திருநம்பி சோனேஷ் அவர்களுடன் கலந்துரையாடல்

 

வணக்கம் சோனேஷ் எப்படி இருக்கீங்க

வணக்கம் ஜெகன் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க.

நல்லா இருக்கேன் சொனேஷ் . உங்களை பத்தி எனக்கு தெரியும். சென்னைல பாத்துறுக்கோம்.

அதுக்கு முன்னாடி நான்  அணியம் பத்தி சொல்ல விரும்புகிறேன். அணியம் என்பது LGBTQ மக்களாள நடத்த கூடிய ஒரு சேவை அமைப்பு. ஒரு சேவை செய்யும் மையம்.  தொண்டுகளும் செய்வோம். இதுல உறுப்பினராக LGBTQA மக்களும் ஊனமுற்ற மக்களும் தான் இருக்காங்க.  இதுல நாங்க வந்து பால் மணம் அப்படின்ற ஒரு மின்னிதழ் வெளி இடுரோம். அதுல ஒரு இதழாக தான் உங்க கட்டுரை வரபோகுது…

இதுமட்டுமில்லாமல் நாங்க செவிகள் அப்படின்ற சேவைமையம் வச்சிருக்கோம்.  இந்த ரெண்டு அமைப்பும் நம்ம LGBTQ மக்களுக்காகவும் ஊனமுற்ற மக்களுக்காகவும் மட்டும் தான். அதுமட்டுமில்லாம நம்ம குழந்தைகளுக்காக இரவு நேர பாடசாலை சென்னை ல இயங்கிடு இருக்கு.  அப்புறம் உடனடியா என்ன என்ன தேவை தேவைப்படுது ன்னு பாத்துட்டு அவங்களுகாக செவி அப்படின்ற ஒரு அமைப்பு வச்சிருக்கோம். இந்த அமைப்பு மூலமா உடனடியா என்ன தேவை உணவு, போக்குவரத்து உடனடி அவசர தேவைக்கு இந்த அமைப்பு வச்சிருக்கோம்.  அடுத்து AMF அப்டின்ற ஒரு உதவித்தொகை அமைப்பு இருக்கு. இது வந்து தலித் குழந்தைகளுக்காக அப்புறம் LGBTQ மக்களுடைய குழந்தைகளுக்காக  கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக இந்த உதவித்தொகை திட்டம் இருக்கு.. இது எல்லாம் அணியம் அறக்கட்டளை ல இந்த எல்லா திட்டமும் இருக்கு. இதுல பால்மனம் என்ற இதழ் ல உங்க நேர்காணல் இருபதாவது பதிப்பா வர போகுது.

சோனேஷ்…  உங்களை நான் பாத்திருக்கேன். நம்ம சென்னை ல பாத்துறுக்கோம். சோனேஷ் உங்களை பத்தி நான் சொல்றத விட வாசகர்களுக்கு நீங்க சொல்லனுனு நான் விரும்புரேன்…

கண்டிப்பா.. இந்த வாய்ப்பு குடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஜெகன். திருநங்கை திருநம்பிகளுக்கு  வாய்ப்பு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். இந்த வாய்ப்பு குடுத்த உங்களுக்கும் அணியம் அறக்கட்டளை க்கும் ரொம்ப நன்றி சொல்கிறேன்.

சோனேஷ் அப்டின்றவரு யாருனா நா எல்லா இடத்துலயும் சொல்ல விரும்புறதுதான் இங்கேயும் சொல்லுறேன். நான் ஒரு திருநம்பி. நான் ஒரு திருநம்பி ன்னு சொல்றதுல ரொம்ப பெருமை படுறேன். எதனால அப்டின்னா எல்லாரும் ரொம்ப கேலி கிண்டல் பண்ணுவாங்க. ஆனா எனக்கு அது பெரிய விஷயமே கிடையாது. நான் ஏன் ரொம்ப பெருமையா நேனைக்கேன் அப்டின்னா ஒரு சாதாரணமான ஒரு ஆணோ பெண்ணோ அவங்க வீட்ல சொல்றத கேட்டுட்டு இருப்பாங்க.. ஆனா LGBTQA மக்கள் அவங்க பாலை அவங்க தேர்ந்தெடுக்கிற உரிமை அவங்களுக்கு இரஅந்த வாய்ப்பு LGBTQ மக்களுக்கு கிடைச்சிருக்கு. அதனால் நான் ரொம்ப பெருமையா உணருறேன்.  இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. நான் இப்படி பிறந்தது நால மட்டும் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடச்சிருக்கு.

 

ஓகே.. சூப்பர் .. சோனேஷ் ஒரு திருநம்பி ஆ இல்லாம என்னலாம் பண்ணிட்டு இருக்கீங்க..?? எந்த மாதிரி அமைப்பு நடத்திட்டு இருக்கீங்க.. அதெல்லாம் மக்களுக்கு சொல்லுங்க.. சோனேஷ்.

கண்டிப்பா… கண்டிப்பா….

நான் ஒரு திரு நம்பியா ஆகுறதுக்கு முன்னாடி நெறய சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திச்சு இருக்கேன்.  அந்த பிரச்சனை வருங்கால LGBTQ மக்களுக்கு வர கூடாதுனு ஒரு திரு நம்பி ஆ இல்லாம ஒரு சோனேஷ் ன்ற பொது மனுஷனா இருந்து அவங்களுக்கு தேவையான உதவிகளை பண்ணிட்டு இருக்கேன். முக்கியமாக பாத்தீங்கன்னா திருநம்பிங்களுக்கு எந்த அமைப்பும் கிடையாது. மத்த அமைப்பு மூலமா எங்களுக்கு கொஞ்சம் உதவிகள் கிடச்சது. கொஞ்சம் வழிகாட்டல்கள் கிடைச்சது. திரு நம்பி ன்னு அவங்களுக்கு எந்த ஒரு  விழிப்புணர்வும் இல்லாம இருந்துச்சு.அவங்க அவங்க வலி அவங்க அவங்களுக்குன்னு நெனசிட்டு நமக்கானத நம்ம மக்களுக்கு நம்ம கொண்டு போய் சேர்கணுனு நெனசிட்டு ஒரு அமைப்பு உருவாக்கி இருக்கோம். அந்த அமைப்பு பெயர்

“Tamilnadu Transmen Assosiation” .

அந்த அமைப்பு மூலமா நம்ம மக்களுக்கு வேலை வாய்ப்பு, அப்புறம் பெற்றோர்களுக்கு நம்ம பாலினத்தை பற்றி விழிப்புணர்வு கொண்டு போய் சேற்குறதுக்கு , திரு நம்பி ஆ மாறுனதுக்கு அப்புறம் படிக்கணுனு விருப்பம் உள்ளவங்களுக்கும் , அவங்க அவங்க கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வாங்கி குடுக்கோம்.படுச்சவங்களுக்கு அவங்க தகுதிக்கு ஏற்ற வேலை. படிக்காதவங்களுக்கு அவங்களுக்கு நெனச்ச வேலையும் வாங்கி குடுக்கோம். வேலை யாரு வேணாலும் குடுப்பாங்க இதுல என்ன தனித்துவமான விஷயம் இதில இருக்குன்னா.. வேலை பாக்குற இடதுல இவங்க  ஒரு திருநம்பி அப்டின்னு உண்மையான  அறிக்கை குடுக்குறோம்.  அதற்கான வழிகளை இந்த அமைப்பு மூலமா நம்ம குடுத்துட்டு இருக்கோம்.

இதுக்கு முன்னாடி திரு நம்பின்னு சொன்னா வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க. நானும் இந்த வலிகளை அனுபவிச்சு இருக்கேன்.ஆனா இப்போ அந்த மாதிரி கிடையாது. எங்க அமைப்பு மூலமா நாங்க முன்னாடியே அவங்களுக்கு சொல்லித்தான் வேலைல சேர்த்து விடுரோம். அவங்களும் எதும் ஒன்னுன்னா எங்களை தொடர்பு கொள்ளுவாங்க.  இதுக்காக கோவை ல உள்ள SP சார் க்கு நான் ரொம்ப நன்றி தெருவிக்கிறேன். நாங்க அவங்க கிட்ட ஒரே ஒரு உதவி தான் கேட்டோம். உங்களை மாதிரி பெரிய ஆட்கள் எங்களுக்கு உதவி பண்ணுனா அவங்க எங்கள நம்புவாங்கனு சொன்னோம்.  நம்ம சொல்றத கேட்டு அவங்களும் நமக்காக நெறய கம்பெனி ல  வேலைவாய்ப்பு வாங்கி குடுக்க உதவி இருக்காங்க. அதுக்காக அவங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

நிறைய மக்களுக்கு இது தெரியவே மாட்டிக்கு. இந்த ஒரு வாய்ப்பு மூலமா தெரியபடுத்துறதுக்கு நான் ரொம்ப சந்தோசம் பட்டுக்கிறேன். எப்படி எங்களோட மாற்றங்கள் தொடங்குது அப்டின்னா எங்களோட சின்ன வயசுல இருந்தே.நான் சின்ன வயசுல இருந்தே நான் ஒரு பையன் அப்டின்னு நெனசிட்டு இருந்தேன். நம்ம கொஞ்சம் வளர்ந்து நமக்கான  காச சம்பாதிச்சிட்டு  அறுவை சிகிச்சை பண்ணிட்டு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும் அப்டின்ற  எண்ணத்தோடதா இருப்பேன். எனக்கு மெட்ச்யூரிட்டி வந்ததுக்கு அப்ரோ தான் நான் தேட ஆரம்பிச்சேன். அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது நம்ம ஒரு பையன் இல்ல. நம்ம ஒரு திருநம்பி அப்டின்னு. அத நா அப்போதான் உணர்ந்தேன்.

ஓகே.. ஓகே…. சொனேஷ்

அதே மாதிரி தா எல்லாரும்.. நம்ம ஒரு பையன் அப்படின்ற எண்ணத்தோடதா இருப்பாங்க.. அவங்களோட செயல்களும் ஒரு பையன் மாதிரி தான் இருக்கும்.. அவங்களோட உடைகளும் ஆண்கள் மாதிரி தான் போடுவாங்க. முடிய வெட்டிகணுனு நெனைப்பாங்க.. பசங்க கூடதான் நெறய நேரம் இருப்பாங்க.. பசங்க விளையாடுற விளையாட்டு தான் விளையாடுவாங்க..  கிரிக்கெட், கோலி அப்புறம் பைக் , கார் , டிராக்டர் ஓட்டுறது . இதுல ஒரு பிளஸ் என்னனா ஒரு பெண் தோற்றதுல இவங்க எல்லாம்  தைரியமா இருந்து பண்றாங்க. இந்த மாதிரி பன்றத அவங்களோட வயதுக்கு வரும் வரைக்கும் தான் அனுமதிக்காங்க. பெரும்பாலும் பெற்றோர்களும் இந்த சமுதாயமும் அனுமதி பண்றாங்க. அதாவது 70%. 30% மக்கள் நம்மள அப்படி பண்ண கூடாதுனு அடைக்கி வைக்காங்க.70% அவ தைரியமா இருக்கா இருக்கட்டும் ன்னு விட்ராங்க. பருவமடைந்த நேரத்துல தான் நமக்கு அத்தனை வலிகள். அதுக்கு அப்புறம் தான் நம்ம யோசிப்போம். நம்ம உடம்புல ஏன் இத்தனை மாற்றம் வருது , மார்பகங்கள் வளருறது,  மாதம் மாதம் வருகிற அந்த நாட்கள்  தான் எரிச்சல் ஆ இருக்கும்.. அது சொல்ல முடியாத ஒரு வலி. நம்ம ஏன் இந்த மாதிரி ஆனோம்.

நம்ம இப்படி ஆகாமல் இருந்திருக்கலாம் அப்படின்ற வலி நெறயவே இருக்கும். இதுபோக அந்த பருவமடைதல் நேரத்துல தான் எல்லாரும் அவங்க பெண்மைய உணருவாங்க.. ஆனா ஒரு திருநம்பி அப்படி உணர மாட்டாங்க . அவங்களால வீட்ல சொல்றதுக்கு தயக்கம். சொல்லாம இருக்கவும் முடியல. வீட்ல சொன்னா அத ஏத்துக்க மாட்டாங்க. அந்த நேரத்துல தான் நமக்கான தேடல தேடி போராங்க. நம்மள மாதிரி யாராவது இருக்காங்களா அவங்க கிட்ட நம்ம ஒரு வழிகாட்டல் கேப்போம் நம்ம மாற முடியுமா அப்டின்னு கேப்போனு கேக்காங்க. நெறய திருநம்பிகள் வீட்டவிட்டு வரும்போது ஒரு பையன் அப்டின்னு தான் வெளில வராங்க. அப்புறம் நம்ம மக்கள் அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு தெளிவுகள் குடுத்ததுக்கு அப்புறம் தான் திரு நம்பின்னு தெரிஞ்சி அதுக்கான சிகிச்சை எடுத்துக்கிராங்க.

ஒழுங்கான சிகிச்சைக்கு முதல்ல நம்ம உளவியல் நிபுணர் கிட்ட தான் போகணும் . நான் இந்த இடத்தில என்ன சொல்லுறேன்னா நம்ம யாருனு நமக்கு தெரியும். நம்மள சுத்தி இருக்கிறவங்களுக்கு அத நிரூபிச்சு காட்டணும் அதுக்காக தான் நம்ம அப்டி பண்றோம். அவன் சொல்லித்தான் நான் ஒரு திருநம்பின்னு நிரூபிக்க ன்னு அவசியம் இல்லை. சின்ன வயசுல இருந்தே நான் யாருனு எனக்கு தெரியும். இருந்தாலும் சமூகம் ன்னு ஒன்னு இருக்குல்ல. அவங்களுக்காக உளவியல் நிபுணர்ட்ட நம்ம கேக்கணும். அந்த நிபுணர் இந்த கேள்விகள் எல்லாம் கேப்பாங்க. சின்ன வயசுல இருந்து யார் கூட விளையடுறீங்க யார் கூட பழகுவீங்க அப்டினு. அடுத்ததா  இவங்க தா ரொம்ப முக்கியமான ஒருத்தவங்க. நம்மோட ஹார்மோன் லெவல் செக் பண்ணுவாங்க.

சோனேஷ் நிறைய பேருக்கு சிஸ் விமென் சிஸ்மென் அப்டின்னா என்னன்னே தெரியல.

ஆஹ்… சிஸ் மென் அப்டின்னா ஆணா பிறந்து ஆணா வருவாங்க. பெண்ணா பொறந்து பெண்ணா வளருவாங்க. ஒரு நார்மல் பெர்சன். அப்போ நம்ம நார்மல் இல்லையானு கேப்பாங்க. அப்புறம் ** நம்ம செக் பண்ணனும். எல்லாருக்கும் ஈஸ்ட்ரோஜென் டெஸ்ட்ரோஜன் அப்டின்னு ரெண்டு இருக்கும். ஈஸ்ட்ரோஜென் அபடின்றது பெண்களுக்கான ஹார்மோன். டெஸ்ட்ரோஜன் அப்படின்றது ஆண்களுக்கான ஹார்மோன். பெண்களை விட நமக்கு அதிகமாக
ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இருக்கும். அதனால் நமக்கு இந்த மாற்றங்கள் ஏற்படுது. ஆண்மையை உணருரோம். ஆண் தன்மையை உணருறோம். அறுவை சிகிச்சை பண்ணிகண்ணும். நம்ம மாறிரணும் அப்டின்ற மனநிலை நம்மக்கு வருது.

இந்த இடத்தில நான் இன்னும் ஒன்ன பதிவு பண்ணன்னு நெனைக்கேன். நமக்கு ஹார்மோன் ஊக்குவிக்கிறதுகான ஊசி மட்டும்தான் கண்டுபிடிக்க பட்டது. நெறய பேர் என்கிட்ட கேப்பாங்க.. சின்ன வயசுல இருந்தே நான் முடி வெட்டிருந்தென். அது மாதிரியே இருந்து இருக்கலாம் ஏன் சிகிச்சை பண்ணிங்க. இது எங்களோட ஒவ்வொரு சொட்டு இரத்தத்தில கலந்திருக்கு. இந்த இடத்தில நான் மக்கள்ட என்ன ஒரு கேள்வி கேக்குறேன் அப்டின்னா நாங்க ஊசி மூலம் எங்களோட டெஸ்ட்ரோஜன் அளவை அதிகமாக்கிரோம். எவ்ளோவோ அறிவியல் எவ்ளோவோ டெக்னாலஜி வளந்துறுக்கு அப்போ அவங்க ஹார்மோன் லெவல் கம்மி பண்ணி எங்கள ஒரு நார்மல் பெண்ணா மாத்தி இருக்கலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை அப்டின்னு தான் அதிகரிக்கிற ஊசி கண்டுபிடுச்சாங்க. நிறைய பேரு நம்ம கிட்ட கேள்வி கேப்பாங்க. நமக்குள்ள நெறய கேள்விகள் வரும். அந்த கேள்விகளாக தான் நான் கேக்குறேன்.

கண்டிப்பா இத கேக்குற இல்ல இத வாசிக்கிற மருத்துவர்கள் கிட்டையும் இத பத்தி கேட்கலாம். அவங்க என்ன சொல்ற்றாங்கன்னு பாக்கலாம் சோனேஷ்.
கண்டிப்பா ஜெகன். நம்ம கேள்விகள் கேக்க கேக்க தான் நமக்கு பதில்கள் வரும். அப்புறம் இந்த ஊசி எடுத்ததுக்கு பிறகு ஆறு மாதம் கழித்தோ அல்லது ஒரு வருடம் கழித்தோ நம்ம அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். நம்ம ஊசி போடாம சிகிச்சை எடுத்தோம் அப்டின்னா அது நம்மள ஒரு ஆண்மயா உணர வைக்காது. நம்மளோட உடலும் நம்மளோட குரலும் ஒரு பெண் மாதிரி. இருக்கும் நம்ம சிகிச்சை எடுத்துகிட்டாலும் நமக்கு அந்த உணர்வுகளை குடுக்காது. அதனால் தான் நம்ம முதல்ல ஊசி எடுத்துகிட்டு நம்ம உடம்பு அதுக்காக ஒத்துழைக்குதா பக்க விளைவுகள் இருக்க அப்டின்னு பாத்துட்டு அப்புறம் அறுவை சிகிச்சை எடுத்துகிடனும்.
சிலநேரம் பெண்களுக்கான உறுப்புகளை பாத்துட்டு ரொம்ப எரிச்சல் வரும்.இது நமக்கானது இல்லயே இது ஏன் நம்மகிட்ட இருக்குனு இது எப்போ நம்மள விட்டு போகும் அப்டின்னு .ஒவ்வொரு திருநம்பியும் திருநங்கைகளும் யோசித்து இருப்பாங்க. நம்ம ஒரு முழு ஆணா எப்போ இருப்போம். சட்டை இல்லாம பனியன் ஓட எப்போ வெளில போவோம் அப்டின்னு கனவுகளும் ஆசைகளும் எல்லா திருநம்பிகளுக்கும் இருக்கும். மேல் அறுவை சிகிச்சைக்கு இந்த மாதிரி ட்ரீட்மென்ட்ஸ் இருக்குது. மேல் அறுவை சிகிச்சை நம்ம சென்னை ல ராஜிவ் காந்தி மருத்துவமனை ல மூடி வச்சிருந்தாங்க ரெண்டு வருஷமா நம்ம மக்கள் போராடி அத திறக்க வச்சாங்க. அதுல இலவசமாக சிகிச்சை பண்ணிட்டு இருக்காங்க நம்ம மக்களுக்கு. நம்ம மக்கள் நெறய பெரு அங்க இலவசமாக சிகிச்சை பண்ணிட்டு இருக்காங்க.

மேல் அறுவை சிகிச்சை அப்டின்னா மார்பக அறுவை சிகிச்சை அப்படித்தானே.
ம்ம் மார்பக அறுவை சிகிச்சை தான் ஜெகன். இப்போ மதுரை லையும் பண்ணிட்டு இருக்காங்க. அங்கேயும் ரொம்ப சூப்பர் ஆஹ் பண்ணிட்டு இருக்காங்க. இதுல என்ன சிறப்பு அம்சம் அப்டின்னா நாங்க அறுவை சிகிச்சை எடுக்கும் போது தனியார் மருத்துவமனைல தான் சிகிச்சை எடுத்துக்கிட்டோம். அங்க அனுபவமுள்ள டாக்டர் எல்லாம் கிடையாது. நாங்க பண்ணும் போது எங்கள சோதனையாளர்களா பயன்படுத்துநாங்க.
இருந்தாலும் நமக்கு அறுவை சிகிச்சை பண்ணனுனு நம்ம பண்ணிகிட்டோம். இப்போ இலவசமா அவங்க பண்ணி குடுக்காங்க. அரசு மருத்துவமனை பத்தி மக்கள்கிட்ட தப்பான மனநிலை இருக்கும். ஆனா நான் 100 சதவிகிதம் சான்றிதழ் குடுப்பேன். அவ்ளோ அருமையா சூப்பர் ஆஹ் பண்றாங்க. நம்மள திருப்திபடுத்துற அளவுக்கு பண்ணுறாங்க. வார வாரம் நம்ம திருநம்பிகள் சிகிச்சை எடுத்துட்டு தான் இருக்காங்க. மதுரைலையும் சென்னைலையும். இதுபோக கருப்பை அறுவை சிகிச்சை பண்றாங்க. நாங்க பண்ணும்போது ஒரு இலட்சம், ஒரு இலட்சத்து இருபதாயிரம் காசு குடுத்து தான் நாங்க சிகிச்சை எடுத்துக் கொண்டோம். ஒரு இலட்சம் சேக்குறது அப்டின்ன்றது ரொம்ப கஷ்டமான ஒரு விசயம். சாப்பிடாம தூங்காம உடம்பு ரொம்ப முடியாம இருந்தாலும் சம்பாதிக்கனும் . நம்ம உடம்புக்கு இது தேவை இல்லாத உறுப்பு இத நம்ம எடுக்கணும் அப்டின்றதுக்காக நெறைய கஷ்ட பட்டு தான் அந்த பணத்தை சம்பாதிச்சோம். ஆனா இப்போ நம்ம அரசு நீங்க இவளோ கஷ்டபடனுனு அவசியம் இல்லை அப்டின்னு நமக்கு இலவசமாகவே பண்ணிட்டு இருக்காங்க. இந்த இடத்தில அரசாங்கத்துக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன்.
அடுத்து என்ன அப்டின்னு பாத்தீங்கனா எங்க மக்கள் இத ஒரு வர பிரசதமா தான் பாக்குறோம்.

திருநர் சமூகத்துக்கு நல்லது பண்ற ஆட்சியா தான் இது இருக்குனு எதிர் பாக்குறாங்க எல்லாரும் சோனேஷ்.

கண்டிப்பா கண்டிப்பா…. இந்த விஷயத்துல பண்ணிட்டு தான் இருக்காங்க. இது எவ்ளோ பெரிய விசயம். கொஞ்சம் கொஞ்சம் திரு நம்பிகள் தான் வெளில வந்துட்டு இருக்கோம். வந்த கொஞ்ச நாள்லயே எங்களுக்கு இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைச்சது ரொம்ப பெரிய விசயம் தான். திருநங்ககள் போராடி தான் இந்த இடத்துக்கு வந்துருக்காங்க. நா எல்லா இடத்துலயும் சொல்லுவேன் திருநங்ககள் எங்களோட முன்னாடி. அவங்க கைய பிடிச்சி தான் நாங்க நடந்துட்டு இருக்கோம். அவங்க போட்டு குடுத்த வழில தான் நாங்க நடந்துட்டு இருக்கோம். அவங்க முன்னாடி நடந்து போய் கள்ளு முள்ளு எல்லாத்தையும் எடுத்துட்டு எங்களுக்கு ஒரு மென்மையான பாதையை நடக்க குடுத்துருக்காங்க. அவங்கள முன்மாதிரியா காட்டி தான் எங்க சலுகைகள் கேட்டுட்டு இருக்கோம். அவங்களுக்கு தான் மிக பெரிய நன்றிகள் சொல்லணும். அவங்கதான் ரொம்ப பாடுகள் பட்ருக்காங்க. அவங்க பட்ட பாடுகளை வெளில சொல்லவே முடியாது. இந்த சமுதாயத்தில் நாங்களும் இருக்கோம். எங்களுக்கும் அங்கீகாரம் குடுங்க. ரொம்ப போராடி இந்த இடத்துக்கு வந்திருக்காங்க. நாங்க அவங்கள ஒரு முன்மாதிரியாக காட்டி இந்த இடத்துக்கு சுலபமா வந்துஇருக்கோம்.

நிச்சயமா நிச்சயமா….

சோனேஷ்.. இவளோ கஷ்டங்கள், உங்க உடம்ப என்ன என்னமோ பண்ணி, நீங்களே சொன்னிங்க எங்கள சோதனையலிகளா பயன் படுத்துனாங்க அப்டின்னு, இவளோ போராட்டங்களை கடந்து ஒரு ஆண் ஒரு திருநம்பி அப்டின்னு இந்த சமூகத்துக்கு காட்டுற அப்போ நீங்க எப்படி உணருறீங்க.?? அப்போ கிடைக்க கூடிய மகிழ்ச்சி எப்படி இருக்கு..??

முதல்ல இப்படி சொன்னா ஏத்துபாங்களா அப்டின்னு இருந்தது. ஆனா நான் ஒரு திருநம்பி அப்டின்னு சொல்றதுல ரொம்ப பெருமையா தான் சொல்லுவேன். இந்த சமூகம் என்ன ஏத்துயக்கிட்டாலும் ஏத்துகலனாலும் வாழுறது ஒரு வாழ்க்கை அது எனக்கு புடிச்ச மாதிரி சந்தோசமா வாழுறேன். அந்த அறுவை சிகிச்சை முடிந்ததுக்கு அப்புறம் எனக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்குதுனு சொல்லுவாங்களே அப்படி இருந்தது. நான் என்னுடைய பிறவி பலன அடன்ஜிட்டேன் அப்படின்ற மிக பெரிய சந்தோசம் எனக்குள்ள இருந்தது. அதுபோக சமூகத்துல விழிப்புணர்வு இல்லயே தவிர நம்ம சொன்னா புருஞ்சிக்கிராங்க. இதுபோக நம்ம அரசு நமக்கு ஆதரவு குடுக்காங்க. அதனால் நமக்கு நெறய இடங்கள்ல ஆதரவு கிடைக்குது. இதவிட மிகப்பெரிய சந்தோசம் எங்க குடும்பம் என்ன ஏத்துகிட்டது. என்னோட பள்ளி நண்பராகட்டும் கல்லூரிநண்பராகட்டும் இப்போவரை என் கூட பேசிட்டு தான் இருக்காங்க. யாருமே இப்போவர தீண்டத்தகாத தன்மையை குடுத்தத்தில்ல. அவங்கள்ள ஒருத்தவங்களாதான் எங்கள பாக்கிராங்க. அவங்க என்ன அதவிட பெரிய சந்தோசம் வேற இல்ல. ரொம்ப பெருமையும் படுறேன்.

சூப்பர் சோனேஷ். நீங்க சொன்னது எங்களுக்கு ரொம்ப ஊக்குவிக்கிற மாதிரி இருக்கு. இத கேக்குற நெறய திருநம்பிகளுக்கும் அப்படி இருக்குனு நினைக்கிறேன்.

இன்னும் ஒன்னு நா சொல்லணும்னு நெனைக்கென். திருநம்பிகள் அறுவை சிகிச்சைக்கு முன்னாடி ரொம்ப கஷ்டபற்றுப்பாங்க. இப்போ அந்த கஷ்டங்கள் கிடையாது. முன்னாடி அவங்க சட்டை ஃபண்ட் போட்ருப்பாங்க. எல்லாரும் அவங்கள ஒரு வித்தியாசமா பாப்பாங்க. இது ஆணா பெண்ணா அப்டின்னு. ஆனா அறுவை சிகிச்சைக்கு அப்புறம் நாங்க ஒரு திரு நம்பின்னு சொன்னாலும் யாரும் நம்புறதில்ல. அந்த அளவுக்கு ஒரு முழு ஆணாவே மாறிட்டு இருக்கோம். நீங்க உண்மையாகவே சொல்லுறீங்கலா இல்ல அனுதாபத்துக்காக சொல்லுறீங்கலா அப்டின்னு கேப்பாங்க. நிறைய இடத்தில நான் ஒரு திருநம்பி அப்டின்னு சொல்லுவேன். அறுவை சிகிச்சைக்கு பிறகு திருநம்பிகளுக்கு பிரச்சனை இல்ல. திரு நங்கைகளுக்கு தான் பிரச்சினை. ஏன் திருநம்பிகளுக்கு பிரச்சினை இல்லைனு சொல்லுறேன் அப்டின்னா அவங்களுக்கு தாடி வளர்ந்துறும், குரல் மாறிரும். எந்த இடத்திலும் அவங்க ஒரு பெண் அப்டின்னு காட்ட கூடிய அவசியம் இல்லை

 

சமூகத்தில் ஆண் அப்டின்னு வரையறுக்கபட்ட நிலைல இருக்கிங்க…

ஆமா ஆமா… ஆண் அப்டின்னு நிலையான இதுக்கு போறாங்க. முடியும் வளருது, அப்புறம் உடம்பையும் கட்டா வச்சிருக்கோம். நம்மளா சொன்னாதான் அவங்களுக்கு தெரியுது நம்ம ஒரு திருநம்பி அப்டின்னு. இதுதான் எங்களோட நிறையும் குறையும் . என்ன குறைகள் அப்டின்னு கேட்டிங்கன்னா ஒரு திருநம்பி ஆக மாருனதுக்கு அப்புறம் அவங்க ஒரு ஆண் அப்படின்ற வகைக்கு போய்ராங்க. அவங்க ஒரு திருநம்பி அப்டின்னு சொல்றதில்ல. அதனால் தான் எங்களுக்கான விழிப்புணர்வு ரொம்ப குறைவா இருக்கு. நம்மள வெளில சொன்னா நம்மள கேலி கிண்டல் பண்ணுவாங்கன்னு சொல்லிட்டு அவங்க ஆண் என்ற பாலினத்துக்கு நேராவே போராங்க. இப்படியே இருந்தா திருநம்பி என்ற ஒன்றே இல்லாம போய்ரும் அப்டின்னு நம்ம மக்கள் அதுக்காக போராடிட்டு இருக்காங்க.

 

சோனேஷ்.. கல்வி அப்படின்றது எப்படி இருந்துச்சு. பள்ளிக்கூடங்களில் இல்லாம கல்லூரிகளில் கல்வி எப்படி இருந்தது உங்களோட சொந்த அனுபவமா இருந்தாலும் பரவால்ல. பொதுவா திருநம்பிகளுக்கு வந்து உங்களோட பார்வை கல்விதளங்கள்ல எந்த மாதிரி இருந்தது..?? உங்களுக்கு எதும் தொந்தரவு வந்ததா.? அத எப்படி சமாளிச்சு வந்தீங்க.?

ஆமா ஆமா… ரொம்ப ரொம்ப.. இந்த கேள்விகள் இதுவரை யாரும் என்கிட்ட கேட்டதில்லை. ஆனா இதுல நெறய விஷயங்கள் இருக்கு. பள்ளி கல்லூரிகள் ல நாங்க படிக்கும் போது நெறய சிக்கல்கள் சந்திச்சு இருக்கோம். என்ன அப்டின்னு பாத்திங்கன்னா நம்ம ஒரு ஆண்மையா தான் உணருரோம். பொண்ணுங்க கிட்ட நார்மல் ஆஹ் பேசவும் முடியாது பழகவும் முடியாது. சிலபேர் முடி வெட்டிட்டு ஆண்கள் உடை போட்ருப்பாங்க. அவங்கள ரொம்ப கேலி கிண்டல் பண்ணுவாங்க. நான் மகளிர் கல்லூரிலதா படிச்சேன் நெறய அனுபவிச்சேன். நிறைய சண்ட போட்டு இருக்கேன். எதுக்காக அப்டின்னா நான் முடி வெட்டிருப்பேன் பண்ட் சட்டை தான் போட்டு இருப்பேன். எல்லாரும் ஒரு மாதிரி பாப்பாங்க. நமக்கு அவ்ளோ கோவம் வரும். என்ன உன் பிரச்சினை எதுக்கு இப்படி பாக்க. சமூகத்துலையும் இந்த மாதிரி பிரச்சனை வரும். கல்லூரி ல என்னனா நம்ம கல்லூரி நிருவாகம் வர பிரச்சனை போகும். நம்ம ஒரு பொண்ணு கிட்ட ரொம்ப பழக முடியாது. ஒரு நண்பரா பழகுனா கூட உங்க உறவுமுறை தப்பான உறவுமுறை அப்டின்னு சொல்லிட்டு நெறய பிரச்சனை வரும் சஸ்பென்ட் பண்ணுவாங்க. நெறய பிரச்சனைகள் திருநம்பிகள் அனுபவிக்காங்க. நம்ம சாதரணமாக பழகினாலும் நம்மள பிரிக்கணும் என்ற ஒரு தப்பான கண்ணோட்டத்தில தான் பாப்பாங்க. ஒரு சில பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள்ல யூனிஃபார்ம் தருவாங்க. அது எல்லாம் எரிச்சல் ஆக இருக்கும். ஒரு படத்துல ஜெயம் ரவி சொல்லுற மாதிரி இது எனக்கு பிடிக்கல கிழிச்சி எரியனும் எனக்கு பிடிகலன்னு கத்தனும் அப்டின்ற மாதிரி எனக்கு இந்த உடை பிடிக்கல.. ஆண்கள் போடுற உடை தான் வேணும். வேற வழி இல்லாம போடுற மாதிரி இருக்கும். நிறைய கேள்விகள் கேப்பாங்க , நம்ம கேண்டீன் போகும் போது நம்மள வித்தியாசமா பாப்பாங்க. அந்த நேரத்துல அவங்க கிட்ட உங்களுக்கு என்ன பிரச்சினை அப்டின்னு கேப்போம். அதுக்கு அவங்க இல்ல பொண்ணா பையனா அப்டின்னு கேட்கும் போது அவங்களுக்கு நான் குடுக்குற பதில் என்னவா இருக்குனு பாத்திங்க அப்டின்னா என்ன பையனா இருந்தா பொண்ணு குடுக்க போறிங்களா இல்ல பொண்ணா இருந்தா பையன் பாக்க போறிங்களா நான் யாரா இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சினை இதுதான் நான் கேக்க கூடிய கேள்விகள். நம்ம யாரா இருந்தா அவங்களுக்கு என்ன அப்டின்னு தெளிவுபடுத்திர நிலமைல நம்ம இல்ல. இன்னும் ஒன்னு கழிவறை என்ற ஒன்று ரொம்ப பிரச்சனை ஆஹ் இருக்கும். கல்வி தளங்கள்ல பெண்களோட கழிவறை உபயோகிக்க ரொம்ப சங்கட்டமா இருக்கும். நான் வந்து கல்லூரிகள்ல பள்ளிக்கூடங்கள்ல எங்குமே கழிவறை உபயோகிக்க மாட்டேன். நாள் முழுக்க என்னையே நான் கண்ட்ரோல் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து தான் போவேன். இந்த மாதிரி சூழ்நிலைகள் இருக்கு. அதே மாதிரி நம்ம கொஞ்சம் தைரியமா இருக்கிறதுநால நம்ம கிட்ட நெருங்கி பழகுவாங்க. அப்படி நெருங்கி பழகுறதுநால தப்பா பேச கூடிய சூழ்நிலைகளும் இருக்கு….

ஓகே சோனேஷ். கல்லூரில இருந்து சமூகத்துக்கு வந்துட்டோம். நீங்க சொன்னிங்க சமூகத்தில் எங்கள கண்டு பிடிக்க முடியல. எங்கள ஒரு ஆணா தான் பாக்குறாங்க அப்டின்னு சொல்லுறீங்க. ஆனா திருநம்பியோட வாழ்வு அதுல நிறைவு பெறுதா.?? இல்ல இன்னும் தேவைகள் இருக்கா.?? இல்ல இன்னும் எந்த மாதிரியான போராட்டங்கள் நடத்த வேண்டி இருக்கு அப்டின்னு சொல்லுங்க சோனேஷ்.

கண்டிப்பா கண்டிப்பா ஜெகன். இப்போவரைக்கும் அது நிறைவு பெறல ஜெகன். மக்களோட பர்வைல நாங்க ஒரு ஆண். நாங்களே சொன்னா தான் தெரியும் நாங்க ஒரு திருநம்பி அப்டின்னு கேட்டு தெரிஞ்சிக்கிராங்க. ஆனா ஒரு இருவது சதவிகித மக்கள் மட்டும் தான் எங்கள ஏத்துக்கிட்டாங்க. எங்களுக்கு என்ன தேவைகள் அப்டின்னு பாதிங்கன்னா. நாங்க படிக்கும் போது நான் படிக்கும் போது MPHil முடிக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டு தான் முடிச்சேன். ஏன்னா கல்லூரி வாழ்க்கைல நெறய சிக்கல்கள். என்னோட துறை தலைவர் என்னய அவளோதூரம் சொல்லிருக்காங்க. முடி வெட்ட கூடாது , இந்த மாதிரி உடை போட கூடாது இல்லைனா உனக்கு இவளோ அபராதம் போடுவேன் அப்டின்னு சொல்லுவாங்க. என்னோட சுதந்திரம் நான் அப்டிதான் வருவேன் சொல்லிட்டு அவ்ளோ சண்ட போட்டு எங்க படிப்ப முடிச்சிட்டு வேலைக்கு போகும் போது அதற்கான அங்கீகாரம் குடுக்குறது இல்லை. எதுனால அப்டின்னு பாத்தா நம்மோட சான்றிதழ்ல நம்மளோட ஒரிஜினல் பெயர் தான் இருக்கும். அந்த நேரத்துல நம்ம ஒரு ஆணாவோ இல்ல திருநம்பியா நிக்கும் போது நம்மள கேள்வி கேக்காங்க. அதுல இப்படி இருக்கு நீங்க இப்படி இருக்கீங்க அப்டின்னு. அந்த நேரத்துல நம்ம சொல்ல வேண்டிய நிலமை வருது.

அந்த இடத்தில நம்மள பத்தி சொல்லும் போது அவங்க நமக்கு வேலை வாய்ப்புகள் குடுக்க ரொம்ப யோசிக்காங்க. நாங்க ஒரு ரெண்டு நாள் கழிச்சு உங்களை கூப்பிடுரோம் அப்டின்னு சொல்லுவாங்க. இது போக நமக்கு வேலை வாய்ப்பு குடுத்தாலும் நம்மளோட கல்வி தகுதிக்கு ஏத்த சம்பளம் குடுக்க மாட்டாங்க. நம்ம சண்ட போட்டா உங்களுக்கு வேலை கிடைக்கிறதே பெரிய விஷயம் இதுல சம்பளம் வேரண்ணு சொல்லுவாங்க. மத்தவங்கங்களும் அதே கல்வி தகுதில தான் இருக்காங்க நானும் அதே கல்வி தகுதில தான் இருக்கேன் அப்டின்னு கேட்டா அவங்க ஆண் அப்டின்ன்ற வகை க இருக்காங்க. நீங்க திருநம்பி வகைல இருக்கீங்க. இது மட்டும் தானே வித்தியாசம் . அவங்களோட கல்வி தகுதி மாதிரி தான் என்னோட கல்வி தகுதியும். இப்படி பிறந்தது என் தப்பா.? இல்ல நா கொலை பண்ணிட்டேன் ஆஹ் இல்ல திருடிட்டு வந்தேனா இல்ல வேற ஏதாவது தப்பு பண்ணிட்டு வந்தேனா எதுவுமே பன்ணலயே… இந்த சமூகத்துல திருநம்பிகளுக்கு தேவை அப்டின்னு பாத்தா வேலை மட்டும் தான். திருநம்பி அப்டின்னு சொல்லிட்டு வேலை கிடைக்கனும் அதுதான் என்னோட வேண்டுகோள்.

சோனேஷ் இப்போ நம்ம சொன்னா மாதிரி நீங்க வேலை வாய்ப்பு அப்டின்னு வர்ற அப்போ இங்க பொதுவாகவே நம்ம திருநங்கை சகோதரிகளும் பேசுரோம் மொத்த LGBTQ சமூகமும் பேசுது. அதாவது திருநர் சமூகத்துக்கு ஒரு இட ஒதுக்கீடு வேணும் அப்டின்னு . அப்போ இட ஒதுக்கீடு வேணும் அப்டின்னு என்ன காரணங்கள் அரசுகிட்ட வைக்க போறோம் . இந்த இந்த காரணத்துக்கு இட ஒதுக்கீடு வேணும் , தனி ஒதுக்கீடு வேணும்நு கேக்குற அப்போ பொது மக்களோட பார்வைல இருந்தும் சரி அரசோட பர்வைல இருந்தும் சரி என்ன என்ன காரணங்கள் நம்ம சொல்லலாம். இந்த காரணங்களால நான் கஷ்டபடுரேன் இதுக்காக இட ஒதுக்கீடுகள் தரலானு எத சொல்லலாம் சோனேஷ்.

இட ஒதுக்கீடு எங்க எல்லாம் கேட்கலாம் பாத்தா முன்னாடி சொன்னா மாதிரி தான் எங்கேயுமே எங்களுக்கு வேலைகள் கிடைப்பதில்லை. தனியார் கிட்ட வேலைக்கு போகலான்னு பாத்தா அவங்க சொல்றத தான் கேக்குற நிலமை இருக்கு. அரசாங்கம் எங்கள ஏத்துக் கிட்டு எங்களுக்கு இட ஒதுக்கீடுகள் குடுத்தாங்க அப்டின்னா நம்ம மக்கள் எல்லாரும் வேலைக்கு போக ஆரம்பிச்சிடுவாங்க. அடுத்தது பாதிங்க அப்டின்னா திருநங்கைகள் ஆகட்டும் திருநம்பிகள் ஆகட்டும் ஒரு குறிப்பிட்ட வயசுல வீட்ட விட்டு வெளில வர்ராங்க. அதனால் அவங்க படிப்பதற்கு வாய்ப்புகள் ரொம்ப கம்மி. அப்படியே படுச்சி இருந்தாலும் எல்லாரும் மாதிரி ஈஸியா படிச்சி இருக்க மாட்டாங்க.. நெறய கஷ்டத்துல தான் படுச்சி இருப்பாங்க. இது திருநர்க்கு மட்டும் இல்ல.. LGBTQ எல்லாருக்கும் தான்.
கல்வி நிலையங்கள்ல கேலி கிண்டல்களுக்கு நடுவுல படிச்சி வெளிய வரணு அப்டின்றது ரொம்ப பெரிய விசயம். அவ்ளோ கஷ்டத்தையும் தாண்டி படிச்சி வெளில வரும் போது வேலை கிடைக்கல அப்டின்றதுக்கு ஒரே ஒரு காரணம் திருநம்பி என்பதுதான். lGBTQ மக்களா இருக்குரதுநாளதான் வேலை கிடைப்பதில்லை. நமக்கு ஒரு தனி இட ஒதுக்கீடுகள் குடுத்தாங்க அப்டின்னா மத்தவங்க கூட நம்ம போட்டி போட முடியாது. நம்ம மக்கள் எல்லாரும் வேலைக்கு போவாங்க. தப்பான தொழில்க்கு போக மாட்டாங்க. நம்மளும் சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களா மாருறதுக்கு இட ஒதுக்கீடுகள் வேணும். நம்ம மக்கள் எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்க அப்டின்னா யாரும் தப்பான தொழில்க்கு , படுச்சவங்க பாலியல் தொழிலுக்கு கட்டட வேலைக்கு போறாங்க. இட ஒதுக்கீடுகள் இருந்தா யாரும் இப்படி போக மாட்டாங்க இல்லையா. அதான் முக்கியமாக இட ஒதுக்கீடுகள் வேணும் கேட்கிறோம். எங்களோட வாழ்வாதாரம் மேம்படுத்தனும் மத்த மக்கள் கூட போட்டி போடும் போது நமக்கு பாதி பேருக்கு தான் வேலை கிடைக்குது. நமக்கு இட ஒதுக்கீடுகள் குடுத்தா நம்ம மக்கள் எல்லாருமே வேலைக்கு போவாங்க. முக்கியமாக போலீஸ் க்கு நான் கேட்டுட்டு இருக்கேன். எல்லா கூட்டங்களையும் நான் இத பத்தி சொல்லுறேன். அரசாங்கத்தோட பார்வைக்கு இது போகனுனு இத நான் இங்க பதிவு பன்றேன். திருநங்கைகள் அறுவை சிகிச்சக்கு பிறகு பெண்ணோட உடல் கட்டமைப்பு வந்துறுது. அதனால அவங்களுக்கு போலீஸ்ல இடம் கிடைக்குது.
ஆனா திருநம்பிகளுக்கு இது ரொம்பவே கடினமான ஒன்றாக இருக்கு ரொம்ப சவாலான விஷயமா கூட இருக்கு. எதனால் அப்டின்னு பத்தா நாங்க நார்மலாவே பெண் உடல்ல தான் பிறக்கிறோம். ஒரு சில பெண்களுக்கு தான் உயரம் மற்றும் எடை சரியாக இருக்கும். பொண்ணுங்க உயரமாக இருந்தா நீ போலீஸ் க்கு முயற்சி பண்ணுங்கன்னு சொல்லுறாங்க. திருநம்பிகள் அப்டின்னு சொல்லும் போது எல்லாரும் அதே மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. நாங்க ஆண்களா மாறும் போது ரொம்பவே அதிசய பிறவிகளாக மாருகிரோம். என்ன அப்டின்னா.. எல்லாரும் எப்படி ஒரே சைஸ் ல இருக்கீங்க அப்டின்னு கேப்பாங்க.. அதனால் ஒரு ஆண் கூட போட்டி போட முடியாது. திருநங்கைகள் பெண்கள் கூட போட்டி போட்டு போறது ரொம்ப ஈசி. பெண்களை விட திருநங்கைகள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு ரொம்ப அதிகம். நம்ம பசங்களுக்கு ஆண்கள் கூட போட்டி போடுவது ரொம்ப கடினம். அதனால் நாங்க என்ன கேக்கொம் அப்டின்னா உடற்கூறு தேர்வுல மட்டும் எங்களுக்கு தனி ஒதுக்கீடு வேணும். உயரம் மற்றும் எடைக்கு எங்களுக்கு தனியா ஒதுக்கீடு இருந்ததுன்னா நிறைய திருநம்பிகளும் தேர்ச்சி பெருவாங்க. என்னோட சொந்த வரலாறு எடுத்துக்கிட்டோம் அப்டின்னா என்னோட உயரம் மற்றும் எடைதான் காரணம். என்னால ஆண்கள் கூட போட்டி போட முடியாது. அதனால் நான் அதை அப்படியே கைவிட்டுடேன். என்ன மாதிரி எத்தன மக்கள் இருப்பாங்க. அவங்களோட ஆசைகள் உள்ள வச்சிட்டு நமக்கு கிடைக்காது மத்தவங்களுக்கு கிடைக்கும் போது அத பாத்துட்டு சந்தோசம் படனுனு இந்த ஒரு வேண்டுகோள் அரசாங்கத்திடம் வைக்கேன்.

கண்டிப்பா… கண்டிப்பா…

 

ரொம்ப நல்ல பயங்கரமா விவரிச்சு சொன்னிங்க. சோனேஷ். திருநம்பிகளோட காதல் எப்படி இருக்கும் அத சொல்லுங்க..??? உங்களோட காதல் அனுபவம் சொல்லுங்க.

முன்னாடி சொன்னா மாதிரி தான். திருநம்பிகளுக்கு நிறைய ப்ரப்போசல் வரும். பள்ளிகள் கல்லூரிகள்ல நிறைய நிறைய ப்ரப்போசல் வரும். ஆனா அது நிரந்தரம் கிடையாது. ஒரு சிலருக்கு நிரந்தரமாக அமய வாய்ப்பு இருக்கு. 98% நிரந்தரமாக அமைய வாய்ப்பு இல்லை. அது ஒரு ஈர்ப்புநால வர்ற காதல் தான். அது வாழ்க்கை முடிவுவர வர்றதுகான வாய்ப்பு இல்ல. திருநம்பிகள் ஒருத்தவங்க மேல காதல் வச்சாங்க அப்டின்னா வாழ்க்கை முடிவு வரை அவங்களுக்கு அந்த காதல் குறையாம குடுத்துக்கிட்டே இருப்பாங்க. எதனால் அப்டின்னு பாத்தா சின்ன வயசுல இருந்தே அவங்க அன்புக்காக ஏங்கிட்டு இருந்துறுப்பாங்க. நமக்காக நமக்கு தோல் குடுக்க ஆதரவா ஒருத்தவங்க இருக்காங்க அப்டின்னா அவங்க ஒட்டு மொத்த பாசத்தையும் அவங்க மேல காட்ட தொடங்கிருவாங்க. திருநம்பிகளுக்கு கிடைக்கிற மனைவி ரொம்ப லக்கி தான் நான் சொல்லுவேன். இத நான் ரொம்ப பெருமையா சொல்லுவேன். ஒரு ஆணால இத நிறைவேற்ற முடியுமா அப்டின்னு பாத்தா அது எனக்கு தெரியல. திருநம்பிகள் அன்பு வச்சா ரொம்ப ஸ்ட்ராங் ஆ தான் வைப்பாங்க. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அவங்கள நம்ம கூட வச்சிக்கணுனு நினைப்பாங்க. அதனால் நான் இந்த இடத்தில ரொம்ப கர்வமாகவே பதிவு பன்றேன்.

இப்போ எப்படினு பாத்தீங்கன்ன திருநம்பிகள் திருநங்கைகள் அப்டின்னு மாறி இருக்கு. இது உண்மையிலேயே ரொம்ப ரொம்ப வரவேற்க கூடிய ஒரு விஷயம். எதனால் நான் சொல்றேன் அப்டின்னா திருநம்பி ஒரு பெண்ணை திருமணம் பண்ணும் போது சந்தோசமாக தான் இருக்காங்க. ஆனா ஒரு வயசுல குழந்தை அப்டின்னு வரும் போது அவங்களுகுள்ள ரொம்ப தவறான புரிதல் வருது. அந்த இடத்தில தான் விரிசல் விட ஆரம்பிக்குது. அந்த விரிசல் வரும் போது அவங்க பிரிந்து போறதுக்கான வாய்ப்பு நெறய இருக்கு. ஒரு பெண்ணை காட்டிலும் ஒரு திருநங்கையை திருமணம் செய்து கொள்வது அவங்களோட உணர்வுகளும் நம்மோட உணர்வுகளும் ஒரே பாதைல போகும் போது ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் அப்டின்றது என்னோட கருத்து. ஏன்னா அவங்களோட தேடல்களும் அவங்களோட தேடல்களும் ஒண்ணுதான். அவங்களோட குறையும் நம்மளோட குறையும் சேரும்போது நிறை ஆகிடுது. நம்ம தமிழ்நாட்டுலயே நிறைய திருநம்பிகளும் திருநங்கைகளும் திருமணம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இது ரொம்ப வரவேற்க கூடிய ஒரு விஷயம். இது தான் உண்மையான காதல் அப்டின்னு நான் சொல்லுவேன். நமக்கான வாழ்க்கைத்துணை அவங்க தான் அப்டின்னு நான் ஆணித்தரமாவே சொல்லுவேன்.

சீக்கிரமே சோனேஷ் ஒரு ஜோடியோட இருக்க வாழ்த்துக்கள்.

கண்டிப்பா கண்டிப்பா. நன்றி… நன்றி…

சோனேஷ் இது ரொம்ப சென்சிடிவான ஒரு கேள்வி. இத பத்தி புரிதல் இருக்கும்னு தான் உங்க கிட்ட கேக்குறேன். தப்பா எதாது கேட்டு இருந்த மன்னித்து விடுங்கள். இங்க நிறைய பேரு என்ன நினைக்கிறாங்க அப்டின்னா… நான் நினைக்கல நெறய பேர் நினைக்கிறாங்க நான் அதை உங்களிடம் சொல்கிறேன். திருநம்பிகளையும் லெஸ்பியன்ஸ் தானே அப்படினு சொல்லுறாங்க. ஆனா லெஸ்பியன் வேற திருநம்பிகள் அபடின்றது தான் உண்மை. இத நீங்க எப்படி சொல்ல போரீங்க..??

இல்ல இல்ல இல்ல.. நீங்க கேக்குற அந்த விதமே தப்பான விதம் தான். நீங்க கேட்ட கேள்வி சரியான கேள்வி இதற்கான புரிதல்கள் நெறய இடத்தில நான் குடுக்கணும் நு நெனச்சி இருக்கேன். திருநம்பிகளையும் லெஸ்பியன்ஸ் தானே அப்படினு நிறைய கேள்விகள் கேக்குறாங்க. நீங்க ஒரு பொன்ன தான லவ் பண்ணுரீங்க அப்போ நீங்களும் லெஸ்பியன் தானே அப்டின்னு கேக்குறாங்க. நிஜமா லெஸ்பியன்னும் நாங்களும் ஒன்னு கிடையாது. சமுதாயம் திருநம்பிகளுக்கு மூன்று விரிவுரை குடுக்குராங்க. முதல்ல TOMBOY அப்டின்னு சொல்றாங்க. நாங்க அதுல வரவே மாட்டோம். நாங்க திருநம்பிகள். லெஸ்பியன் அப்டின்னா ஒரு பெண் உடல் அமைப்பில் உள்ளவங்களுக்கு ஒரு பெண் மேல ஈர்ப்பு . அவங்களுக்கு பெண் உறுப்புகள் மேல எரிச்சல் வராது. நம்ம ஒரு ஆணா இருக்கணும். ஒரு ஆணா மாறனும் என்ற உணர்வு இருக்காது. இந்த மாதிரியான உணர்வுகள் இருந்தா அவங்க தான் திருநம்பிகள்.
நான் ஒரு ஆண் எனக்கு பெண் மேல ஈர்ப்பு இருக்கு அப்டின்னா அவங்க தான் திருநம்பிகள். திருநம்பிகளுக்கு அவங்க பெண் உடல் பாகங்களை பார்த்தால் எரிச்சல் வரும். இத எனக்கு தேவை இல்லாதது. இத எப்போ அறுத்து எரியுவேன் அப்டின்னு இருக்கும். ஆனா லெஸ்பியன் அப்படி கிடையாது அவங்களுக்கு பெண் உடலும் புடிக்கும் பெண்கள் மேலும் ஈர்ப்பு இருக்கும்.

இன்னும் ஒன்னு சொல்லுறேன். TOMBOY அப்டின்னு சொல்லுறாங்கலே நாங்க TOMBOY கிடையாது. நிறைய செய்தி ஊடகங்கள் எங்கள எப்படி சொல்றாங்க அப்டின்னா ஆண் வேடமிட்ட ஒரு பெண் அப்டின்னு சொல்றாங்க. இந்த வார்த்தை TOMBOY அவங்களுக்குதான் பொருந்தும். TOMBOY என்பவர்களையம் லெஸ்பியன்களையும் எங்களோடு இணைக்க வேண்டாம். திருநம்பிகள் என்பவர்கள் முழுக்க முழுக்க ஒரு ஆணா இருந்து ஒரு பெண் மேல ஈர்ப்பு உள்ளவர்கள். இத எல்லாருக்கும் கொண்டு போய் சேர்கணும். இத இந்த இடத்தில ரொம்ப வருதமாவே சொல்லுறேன் செய்தி ஊடகங்கள்ல இருக்கிறவங்களுக்கு எவ்வளவோ புரிதல் குடுத்தாலும் புரிஞ்சிக்க மாட்டிக்காங்க. நிறைய மக்கள் செய்திய வச்சி தான் என்ன நடக்குது அப்டின்னு தெரிஞ்சிக்கிருவாங்க. அப்போ செய்தி ஊடகங்கள் ஒரு தெளிவான விவரம் சொன்னாதான் அவங்களுக்கு அது தெரியும். TOMBOY, லெஸ்பியன், ஓரினச் சேர்க்கையாளர்கள் அப்டின்னு சொல்வதுன்னால மட்டும் தான் மக்களுக்கு எங்க மேல சந்தேகம் வருது. அவங்க சொல்லும் போதே திருநம்பிகள் அப்டின்னு சொன்னாங்கனா யாரு திருநம்பிகள் அப்படி என்ற ஒரு தேடல் வரும். அவங்களுக்கான பதிலகள் கிடைக்கும். ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதும் லெஸ்பியனைத்தானே சொல்ல வருது. அதனால் தான் மக்களுக்கும் திருநம்பி அப்டின்னு சொன்னா இந்த மாதிரி கேள்விகள் வருது.

ஓகே ஓகே.. நம்ம நேர்காணல்ல கடைசி பகுதிக்கு வந்துட்டோம்.. நீங்க ஒரு திருநம்பியா திருநம்பி சமூகத்துக்கு என்ன சொல்ல விரும்புறீங்க.? பொது சமூகத்துக்கு என்ன சொல்ல போறீங்க.? ஒரு திருநம்பியா அரசுக்கு என்ன சொல்ல போறீங்க..?? இந்த மூணு சமூகத்துக்கும் நீங்க கேக்க கூடிய கேள்விகள் அறிவுரைகள் எதுவாக கூட இருக்கலாம். நீங்க கேக்கலாம் சொல்லலாம்.

திருநம்பிகளுக்கு என்னோட பரிந்துரை என்ன அப்டின்னா நிறைய பேர் கேக்குறது பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கனும் நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் அப்டின்னு நெறய கேள்விகள் கேப்பாங்க. தயவு செஞ்சி ஒரு பொண்ணுக்காக மாறுரதா இருந்தா யாரும் அப்படி மாற வேண்டாம். உங்களோட உணர்வுகள் உங்களோட உணர்ச்சிகள் உங்களை ஆண்மையா உணர வச்சா மட்டும் நீங்க மாருங்க. ஒருத்தவங்களோட உந்துதலால மாறாதீங்க.
இரண்டாவது பரிந்துரை என்ன அப்டின்னா டாக்டர் பரிந்துரை இல்லாம ஊசி போடாதீங்க. திருநம்பி சொல்றாங்க , இல்ல உங்க நண்பர்கள் சொல்றாங்க அப்டின்னு டாக்டர் பரிந்துரை இல்லாம எந்த ஒரு ஊசி போட வேண்டாம். அதனால் நெறய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இன்னும் ஒன்னு என்னனா எல்லா திருநம்பிகளும் ஒற்றுமையா இருங்க. ஒரு ஆணா மாறுனதுக்கு அப்புறம் ஒரு ஆண் மாதிரி நடந்துக்கணும். இது நான் திருநம்பிகளிடம் சொல்லுற பெரிய கோரிக்கை. மத்தபடி திருநம்பிகளிடம் சொல்லுறதுக்கு எதும் இல்ல. ஏன்னா அவங்களுக்கு நிறைய புரிதல்கள் இருக்கு. திருநம்பிகளுக்கு எந்த ஒரு உதவியாக இருந்தாலும் சரி எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி “TAMILNADU TRANSMAN ASSOSIATION” இந்த அமைப்பை தொடர்பு கொள்ளலாம். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி இந்த அமைப்பு மூலம் தீர்வு காணலாம். இந்த அமைப்பு முழுக்க முழுக்க திருநம்பிகளுக்காக மட்டும் தான். திருநம்பி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு தருவதற்கு, வீட்ட விட்டு வெளியேறி வந்த திருநம்பிகளுக்கு உதவி பண்றது எல்லா ஆலோசனைகளும் நம்மளோட அமைப்பில் பண்ணிட்டு இருக்கோம். தாராளமா எப்போ வேணாலும் நம்ம திருநம்பிகள் நம்மள அழைக்கலாம்.

சமூகத்துக்கு நான் சொல்ல வருவது என்ன அப்டின்னா நாங்களும் ஒரு சக மனிதர்கள் தான். எங்களை ஒரு ஏலியன் மாதிரி பாக்காதிங்க.
எங்க கிட்ட கேக்க கூடாத ஒரு கேள்வி இருக்கு எங்க கிட்ட தயவு செஞ்சு எங்க கிட்ட கேட்காதீங்க. என்ன அப்டின்னா கல்யாணம் பன்னா நீங்க எப்படி செக்ஸ் வச்சிப்பிங்க.?? உங்களால என்ன பண்ண முடியும். இந்த ஒரு கேள்வியை தயவு செஞ்சு எங்க கிட்ட கேக்க வேண்டாம்.. நார்மலா ஒரு பொண்ணோ பையனோ நான்கு சுவத்துக்கு உள்ள என்ன பண்றாங்க அப்டின்னு கேட்டா நீங்க ஓத்துக்குவீங்களா..??? அது எவ்ளோ வல்கரான விஷயம். அவங்க ரெண்டு பேருக்கு உள்ள என்னவோ இருந்துட்டு போகுது. அத தெரிஞ்சி நீங்க என்ன பண்ண போறீங்க. அவங்களுக்கு புடிச்சிருக்கு. காமம் என்பது அவங்க ரெண்டு பேருக்குள்ள உள்ளது. அத தெரிஞ்சி நீங்க என்ன பண்ண போறீங்க..?? எல்லா சாதாரண மனிதர்களும் ஒரே மாதிரியான செக்ஸ் வாழ்க்கைல இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. இவங்க எப்படி இருக்காங்க அது அவங்களோட தனிப்பட்ட விசயம். நீங்க எங்களுக்கு வேலை குடுக்குறீங்க குடுக்கல அதவிட நீங்க இந்த கேள்வியை எங்க கிட்ட கேட்காதீங்க. திருநங்கை திருநம்பி மட்டும் இல்ல LGBTQ மக்கள் யார் கிட்டேயும் இத கேட்காதீங்க. காமம் மட்டுமே வாழ்க்கை கிடையாது. அன்பை தாண்டி காமம் ஜெய்ச்சிடாது. எல்லா இடங்களையும் அன்பு மட்டும் தான் ஜெய்க்கும். எங்க மக்களுக்கு தேவை உடம்பு இல்ல. அன்புதான். எங்களுக்கு அன்பு மட்டும் தான் வேணும். நிறைய போலீஸ்ஸ்டேஷன்ல கேக்குற கேள்வி இதுதான். நிறைய மக்கள் கேக்க கூடிய கேள்வி இதுதான். இது எவ்ளோ வல்கரான கேள்வி. நான்கு சுவர்க்கு உள்ள என்ன நடக்குதுன்னு மேடை போட்டு சொல்ல முடியுமா.? அதனால் இந்த கேள்வி கேட்காதீங்க.
முடிஞ்சா எங்க மக்களுக்கு வேலை வாய்ப்பு குடுங்க. இதுதான் நான் சமுதாயத்துக்கு சொல்றது. அரசுக்கு நான் சொல்றது என்ன அப்டின்னா எங்களுக்கான தேவைகள் என்ன அப்டின்றத அறிந்து அதை நீங்க ஏற்படுத்தி குடுத்தா ரொம்ப சந்தோசமா இருக்கும். இன்னும் ஒன்னு அரசுக்கு சொல்றது என்னனா எல்லா இடத்துலயும் திருநங்கை அப்டின்னு இருக்கு ஆங்கிலத்திலே TRANSGENDER அப்டின்னு இருக்கு. தமிழ் ல திருநம்பி என்று இல்ல. இனிமேல் வருகிற கால கட்டத்துல திருநங்கை/ திருநம்பி அப்டின்னு இருந்தா ரொம்ப உதவியாக இருக்கும். இதுபோக எங்களுக்கு சான்றிதழ் மாத்த ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்களை ரொம்ப அதிகமா அலய விடுறாங்க.
இப்போ அரசாங்கம் திருநம்பி திருநங்கைகளுக்கு ஒரு கார்டு தராங்க. அந்த கார்டு வச்சு சான்றிதழ் மாத்த பான் கார்டு மாத்துனா கொஞ்சம் உதவியாக இருக்கும். கல்வி சான்றிதழ்கள் மாற்றுவதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. நான் என்னுடைய சான்றிதழ்களை மாற்றும் போது (பெயர் சொல்ல விருப்பமில்லை ) என்னிடம் 12000 பணம் கட்ட சொன்னாங்க. நமக்கு வேலை கிடைப்பதே பெரிய விஷயம். இதுல அவ்ளோ காசு இருந்தா நா எதுக்கு அங்க போய் நிக்க போறேன். இந்த மாதிரி LGBTQ மக்களுக்கு என்ன தேவை அபடின்றத அரசிடம் நாங்க ஒரு கோரிக்கை வைக்கும் போது அந்த அரசு எங்களுக்கு ஏற்படுத்தி குடுத்தா இன்னும் உதவியாக இருக்கும். நிறைய பேர் பெயர் மாற்றம் பண்றாங்க. அவங்க அவங்களோட விருப்பத்துக்காக மாற்றம் பண்றாங்க. ஆனா நாங்க எங்க வாழ்வாதாரத்துக்காக பண்றோம்.

நாங்க வேணும்ன்னே நேரம் செரி இல்ல ராசி சரி இல்லைனு நாங்க பெயர் மாற்றம் பன்றதில்ல. எங்க வாழ்வாதாரத்துக்காக நாங்க எங்க பெயர் மாற்றம் பண்றோம். அதுக்காக கல்லூரிகள்ல போகும் போது அவங்க பணம் கேக்குறது எனக்கு நியாயமா தெரியல. எல்லா பல்கலைக்கழகத்துலையும் எங்களுக்கு இத இலவசமா பண்ணி குடுத்தா இன்னும் கொஞ்சம் சவுகரியமாக இருக்கும். இத நான் அரசாங்கத்திடம் கேக்குறேன்.

ஓகே.. இது ரொம்ப விரிவான ஒரு இன்டர்வியூ அப்டின்னு நான் நினைக்கிறேன் சோனேஷ். சில விசயங்களை உள்ளார்ந்து பேசி இருக்கோனு நினைக்கிறேன். ரொம்ப நன்றி சோனேஷ் நீங்க உங்க நேரத்தை ஒதுக்கி அணியம் இதழுக்காக நீங்க இன்டர்வியூ குடுத்தது . திரு நம்பிகளுக்கான புரிதல், அவங்க என்ன என்ன கஷ்டங்கள் அனுபவிச்சிட்டு இருக்காங்க எல்லாம் இந்த சமூகத்துக்கு இந்த இன்டர்வியூ மூலமா தெரியும்னு நினைக்கிறேன். ரொம்ப நன்றி சோனேஷ்.

கண்டிப்பா கண்டிப்பா.. ஜெகன் இன்னுமொரு தகவல் மட்டும் சொல்ல விரும்புகிறேன். நம்மளோட பெற்றோர்களுக்கு நான் என்ன கோரிக்கை சொல்ல விரும்புகிறேன்னா நீங்க எங்கள ஏத்துக்கிட்டீங்க அப்டின்னா நாங்க இந்த சமுதாயத்தில் கேலி கிண்டலுக்கு ஆக மாட்டோம். நாங்க எப்படி இருந்தாலும் உங்களோட குழந்தைகள் தான். நாங்க எந்த தப்பும் பண்ணல. எங்களோட பிறப்பாலயே நாங்க இப்படி பிறந்திருக்கோம். நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க அப்டின்னு எங்கள புறக்கணிக்காதீங்க. அதனால் தப்பான வழிக்கு போறாங்க.. நீங்க எங்கள ஏத்துக்கிட்டீங்க அப்டின்னா நாங்க தப்பான வழிக்கும் போக மாட்டோம். ஆணித்தரமாக நான் சொல்றேன் அப்டின்னா நாலு பேர் நாலுவிதமா பேசுறாங்க அப்டின்னு யோசிக்கிரீங்கலே தவிர உங்க பிள்ளைகள் பற்றி யோசிக்க மாட்டிக்கீங்க. நாலு பேர் கேள்வி கேட்கும் போது அவன் எப்படி இருந்தாலும் அவன் என்னோட குழந்தை அப்டின்னு நான்கு பேருக்கு பதில் குடுத்து பாருங்க அவங்க வாய் மூடும். அய்யய்யோ அவங்க பிள்ளைய அவங்க வச்சிருக்காங்க நம்ம எதும் கேக்க கூடாதுன்னு நினைப்பாங்க. யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க. நிறைய குடும்பங்கள் சேர்ந்தது தானே சமுதாயம். குடும்ப உறுப்பினர்கள் மாறுராங்க அப்டின்னா சமுதாயமும் மாறிவிடும். இந்த இடத்தில பெற்றோர்களுக்கு நான் சொல்றது இதுதான். உங்க குழந்தைகளோட உணர்வுகளை நீங்க புரிந்து கொள்ள முயற்சி பண்ணுங்க. யாரும் உடனடியா இத ஏத்துக் கொள்ள மாட்டாங்க. நீங்க உங்க குழந்தைகள புறக்கணிக்கிறதுனாள தான் தப்பான வழிக்கு தள்ளபடுறாங்க. யாருடைய அரவணைப்பும் இல்லாம தனியா சில நாட்கள் இருக்குற குழந்தைகளும் இருக்காங்க. அந்த மாதிரியான வாய்ப்புகளை நீங்க தான் உருவாக்கி குடுக்குறீங்க. நீங்க உங்க குழந்தைகளோட புரிதல்களை அனுசரிச்சு போனா அவங்களுக்கு என்ன தேவை அவங்க தப்பான வழில திருட போகல கொலை பண்ண போகல அவங்க உணர்ச்சிகளை கட்டு படுத்த முடியாமல் உங்க கிட்ட கேக்குறாங்க. நீங்களும் அவங்கள அனுசரிசிட்டு நல்ல வழில கொண்டு போனா அவங்களுக்கு தேவையான கல்வி ஒரு நல்ல வாழ்க்கை எல்லாமே கிடைக்கும் அப்டின்னு எல்லா பெற்றோர்களுக்கும் என்னுடைய வேண்டுகோள். உங்க குழந்தைகளா எங்கள ஏத்துக்கோங்க எப்படி இருந்தாலும் நாங்க உங்களுடைய இரத்தம் தான்.

சூப்பர் சோனேஷ்.. வாழ்த்துக்கள்.. ரொம்ப விரிவான ஒரு இன்டர்வியூ. ரொம்ப நன்றி. அணியம் பற்றி எதாது சொல்ல வேண்டியது இருக்கா.??

ஆமாம். அணியம் பற்றி இந்த இடத்தில நான் சொல்லியே ஆகனும். ஏன்னா நிறைய அறக்கட்டளைகளும் இருக்காங்க நிறைய அமைப்புகளும் இருக்காங்க இவங்க LGBTQ மக்களுக்காக பண்ணுவாங்க. ஆனா அணியம் ஒரு படி மேலே போய் சாதாரண மனிதர்களுக்கும் உதவி பண்ணி எங்களுக்கும் மத்தவங்கள பாதுக்க முடியும் அப்படினு சமுதாயத்துக்கு உணர வச்சிருக்கு இந்த அணியம் அறக்கட்டளை.

நிறைய பேர் என்ன நினைக்காங்க அப்டின்னா எங்களோட கையே கீழ இருக்கு நாங்க எங்க எங்களோட கைய மேல கொண்டு வர்றது. அந்த மாதிரியான எண்ணங்கள் தான் நிறைய பேர்கிட்ட இருக்கு. ஆனா அணியம் அறக்கட்டளை எல்லாவற்றையும் தாண்டி எங்க கையும் மேல குடுக்குற கையாதான் இருக்கும் அப்டின்னு நிரூபிச்சு இருக்காங்க. நிறைய சாதிச்சிட்டு இருக்கீங்க. நம்ம மக்களுக்காகவும் கூடவே இன்னொரு மக்களுக்காகவும் சேர்ந்து போரோடுரீங்க அதுக்காக நான் நன்றி சொல்ல ரொம்ப கடமை பட்டு இருக்கேன். உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள். நம்ம மக்களை ஒரு நல்ல நிலையில் கொண்டு நிருத்துவீங்கனு ரொம்ப நம்பிக்கை இருக்கு. உங்க கூட சேர்ந்து பயணம் பன்றதுல ரொம்ப சந்தோசம்.

 

ரொம்ப நன்றி நன்றி நன்றி சோனேஷ். ஓகே முடிச்சிக்கலாமா…

ஓகே ஜெகன்.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன