இந்திய மக்கள் அனைவரும் தொலைக்காட்சியின் முன்பும் வானொலியின் முன்பும் இந்திய நாட்டின் அடுத்த பிரதமர் யார் வருவார் என்ற ஒரு மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தனர்.

அதே நேரத்தில் மதுரை தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் நாம் இந்த மக்களால் அரவணைக்க படுவோமா அல்லது புறக்கணிக்கப்படுவோமா என்று மிகுந்த ஏக்கத்துடன் நாற்காலியில் அவள் அமர்ந்திருந்தாள்.

ஆம் அவள் மக்களிடம் சென்று வாக்கு கேட்கும் பொழுது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் மதுரை மாவட்டம் ஒரு முன்மாதிரியான மாவட்டம் ஆகும் என்ற வாக்குறுதியை தந்திருந்தால். தான் வெல்லவில்லை என்றாலும் தன்னை இந்த மக்கள் எவ்வளவு அரவணைத்து உள்ளார்கள் என்பதை அறியவே அவளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இருக்காதா பின்பு இந்திய வரலாற்றில் ஒரு முதல் திருநங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் இந்திய நாட்டில் இதுவரை நடந்திராத ஒன்று நமது தமிழ்நாட்டில் அரங்கேறியது அவளை இந்த மக்கள் அரவணைத்து 15வது இடத்தில் அவளின் நிலையினை உறுதிப்படுத்தியிருந்தனர்.

நான் திருநங்கை என்பதால் எனக்கு குடும்பமும் இல்லை பிள்ளைகளும் இல்லை நான் ஊழலும் செய்யப்போவதில்லை என்னை நம்பி நீங்கள் தாராளமாக வாக்கு செலுத்தலாம் என்ற வாக்குறுதி தந்து புதிய தலைமுறை கட்சியின் சார்பாக போட்டியிட்ட பாரதிகண்ணம்மா அவர்கள் 13 வயதிலிருந்து ஒடுக்கப்பட்டதை அந்த தருணத்தில் நினைத்து பார்த்திருப்பார்.ஆட்சியும் அதிகாரமும் ஒரு ஜாதி ஒரு மதம்  அல்லது ஒரு இனம் சார்ந்தோ இருந்தால் அந்த ஆட்சியின் கீழ் இருக்கும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பாதகமாக அமையும்.

அதுபோலவே ஒரு மனித இனத்தை பல ஆண்டுகளாக ஒடுக்கி வரும் இந்த மனித சமூகம் அவ்வளவு சுலபமாக தேர்தலில் வெல்ல விட்டு விடுமா என்ன…

 

 

பல தடைகளுக்கு பின்பு ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற அவர் முதன் முதலாக வேலைக்கு செல்லும் பொழுது எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்க்கை தொடங்குமென நினைத்து நேர்முகத்தேர்வில் குரலை காரணம்காட்டி வெளியே அனுப்பி அவளை கலங்கடிக்க செய்தனர்.

நான் எவ்வளவு படித்தாலும் இந்த சமூகம் தன்னை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது நானும் அவர்களைப் போல மனிதர்தானே என்ற எண்ணத்தின் பிடி கொண்ட விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற அவளை சமூகத்திற்கு சேவையாற்றி வரும் தோழி ஒருவர் அறிவுரையால் அவளின் எண்ணத்தை மாற்றி வாழ்வின் அடுத்த பாகத்தினை தொடங்கினார்.

சமூகவியல் பிரிவில் மேற்படிப்பை முடித்த அவளுக்கு  ஓசூரில் ஒரு வேலை கிடைத்தது.

 

அதன்பின் தனியார் வங்கியில் சேல்ஸ் மேனேசாராக பணியை தொடர்ந்தார்.

 

என்னதான் பணி கிடைத்து வேலை பார்த்தாலும் முழு திருப்தி அடையாத நமது பாரதி கண்ணம்மா 2004 ஆம் ஆண்டு முதல் பொது வாழ்க்கைக்கு தயாரானார்.

 

கிராஸ் எனும் இயக்கத்தைத் தொடங்கி அவர் வாழும் மாவட்டத்தில் உள்கட்டமைப்புகளை சீர்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். திருநங்கைகளுக்கென

அடையாளஅட்டை கொடுக்கப்பட்டிருந்தாலும், அதிலே ஆண் அல்லது பெண் என்பதைக் குறிப்பிடவில்லை. அவர்களுக்கென்று ஒரு அரசியல் சட்டநிலை இல்லை, வங்கிகளில் அவர்கள் கடனுதவி பெறமுடியாது மற்றும் அவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகின்றது.

 

இதனை சீர்ப்படுத்த தனது போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார் திருநங்கைகளையும் இந்த சமூகம் சமமாக பார்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக போராடி வருகிறார்.

 

பாரதி கண்ணம்மா அறக்கட்டளை என்ற பெயரில் திருநங்கைகளின் வாழ்வை மேம்படுத்த பல உதவிகள் செய்து வருகிறார்.

 

திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு,கல்வி, வீட்டு வசதி கிடைக்க அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

 

கிட்டத்தட்ட 1000 மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஸ்கில்ஸ் டெவலப் மெண்ட் பயிற்சி அளித்திருக்கிறார்.

 

 

பல திருநங்கைகளின் வாழ்வை வளமாக்கியும்  திருநங்கை என்று அழைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு காரணமாக அமைந்த பாரதி கண்ணம்மா அவர்களை பால் மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறது.

 

-அருண் தர்ஷன்

 

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன