காலை 7:30 மணியளவில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிவா இறங்கினான்.  அருகில் இருந்த கடையில் ஒரு காபியை வாங்கி குடித்துக் கொண்டே ரகுவின் மீதான காதலைப் பற்றி நினைக்கத் தொடங்கினான்.   முதன் முதலாக ரகுவை அவன் பார்த்தது காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல தான் அன்று பார்த்த அவனுடைய அழகு இன்று வரை சிவாவின் நினைவில் அப்படியே உள்ளது.  

 

ரகுவின் ஒவ்வொரு செயல்களையும் ரசித்தவன் சிவா, அவனோடு ஏற்பட்ட கடந்த 9 மாத கால (காதல்) நெருக்கம் சிவாவின் வாழ்வில் அவன் சந்தோசமாக இருந்த காலகட்டம் அதுரகுவை நினைத்தாலே சிவந்து போகும் கன்னங்களை என்றுமே கேலி செய்வாள் சிவலட்சுமிஒரு காதலின் அடுத்த கட்டம் என்பது கல்யாணம் என்பதில் மட்டுமே இல்லை என்றாலும், ஒன்றாக வாழ்வது தானே அதை ஏற்றுக்கொள்ள ரகு ஏன் தயாராக இல்லை

 

ஸ்டீபன், பேச்சிமுத்து என்ற எண்ணிக்கையில் நானும் ஒருவன் மட்டும் தானா? அதை தவிர எந்தவித உணர்வுகளும் என் மீது ரகுவுக்கு வரவில்லையாஎனக்கு உன் கூட படுக்க பிடிக்கும் என்று சொன்னதற்கு பதிலாக அவன் ஏன் உன்னை பிடிக்கும், உன்கூட நேரம் செலவிடுவது பிடிக்கும் என்றெல்லாம் சொல்லவில்லைஉருகி உருகி காதலித்த என்னை அவனுடைய காமத்திற்கும் கட்டிலுக்கும் மட்டும் தான் பயன்படுத்தினானா ரகு

 

ஒருவன் என்னை போகப் பொருளாக தான் பயன்படுத்துகிறான் என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத அளவு ரகுவின் மீதான காதல் என் கண்ணை மறைத்து விட்டதா?  அந்த ஸ்டீபனை பார்த்த பிறகு அவன் எனக்கு சொன்ன நன்றியில் வெறும் நன்றி மட்டும் தெரியவில்லையே.  அவன் கண்களில் நான் எனக்கான காதலை கண்டு இருக்கிறேன்அப்போ அது காதலே இல்லையா, நான் ஏமாற்றப்பட்டேனா இல்லை ஏமாந்து போனேனா? என்னால் அடுத்தவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல முடியும் பொழுது ஏன் என்னுடைய பிரச்சினைகளுக்கு தெளிவான திடமான முடிவை எடுக்க முடியவில்லை.  

 

நான் அவன் மீது கொண்ட காதலை வேண்டாம் என்றும் என் உடல் மட்டும் படுக்கைக்கு வேண்டும் என்றும் எண்ணுகிற ஒருத்தனுக்காக நான் ஏன் என்னுடைய வாழ்க்கையை இழக்க வேண்டும் இது போன்ற எண்ணங்களில் அமர்ந்திருந்த சிவாவை அழைத்துச் செல்ல அருண் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தான்.

 

ஆனால் சிவா அவன் வருவதை கவனிக்காமல் ஏதோ சிந்தனையில் மூழ்கி இருக்க, அவனுடைய தோளைப் பிடித்து உலுக்கி சுயநினைவுக்கு கொண்டு வந்த அருண் வாடா போகலாம் என்றான்.   

 

அவனோடு பேருந்து எறிய சிவா வழி நெடுக வடிந்த கண்ணீரை துடைக்க கூட நினைவில்லாமல் சென்றான்அருண்   சி ஆரில் உள்ள பாலவாக்கம் என்கிற பகுதியில் வசித்து வருகிறான் தன்னுடைய வீட்டின் கதவை தட்டினான் அருண், இதோ வரேன் டா என்ற சத்தத்தோடு ஒருவன் வந்து கதவைத் திறந்தான்

 

இவன் என்னோட ரூம் மேட் ராம் என அருண் சிவாவிடம் சொல்ல, ராம் கட்டியிருந்த டவலும் உடலின் வியர்வையும் அருணுக்கு சொல்லியது அவன் என்ன செய்து கொண்டு இருந்தான் என்பதை, சிவாவை பார்த்த ராம் வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவன் முகத்திற்கு முன்னால் சொடக்கு போட்டு சுயநினைவுக்கு கொண்ட வந்தான் அருண்என்ன என்பது போல் ராம் கேட்க, வழிவிடுடா என சிவாவை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான் அருண்.  

 

ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட தயங்காம கேளுங்க சிவா, இப்ப 10 மினிட்ஸ் எனக்கு வேலை இருக்கு என ராம் தன்னுடைய அறைக்குள் சென்றான்.  ராம் சென்ற பக்கமாக சிவா பார்த்து கொண்டிருக்க, டேய் என்ற அருண் நீ முதல்ல பிரஷ்ஷாகு நம்ம அப்புறமா பேசிக்கலாம் என கிச்சனுக்குள் சென்றான்.

 

சிவா குளித்து முடித்துவிட்டு வெளியே வந்து தலைய துவட்டிக் கொண்டே அருணின் சமையலறைக்கு செல்வதற்காக, தான் இருந்த அறையில் இருந்து வெளியே வர, எதிரே இருந்த அறையின் வாசலின் கதவில் சாய்ந்த படி ராம் இன்னொரு வாலிபனை முத்தமிட்டு கொண்டிருக்க சிவா துண்டை வைத்து தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டு கிச்சனுக்கு ஓடினான்.  

 

என்னடா மூஞ்சிய மூடிக்கிட்டு வர என அருண் கேட்க, என்னடா உன் ரூம் மேட் பெட்ரூம்ல செய்ய வேண்டியது எல்லாம் பெட்ரூம் வாசல்ல செஞ்சிட்டு இருக்கான் என்றான் சிவா.  அவன் அப்படித்தான் கண்டுக்காத என அருண் சொல்லிக் கொண்டிருக்கும்போதே உம்மா உம்மா என சத்தம் கேட்டது.   

 

இப்ப பாரேன் பேபி போகாத, ப்ளீஸ் என்கூடயே இரு, உன்னை மாதிரி எனக்கு வேற யாரு கூடவும் ஃபீல் ஆனதே இல்ல.  ப்ளீஸ் என் கூடவே இருன்னு ஏதேதோ கதை விட்டுக்கிட்டு அந்த பையனை அனுப்புவான் பாரு என அருண் சொன்னான்.   

 

ஒரு சில நொடிகளில் என் செல்லக்குட்டி, என் பேபி என அந்த வாலிபனை பின்னால் இருந்து கட்டியபடி மெயின் டோர் அருகில் வந்தான் ராம்.  சரி ராம் நான் கிளம்பவா என அந்த வாலிபன் கேட்க, ப்ளீஸ் பேபி போகாத பேபி எனக்கு உன்னை பிரிய மனசே இல்லஉன்கூட வந்த இந்த ஃபீலிங் வேற யார் கூட வந்ததே இல்லை.  ப்ளீஸ் பேபி போகாத என அருண் சொன்னது போலவே சொல்ல சிவா ஆச்சரியமாக அருணை பார்த்தான்.   

 

இதெல்லாம் அவனோட ரெகுலர் டயலாக்ஸ் டா என அருண் தோசை சுட ஆரம்பித்தான்அப்போது ஜட்டியோடு கிச்சனுக்குள் வந்தான் ராம், டேய் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் அரையும் குறையுமா கிச்சனுக்குள்ள வராதுன்னு என அருண் சொன்னான். 

 

என்னோட புரோட்டின் ஷேக் மட்டும் எடுத்துட்டு போறேன் என்ற ராமிடம், ஏன்டா ஜிம்முக்கே போகல இதுல புரோட்டீன் ஷேக் தேவையா என அருண் கேட்கஜீம்முல கரையுற கலரிஸை விட இன்னைக்கு காலையில செமையா கேலரி லாஸ் ஆயிருச்சு என்றான் ராம்.  

 

அது எனக்கு எப்படிடா தெரியும் என அருண் சொல்ல, நான் வாடா காமிக்கிறேன்னு சொன்னேன் நீ தான் வரல.  அதைவிடு உன் பிரண்டுக்கு ஓகேவான்னு கேட்டு சொல்லு அவங்களுக்கு நான் காமிக்கிறேன் என்றான் ராம்.  செருப்பு பிஞ்சுக்கும் என்ற அருண், 20 மினிட்ஸ்ல வந்தா சுட சுட பிரேக்ஃபாஸ்ட் கிடைக்கும் இல்லைன்னா ஆறுனது தான் என்றதும், 15 நிமிஷம் எனக்கு போதும் என்ற ராம் சிவாவின் கன்னத்தில் கிள்ளிய படி கியூட் என்று தன்னுடைய அறைக்குள் சென்றான் ராம்

 

அவன் அப்படித்தான் கண்டுக்காத என அருண் சொல்ல, என்னடா சமைக்கிற என கேட்டான் சிவா.  உனக்கு பிடிச்ச பூரியும் மஸ்ரூம் கிரேவியும் என அருண் சொல்ல, தேங்க்ஸ் என்றான் சிவா.  ஏய் என்னடா புதுசா நன்றி எல்லாம் என அருண் சமையலை முடித்து சாப்பாட்டை ஹாலில் எடுத்து வைத்தான்.  சிவாவும் அருணும் அமர்ந்திருக்க அவசர அவசரமாக ஷார்ட்ஸ் மட்டும் அணிந்தபடி அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான் ராம்

 

டேய் போய் டி-ஷர்ட் போட்டுட்டு வா என அருண் சொல்ல, அதெல்லாம் முடியாது இந்த வெயில்ல டி-ஷர்ட்டா நோ வே என்ற ராம் பூரி எடுத்து வைத்து சாப்பிட தொடங்கினான் என்னமோ பண்ணி தொலை என்ற அருண் சிவாவுக்கு பரிமாறி தானும் சாப்பிட தொடங்கினான்.  அப்போது ராம் சிவாவை பார்த்தபடி ஒருத்தர் சாப்பிடும் போது கூட இவ்ளோ அழகா இருப்பாங்கன்னு எனக்கு இப்பதான் தெரியும் அருண்.  சிவா ராமை முறைத்து பார்க்க அவனுடைய தொடையில் தட்டிய அருண், இங்க பாருடா நீ நினைக்கிற மாதிரி சிவா கிடையாது என்று சொன்னான்.   

 

நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு எப்படி தெரியும், பொத்தாம் பொதுவா இந்த சமூகம் குத்துற மாதிரியான முத்திரையை நீயும் என் மேல குத்தாத அருண்நான் பாக்குறவங்க கூட எல்லாம் படுக்கிறவன் கிடையாது என்றான்.  டேய் நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்ல என அருண் சொல்ல நீ வேற எப்படி சொல்ல வர நான் காசுக்கு படுக்கிறவnaa என ராம் கேட்க, நீ தேவை இல்லாம பேசுற என்னோட பிரண்டு விஷயத்துல நீ கொஞ்சம் தள்ளியே இரு ராம் என்றான் அருண்.   

 

இவ்வளவு போதுமா என்று சிவாவை நெருங்கி அமர்ந்தபடி கேட்டான் ராம், உடனே சிவா தன்னையும் மறந்து சிரித்து விட்டான்டேய் சிவா நீ சிரிக்காதடா இவன் ரெம்பவே பண்ணுவான் என்று சொல்ல, சாரிடா என்றான் சிவா ஐயோ ஜி நீங்க வேற அவன் எப்பவும் அப்படித்தான் என்றான் ராம். 

 

நான் எப்படிடா நீயே சொல்லு என்று அருண் கேட்க, நான் இந்த வம்புக்கு வரலப்பா என ஒதுங்கிக் கொண்டான் ராம்சாப்பிட்டு முடித்து தன்னுடைய ரூமுக்குள் போகும் முன் நீ தோசை சுட்டத பார்த்தேன் இன்னைக்கு நான் ஒர்க்குக்கு போகல சோ அத வேஸ்ட் பண்ணாம நம்ம சாப்பிட்டுக்கலாம் மத்தியானம் என்றான் ராம்.   

 

ஏன்டா வேலைக்கு போகல என அருண் கேட்க, நீ தானடா படத்துக்கு போகலாம்னு சொன்ன ரெண்டு மணிக்கு ஷோ புக் பண்ணவா என ராம் கேட்க சரிடா என அருண் சொல்ல எங்கடா என சிவா கேட்டான், படத்துக்குடா என அருண் சொல்ல ஏண்டா நான் உன் கூட மனசு விட்டு பேசணும்னு நினைக்கிறேன் என சிவா கேட்க.  இந்த படத்தை பார்த்துட்டு பேசினா இன்னுமே நல்லா இருக்கும் சிவா என்றான் அருண்.   

 

மதியம் 2 மணி அளவில் மூன்று பேரும் படம் பார்க்க சென்றனர், படத்தின் பெயர் பேட் கேர்ள்புது படமாடா என சிவா கேட்க, இரண்டு வாரம் ஆச்சுடா ரிலீஸ் ஆகி என அருண் சொல்ல, போன வாரம் கூட செக் பண்ணினேன் நம்ம ஊர்ல எந்த தியேட்டர்லயும் வரல எனக் கேட்டான் சிவாடேய் உள்ள வந்து படத்தை பாரு உனக்கே புரியும் நம்ம ஊர்ல ஏன் ரிலீஸ் பண்ணலேன்னு உனக்கே தெரியும் என்றான் அருண்.    

 

சரி என சிவா உள்ளே சென்றான், படத்தின் ஆரம்ப முதல் சிவா படத்தின் போக்கோடு ஒன்றி போனான்.  படம் முடிந்து வெளியே வந்து மூன்று பேரும் ஈசிஆர் கடற்கரையை நோக்கி பயணமாகினர்கடற்கரையில் நடந்து கொண்டிருந்த சிவாவிடம் என்னடா படம் எப்படி இருந்துச்சு என அருண் கேட்க, நல்லா தான் இருந்துச்சு என்றான் சிவா.  அத சொல்லுங்க ப்ரோ இவன்தான் இந்த படம் ஒரு கல்ட் மூவி அது இதுன்னு பினாத்திட்டு இருக்கான் என்று ராம் சொல்ல.  ஆமாம் ப்ரோ இன்னைக்கு இந்த படம் கல்ட்டா தெரியலனாலும் பத்து வருஷம் கழிச்சு இந்த படம் அக்மார்க் கல்ட் மூவி தான் என்றான் சிவா.   

 

அப்படியா அப்படி என்ன ப்ரோ இந்த படத்துல இருக்கு எப்பவும் போல ஆளை மாத்திட்டே இருக்குற பொண்ணுங்கள காமிக்காம, லவ் பண்ணி பெயிலியர் ஆகுற பொண்ண காமிச்சி இருக்காங்க இதுல என்ன ப்ரோ புதுமை இருக்கு என்றான் ராம்உடனே அருணை பார்த்து இந்த ஆர் எழுத்துல பெயர் வச்ச எல்லோரும் இப்படித்தானா எனக் கேட்டான் சிவா 

 

அதற்கு அருணும் சிரிக்க, என்னடா ரெண்டு பேரும் பொடி வச்சு பேசுறீங்க என கேட்டான் ராம்.  உடனே அப்படி இல்ல ப்ரோ ஒரு பெண் தன்னுடைய ஆபாச கனவுகளை பத்தி இந்த சமுதாயத்தில் பேச முடியுமா? முடியாது.  ஒரு பெண் இன்னொரு ஆண் கூட ஓடிப் போக வீட்டை விட்டு வெளியே வரும் போது அந்த ஆண் அங்க வரல.  அந்த இடத்துல காண்பிக்கப்பட்ட ஆணோட கோழைத்தனம் உங்களை எல்லாம் கஷ்டப்பட வைக்குது.  

 

இன்னொருத்தி கூட ரிலேஷன்ஷிப்ல இருந்துட்டு என்கூட ஏன்டா இருந்தேன்னு கேட்டா, நீ தான் என்னை எமோஷனலா பிளாக் மெயில் பண்ணினேன்னு சொல்லி தப்பிக்கிற உங்களோட தற்குறித்தனம் எல்லாரும் முன்னாலையும் தெரிஞ்சு போச்சு என்கிற குற்ற உணர்ச்சிஏன் ஒரு ரிலேஷன்ஷிப் எனக்கு வேண்டாம் என்று சொல்கிற உரிமை அந்த பொண்ணுக்கு கொடுக்கப்பட்டதுமெயினா உங்க பிரச்சனை அது எப்படி அந்த பெண் இத்தனை பேர் கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தான்னு…. இல்ல இல்ல படுத்தான்னு கோபம்.    

 

இதெல்லாம் நீங்க பாடுற ஆண்மை தனம் என்கிற கோழைத்தனத்தின் உச்சக்கட்ட கோபம் அவ்வளவு தான், ஒரு பெண்ணோ ஆணோ யாரோட காயத்தையும் யாராலயும் குணப்படுத்த முடியாது, கொஞ்ச நாளைக்கு மறக்கடிக்க மட்டும் தான் முடியும் நம்மளே நம்மள ஹீல் பண்ணிக்கிட்டா தான் உண்டு என கடற்கரையை நோக்கியப் படியே கண்கள் கலங்கினான் சிவா.  

 

அதையே தான் நானும் உனக்கு சொல்றேன் சிவா, உன்னை நீயே தான் ஹீல் பண்ணனும் என்றான் அருண் உடனே அவனை கட்டி அணைத்து கதறி அழுதான் சிவா, நான் ஏண்டா இப்படி இருக்கேன்.  என்னால ஏண்டா இதை எல்லாம் உன்னை மாதிரி யோசிக்க முடியல என்றான் சிவா.  

 

என்னை பாருடா என சிவாவின் நாடியைப் பிடித்து உயர்த்திய அருண், சுதனோட மறைவின் போது நீ தாண்டா எனக்கு தைரியம் கொடுத்த, நான் என்னோட உயிரையே விட ரெடியா இருந்தேன்இன்னைக்கு உனக்கு முன்னால நான் நிக்கிறதுக்கு காரணமே நீ தானடா என சொன்ன அருண்.  ஒரு நண்பனா அன்னைக்கு நீ உன்னோட கடமையை செஞ்ச இன்னைக்கு நான் என்ற அருணிடம் ரொம்ப தேங்க்ஸ் டா என்றான் சிவா.

 

குலுங்கி குலுங்கி அழுவது போல ராம் சத்தமிட, அருணும் சிவாவும் ராமை பார்த்தனர்இப்படி ஒரு நண்பன் எனக்கு இல்லாம போச்சு என்றான் ராம், டேய் ரொம்ப நடிக்காதடா என்றான் அருண்.  டேய் நான் ஏன்டா நடிக்கணும் என சொல்லிக் கொண்டே வந்து அருணையும் சிவாவையும் கட்டி அணைத்தான் ராம்.  

 

அன்றிரவு மூன்று பெரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க நாளைக்கு நைட் எனக்கு டிக்கெட் போடுறயா அருண், ஐ அம் பீலிங் பெட்டர் என்றான் சிவா.  அதெல்லாம் எனக்கு தெரியாது நாளை கழிச்சு போ உன்னை பாக்க ஒரு ஸ்பெஷல் ஆள் வராங்க, அவங்கள பாத்துட்டு தான் போகணும் என அருண் சொல்ல சரிடா என சிவா சொன்னான்.    

 

சிவா இல்லாத குறை கொஞ்சம் கொஞ்சமாக ரகுவுக்கு தெரிய தொடங்கியது, ரகுவின் மனதில் சிவா காதலனாகி விடக்கூடாது என்பதில் சுடலை மிகவும் கவனமாக இருந்தான். சின்ன வயதில் சிவாவுக்கு நடந்த அபியுஸ்களை எல்லாம் அவனுக்கு எதிராகவே ரகுவின் மனதில் பதிய வைத்தான் சுடலை

 

சுடலையின் பேச்சை நம்ப வேண்டுமா என்கிற எண்ணம் இருந்தாலும், சிவா ரகுவினுள் ஏற்படுத்திய தாக்கம் அவனை ஆங்காங்கே தடுமாறு செய்தது.   கடைசியா சிவா என் கூடவே படுத்து இருக்காண்டா என்ற சுடலையின் அம்பு குறிவைத்த இடத்தை தாக்கி விட்டது என்றே சொல்லலாம்.  

 

அருண் சொன்ன அந்த நபர் யார் என்று தெரிந்து கொள்ள சிவா எவ்வளவோ முயற்சி செய்தான்ராமிடம் கேட்கும்போது அவனும் எனக்கு ஒரு முத்தம் கொடு நான் சொல்றேன் என்று சொல்ல.  போடா என தன்னுடைய ரூமுக்கு வந்து விட்டான் சிவா, இறுதியாக அந்த நபர் வரக்கூடிய நேரம் வந்தது அருண் கதவை திறக்க அப்போது உள்ளே வந்த ஆளை பார்த்து சிவா அதிர்ச்சியில் வாயை பிளந்தபடி நின்றான்.  

 

                           –வருவான்….. 

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன