ஏற்கனவே சிவாவும் சிவலட்சுமியும் பேசியது போலவே ரகு வீட்டின் மாடியில் உள்ள சிவலட்சுமியின் அறையில் ரகுவின் பிறந்தநாள் கொண்டாட தேவையான ஏற்பாடுகளை சிவலட்சுமி செய்திருந்தாள்.  இரவு 11:30 மணிக்கு தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே வந்த சிவா தன்னுடைய அம்மாவின் உறக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டு ரகுவின் வீட்டை நோக்கி பயணமானான்.

 

ஹலோ பர்த்டே க்கு ரெடி பண்ணியாச்சா என போனில் சிவலட்சுமியிடம் கேட்டான் மாரிமுத்து.  ஆமாடா எல்லா ரெடியாயிடுச்சு சிவா வந்த பிறகு கால் பண்ணி ரகுவை வர சொல்லணும் என்றாள் சிவலட்சுமி, அதுவும் சரிதான் என்ற மாரிமுத்துவிடம் நீ கிளம்பிட்டியா என கேட்டாள் சிவலட்சுமி.  

 

ஆமா திருநெல்வேலி கேடிசி நகர் ல டீ குடிச்சிட்டு இருக்கோம் பத்து நிமிஷத்துல கிளம்பிருவோம் என்றான் மாரிமுத்து.  பார்த்து வா நைட்டு ஊர் சுத்தாதன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன் என சிவலட்சுமி சொல்ல, சரி சரி திட்டாத வீட்டுக்கு போயிட்டு உனக்கு மெசேஜ் போடறேன் என்றான் மாரிமுத்து.   

 

சரி சரி அந்த பயம் இருக்கணும், சிவா கால் பண்றான் நான் போய் அவனை கூட்டிட்டு வரேன் என மாரிமுத்துவின் போனை கட் செய்த சிவலட்சுமி சிவாவின் ஃபோனை அட்டென்ட் செய்து சொல்லுடா வந்துட்டியா என கேட்டாள்.   

 

ஆமா வந்துட்டேன் என சிவா சொல்ல இதோ வரேன் என போனை கட் செய்து விட்டு வெளியே வந்தாள் சிவலட்சுமி.  எதையுமே முழுசா கேட்காம போன கட் செஞ்சுடுவா என எண்ணிக்கொண்டான் சிவா, ஐந்து நிமிடங்கள் கழித்து சிவலட்சுமி கால் செய்து எங்கடா இருக்க, நான் கேட் கிட்டே தான் இருக்கேன் என சொன்னாள்.   லூசு நான் வீட்டுக்கு பின்னால இருக்கேன் என சிவா சொல்ல அங்கையா நீ எப்படி அங்க போன என சிவலட்சுமி கேட்க.   

 

நீ வந்து என்னை கூட்டிட்டு போறியா இல்ல போன்லயே அவனோட பிறந்தநாளை கொண்டாடலாமா என்றான் சிவா.  சரிடா சரிடா வரேன் என வீட்டின் பின்புறமாக சென்றாள் சிவலட்சுமி, சிவா பின்னால் அமைந்திருக்கும் பாத்ரூம் சுவற்றின் பின்னால் இருக்க சிவலட்சுமி பின்பக்க கதவை திறக்கவும் உள்ளே சென்றான் சிவா.   இந்த பாதை உனக்கு எப்படி தெரியும் என சிவலட்சுமி கேட்க அதெல்லாம் உனக்கு ஏன் என்று கேட்ட சிவா முன்னால் செல்ல சிவலட்சுமி பின்னால் சென்று கொண்டிருந்தாள்.  

 

அப்போது கிச்சனை விட்டு அவர்கள் ஹாலுக்கு வரும் போது வீட்டின் லைட்டு ஆன் செய்யப்பட்டது.   அதிர்ச்சியில் சிவாவும் சிவலட்சுமியும் திரும்ப அங்கே ரகுவின் அப்பா நின்று கொண்டிருந்தார்.   என்ன சொல்வது என புரியாமல் சிவா நிற்க, என்ன சிவா எல்லா ரெடி ஆகிட்டா என ரகுவின் அப்பா கேட்க.  எனக்கு தெரியல என சிவா சொல்ல வாயெடுக்கும் முன் ஆமாம் மாமா என சிவலட்சுமி சொன்னாள்.  

 

அப்போது கேக் உடன் வந்த ரகுவின் அம்மா சிவா வாப்பா எப்ப வந்த எனக் கேட்க, இப்ப தான் என சிவா பதில் சொன்னான்.  அனைவரும் லைட்டை அணைத்துவிட்டு சிவலட்சுமியின் ரூமுக்கு சென்றனர்.

 

ரகுவுக்கு சிவலட்சுமி கால் செய்தாள், ஹலோ என்ன பைத்தியமே என ரகு கேட்க டேய் கொஞ்சம் ரூம் வரைக்கும் வரியா எனக்கு மேல இருந்து சாமான் இறக்கணும் நாளைக்கு ஊருக்கு கொண்டு போக என சிவலட்சுமி சொன்னாள்.  

 

போடி பைத்தியம் நடுராத்தில தான் உனக்கு இதெல்லாம் பண்ணனுமா என ரகு சளிப்போடு சொல்ல, இப்ப வரியா இல்லையா என கேட்டாள் சிவலட்சுமி.  உடனே வந்து தொலையுறேன் வரலன்னு சொன்ன உங்க மாமா அலெக்ஸ் பாண்டியன் முன்னால போய் நிப்ப, அந்த ஆளு என்னை புடிச்சு கத்துவாரு என தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தவன் டி-ஷர்டை போட்டுக் கொண்டே சிவலட்சுமியின் அறையை அடைந்தான். 

 

ரகு கதவை தட்டும் சத்தம் கேட்டு லைட்டை அணைத்து விட்டு சிவலட்சுமி கதவை திறந்தாள், என்ன பைத்தியம் லைட்டா ஆப் பண்ற எப்படி பொருளை இறக்குறது என ரகு கேட்க.  ஏன் நீ ஆன் பண்ண மாட்டியா என சிவலட்சுமி சொல்ல, வர வர உனக்கு திமிர் ஏறிப்போச்சு என்று சொல்லிக் கொண்டே ரகு லைட்டை ஆன் செய்தான்.   

 

அந்த அறை முழுவதும் ரகுவுக்கு பிடித்த மஞ்சள் நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, டேபிளில் கேக் வைக்கப்பட்டிருந்தது அதில் ஹாப்பி பர்த்டே மை சன் ரகு என்கிற வாக்கியம் எழுதப்பட்டிருந்தது.  

 

உடனே நான் உனக்கு சன் னா என அருகில் இருந்து சிவலட்சிமியின் காதை பிடித்து திருகினான் ரகு, டேய் அவளுக்கு இல்லடா எனக்கு நீ சன் தானே என மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியே வந்தனர் ரகுவின் அம்மாவும் அப்பாவும் அவர்களை பார்த்ததும் ரகு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.  

 

என்னம்மா இது கிட்டத்தட்ட 15 வருஷம் கழிச்சு என் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட போறேன் நான் என்ற ரகுவின் கண்கள் லேசாக கலங்க ஹாப்பி பர்த்டே ரகு என மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்தான் சிவா.  சிவாவை பார்த்ததும் ரகுவின் திறந்த வாய் மூடவே இல்லை சிவா அணிந்திருந்த பிளாக் டி-ஷர்ட்டும் ஷார்ட்சும் ரகுவை மெய்மறக்கச் செய்தன.  

 

டேய் டேய் என ரகுவின் அம்மா அவனுடைய தோளைத் தட்டித்தான் சுயநினைவுக்கு கொண்டு வந்தார், சிவலட்சுமி கேண்டில் ஏற்ற மற்ற நான்கு பேரும் கைதட்டி வாழ்த்து பாடல்களைப் பாட ரகு கேண்டிலை அணைத்து கேக்கை வெட்டி தன்னுடைய பிறந்தநாளை தொடங்கிக் கொண்டான்.   அனைவருக்கும் ரகு கேக் ஊட்டி விட அவர்களும் அவனுக்கு ஊட்டி விட என எல்லா பிறந்தநாள் விழாக்களிலும் நடக்கும் நிகழ்வு அங்கும் நடந்தது.   

 

ரகுவின் அப்பா அவனுக்கு ரொம்ப நாளாக அவன் கேட்ட பைக்கை வாங்கி தருவதாகவும் காலை 10 மணிக்கு போகலாம் எனவும் சொன்னார்.  சிவலட்சுமி டைட்டன் வாட்ச் ஒன்றை பரிசளித்தாள், ரகு சிவாவிடம் டேய் நீ என்ன கிப்ட் கொண்டு வந்த என கேட்க.  அவன் திருத்திரு என முழித்தபடி தன் கையில் இருந்த பையில் உள்ள டிபன் பாக்ஸை ரகுவிடம் நீட்டினான்.   

 

என்னடா இது என சிவலட்சுமி கேட்க, வட்லாப்பம் என்றான் சிவா.  என்னது வட்லாப்பமா என சிவலட்சுமி டிபனை வாங்குவதற்குள் ரகு வாங்கி திறந்து சுவைக்க தொடங்கினான்.  எனக்கு ஒரு பீஸ் கொடுடா என சிவலட்சுமி கெஞ்ச போடி என் அத்தை செஞ்சது என ஆஹா ஓஹோ என ரகு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.  

 

ஒரு சின்ன திருத்தம் இது அத்தை பண்ணல அத்தையோட இந்த பையன் பண்ணுது என்றான் சிவா.  எங்க கொடுடா சாப்பிட்டு பார்ப்போம் என ரகுவின் அம்மா ஒரு பீஸ் சாப்பிட்டு விட்டு அப்படியே எங்க மாமியார் பண்ற மாதிரி இருக்கு என சொல்ல.   ரகுவின் அப்பாவுக்கு எப்படி வட்லாப்பம் கேட்பது என சங்கோஜம், அதை புரிந்து கொண்டு சிவலட்சுமி ஒரு பீஸ் வட்லாப்பத்தை எடுத்து ரகுவின் அப்பாவுக்கு ஊட்டி விட அவரும் அதை சாப்பிட்டுவிட்டு சிவாவை பார்த்து ஆச்சரியப்பட்ட படி தன்னுடைய அறைக்கு சென்றார்.   

 

சிவா நைட்டு இங்கேயே தூங்கிட்டு காலையில போ என்றபடி ரகுவின் அம்மாவும் செல்ல சிவா ரகு சிவலட்சுமி மூன்று பேரும் சிறிது நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது சிவாவிடம் சிவலட்சுமி கேட்டாள், என்னடா ஜாப் இன்டர்வியூ எல்லாம் எப்படி இருந்துச்சு எங்க ஆபீஸ்லயே ஒன் ஆப் தி ஹேண்ட்சம் வந்திருந்தார் என்றாள் சிவலட்சுமி.  

 

என்னது ஹேண்ட்ஸம் மா, என்னடா சொல்லறா இவ என சிவாவை பார்த்து கேட்டான் ரகு, டேய் நீ வேற அவனெல்லாம் ஹண்ட்ஸம் னா நீ எல்லாம் பிரபஞ்ச அழகன்டா என்றான் சிவா.  ஐஸ் வைக்காத என்றான் ரகு, நான் உண்மைய தான் சொல்றேன் என்றான் சிவா.   

 

சரிடா சேலரி பேக்கேஜ் எல்லாம் பேசிட்டியா என சிவலட்சுமி கேட்க, ஆமா 3.5 லட்சம் வருசத்துக்கு சொன்னாங்க என்றான் சிவா.  சூப்பர் டா அப்ப சென்னையில வந்து ஒரு வீடு எடுத்து அம்மாவையும் கூட்டிட்டு வா என்றாள் சிவலட்சுமி.  உடனே ஏன் சென்னைல பி.ஜி லருந்து சாட்டர்டே அண்ட் சண்டேக்கு ஊருக்கு வந்துட்டு போகலாமே என்றான் ரகு

 

லூசு மாதிரி பேசாத ரகு மாசத்துல ஒரு சனிக்கிழமை ஆபீஸ் இருக்கும் அது மட்டும் இல்லாம லாஸ்ட் சனிக்கிழமை எங்கேயாவது லஞ்ச் அண்ட் டின்னருக்கு கூட்டிட்டு போவாங்க, இதெல்லாம் சிவா அட்டென்ட் பண்ணினாதா, அவனால கம்பெனியில ஷைன் பண்ண முடியும் என்றாள் சிவலட்சுமி

 

ஏன் நானெல்லாம் நாலு வருஷமா ஒர்க் ப்ரம் ஹோம்ல தான் இருக்கேன், என்னை கம்பெனிய விட்டு அனுப்பிட்டாங்களா என்ன என்றான் ரகு.  இங்க பாரு ரகு நீ சிவில் சிவா ஐடி எல்லோருக்கும் வேலை ஒரே மாதிரி இருக்காது அவனோட வாழ்க்கையில அவன் நல்ல முன்னேறனும் அதை தடுக்க நீயே நினைச்சாலும் நான் விடமாட்டேன் என்றாள் சிவலட்சுமி.  யாரோட முன்னேற்றத்துக்கும் நான் தடையா இருக்க மாட்டேன், யாருக்கு எவ்வளவு முன்னேறனுமோ அவ்வளவு முன்னேறுங்க என தன்னுடைய ரூமை நோக்கி பயணமானான் ரகு.   

 

ஏன் அக்கா நீ வேற என்ற சிவா ரகுவின் பின்னால் செல்ல முயற்சிக்க அவனுடைய கையை பிடித்து நிறுத்திய சிவலட்சுமி கொஞ்சம் நில்லு என்றாள்.  இங்க பாரு சிவா உன்னோட காதல நான் என்னைக்குமே தப்புன்னு சொல்லல ஆனா நீ காதலிக்கிற ஆள்தான் தப்புனு சொல்றேன்அவனால அவங்க அப்பா பேச்சை மீறவே முடியாது இவ்வளவு ஏன் அவர் சொன்னா இவன் கண்ண மூடிட்டு கிணத்துல கூட விழுந்துருவான்.  நம்ம மாமா அவருக்கு அவங்க அப்பா தாத்தா எல்லாம் கட்டி காப்பாத்துன கவுரவம் தான் முக்கியம்.  

 

உனக்கு நம்ம ஊர்ல ஒரு வருஷத்துக்கு முன்னால நாலாம் வகுப்பு சார் பேச்சுமுத்து காணாம போனது தெரியுமில்ல என்று கேட்க.   ஆமா என சிவா தலையசைக்க அவர் ஏன் போனாரு அவர் கிட்ட தான் ரகு டியூஷன் படிச்சான்அதுல பழக்கம் ஏற்பட்டுருக்கு அது தெரிஞ்சு நம்ம மாமா கூப்பிட்டு மிரட்டுனதுல அவர் உங்க பையன்தான் முதல்ல காதலிக்கிறதா சொன்னான்னு சொல்லியிருக்கார்.   

 

மாமா இவனை கூப்புட்டு அவர் முன்னால கேட்டப்போ அப்படியே மாத்தி சொல்லிட்டான், பாவம் அந்த மனுஷன் நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை விட்டுட்டு வேலையை காப்பாத்திக்க வேற ஊருக்கு போயிட்டாரு.  அது இவனோட காதல் இல்லாம இருக்கலாம் ஆனா அவர் தான் தன்னை அபியூஸ் பண்ணுனதா அவன் சொன்னது தான் இன்னைக்கு பேச்சிமுத்து சாருக்கு தன்னுடைய சொந்த பந்தம் முகத்துல கூட முழிக்க முடியாமல் போச்சு.  அவங்க அப்பா இப்பவோ அப்போவோன்னு இருக்காரு, அவர் அதை கூட பார்க்க வரல என்றாள் சிவலட்சுமி.  

 

என்னக்கா இப்படி எல்லாம் சொல்ற என சிவா கேட்க, அதான் சொல்றேன் இவனை நம்பி உன்னோட வாழ்க்கைக்கு கெடுத்துக்காத நான் நெக்ஸ்ட் இயர்ல வெளிநாடு போயிருவேன்.  மாரிமுத்துவும் கிளம்பிடுவான், அதுக்கப்புறம் நான் இங்க வரவே மாட்டேன்.  ஆனால் நீ தேர்ந்தெடுக்க போற வாழ்க்கைக்கு நீ பைனான்சியலா ஸ்ட்ராங்கா இருக்க வேண்டியது அவசியம் சிவா அதை மறந்துடாத என்றாள்.  

 

நான் சென்னையில உன்னை மாதிரி பல கனவுகளோடு வாழுற நிறைய பேர பாத்துட்டு இருக்கேன், அவங்களோட பழகினதுல அவங்க வாழ்க்கை பற்றி தெரிஞ்சுகிட்டேன் நீ உன்னோட வாழ்க்கையில பிசிக்கல் அண்ட் மெண்டல் மட்டுமல்ல பைனான்சியல் ஆகவும் ஸ்ட்ராங்கா இருக்க வேண்டியது அவசியம்ன்னு தெரிஞ்சுகிட்டேன் என்றாள்  சிவலட்சுமி.  ஓகே என்ற சிவாவை கட்டி அணைத்தபடி எதுனாலும் நல்லா யோசிச்சு முடிவு எடு என்றாள்.   

 

சரிக்கா என சிவா ரகுவின் அறைக்கு சென்றான், வாடா உங்க அக்கா தூபம் போட வேண்டியது எல்லாம் போட்டு அனுப்பிட்டாளா என்றான் ரகுயார் சொல்லியும் நான் எதுவும் நம்ப மாட்டேன் ரகு, எனக்கு ஒரே ஒரு பதில் தான் வேணும் என்றான் சிவாஎன்ன என்பது போல ரகு கண்ணால் கேட்க, உன்னை ஒரு மகிழ்வனா நீ ஏத்துக்க மாட்டியா என்று கேட்டான் சிவா அதுக்கு எனக்கு டைம் வேணும் என்றான் ரகு.  

 

என்னடா டைம் வேணும் 27 வயசு ஆச்சு இன்னும் டைம் தேவையா என சிவா கேட்க, எனக்கு தெரியல சிவா என்றான் ரகுஎன்னடா சொல்ற உன்னோட லைஃப் பத்தி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீ மகிழ்வன்னு நான் நினைக்கிறேன் என சிவா சொல்ல.  இன்னிக்கு என்னோட பிறந்த நாள் இந்த மாதிரியான விஷயங்களை பேச நான் தயாரா இல்லை இது தேவையில்லாத விஷயம் என்றான் ரகு.   

 

என்னது தேவையில்லாத விஷயமா என்ற சிவா, ரகுவின் முகத்தை தன் பக்கமாக திருப்பிக் கொண்டு சொன்னான்.  அது என்னோட வாழ்க்கை பிரச்சனையும் கூட தான் ரகு, என்னுடைய எதிர்காலமே நீ தான்னு நினைச்சு நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.  நீ என்னன்னா இப்படி எல்லாம் பேசுற என்ற சிவாவிடம் நான் உன்னை நினைக்க சொன்னனா இல்ல நான் உன்னை நினைக்க சொன்னேனா என்று கேட்டான் ரகு.  என்னை வச்சு உன் எதிர்காலத்துல உள்ள உன்னோட கற்பனைகளையும் கனவையும் நிஜமாக்குறது என்னோட வேலை இல்ல சிவா என்றான் ரகு.    

 

எனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு அதுல நான் என்னோட விருப்பப்படி வாழனும் நான் உன்னை காதலிக்கிறேன்.  ஆனால் இந்த காதல் அடுத்த கட்டத்துக்கு போகுமா போகாதன்னு நீ கேட்கும்போது எல்லாம் என்னோட மூளைல ஏதோ ஒரு மாதிரி வலி ஏற்படுது என்னால மூச்சு கூட விட முடியல, நான் ஒரு மகிழ்வன் தாணான்னு இன்னும் எனக்கு தெரியல இதுல நீ வேற அடுத்து என்ன அடுத்து என்னன்னு கேட்டுட்டே இருக்க

 

எனக்கு உன் கூட படுக்க பிடிக்கும் அவ்வளவு தான் வேற எதைப் பற்றியும் நான் யோசிக்க விரும்பல என்றான் ரகுஎன்னடா சொல்ற அப்ப இவ்வளவு நாள் நீ என்கூட படுக்க மட்டும் தான் பழகுனியா என சிவா கேட்க ஆமா என ரகு சொல்ல, சரிடா என சிவா ரகுவின் வீட்டை விட்டு வெளியேறினான்

 

ஆளரவமற்ற குளத்தங்கரையில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான் சிவா, அப்போது அருணின் போன் வர அதை எடுத்து பேச தொடங்கியவனின் கண்ணீர் அவனையும் அறியாமல் பெருகியது.    

 

ரகு தன்னுடைய போனிலிருந்து ஹாய் நீ ஃப்ரீயா என மெசேஜ் பண்ண, ஆமாடா என்ற பதில் எதிர்முனையில் இருந்து வந்தது.  மீட் பண்ணலாமா என ரகு கேட்க பண்ணலாம் என்னோட பழைய வீட்டுக்கு வா என பதில் மெசேஜ் வந்தது.  தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றான் ரகு.    

 

போனில் சொன்ன வீட்டின் பின்னால் உள்ள மறைவில் வண்டியை நிறுத்தி விட்டு முன்பக்கமாக வந்து ரகு கதவைத் தட்ட, இதோ வறேன் என்ற குரல் வந்தது அதற்குப்பின் சில வினாடிகளில் கதவை திறந்தான் சுடலை.    

 

               

    –வருவான்….

 

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன