காதலும் வானவில்லும்
உலகில் மலையையே நகர்த்தும் சக்தி ஒன்று இருக்குமானால் அது காதலாகத்தான் இருக்கமுடியும். இந்த உலகம் எத்தனை எத்தனையோ காதலர் தினங்களையும், எத்தனை எத்தனையோ காதலர்களையும் கண்டுள்ளது. ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டிற்கான உன்னதமான ஒரு காதலர் ஜோடி உண்டு என்றால் அது ஷியாமா S பிரபா மற்றும் மனு கார்த்திகா என்ற காதல் ஜோடியாகத்தான் இருக்க முடியும்.
கேரளா திரிச்சூரை சேர்ந்த மனு வயது 31 பிரபல MNC யில் மனித வள மேம்பாட்டு துறையில் பணிபுரிகிறார். அதே கேரளா திருவணந்தபுரத்தை சேர்ந்த சியாமா வயது 31 கேரளாவின் சோசியல் ஜஸ்டிஸ் டிப்பார்ட்மெண்டில், திருநங்கைகளுக்கான மாநில பிராஜக்ட் அதிகாரியாக பணிபுரிகிறார். இருவரும் தற்பொழுது பேசுவதற்க்கு கூட நேரம் இல்லாம சுற்றிகொண்டிருக்கிறார்கள். என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா. ஆம் காதல் கை கூடினால் அடுத்து திருமணம் தானே. கடந்த பிரவரி 14 உலக காதலர் தினத்தன்று இவர்களின் திருமணம் விமர்சையாக முறைப்படி மணமக்கள் வீட்டாரின் சம்மத்துடன் முடிந்தது.
அப்படி இந்த காதலர் ஜோடியில் என்ன பிரமாதம் என்கிறீர்களா?. இந்த ஷியாமா S பிரபா மற்றும் மனு கார்த்திகா இருவரும் அண்டை மாநிலமான கேரளாவைச்சார்ந்த மாற்று பாலினத்தவர்கள். ஆம் இருவரும் மாற்று பாலின காதல் ஜோடி. இந்த 2022 ஆம் ஆண்டிற்கான காதலர் தினம் இவர்கள் பெயரை உரக்கச்சொல்லும். இது பற்றி மனுவிடம் கேட்ட பொழுது “இந்த இந்த காதலும் கல்யாணமும், பொது சமூகத்தில் ஒரு புரட்சியாகத்தான் நான் பார்க்கிறேன் அது மட்டும் இல்லாம, இந்த நமது திருநர் சமூகத்து மக்களுக்கு இது விழிப்புணர்வு கொடுக்கும்னு நான் நினைக்குறேன்”
மனு சொல்லுறதை கேக்கும் போது, இந்த திருநர் திருமணம் மூலமா அப்படி என்ன விழிப்புணர்வு, புரட்சினு நமக்கும் ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. அதுக்கான பதில் ஷியாமா தொடர்ந்து சொல்ல ஆரம்பிச்சாங்க,
“நாங்க எங்க திருமணத்தை எங்க வீட்டார் சம்மத்தோட நண்பர்கள் உறவினர்கள் முன்னாடி இந்த திருமணத்தை நடத்துறதோட மட்டும் இல்லாம, நாங்க எங்க இந்த திருமணத்தை பதிவு பண்ண போறோம், அதுக்காக நீதிமண்றத்ததுல மணு கொடுத்துருக்கோம், நீதிமண்றத்துல எங்க மணுவுக்கு சாதகமா தீர்ப்பு வர பட்சத்துல நாங்க தான் இந்தியாவோட முதல் திருநர் திருமண தம்பதிகளா இருப்போம்குறது எங்களுக்கு பெருமையும் சந்தோசமும் இருக்கு. எங்க திருமணத்தை பதிவு பன்னுறது மூலமா, குழந்தைகளை தத்து எடுக்குறது, சொத்து உரிமை மாதிரியான உரிமைகளை மீட்டு எடுக்க இது உதவியா இருக்கும். இப்ப சொல்லுங்க இந்த திருமண பதிவு விழிப்புணர்வு தானே, இன்னிக்கு நாங்க போடுற இந்த விதை நாளைக்கு வளர்ந்து விருட்சமா மாறும், அந்த மாற்றதுக்கான விதை நாங்க போட்டதுனு நினைக்குபோது எங்களுக்கு இன்னும் ஒரு மடங்கு பெருமையாவும் சந்தோசமாவும் இருக்கு எங்களுக்கு.
சரிதானே இந்த திருமணம் மட்டும் பதிவு பன்னிட்டா நம்ப சமுதாய மக்களுக்கு நிறைய நன்மைகள் வந்து சேரும் தானே, அப்ப இது விழிப்புணார்வு தான். சரி இப்ப ஒரு பர்சனல் கேள்வி. நீங்க ரெண்டும் எப்படி பார்த்து… பழகி… காதல்…?
இப்ப மனு பேச ஆரம்பிச்சார், “ஷியாமா பத்தி சொல்லனும்னா, நம்ப எல்லாருக்குமே தெரியும் பிரபல திருநங்கை, சமூக சேவை செய்யுறதுக்காவே பிறப்பு எடுத்தவங்க மாதிரி அவ்வளவு சேவை, அதோட மட்டும் இல்லாம, அவங்க குடும்பத்தையும் மூத்தவங்களா இருந்து நல்லா பார்த்துக்கிறாங்க. எனக்கு அவங்களோட அந்த தைரியம், துணிச்சலும் ரொம்ப புடிச்சது, ஒரு திருநங்கைனு ஓரமா ஒதுங்கிடாம தைரியமா வெளியில வந்து இன்னிக்கு ஒரு மாநில அளவுல வேலைகள் செய்யுறாங்க, இந்த தைரியத்தையும் தன்னம்பிக்கையும் பார்த்து தான் எனக்கு ஷியாமா மேல காதல் வந்து அவங்க கிட்ட என்னோட காதலை வெளிப்படுத்தி நாலு வருஷம் ஆச்சு, ஆனா அவங்க போன வருஷம் தான் என்னோட காதலை ஏத்துக்கிட்டாங்க”
ஷியாமா நீங்க சொல்லுங்க உங்க காதலுக்கு எப்படி உங்க வீட்டுல ஆதரவு இருந்ததா இல்லை எதிர்ப்புகள் இருந்துச்சா?
ஷாமா சிரிச்சுக்கிட்டே பேசுறாங்க, “அது எப்படி எதிர்ப்பு இல்லாத காதல் ஏது, ஒரு பொண்ணும் பையனும் காதலிக்குறோம்னு சொல்லும் போதே நிறைய எதிர்ப்புகள், வீட்டுலையும், சொந்த பந்தங்கள்கிட்டயும், சமூகத்துலையும், வேலை செய்யுற இடத்துலையும் இருக்கும். அதே மாதிரிதான் எங்க காதலுக்கும் வந்துச்சு அதை எல்லாம் சமாளிச்சு, எங்க திருமணதை பிளாண் பன்னுறதுக்குள போதும் போதும்னு ஆகிடுச்சு”, சொல்ல போனா நான் சந்திச்ச எதிர்ப்புகளை விட மனு தான் நிறை எதிர்ப்புகளை சந்திச்சார்”
இப்ப இது பத்தி நாம கேக்குறதுக்கு முன்ன மனுவே பேசுறார், “நான் திரிச்சூர்ல ஒரு சின்ன கிராமத்துல பெண்ணா பிறந்து பிறகு ஆணா மாறின போதே நிறைய எதிர்ப்புகளை சந்திச்சாச்சு, அதோட எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த கல்யாணத்துக்கு நாங்க பட்டது கொஞ்சம் நஞ்சம் இல்லை. நாங்க நினைச்சிருந்தா ரெண்டுபேரும் வீட்டை விட்டு வெளியேறி வேற இடத்துக்கு போய் ஒரு புது வாழ்கையை ஆரம்பிச்சிருக்கலாம் ஆனா கூட நாங்க அதை செய்யலை, எங்க வீட்டாரை சம்மதத்தோட அவங்க ஆசியோட தான் எங்க வாழ்கையை ஆரம்பிக்கனும்னு நாங்க ரொம்ப உறுதியா இருந்தோம், நான் பெண்ணா இருந்து ஆனா மாறினத்துக்கே எங்க அம்மாதான் எனக்கு பெரிய சப்போர்ட்டா இருந்தாங்க, எங்க அக்கா கார்த்திகா எனக்கு ஒரு மிகப்பெரிய சப்போட், அவங்க எப்பவும் சொல்லுவாங்க எனக்கு நீ எப்பவும் ஒரு தம்பியாதான் இருந்திருக்கேனு, இப்ப அவங்க உயிரோட இல்லாட்டியும் அவங்க சொன்ன வார்த்தைகள் இன்னிக்கும் என் காதுல ஒலிச்சிக்கிட்டே தான் இருக்கு” அப்படி மனு சொல்லும் போது அவரோட கண்கள்ல சில கண்ணீர் துளிகள்.
சரி கல்யாணம் தான் ஆகிடுச்சு அடுத்தது என்ன பிளான்,
மனு, “ஷியாமா அவங்க அம்மாவுக்காக ஒரு கணவு இல்லத்தை அவங்க ஊர்ல கட்டிகிட்டு இருக்காங்க, நானும் எங்க அம்மாவை சீக்கிரமா செட்டில் பன்னிட்டு, எங்களுக்குனு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, எங்களுக்கு பிடிச்சமாதிரியான உலகத்தை நாங்க உருவாக்கி வாழப்போறோம்” அப்படி சொல்லு போது மனு, ஷியாமா முகத்துல தெரிஞ்ச சந்தோசத்துக்கு அளவே இல்லை.
இதை படிக்குபோதும் நமக்கு ஒரு சந்தோசமும் ஒரு உத்வேகமும் கிடைக்குது இல்லை, நாமும் இந்த திருநர் தம்பதிகளை வாழ்த்தலாமே.
-இனியவன்
