இந்த ஃபேஸ்புக் என்னவோ உருவாக்கப்பட்டது உணர்ச்சிகள் இல்லாத கம்ப்யூட்டர் மொழியான 0 அண்ட் 1 மூலமாக இருக்கலாம்.ஆனா அது உருவானதுக்கு அப்புறம் உணர்ச்சிகளோட மொத்த உருவமான மனிதர்கள் அனைவரையும் அவங்களுக்கே தெரியாம இணைத்தது தான் இந்த கம்ப்யூட்டர் ப்ரோக்ராமோட மொத்த வெற்றி .

 

ஆனா அதில் வாழுற இந்த மனுசங்க அவங்களோட உணர்ச்சியை கடத்துவதில இரண்டு விதத்தை கையாள்றாங்க.

 

ஒருத்தவங்க அவங்களோட உணர்ச்சியை கையோடு கைகோர்த்து இன்னொருதவங்களுக்கு கடத்துறாங்க.

 

இன்னொரு விதமான மக்கள் என்ன பண்றாங்கன்னா, அவங்களோட உணர்ச்சியை கொட்டும் கழிப்பறையா இந்த முகநூல பயன்படுத்துறாங்க.

கழிப்பறைல கொட்டுறாங்கனு சொன்னதால மனுசங்க அவங்களோட செரித்த உணர்ச்சிகளை கொட்டுராங்கனு நினைச்சிட வேண்டாம்.

அவங்களுக்கு தெரியாம அவங்களுக்குள்ள வாழற மனித எண்ணங்கள், இல்லை ….இந்த வார்த்தையை விட இன்னொரு வார்த்தை இந்த இடத்தில சரியா இருக்குன்னு நினைக்குறேன். மனித எச்சைத்தனங்கள் எல்லாத்தையும் கொட்டுறாங்க.

 

 

முன்னெல்லாம் ஒரு மனிதனைப் பற்றி முழுசா தெரிஞ்சவங்க யாரா இருப்பாங்கனா ,அவங்க கூட ரொம்ப நெருக்கமாக இருக்கவங்களா இருக்கும்.அவங்களால கூட முழுவதுமா அந்த நெருக்கமா இருக்கவங்கள பத்தி தெரிஞ்சுக்க முடியாதுன்னு வச்சுக்கோங்களேன்.

யுவ நோவா சொன்னபடி ஒரு மனுசனோட செல்போன் அவன் யாரு, அவனுடைய எண்ணம் என்னவா இருக்கும் என எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்க ஒரு பொய் சொல்லத் தெரியாத படைப்புன்னு வச்சுக்கலாம்.

 

இதெல்லாம் ஏன் நான் உன்கிட்ட சொல்றேன் தெரியுமா? இப்ப சமீபத்தில் ஒரு திருநம்பி அருண் மற்றும் அருணா தேவி என்ற பெண்ணும் சுயமரியாதை திருமணம் செய்துகிட்டாங்க.

தமிழ்நாட்டுல இந்த மாதிரி திருமணம் ரொம்ப கணிசமான அளவுக்கு தான் நடந்துட்டு வருது.

எப்போதாவது நடக்கும் இந்த திருமணங்கள் தான் குயர் மக்கள் மத்தியில ஒரு நம்பிக்கை விதைச்சுட்டு வருது. அதை இங்க இருக்க அனைத்து ஊடகங்களும் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் வெளியிடுருங்களானு பார்த்தா கிடையாது.

ஒரு சில ஊடகங்கள் மக்கள் தெரிஞ்சுக்கணும் என்பதற்காக அந்த திருமணங்கள் பற்றி செய்தி வெளியிடறாங்க .

எனக்கு அந்த செய்தி படிக்கும் பொழுது ரொம்ப குளிரூட்டபட்ட ஒரு மகிழ்வா இருந்துச்சு தான் .சரின்னு கீழ கமெண்ட பக்கம் போய் மக்கள் எத்தனை மக்கள் வாழ்த்திருக்காங்கனு பாக்க போனா மனிதர்களோட கொஞ்சம் கூட மனிதம் இல்லாத வன்ம எழுத்துக்கள் அடங்கிய ஒரு வன்முறை தான் அதை கமெண்ட் செக்சன் முழுவதும் நிறைஞ்சு கிடந்தது.

எத்தனை கெட்ட வார்த்தைகள் ,எத்தனை சாபங்கள் ,எத்தனை அருவருப்புகள் ,எத்தனை நிதானம் அற்ற மனித கெட்ட குணங்கள் , இத்தனையும் அங்க கொட்டி கிடந்தது. அந்த கமெண்ட் எல்லாத்தையுமே படிச்சு முடிச்ச பின்னாடி எனக்கு ஒன்னும் மட்டும் புரியலை LGBTQ பத்தி தெரிஞ்சுக்க ஏன் இந்த மனித மனம் விரும்ப மாட்டேங்குது .

குறிப்பா மனிதன் பரிமாணம் அடைந்ததற்கு பின்னாடி பல மாற்றங்களை சந்தித்து வந்திருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கருத்தையும் அவனுக்கு பின்னாடி வரும் மனிதனுக்கு கடத்திட்டு வந்துட்டு இருக்கான்.

இங்க எல்லா மக்களும் அந்த கடத்திட்டு வந்த நடைமுறைக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்கிறாங்க.
மதிப்பு கொடுக்கிறது இங்க தவறு கிடையாது ,ஆனால் அந்த பழமைவாத கருத்துக்கள் உண்மைதானா அந்த கருத்துக்கள் சொல்ல வர்ற பதில்கள் பொருள்களும் உண்மைதானாங்குறத நிறைய இடத்தில ஆராயவே மாட்டேங்குறான் .

திருநம்பியோ திருநங்கையோ கல்யாணம் பண்ணிட்டா இது எப்படி சாத்தியம் இவங்களால என்ன பண்ண முடியும் .

குழந்தையா பிறக்க போது அப்படின்னு ஒரு கேள்வி முன் வைப்பாங்க.

இதே ஒரு ஆணும் பெண்ணும் காதல் கல்யாணம் பண்ணிட்டா அவங்க ரெண்டு பேரும் ஒரே சாதியா? பழக்க வழக்கெல்லாம் எப்படி ஒத்து வரும் ஒரே மதமா அவங்களுக்கு வேற பழக்க வழக்கம் இவங்களுக்கு வேற பழக்க வழக்கம் அப்படி ஒரு கேள்வி வரும் .

அதையும் தாண்டி ஒரே சாதில திருமணம் பண்றவங்களுக்கும் பணம் இருக்கா பணம் இருந்தா தான் நல்லாவே வாழ முடியும் இப்படி கேள்விகள் மட்டுமே கேட்டுட்டு இருக்க மனிதர்கள் மட்டும்தான் இந்த உலகத்தில் ரொம்ப ரொம்ப அதிகமா வாழ்ந்துட்டு வராங்க.

அவங்களுக்கு இங்க எது நடக்குதோ நடக்கலயோ , ஆனால் அவங்க என்ன அந்த நேரத்துக்கு மனசுல நினைக்கிறாங்களோ அதுதான் நடக்கணும் .

அதுதான் ஒவ்வொரு மனிதனோட எண்ணமாவும் விருப்பமாவும் இருக்கு.

அந்த கமெண்ட் எல்லாம் வன்மத்தை ஒரு பெரிய பாறாங்கல்ல சேர்த்து வைத்து அந்த தம்பதியினர் மேலே எரிஞ்ச மாதிரி இருந்துச்சு .

வழக்கமா எல்லாரும் கேக்குற ஒரு கேள்வி
ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி என்ன பண்ணுவாங்க ?

இந்த என்ன பண்ணுவாங்கங்குற ஒர
ஒரு கேள்விய நிறைய பேரு கேட்டும் நான் பாத்துருக்கேன்.

இது ஈசியாக கடந்து போகும் கேள்வி கிடையாது .

இவர்கள் நக்கலாக கேட்கும் கேள்விகள் என்னென்ன தெரியுமா

இயற்கைக்கு எதிரான ஒன்னு?

இதுல யாரு ஆண் யாரு பொண்ணு?

எத்தனை நாளைக்கு தாங்குதோ?

வயசு கோளாறு?

காதலுக்கு கண் இல்லைனு சொல்லுவாங்க. இப்போ தான் அது உண்மையாகயிருக்கு?

கடவுள் படைப்புல ஆண் பெண் தான் சேரனும் இல்லனா உலகம் அழியும்.

இப்படி இதை விட சொல்ல முடியாத கேள்விகள் எல்லாம் நிறைஞ்சு கிடந்தது.
ஆனாலும் எனக்கு அதை பார்க்கும் போது அவங்களோட எதையும் இழிவுபடுத்தும் எண்ணம் மட்டுமே தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது.

அந்த எண்ணங்கள் எதுவும் LGBTQ community பத்தி தெரிந்த ஒன்று அல்ல.அது எல்லாமே அதனை LGBTQ பத்தி புரியாத வெளிப்பாடு .

அதனை பற்றி புரிய வைக்க நம்ம மக்களை தடுத்தது அந்த முன்னோர்கள் கடத்துன எண்ணம்.இந்த உலகம் ஆண் பெண் காதலை மட்டும் தான் அங்கீகரிக்கும் .மற்றவை எல்லாம் இயற்கை எதிரானது என்று தலைமுறை தலைமுறையாக கடத்திட்டு வந்துட்டு இருக்கோம்.

 

வருங்காலத்தில் இது போன்ற கேள்விகள் எழாம இருக்க, இன்றே ஆழமா LGBTQ பத்தின புரிதல் ஏற்படுத்த முற்படனும்.
அதனை பற்றிய அறிவியல் உண்மைகள் எல்லாத்தையும் மக்கள் மத்தியில கொண்டு சேக்கனும்.

மேலே அவர்கள் எழுப்பிய கேள்விக்களுக்கு பதில் சொல்ல ஆரம்பிப்போம் .. LGBTQ என்கிற இயற்கை எதிர்க்கும் மக்களை நம்ம மெல்லமாக மீட்கலாம்….

 

-அருண் தர்சன்

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன