கேள்வி: “வானவில் சுயமரியாதை பேரணி ” பற்றிய உங்கள் கருத்து?
பதில்: இந்த வரிகளில் உள்ள மூன்று வார்த்தைகளிலுமே சிறந்த பொருள் உள்ளது.வானவில் என்பது பலவண்ணங்களை கொண்டது.அதே போல் நம் வானவில் சுயமரியாதை அமைப்பும் மாற்றுத்திறனாளிகள்,பல்பாலின மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்,தலித் போன்றவர்களின் நலனுக்காகவும்,ஆதரவுக்காகவும் உள்ளது.மேலும் அவர்களின் வளர்ச்சிக்கும்,சமுதாயத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கும் ஒரு பாதையாக அமைக்கிறது.வானவில் என்ற பொருள் இதற்கு மிக சரியாகவும்,இதை அழகுப்படுத்தும் விதமாகவும் உள்ளது.
சுயமரியாதை என்பது அவரது சுதந்திரத்தை மீட்டும் தரும் விஷயமாகும்.எந்த ஒரு தாழ்வு மனபான்மையும் நம்மீது விழாமல் இருக்கவும்,தைரியமாக சமுதாயத்தில் வாழவும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
பேரணி என்பது நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,மக்கள் நம்மை ஆதரிக்கவும் நாம் குரல் எழுப்பி ஒன்றாக செல்லும் ஒரு நடைப்பயணம் ஆகும்..நாம் தொடர்ந்து பேரணி நடத்தினால்,நாம் மக்கள் மத்தியில் ஒன்றிணைய வாய்ப்புண்டு.
கேள்வி: lgbtq அமைப்பு எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது?
பதில்: நாக்பூரில் பேரணி நடத்தப்படும்போது,queer மக்கள் அரசியல் பேசக்கூடாது என்று அந்த ஊர் அரசு கட்டளை போட்டது.நாம் அதற்கு எதற்காக எதிர்ப்பு தெரிவித்தோம்.ஏனெனில்,lgbtq மக்கள் தனித்தீவில் வாழவில்லை.அவர்கள் மக்களோடு மக்களாக தான் வாழ்கிறார்கள்.அதிலேயே தலித் மக்கள்,மாற்றுத்திறனாளிகள்,ஒடுக்கப்பட்ட மக்களும் இருக்கிறார்கள்.அந்த மாதிரியான அரசியலைதான் நாங்கள் தமிழ்நாட்டில் முன் எடுக்கிறோம்.அதுவே சில மதச்சித்தாந்தம் பேசுபவர்களுக்கு எரிச்சலாக உள்ளது,நாம் அதிகமாக இருக்கிறோம் என்பதற்காக.மேலும் நமக்கு பேரணி நடத்த கொடுக்கப்படும் இடங்களில்,அதிக மக்கள் வசிப்பதில்லை.எனவே,அனைத்து தென்மாவட்ட மக்களும் இதை முன்னெடுக்க வேண்டும்.நாங்கள் ஏற்கனவே கோவையில் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
கேள்வி: நான் விவேக் வீரசேகரை பார்த்தவரையில்,அனைத்து lgbtq மக்களும்,தங்களுக்கு சட்ட அங்கீகாரம் என்று கேட்டனர்,ஆனால்,நீங்கள் மட்டும் இடஒதுக்கீடு வேண்டும் என கேட்டீர்கள்?அதற்கான காரணம் நான் தெரிந்துக்கொள்ளலாமா?
பதில்: சமுதாயத்திலும்,வீட்டிலும் lgbtq மக்களை சிலர் ஏற்றுக்கொள்ளாமல்,வீட்டை விட்டு துரத்துகிறார்கள்.அதனால் அவர்கள் கல்வி கற்க ,வாழ்க்கை வாழ முடியாமல் கஷ்ட நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.இடஒதுக்கீடு மூலம் தலித்கள் நிறைய முன்னேறி வந்து இருக்கிறார்கள்.அதனால்,நமக்கு இடஒதுக்கீடு கிடைப்பதன் மூலம்,நமக்கு பாதுகாப்பும்,நமது வாழக்கை மற்றும் அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்.அவர்கள் ஒடுக்குதலில் இருந்தும் வெளியேற வாய்ப்பு கிடைக்கும்.
கேள்வி: lgbtq மக்களுக்கு,எந்த விஷயம் சட்டப்பூர்வமாக கிடைக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்:
பதில்: இந்தியாவில்,சட்டம் என்று ஒன்று கொண்டு வந்து,அதை நிறைவேற்றினாலே பெரிய விஷயம்தான்.தீண்டாமை கூடாது என்ற சட்டம் இருந்தும்,தீண்டாமை சில இடங்களில் நீடிக்கிறது.பாலின வேறுடாட்டை வைத்து தரம் தாழ்த்தக்கூடாது என்று சட்டம் இருந்தும்,இன்றும் ஊதியம் மற்றும் மற்ற விஷயத்தில் பாலின தரம் தாழ்த்துகிறார்கள்.எனவே,முதலில் அடிப்படையாக பள்ளிகளில்,கல்லூரிகளில்,மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.பிறகு நம்மைக் ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எண்ணம் வரும்.பிறகு இந்தச்சூழல் நீடித்தால்,நமக்கென்று உரிமை சட்டம் நிறைவேற வாய்ப்புண்டு..இதை முன்மொழிகின்ற அரசியல் கட்சிகளும் உண்டு.காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் அதன் தேர்தல் மற்றும் இதர அறிக்கைகளில்,நமக்கான ஒதுக்கீடு பற்றி குறிப்பிட்டுள்ளது.மேலும் netflix திரைப்படங்கள்,சீரியஸ் போன்று வேறு சில இணையதள பொழுதுபோக்கு நிறுவனமும்,நம் lbtq மக்களை ஒரு கதாபாத்திரமாக,குணமாக பயன்படுத்தினால்,இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புண்டு.
கேள்வி: lgbtq மக்கள் மீது சாதி,மத விஷயங்கள் திணிக்கப்படுவதாக நினைக்கிறீர்களா?
பதில்: சாதி,மதம் என்றாலே அங்கே ஒருங்கிணைவு இருக்காது.அவர்கள் நம்மை அறிவியல் பூர்வமாக நம்மை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.எந்த மதக்கடவுளும்,மனிதர்களுக்குள் பிரிவினையை தூண்டுவதில்லை.
கேள்வி: ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த அமைப்பு ,lgbtq மக்களில் அவர்களின் மதத்தைச் சார்ந்தவர்களை மட்டும் சேர அழைப்பு விடுத்தது.இதை பற்றி உங்களுடைய கருத்து:
பதில்: நான் முன்பு சொன்னது போன்று,அவர்கள் நம்மை மதம்,சாதி பிரித்தால்,அவர்கள் நம்மை பாவம் பார்த்து சேர்க்க நினைக்கிறார்கள் என்று பொருள்.அதனால்,நமக்கான உரிமைகளும்,முன்னேற்றமும் சரியாக கிடைக்காது.நாட்டில்,இரண்டு பிரிவினை தான்.ஒன்று முதலாளி வர்க்கம்,மற்றொன்று தொழிலாளி வர்க்கம்.முதலாளிகள் பேரிடர் காலத்தில் கூட பணக்காரராக வாழ்கிறார்கள் .அம்பானி 250 மடங்கு பணக்காரர் ஆகியிருக்கிறார்.நாமெல்லாம்,நமக்கான முன்னேற்றம் கிடைக்கும் வரை தொழிலாளர் வர்க்கத்தை சார்ந்தோர்தான்.எனவே இடதுசாரி அரசியல் தான் நமக்கு சிறந்தது.
கேள்வி:பெற்றோர்கள்,நமக்கான 377 தனிப்பிரிவு சட்டம் வந்த பிறகு,நம்மை ஏற்றுக்கொண்டார்களா?
பதில்: அந்த சட்டம் வந்ததும்,நீக்கியதும் எல்லாருக்கும் தெரியாது.முற்போக்கு சிந்தனை மக்கள் உட்பட.எனவே குழந்தை திரைப்படங்களில்,நம்மை ஒரு கதாபாத்திரமாக வைப்பதன் மூலம், நம் விழிப்புணர்வு சட்டப்பூர்வமாக மக்களிடத்தில் சேரும்.
கேள்வி: lgbtq மக்கள் மட்டுமல்லாது,அனைவருக்கும் பொதுவாக நீங்கள் சொல்ல விரும்புவது?
பதில்: சாதி,மத ரீதியாக அனைவரும் ஒருங்கிணைய முடியாது.பிரிய தான் முடியும்.எனவே,அனைவரும்,சாதி,மத வேறுபாட்டை கடந்து,சமமான ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் ஒன்றிணைய வேண்டும் .மேலும் நமக்கான முன்னேற்றத்திற்கு பாடுபடும்/பேசும் இடதுசாரி அரசியலை முன்மொழிய வேண்டும்.
–பாஸ்கர்
கார்த்திக்சேஷா
28/10/2022 at 1:44 காலை
நிறைய கேள்விகளுக்கு பதில் ஏற்றுக் கொள்ளும் அளவிலும் அத்தியாவசியமான வற்றையும் கூறியுள்ளார்!