சிவாவின் முன்னால் நின்றது ஆறு வருடங்களுக்கு முன்னால் என்ன ஏதென்றே தெரியாமல் காணாமல் போன பேச்சிமுத்து சார்.  அவரைப் பார்த்ததும் ஓடி சென்று கட்டிப்பிடித்துக் கொண்டான் சிவா, தன்னுடைய சின்ன வயதில் அவரிடம் தான் டியூஷன் படித்துக் கொண்டிருந்தான் சிவா.  தன்னுடைய 10வது பாதியில் தான் பேச்சிமுத்து சார் காணாமல் போனார் 

 

அவரது நண்பன் மூலமாக அவரைப் பற்றி தெரிந்து கொள்ள நிறையவே சிவா முயற்சி செய்தான்.  ஆனால் சிவாவின் எல்லாம் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.  சிவாவுக்கு முதன் முதலாக பிடித்த ஆண் பேச்சிமுத்து சார் தான் அவரை அவ்வளவு ரசித்து இருக்கிறான்.  ஆனால் தன்னுடைய உணர்வுகளை அவரிடம் சொல்லியதில்லை, அவர் தான் சிவாவை அவனுடைய சித்தப்பாவின் அபியுசிலிருந்து வெளியே கொண்டு வந்தது.  

 

அவர் தான் சிவா உன்னுடைய உணர்வுகள் தவறானது இல்லை என்று புரிய வைத்தது, சிவாவுக்கு மிகவும் பிடித்த மனிதர் பேச்சிமுத்து. சிவாவின் கண்களின் கலக்கம் பேச்சிமுத்துவையும் கலங்க வைத்தது என்றே சொல்லலாம்.  அவர் ஒரு சில நிமிடங்கள் கலக்கம் கொண்டார், சிவாவை விட்டு பிரிந்த பேச்சிமுத்து அருணையும் கட்டி அணைத்துவிட்டு அருணின் அறைக்குள் சென்றனர் மூன்று பேரும்.   

 

சிவா எப்படி இருக்கீங்க சார் என்று கேட்க,  இருக்கேன் டா என பேச்சிமுத்து சொன்னதும் என்ன சார் என் மேல எதுவும் கோவமா என சிவா கேட்டான்.   எனக்கு உன் மேல எந்த கோபமும் கிடையாது சிவா, ஆனா நீ உன்னோட எதிர்காலத்தை ஒரு தகுதி இல்லாதவன் கையில கொடுத்து வச்சிருக்கறது தான் எனக்கு கோபம் என்றார் பேச்சிமுத்து.   

 

எனக்கு புரியுது சார் அவன் மேல உள்ள உங்களோட கோபம், ஆனால் அவ்வளவு கெட்டவன் இல்ல சார் என்றான் சிவா.  உடனே நான் எப்ப சொன்னேன் சிவா அவன் கெட்டவன்னு, தகுதி இல்லைன்னு மட்டும் தான் சொன்னேன்.   காதல் என்பது ஒருத்தர் ஒருத்தரோட உடல் அளவுல மட்டும் இருக்கிறது இல்ல சிவா, நமக்கு தேவையான இடங்கள்ள நம்ம கூடவும் நமக்காகவும் இருக்கணும், நீ சொல்ற ரகுவை பத்தி நான் சொல்லவா நான் சொன்னா உன்னால் அதை ஏத்துக்க முடியுமான்னு தெரியல.  

 

உங்க மாமா பையன் ரகுவும் உன்னோட அக்கா புருசன் சுடலையும் சேர்ந்து நம்ம ஊர்ல உள்ள பெண் தன்மை உள்ள எத்தனை பையனுடைய வாழ்க்கையை கெடுத்து இருக்காங்கன்னு தெரியுமா?உன் கூட படிச்சான்ல ஜோசப் இன்னைக்கு அவன் என்ன பண்றான், திருநங்கையா மாற ஊர விட்டுப் போனவன் இன்னைக்கு பாலியல் தொழில் மற்றும் தர்மம் வாங்கிட்டு தன்னுடைய வாழ்க்கையை கடத்துறான்.   நான் அவன்கிட்ட ஒன்னே ஒன்னு தான் சொன்னேன் என்ன ஆனாலும் காலேஜ் முடிகிறவரை பல்ல கடிச்சுட்டு இருந்துருடான்னு.  

 

ஒரு நாள் நைட்டு என்னோட ரூம் ஜன்னலில் யாரோ தட்டுற சவுண்ட் கேட்டு நான் எழுந்து பார்த்தேன்.   அழுதுகிட்டே ஜோசப் அங்க நின்னுட்டு இருந்தான், உடனே நான் வெளியே போய் பார்த்தேன் ஒட்டு துணி இல்லாமல் நின்னுட்டு இருந்தான் ஜோசப்.  என்னடா என்ன ஆச்சுன்னு நான் கேட்டதுக்கு சுடலையும் இன்னொருத்தரும் சேர்ந்து தன்னை கிண்டல் பண்ணி, அடிச்சு டிரஸ் எல்லாம் கழட்டிட்டு போயிட்டாங்கன்னு சொன்னான். 

 

நைட் 10 மணிக்கு நீ ஏன் போனேன்னு நான் கேட்டேன், உடலுறவுக்கு சுடலை கூப்பிட்டதாகவும் அவன் போனதாகவும் சொன்னான்.  சரிடா இத பத்தி யார்கிட்டயும் சொல்லாத நான் சுடலை கிட்ட கேட்டுக்குறேன் என்று சொன்னேன்.  நான் அவனை சமாதானப்படுத்தி டிரஸ் கொடுத்து அனுப்பி வச்சேன், அதுக்கு அடுத்த நாளே ஜோசப் ஊரை விட்டு ஓடிட்டான்.  இதெல்லாம் நடந்த கொஞ்ச நாளுக்கு பிறகு தான் ரகு என் கூட பழக ஆரம்பிச்சான், என்னை காதலிக்கிறதா சொன்னான், நானும் நம்பி தான் அவன் கூட பழகுனேன்.  

 

அவன் காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கும் போது என் கூட பேசறது எல்லாம் நிறுத்த ஆரம்பிச்சான், என்னன்னு கேட்டப்போ என்ன என்னமோ சொன்னான்.  அவனை நல்லா திட்டிட்டு நான் வந்துட்டேன், என்கிட்ட அவனும் நானும் எடுத்த போட்டோஸ் வீடியோஸ் எல்லாம் இருந்துச்சு அத நான் யாருக்கும் காட்டிடுவேன்னு நினைச்சானோ என்னமோ அவனோட அப்பா கிட்ட சொல்லி என்னை மிரட்டினான்.  

 

நான் அவர்கிட்ட உங்க பையன் தான் என்ன லவ் பண்றதா சொன்னா நான் ஃபர்ஸ்ட் சொல்லல என்று சொன்னேன்.   ஆனால் அவர் அதை நம்பல ரகுவை என் முன்னால கூப்பிட்டு கேட்டார் அவன் நான் அவனை அபியூஸ் பண்ண பார்த்ததாகவும் என்னை லவ் பண்ணலன்னும் சொன்னான் என்ற பேச்சிமுத்துவை இடைமறித்த சிவா. அதுக்காகவா நீங்க ஊரை விட்டு வந்தீங்க என்று கேட்டான்.   

 

இல்ல நான் ஊரை விட்டு வந்ததுக்கு அது மட்டும் காரணம் இல்லை, அது நடந்த அடுத்த நாள் ரகுவோட அப்பா என்னை தனியா பாக்கணும்னு வர சொன்னாரு நானும் போனேன்.  என்கிட்ட அவர் ஒரு வீடியோ காமிச்சாரு. அதுல நான் ஜோசப்புக்கு டிரஸ் கொடுக்கிறது இருந்துச்சு ஜோசப் அந்த வீடியோல அழுதுட்டு இருந்தான்.   அதுக்கு அப்புறம் இன்னொரு வீடியோ என பேச்சிமுத்து சொல்ல வர அவருடைய கையை பிடித்த அருண் வேண்டாம் என்று போல தலையாட்டினான்,  ஏன்டா அவரை தடுக்கிற என சிவா கேட்டான்.   

 

டேய் நீ தெரிஞ்சுக்க வேண்டியது வரை தெரிஞ்சுக்கிட்டா போதும் என அருண் சொல்ல, இங்க பாரு எனக்கு எல்லாமே தெரிஞ்சுக்கணும் என்ற சிவா, சார் என்கிட்ட எதையும் மறைக்காம சொல்லுங்க என்றான் சிவா.  இன்னொரு வீடியோவுல நீ என்னை கிஸ் பண்றது இருந்துச்சு அத காட்டி என்னை போக்ஸோ ல உள்ள தள்ளிருவேன்னு ரகுவோட அப்பா சொன்னாரு நானும் பயந்து போய் நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று சொல்லி தான் ஓடி வந்துட்டேன்.  

 

என்னோட மிகப் பெரிய பயம் என்னோட அப்பாவோட பேரு கெட்டுப் போகக்கூடாது என்பது தான் என்ற பேச்சுமுத்துவின் குரலில் தோய்ந்திருந்த வலி சிவாவை அமைதியாக்கியது.  பத்து நிமிடங்களுக்கு மேல் அந்த அறையில் அமைதி நிலவியது அந்த அமைதியை கலைத்து சிவா பேச தொடங்கினான்.  

 

நான் உங்களுக்கு முத்தம் கொடுத்தது நம்ம ஊரு முருகன் கோவில்ல வச்சு, அதுக்கப்புறம் நம்ம நடந்து போனப்போ சுடலையும் ஜோசப்பும் தான் அங்க இருந்து நடந்து போனாங்க.  அப்போ இதுவும் சுடலையோட வேலையா தான் இருக்கும் என்ற சிவா ஜோசப் உடைய வீடியோ அவன் தான் ரகுவோட அப்பாகிட்ட கொடுத்திருப்பான் என்றான்.  

 

உங்க அப்பாவோட நிம்மதிக்காக நீங்க ஊருக்கு வரத்தான் செய்யணும் சார் அவரோட உயிர் உங்கள பாக்கணும்னு தான் இப்ப வரைக்கும் அவரு உடம்புல ஓட்டிட்டு இருக்கு என்றான் சிவா.  உடனே நான் வந்தா ஏதாவது பிரச்சனை வராதா? என கேட்டார் பேச்சிமுத்து.   எனக்கு 20 வயசு ஆச்சு ஜோசப் ஊருலேயே இல்லை என்னோட வீடியோ வச்சு உங்களை யாராலும் எதுவும் பண்ண முடியாது என்றான் சிவா.  

 

சரிடா நான் வரேன் என பேச்சிமுத்து சொன்னார், ரொம்ப சந்தோஷம் நான் போய் காபி போட்டு கொண்டு வரேன் என அருண் செல்ல, அந்த அறையின் ஜன்னல் அருகில் சென்று நின்றான் சிவா.  மெதுவாக அவன் அருகில் சென்ற பேச்சிமுத்து சிவாவின் தோளைத் தொட, சிவா மெதுவாக திரும்பினான்.   அன்னைக்கு அந்த கோவிலில் வைத்து நீ எனக்கு கொடுத்த முத்தத்துக்கு என்ன அர்த்தம் என கேட்டார் பேச்சிமுத்து.  

 

இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று கலக்க எண்ணியது, சிவா நான் பார்த்த முதல் முழுமையான ஆண்மை நிறைந்தவர் நீங்க தான் சார் என்னோட மனசுல உங்க இடத்தை இதுவரைக்கும் யாருமே பிடிச்சதில்ல என்று சொன்னான்.  மெதுவாக சிவாவின் நாடியை தன்னுடைய கையால் உயர்த்திய பேச்சிமுத்து சிவாவினுடைய இதழ் நோக்கி தன்னுடைய இதழை கொண்டு செல்ல, ஆனால் நான் இப்ப ரகுவை லவ் பண்றேன் சார் என்றான் சிவா.

 

அப்படியே பின்வாங்கினார் பேச்சிமுத்து என்னடா சொல்ற என்பது போல பேச்சிமுத்து சிவாவை பார்க்க, உங்களோடு பார்வை எனக்கு புரியுது சார்.  அவன் எப்படியா இருந்தாலும் எனக்கு சில கேள்விகள் அவன் கிட்ட இருக்கு அதை அவன் கிட்ட கேக்கணும் அதுக்கு அவன் சொல்லுற பதிலை பொறுத்து தான் அவனை விட்டு விலகுவதும் அவன் கூட இருக்கிறதும் என்றான் சிவா.  எனக்கு புரியுதுடா சாரி நான் நடந்துகிட்ட விதம் சரியில்ல என்றார் பேச்சிமுத்து, ஓகே சார் நான் உங்கள தப்பா நினைக்கல என்றான் சிவா.  

 

அந்த அறையை விட்டு வெளியேறி அருணுடன் கிச்சனுக்குள் சென்றான் சிவா.  அன்று மாலை அருண், பேச்சிமுத்து, ராம் 3 பேரும் சிவாவை பஸ் ஏற்றி விட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி பயணமாகினர்.   சிவாவின் அருகில் அமர்ந்திருந்த அருண் என்னடா தெளிவாகிட்டயா இல்லையா என கேட்டான்.  

 

ஆமாடா எனக்கு ஒரு சில கேள்விகள் ரகு கிட்ட இருக்கு, அதை கேட்டு நான் தெளிவான முடிவை உனக்கு சொல்றேன், என்ற சிவாவை பார்த்து சிவா ஐ லவ் யூ டா என்றான் அருண்.  ஐ லவ் யூ டூ டா என்றான் சிவா, என்னடா ப்ரொமான்ஸா என கேட்டான்  பின்னால் அமர்ந்திருந்த ராம்.  மூடிட்டு உட்காருடா என்றான் அருண், தன் தோள் மீது சாய்ந்த சிவாவின் தலையை கோதிக்கொண்டே வந்தான்.   

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நான்கு பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது சிவாவிடம் என்ன முடிவுனாலும் நல்லா யோசிச்சு எடுடா என்றார் பேச்சிமுத்து.  ஓகே சார் என சிவா தலையசைக்க ப்ரோ உங்களுக்கு எப்போ மூட் அவுட் ஆனாலும் என்னோட போனுக்கு நீங்க தாராளமா கால் பண்ணலாம் என்றான் ராம்.

 

உங்ககிட்ட என்னோட நம்பர் இருக்காதுன்னு நினைக்கிறேன் உங்க போன் குடுங்களேன் நான் ஒரு மிஸ்டு கால் கொடுத்துக்கிறேன் என்றான் ராம்.  சிவாவின் கையில் இருந்த போனை வாங்க ராம் கை நீட்ட, டேய் சிவா இவனுக்கு நம்பர் கொடுத்த எப்ப பார்த்தாலும் போன் பண்ணி பிளர்ட் என்கிற பேர்ல போன் பண்ணி பிளேடு போடுவான் என்றான் அருண்.  

 

எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு அருண், அவரை நான் பார்க்கிற விதமே வேற என சிவா சொல்ல என்ன விதம்னு தெரிஞ்சுக்கலாமா என கேட்டான் ராம்.  லைக் என்னுடைய அண்ணன் மாதிரி நீங்க என்று சொல்லிக் கொண்டே சிவா ராமிடம் ஃபோனை நீட்ட நோ தேங்க்ஸ் ப்ரோ என ராம் அங்கிருந்த கடைகளை நோக்கி நடக்க தொடங்கினான் மற்ற மூன்று பேரும் சிரித்தனர்.    

 

ராம் சென்ற பின் மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்க ஹாய் பேபி என்றபடி பேச்சிமுத்துவை பின்னால் இருந்து கட்டிப்பிடித்தான் ஒரு வாலிபன்.  சிவா அது யாராக இருக்கும் என புரியாமல் பேச்சிமுத்துவை பார்த்தான், தயக்கம் நிறைந்த முகத்தோடு சிவா இது என்னோட என பேச்சிமுத்து சொல்ல தயங்குவதை பார்த்து அந்த வாலிபன் ஹாய் ப்ரோ நான் அகஸ்டின் பேச்சிமுத்தோட லவ்வர் என்றான்.  

 

சிவா சற்று அதிர்ச்சியோடு பேச்சிமுத்தை பார்க்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார் பேச்சிமுத்து.  ஹாய் ப்ரோ என்ற சிவா எத்தனை வருஷம் லவ் பண்றீங்க ப்ரோ எனக் கேட்க, நான்கு வருஷம் கம்ப்ளீட் ஆயிடுச்சு ஊரப்பாக்கம் ல தான் எங்க வீடு இருக்கு வாங்களேன் என அகஸ்டின் சொல்ல.  இட்ஸ் ஓகே ப்ரோ எனக்கு ஊருக்கு நேரமாச்சு அடுத்த தடவ வரும்போது கண்டிப்பா வரேன் என்று சொல்லிக்கொண்டே பேச்சிமுத்துவை சிவா பார்த்த பார்வை அவரை அங்கிருந்து கிளம்ப சொல்லியது.  

 

ஓகே சிவா ஓகே அருண் நாங்க கிளம்புறோம் என்ற பேச்சிமுத்து அகஸ்டினை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். சிறிது தூரம் சென்ற பின் அகஸ்டினிடம் அந்த பையன் யாருன்னு தெரியுமா என பேச்சிமுத்து கேட்க எனக்கு எப்படி தெரியும் என்றான் அகஸ்டின் நான் வாழ்க்கையில ஒரு தடவையாவது அடையனும்னு நினைக்கிறேன்னு ஒருத்தனை சொல்லவேன் இல்ல அவன் தான் அது என்றார் பேச்சிமுத்து.   அப்படியா அவன் தூத்துக்குடியில இருக்கான்னு சொன்னியா, அதான் நானும் அவனை பத்தி யோசிக்காமயே நம்மள பத்தி சொல்லிட்டேன் என்றான் அகஸ்டின்.  

 

உடனே அது ஒன்னும் பிரச்சனை இல்ல என்ன நீ இங்க வந்து இருக்க என பேச்சிமுத்து கேட்க, ஆமா இன்னைக்கு மண்டே இல்ல நாளைக்கு என்னோட வீக்லி ஆப் என்றான் அகஸ்டின்.  அதுக்கு ஏன் நீ பஸ் ஸ்டாண்ட் வந்த என பேச்சிமுத்து கேட்க, என்னடா கனவு கண்ணனை பார்த்ததும் நம்மளோட வழக்கத்தை மறந்துட்டியா என்றபடி நின்றான் அகஸ்டின்.  ஐயோ ஆமால இன்னைக்கு மண்டே என்றபடி சரி வா போகலாம் என அகஸ்டினை அழைத்துக் கொண்டு நடந்தான் பேச்சிமுத்து.   

 

என்னடா பேச்சிமுத்து ஆளை பார்த்ததுமே ஒரு மாதிரி இருக்க, என அருண் கேட்க.  உனக்கு ஏற்கனவே தெரியுமா எனக் கேட்டான் சிவா, ஆமாடா ரெண்டு தடவை பார்த்து இருக்கேன் என்று அருண் சொல்ல.   இன்னைக்கு வீட்ல வச்சு பேச்சிமுத்து சார் என்ன கிஸ் பண்ண வந்தாருடா நான் ரகுவை லவ் பண்றேன், அந்த ரிலேஷன்ஷிப்ல இருந்து வெளியே வரல அதனால எந்த தப்பு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன்.   ஆனா என சிவா ஏதோ யோசிக்க,  என்னடா ஆள் இருக்கும்போது அவர் ஏன் இப்படி பண்ணினார் என்று கேட்கிறாயா என அருண் கேட்க ஆமாம் என தலையாட்டினான் சிவா.  

 

எனக்கு அவங்களை எப்படி தெரியும்னு நினைக்கிற, அகஸ்டின் தான் எனக்கு முதல்ல அறிமுகமானான்.  ஜி ஆர் ல அவனை பார்த்தேன் என்னை அவனுடைய வீட்டுக்கு கூப்பிட்டான், நானும் என்னோட லவ்வரும் ஓபன் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம் உனக்கு பிடிச்சிருந்தா அவர் கூட பண்ணலாம்னு சொல்லி தான் கூட்டிட்டு போனான்.

 

நான் முதல்ல போக வேணாம்னு நினைச்சாலும் கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு போகணும்னு தோணுச்சு போனேன் என அருண் சொன்னதும், ஒருத்தங்களோட ரிலேஷன்ஷிப்பில் இருந்துட்டு இன்னொருத்தன் கூட பண்றது நியாயப்படுத்த பார்க்குறயா அருண் எனக்கேட்டான் சிவா.  

 

இல்லடா நான் யாருக்கு எந்த கமிட்மெண்டும் கொடுக்கலைன்னு மட்டும் தான் சொல்றேன் என்றான் அருண்.  சிவாவின் பஸ் வந்ததும் சிவாவை ஏற்றிவிட்டு கிளம்பாக்கத்தில் இருந்து ராமுடன் கிளம்பினான் அருண். பஸ்ல ஏறிய சிவாவின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் நகரங்களில் ரிலேஷன்ஷிப்பின் மதிப்பு இவ்வளவு தானா எனக்கான ஒருவர் இன்னொருவருடன் படுப்பதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.   அதுவும் என் முன்னால் என்றால் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று நினைத்தபடி தன்னுடைய பயணத்தை தொடர்ந்தான் சிவா.  

 

டேய் ரெடியாகிட்டாயா? என பேச்சிமுத்து கேட்க, அவங்க வந்தா அவங்களை உட்கார வை டென் மினிட்ஸ்ல குளிச்சிட்டு வர என்றான் அகஸ்டின்.  வீட்டின் காலிங் பெல் அடித்தது கதவை திறந்தார் பேச்சிமுத்து, ஹாய் என்று எதிரில் நின்றவர்கள் சொல்ல சிரிப்போடு அவர்களை வரவேற்றார் பேச்சிமுத்து 

 

                                                                      -வருவான்….

Comments

  • Avatar

    Porn Pics

    03/02/2026 at 12:37 மணி

    Wishing you a happy day, every day!

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன