊர் மக்களே சாட்சி.அதிலும் ஒரு சிலர் தீண்டத்தகாதவராக நடத்துவது,வலியை தந்தாலும்,ஒரு சிலரின் புரிதல் என்னை அதிர்ச்சியுடன் கலந்து சந்தோசத்தை தருகிறது..
-திருநம்பி ரிஸ்வான் பாரதி