மதுரை கோரிப்பாளையத்தில் திருநங்கைகள் நடத்தும் உணவகம்.

 

 

மதுரை  டிரான்ஸ் கிட்சன்  (திருநங்கையர் உணவகம்)  – திருநங்கையர்களால் முழுவதுமாக நடத்தப்படும் ஒரு உணவகம் மதுரை நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் கூடிய சீக்கிரத்தில்  சாப்பாடு பிரியர்களின் விருப்பமான இடமாக மாறும் என்று நம்பப்படுகிறது. கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு அருகில் உள்ள  முழு அளவிலான உணவகத்தை மாவட்ட ஆட்சியர் எஸ் அனீஸ் சேகர் வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைத்தார்.

 

 

மதுரையில் உள்ள உலகனேரியை சேர்ந்த டி ஜெயசித்ரா என்பவரால் இந்த உணவகம் நடத்தப்படுகிறது. அவர் பத்தாண்டுகளுக்கு மேலாக கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டுள்ளார் மற்றும் அவரது திருநங்கைகள் குழுவுடன் பல்வேறு விழாக்களுக்கும் கேட்டராக இருந்து புகழ் பெற்றவர்.கோயம்புத்தூர் டிரான்ஸ் கிட்சனின் வெற்றி மதுரையில் இந்த உணவகம்  உருவாக அடித்தளமாக இருந்தது.

 

 

மதுரை டிரான்ஸ் கிட்சன், அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை முதன்மையான வாடிக்கையாளர்களாக கருத்தில் கொண்டு  உணவின் விலைகளை பயன்பெறும் வகையில் வைக்க முடிவு செய்துள்ளது. “ நாங்கள் அதிக லாப நோக்கத்துடன் இந்த உணவகத்தை நடத்தவில்லை ஏனென்றால், இந்த மருத்துவமணையில் சேர்க்கப்படுவோர் பொருளாதார ரீதியாக பின்னடைந்த பிரிவை சேர்ந்தவர்கள். சிக்கன் பிரியாணி ஒரு தட்டுக்கு ரூபாய் நூறு மற்றும் சைவ உணவு ரூபாய் எண்பதுக்கும் விலை நிர்ணயம் செய்துள்ளோம் ” என்றார் ஜெயசித்ரா.

 

இந்த உணவகம் ஞாயிற்றுக்கிழமை வரை மதிய உணவை மட்டுமே வழங்கும் மற்றும் திங்கள் கிழமை முதல் மதிய உணவு பட்டியலில் காலை உணவு, இரவு உணவு மற்றும் பல வகை பொருட்களை சேர்க்கும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு அசைவ உணவுகளை உணவு பட்டியலில் அதிகம் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இங்கு எட்டு திருநங்கைகள் உணவகத்தில் வேலை செய்வார்கள் மற்றும் நான்கு பேர் கேட்டரிங் ஆர்டர்களுக்காகவோ அல்லது வழக்கமான ஊழியர்கள் இல்லாத நிலையில் வேலைசெய்யவோ தயாராக இருப்பார்கள்.

 

 

உணவகத்தை திறக்க எட்டு லட்சம் ரூபாய் தேவைப்படும் ஜெயசித்ராவுக்கு , விளிம்பு நிலையில் உள்ள பிரிவுகளுக்காக வேலை செய்யும் மூன்று நிறுவனங்கள் ஸ்வஸ்தி விருத்தி மற்றும் அர்கியம்  ரூபாய் ஆறு லட்சத்து ஐம்பதாயிரத்தை வட்டியில்லா கடனாக வழங்கியுள்ளது . “அவர் தனது வசதிற்கேற்ப எளிதான மாத தவணைகளில் கடனை திருப்பி செலுத்துவார்” என்று கூறினார், ஸ்வஸ்தியின் பிரதான திட்ட மேலாளரும் திருநங்கைகளின் வளமையத்தின் நிறுவனருமான பிரியா பாபு . உணவகத்துக்கு ஒரு நல்ல இடத்தை கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. “அவர்கள் இடத்தின் உரிமையாளர்களை அணுகும்போது 12 இடங்களில் நிராகரிக்கப்பட்டோம். உரிமையாளர்கள்  முன்பதிவு தொகையை பெற்று பணத்தை திருப்பி கொடுத்த சந்தர்ப்பங்களும் இருந்தன மற்றும் பெரும்பாலோர் தங்கள் உறவினர்கள் இதை விரும்பமாட்டார் என்று அவர்கள் மேல் குற்றம் சுமத்தினர் ”, என்று பிரியா பாபு கூறினார். கடைசியாக, கோரிப்பாளையம் அருகே உள்ள ஒரு உணவக உரிமையாளரும் கட்டிடத்தின் உரிமையாளருமான அருண், கடைக்கு இடத்தை வாடகைக்கு விட்டார்.

 

டிரான்ஸ் கிச்சனுக்கு கையெழுத்து வழங்கி உரிமையளிக்கும் நிறுவனங்கள் அதை ஒரு பிராண்டாக மாற்றி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எடுத்து செல்கின்றன. மூன்றாவது டிரான்ஸ் கிட்சன் சென்னையிலும் நான்காவது சேலத்திலும் வர வாய்ப்புள்ளது.

 

-சுந்தரி

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன