இந்திய பாராளு மன்றத்தில் LGBTQIA+ மக்களுக்கு ஆதவாக ஒலித்த குரல்களும் அவற்றின் விளைவுகளும் :
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் “அனைவரும் சமம்” என்று இருந்த போதிலும் இங்கு அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்கப் பெறுவதில்லை சாதி, மதம் பாலினம், பாலீர்ப்பு என பல்வேறு அடக்குமுறைகன் கருவிகளைக் கைக்கொண்டுள்ள பெரும்பாண்மை சமூகம், இக்கருவிகளைஸ் சாதுர்யமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது பிரயோகப்படுத்தியே வந்துள்ளது. இந்தியா சுதந்திர நாடாகி 70 வருடங்களுக்கு மேலான பிறகும், அறிவியல் தொழில்னுட்பத் துறைகளில் உலகநாடுகளுடன் போட்டிபோடும் அளவுக்கு வளர்ச்சியை எட்டிய பிறகும் கூட அரசியலமைப்புச் சட்டத்தின் சாரமான “அனைவருக்கும் சமம்” என்ற போட்பாட்டினை அமல்படுத்த முடியாமல் இருப்பதன் அரசியல் காரணங்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இதில் புகுமுன்னர் LGBTQIA+ மக்களின் வாழ் நிலையில் அரசியலமைப்புஸ் சட்டத்தின் Article 14 அமல்படுத்தியதிலும் இந்திய அரசு பற்றிய பங்கு பற்றியும் அதன் பின்னர் இந்தத் தொய்வின் பின்னுள்ள அரசியல் சமூக பொருளாதாரம், உளவியல் காரணங்களையும் விவரிக்கலாம்.
2014 ஆம் ஆண்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் தி. திருச்சி சிவா அவர்களால் ஓர் தனி நபர் மசோதா மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது. அன்றைய தேதியில் வலது சாரி பாஜக மற்றும் அதன் கூட்டணிகள் பெரும்பான்மையாக மசோதாவைக் குரல் ஓட்டெடுப்பில் தோற்கடித்தன. அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இம் மசோதாவின் நடைமுறையில் சிக்கல்கள் நிறைந்துள்ளன எனக் கூறி எதிர்ப்பை தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு எதிஎக்கட்சிகளின் பெரும்பான்மை அதிகரித்த நினையில் இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு 36 வருடங்களுக்கு முன்பாக மக்களவையிலும் 45 வருடங்களுக்கு முன்பாக மா நிலங்களவையிலுமே இது போன்ற தனி நபர் மசோதாக்கள் மெரும்பான்மை உறூப்பினர்களின் ஆதரவை பெற்று சட்டமாக மாறியுள்ளன.
மாநிலங்களவையில் வலதுசாரிகளின் குறைவினால் நிறைவேற்றப்பட்ட இந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா மக்களவையில் நிறைவேற்ற இயலாமல் ஒத்திவைக்கப்பட்டு திருநர் மசோதா – 2019 என்ற சாரமிழக்கப்பட்ட ஓர் சட்டத்தால் ஏதோவென்று ஈடுகட்டபட்டது.
2018 செப்டம்பர் 6 ஆம் தேதி அரசு தரப்பு வழக்குரைஞர்களின் எதிர் வாதங்களைக் கேட்ட பின்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் IPC 377 ஐ இரத்து செய்தது. இதன் பின்னரே பல்வேறு இடது அரசியல் சார்புள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கூட வெளிப்படையான ஆதரவுக் குரல்களை வெளிப்படுத்தின.
அந்த வரிசையில் கடந்த ஏப்ரல் 2022 அன்று திமுக மக்களவை உறுப்பினர் திரு செந்தில்குமார் அவர்களால் LGBTQIA+ மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் ஓர் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவில் திருமண உரிமை, தத்தெடுப்பு, வாடகைத்தாய் குழந்தை உரிமை, காப்பாளர் உரிமை, சொத்துரிமைகள் உள்ளிட்ட 12 உரிமைகள் முன் வைக்கப்பட்டன.
அதே நாளில் தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாராமதி சுப்ரியா சுலே அவர்களால் சிறப்புத்திருமண மசோதா 2022 அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா LGBTQIA+ மக்களுக்கும் சமமான திருமணம் சார்ந்த உரிமைகளை உறுதிப்படுத்துவதைப் பற்றிப் பேசியது.
இது போன்ற தனிநபர் மசோதாக்கள் பெரும்பாலும் வெளிச்சம் பெறாமலே போகின்றன. இந்தியாவில் உரிமைகள், உணர்வுகள் போன்ற அனைத்துமே எண்களால் தானே தீர்மாணிக்கப்படுகின்றன.
இவ்வாறு பல்வேறு காலகட்டங்களிலும் LGBTIAQ+ மக்களின் உரிமைகளைப் பற்றிய குரல்களை எழுந்தாலும் இந்திய நாடாளுமன்றமோ, இந்திய அரசோ, இது குறித்து வாய் திறவாத மௌனியாய் இருப்பதன் காரணம் என்ன. இதற்கு அரசியல் சமூகம் போன்ற பல்வேறு காரணங்களைப் பட்டியலிடலாம்.
அரசியல் காரணங்களுள் முக்கியமானது ஓட்ட அரசியல் பற்றிக் குறிப்பிடலாம் பெரும்பான்மை மக்களின் போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தத் தவறியதன் விளைவாக, இந்த அறிவியல் யுகத்திலும் தீட்டு, புனிதம் அசிங்கம் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இவற்றை எதிர்க்கத் துணிவில்லாத மற்றும் மனமுமில்லாத அரசியல் கட்சிகள் இது போன்ற தனி மனித உரிமை சார்ந்த விஷயங்களைப் பேசவும், மீறி யாரும் பேசினால் அவர்களின் குரலை அடக்கவும் என்றும் தயாராக உள்ளன.
பெரும்பான்மையோரின் நலம் சார்ந்த மசோதாக்களையும் சட்டங்களையும் செயல்படுத்தினாலே தேவையான பெரும்பான்மை ஓட்டுக் கிடைத்துவிடும் நிலையில், நான் எதிர்த்து ஓட்டுப் போட்ட ஒருவர் எனக்கான குரலாக, ஒடுக்கப்பட்டவர்க்கான குரலாக ஒலிப்பது எந்த விதத்தில் சாத்தியமான ஒன்று?
இதைத் தாண்டி எதற்குமே இணையாத மதங்கள் LGBTQIA+ மக்களின் உரிமைகள் என்று வந்த போது இணைத்து செயல்படுகின்றன. இந்த மன நிலையே பாராளுமன்றம் வரையில் எதிரொலிக்கிறது. ஆணாதிக்கம், ஆண் தன்மை, பெண் தன்மைப் புகழ்ச்சிகள், புனிதங்கள் போன்ற நிலப்பிரபுத்துவ மன நிலைகளில் இன்றும் கூட சிக்கிக்கொண்டுள்ள பெரும்பான்மை மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தாத வரையில் இது போன்ற முறைகளினால் விடிவுகாலங்கள் பிறந்து, அனைவரும் சமம் என்ற அரசமைப்புஸ் சட்டத்தின் சாரம் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் சில இடது சாரிய அம்பேத்காரிய, பெரியாரிய இயக்கங்களின் ஆதரவுக் குரல்களும் தோள்களும், தோள் கொடுக்கின்றன.
நாட்கள் இப்படியே நகர்ந்துவிடாது மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மகத்தான தத்துவத்தின் படி விரைவில் LGBTQIA+ மக்கள் தங்களின் நியாயமான உரிமைகளை அடைவது நிச்சயம்.
ஜெய்பீம் லால்சலாம்.
-விவேக் வீரசேகர்
