பால்மணம் மின்னிதழ் “வலிகளின் குரல்”

அணியம் அறக்கட்டளையின் , LGBTQ மக்களின் வலிகளையும் வாழ்க்கைமுறையும் பொது சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்காக கடந்த 2020 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது . தொடர்ந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் பால்மனம் மின்னிதழ் இணையதளத்தில் சமூக செயல்பாட்டாளர்கள் மூலம் வெளியிடப்பட்டு‌ வருகிறது. 

ஒவ்வொரு இதழிலும் உள்ள கட்டுரைகள் LGBTQIA+ மக்களாலும் அவர்களுக்கு ஆதரவு தரப்படும் பொது சமூக எழுத்தாளர்களும் எழுதப்பட்டது. இந்த  மின்னிதழ்கள் மூலம் LGBTQ+ பற்றிய புரிதலை‌ பொது சமூகத்திற்கு ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.

மின்னிதழில் இடம்பெற்றுள்ள பகுதிகள்,

பேராளுமை

LGBTQIA+ மக்களுக்காக களத்தில் இறங்கி செயல்பட்டுவரும் போராளிகளைப் பற்றிய கட்டுரை

தின்னை

சாதனை புரிந்து கொண்டிருக்கும் திருநங்கைகள் பற்றிய நேர்காணல்

ஆராய்ச்சி மணி

பால் பாலினம் பாலியல் ஈர்ப்பு போன்றவற்றை பற்றிய ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டாளர்களின் கட்டுரை

அச்சாணி

ஒவ்வாமை நிராகரித்தல் போன்றவற்றை எடுத்துக் கூறும் விதமாக இந்த கட்டுரைகள் அமையும்,

ஜோல்னா

சமபால் காதல் கதைகள் மற்றும் கவிதைகள்

கொட்டகை

LGBTQIA+ மக்களுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்புகள் பற்றிய கட்டுரை.

திரைபிரிகை

LGBTQIA+ மக்களுக்காக உருவாக்கப்படும் திரைப்படங்களைப் பற்றிய விமர்சனம் உள்ளடங்கிய கட்டுரைகள்.

தண்டோரா.

LGBTQIA+ மக்களுக்கான தகவல் சேகரித்து கொடுக்கும் கட்டுரையாக தண்டோரா அமைந்துள்ளது.

 

மேலே உள்ள பகுதிகளை கொண்டு ஒவ்வொரு மாதமும் மின் இதழ் வெளியிடப்படேகிறது.  இவ்விதழில் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தில் ஆர்வம் உடைய சமூக நீதி ஆர்வலர்கள் என பலரும் பங்களிப்பு கொடுத்து வருகின்றன. மேலும் இவ்விதழ் விளிம்புநிலை சமூகமான எல்ஜிபிடி சமூக மக்களுக்கு அரணாக விளங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

நன்றி,

அழகு ஜெகன்,

ஆசிரியர்

பால்மணம் மின்னிதழ்