அம்மா என்றபடி சிவா தன்னை நோக்கி வருவது சிவாவின் அம்மாவுக்கு தெரியும் முன் அவர் மயங்கி விழுந்தார்விழுந்த தன் அம்மாவை தூக்கி தன்னுடைய மடியில் வைத்து கன்னத்தை தட்டியபடி அழுது கொண்டிருந்தான் சிவா.  ரகுவோ தான் நின்ற இடத்தை விட்டு நகராமல் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான். 

 

அப்போது தோட்டத்திலிருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ள மண்பாதையில் சென்ற ஆட்டோவை நிறுத்திவிட்டு யாரோ ஒருவர் வருவதைப் பார்த்த சிவா யாரது ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க எனக் கேட்க, ஓடிவந்த அந்த நபர் வேறு யாருமில்லை பேச்சிமுத்து சார்என்ன சிவா ஆச்சு என பதறியபடி அவர் கேட்க, தெரியல சார் திடீரென மயங்கி விழுந்துட்டாங்க என்றான் சிவா. 

 

ஓகே என பேச்சுமுத்துவும் சிவாவும் சிவாவின் அம்மாவை தூக்கி ஆட்டோவில் இருக்க வைத்துவிட்டு சிவா மட்டும் ரகுவின் அருகில் ஓடி வந்தான்.  அதிர்ச்சியில் உறைந்து நின்ற ரகுவை அசைத்தபடி சிவா சொன்னான் என்னடா ஆச்சு ஏன்டா இப்படி நிக்கிற என்று கேட்க.  நான் என்ன பண்ண போறேன் என்ன பண்ண, இப்ப எங்க அப்பா என அங்கும் இங்கும் அலைந்தப்படி ரகு புலம்பினான். 

 

அவனை நிறுத்திய சிவா, என்னடா இப்படி பொலம்புற எனக் கேட்க, உங்க அம்மா பார்த்துட்டாங்க.  கண்டிப்பா எங்க அப்பா கிட்ட சொல்லுவாங்க என் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சு போச்சு என புலம்பியபடி சிவாவை திரும்பி கூட பார்க்காமல் தன்னுடைய பைக்கில் ஏறி பயணமானான் ரகு 

 

இதை ரகுவின் பயம் என்பதா சுயநலம் என்பதா என்கிற குழப்பத்தில் ஆட்டோவின் அருகில் வந்தான் சிவா சிவாவின் அம்மா அப்போது லேசாக கண்ணை திறந்து இருந்தார், வேகமாக அவரை வீட்டிற்கு அழைத்து சென்ற சிவாவும் பேச்சிமுத்துவும் கை தாங்கலாக அவருடைய அறையில் படுக்க வைத்தனர்.

 

அந்த அறையை விட்டு வெளியே வந்த சிவாவைப் பார்த்து, என்னடா சிவா ஆச்சு என பேச்சிமுத்து கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் நான் பாத்துக்கிறேன் என்று சொன்னான் சிவா.  சரிடா நான் ஒன்னு மட்டும் சொல்றேன் உன்னோட அம்மா நிலைமைக்கு ரகு தான் காரணம் என்றால் இனிமேலும் உன்னோட லைஃப்ல அவன் வேணுமானு நீ யோசிச்சுக்கோ என்ற பேச்சிமுத்து சென்றுவிட எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான் சிவா.  தன்னுடைய வீட்டில் வராண்டாவில் உட்கார்ந்து தன்னுடைய அம்மாவை எப்படி எதிர்கொள்வது என்பதை நினைத்து அழுது அழுது கண்ணயர்ந்து போனான் சிவா 

 

சிவா மறுநாள் காலை கண்விழித்தபோது அவனுடைய அம்மா வீட்டில் இல்லை, அன்று முழுவதும் அவர் வீட்டுக்கு வரவும் இல்லை.  மாலை 6 மணி அளவில் சிவாவின் அக்கா அவனுக்கு போன் செய்தாள், சொல்லுக்கா என்ற சிவாவிடம் அம்மாவுக்கு மாத்து துணி மட்டும் கொடுத்துவிடு மாமா வருவாக என்று போனை கட் செய்தாள் தன்னுடைய அம்மா அக்கா வீட்டில் இருப்பது எண்ணி கொஞ்சம் நிம்மதி அடைந்தான் சிவா.  சிறிது நேரம் கழித்து சுடலை அங்கு வந்தான், என்னடா மாப்ள சோகமா இருக்க என்று நக்கலாக சிரித்தான் சுடலை 

 

அவன் கையில் தன்னுடைய அம்மாவின் டிரஸ்ஸை கொடுத்த சிவா எனக்கு தெரியும் நீ தான் இந்த மாதிரி கேடுகெட்ட வேலையெல்லாம் பார்ப்பன்னு என்றான் சிவா.  என்னை பொருத்தவரைக்கும் நீ மனுசனே இல்ல தெரியுமா என்றான் சிவா, அது எனக்கு தெரியாது என்னையவே அசிங்கப்படுத்துறியா நீ உன்னை என்ன எல்லாம் அனுபவிக்க வைக்கிறேனு பாரு என்றான் சுடலைசிவா தன்னை முறைப்பதை பார்த்து உனக்கு ஒரு டீல் நீ ரகுவை இனிமே பாக்க கூடாது அப்படி மீறி பார்த்தா அவனோட அப்பா உன்னோட வீட்டு வாசல்ல வந்து நிப்பாரு என்றான் சுடலை.  

 

நான் ஏண்டா போய் பாக்கணும் அவனே என்னை தேடி வருவான் என்றான் சிவா, உனக்கு அவ்வளவு தைரியமா பாப்போம் டா என்ன நடக்குதுன்னு என்ற சுடலை அங்கிருந்து சென்றான் அன்று இரவு 12 மணி அளவில் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் சிவா. அவன் முன்னால் கண்கள் கலங்கியபடி நின்று கொண்டிருந்தான் ரகு, என்னடா ஆச்சு என சிவா ரகுவிடம் கேட்க நான் எவ்வளவு சுயநலவாதியா இருக்கேன் பாத்தியா உன்னோட அம்மாவுக்கு நம்மள பத்தி தெரிஞ்சுருச்சு.  

 

அவங்க மயங்கி விழுந்துட்டாங்க ஆனாலும் கூட என்னோட புத்தியில என்னோட அப்பாவை பற்றி தான் நினைப்பு இருக்கு என்ற ரகுவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு வந்த சிவா தன்னுடைய அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூடினான்.  அவன் கதவை மூடியது தான் தாமதம் இருவரும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்டனர்.  சிவாவின் உதடு, கண்ணம், காது கழுத்தென தன்னுடைய இதழ் கொண்டு போர் தொடுத்தான் ரகு.  இருவரின் காம உணர்வின் உந்துதலில் அவர்களுக்குள் காமனும் குடியேறினான்.  காமம் களைந்து காதல் விடிந்து ரகுவின் மார்பில் தலையை வைத்து படுத்தபடி சிவா கேட்டான்.  இப்ப என்னடா பண்றது அதை கவனிக்காமல் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தான் ரகு 

 

ரகுவின் மார்பு முடியை இழுத்து அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தான் சிவா. டேய் வலிக்குதுடா என ரகு சொல்ல, அது சரி என்ன பெரிய சிந்தனையா இருக்கு என்று கேட்டான் சிவா.  ஆமாடா அத்தை எப்படி வந்தாங்கன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன் என்ன யோசிச்சாலும் எனக்கு எப்படின்னு மட்டும் தெரியவில்லை என்றான் ரகு.  அது ஏன் உனக்கு என்று கேட்டான் சிவா, டேய் அது யாருன்னு தெரிஞ்சா தான் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க முடியும் என்றான் ரகு 

 

ஓ அதுக்காகவா என சோர்வாக சிவா சொல்வதைக் கேட்ட ரகு, என்னடா இவ்வளவு சோர்வா சொல்ற இனிமேல் தான் உனக்கு பயம் வரணும்.  உங்க அம்மா எப்படியோ தெரியல எங்க அப்ப என்ன கொன்னே போட்டுருவாப்ல என ரகு சொல்ல அதானே பார்த்தேன் என்னடா நம்மள பத்தி ரொம்ப கவலைப்படுறான்னு பார்த்தேன்.  ஆனா இப்ப தானே தெரியுது என சிவா தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தினான்.  

 

சற்று தன்னிலை புரிந்து கொண்ட ரகு டேய் நான் உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லவா, எனக்கு எங்க அப்பா மேல இருக்குறது மரியாதை எல்லாம் கிடையாது அது பயம், நான் முதன் முதலில் ஒரு ஆம்பள கூட தப்பு பண்ணுறதை  தெரிஞ்சுக்கிட்டு, அவர் என்னை அடிச்சப்ப ஆரம்பிச்சது அந்த பயம்அது மாறுவதற்கு முன்னாலேயே என்னோட ஜோசப்புக்கு பழக்கம் இருக்குனு யாரோ சொன்னது, பேச்சிமுத்து சார் விஷயத்துல நடந்தது, ஸ்டீபன் விஷயத்த அவரே நேருல பார்த்ததுன்னு அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள் அவரை நான் எப்படி எதிர் கொள்ள போறேன் என்கிற பயத்தின் உச்சமாகவே மாறிடுச்சுடா என்றான் ரகு.    

 

டேய் எனக்கு உன்னோட நிலைமை நல்லாவே புரியுது என்னை பொறுத்த வரைக்கும் உன்னோட அப்பா விஷயத்துல நீ என்னைக்குமே மாறப் போறது இல்ல.  ஆனா உன்னோட மற்ற சேர்க்கைகளை ஏன் நீ கொறச்சிக்க கூடாது என்று கேட்டான் சிவா.  நீ எதை பத்தி பேசுற என்றான் ரகு, இங்க பாரு ரகு நான் சிவா எனக்கு ஒருத்தவங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்னா நான் கண்டிப்பா தெரிஞ்சுப்பேன் என சிவா சொல்ல, அப்படியா என்ன பத்தி உனக்கு என்னடா தெரியும் என்றான் ரகு. 

 

எனக்கு எல்லாமே தெரியும் என்ற சிவாவின் பக்கமாக திரும்பிய ரகு அவன் கன்னத்தை செல்லமாக கிள்ளியபடி சொல்லு பார்ப்போம் என்றான்.  நீ சிவலட்சுமிய உயிருக்கு உயிரா காதலிச்சதிலிருந்து என்னை காதலிச்சது வரை எனக்கு எல்லாமே தெரியும் என்றான் சிவா.  கிள்ளிய கன்னத்தை விட்டு விட்டு சற்று அதிர்ச்சியோடு என்னடா சொல்ற என்னை பத்தி உனக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் சொல்லுடா என்றான் ரகு.  

 

உன்னோட பத்தாவது படிக்கிறப்போ உன் கூட படிச்ச ஒருத்தனால தான் இந்த மாதிரியான உடலுறவு பழக்கங்கள் உனக்கு தெரிய வந்துச்சு.  அதுக்கப்புறம் உங்க வீட்டுக்கு பால் கறக்க வர மாடசாமி அண்ணன் கூட நீ உடலுறவு வச்சிக்கிட்ட, அதுக்கப்புறம் ஸ்கூல் சீனியர் கௌதம், உன் கூட டியூஷன் படிச்ச பிரவீன், உன்கூட வாலிபால் டீம்ல இருந்த பிரேம், உங்க அம்மாவோட தம்பி பையன் சுரேஷ்.  

 

காலேஜ்ல லேப் அசிஸ்டன்ட் சுந்தரபாண்டி, தூத்துக்குடி டி சில்க்ஸ் வள்ளிநாயகம் இன்னும் சில வெளியூர் கராங்கன்னு நீ உடலுறவு பண்ணி இருக்க.  உனக்கு ஒரே ஆள்  கூட திரும்ப திரும்ப பண்ண பிடிக்காது.  நான் சொன்னவங்க எல்லாரும் கூடவும் நீ இரண்டு அல்லது மூன்று தடவை தான் பண்ணி இருக்க.  பொண்ணுங்கன்னு உன் கூட பழகுனவங்கல்ல இதுவரை ஏழு பேர் உனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க.  அதுல ஒரு பொண்ண மட்டும் நீ கொஞ்ச நாள் டேட் பண்ணி இருக்க.  ஆனா கிட்டத்தட்ட 13 வருஷமா ஒரே ஒருத்தர் கூட மட்டும் பல தடவை உடலுறவு பண்ணிட்டுருக்க அவர் பெயர் சுடலை என்றான் சிவா.  

 

டேய் உனக்கு எப்படி இவ்வளவு தெரியும் என கண்களை விரித்த படி ஆச்சரியத்தில் கேட்டான் ரகு.  நான் எப்பவும் ஹோம் ஒர்க் நிறைய பண்ணுவேன் என்றான் சிவா, அது சரி என ரகு விட்டத்தை பார்த்தபடி படுக்க என்னடா உன்னோட அது சரில ஏதோ நக்கல் இருக்கே என்றான் சிவா.  

 

அதெல்லாம் ஒன்னும் இல்லையே என ரகு சொல்ல, டேய் என்னை பத்தி உன்கிட்ட எப்படியும் யாராவது சொல்லி இருப்பாங்க. அதெல்லாம் நினைச்சு தானே இந்த சிரிப்பு நானே சொல்லுறேன் இங்க பாரு ரகு என்னை அபியூஸ் பண்றாங்கன்னு தெரியறதுக்கு முன்னாடியே நான் உடலுறவுக்கு அடிமையாகிட்டேன். 

 

என்னை பொறுத்த வரைக்கும் நான் எவ்வளவோ அதிலிருந்து வெளியே வர ட்ரை பண்ணி வெளியே வந்தும் இருக்கேன்.  என்னை பத்தின விஷயங்களை நான் கண்டிப்பா உன்கிட்ட சொல்லுவேன் என்றான் சிவா.  அதெல்லாம் இப்ப எதுக்கு என்றான் ரகு, இல்ல ரகு என்னை எங்க அம்மா கிட்ட மாட்டி விட்டவங்களுக்கு உன்னையும் என்னையும் பத்தி தெரிஞ்சுருக்கணும் அதே மாதிரி நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தர பிடிக்காமயும் இருக்கணும் என்றான் சிவா.

 

உடனே ரகு அப்போ அது அருணா தான் இருக்கும் என சொல்ல, இல்லடா அவனுக்கு உன்னை பிடிக்கும் என்ற சிவா நான் சொல்லட்டுமா அது சுடலையா தான் இருக்கும் என்றான் சிவா.  டேய் அவன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான் என ரகு சொல்ல, நான் சொல்ற மாதிரி அவன் கிட்ட சொல்லு அவனே உண்மையை ஒத்துப்பான் என ரகுவின் காதில் சிவா ஏதோ சொல்ல இது சரியா வருமா என்று ரகு கேட்க கண்டிப்பா சரியா வரும் என சிவா தலையாட்ட ஓகே நான் பண்றேன் என அங்க இருந்து சென்றான் ரகு.  

 

அடுத்த நாள் முதல் சிவாவின் பைனல் இயர் எக்ஸாம்ஸ் ஆரம்பமானது கிட்டத்தட்ட 13 நாட்கள் அந்த தேர்வுகள் நடந்தது.  அதுவரை சிவாவின் அம்மா அவனுடைய வீட்டிற்கு வரவே இல்லை, அவன் இல்லாத போது அவருடைய துணிமணிகளை சிவாவின் அக்கா வந்து எடுத்துச் சென்றிருக்கிறார்.  சிவாவின் மனது முழுவதும் காதலின் உள்ளார்ந்த வலியும் வேதனையும் தெரிந்த தன்னுடைய அம்மா நிச்சயம் தன்னிடம் வருவார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான்.  

 

அது ஒரு மாலை நேரம் சுடலை ரகுவை மது அருந்த அழைத்து இருந்தான், ரகு போகலாமா வேண்டாமா என்கிற பலவித சிந்தனைகளுக்கு பின் செல்ல முற்பட்டான்.  அதே மாலை நேரம் சிவலட்சுமி அழைத்ததால் சிவா அவளை பார்க்க தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு சென்றிருந்தான்.  அங்கே சிவனை வழிபட்ட பின் அவன் எப்போதும் அமரும் கலைமண்டபம் சென்று சற்று அமைதியாக அமர்ந்திருந்தான் சிவா, அவனுடைய எண்ணம் முழுவதும் அவனுடைய அம்மா மட்டுமே நிறைந்திருந்தார்.  ஏன் அம்மா எப்பொழுதும் தன்னை நிராகரிக்கிறார் என புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான்.  

 

அப்போது ஹாய் டா என அவனுடைய முதுகை தட்டியபடி சிவாவுடைய இரண்டு பக்கமும் சிவலட்சுமியும் மாரிமுத்துவும் அமர்ந்தனர். என்னக்கா முகம் ரொம்பவே பளிச்சுன்னு இருக்கு என்ன விசேஷம் எனக்கேட்டான் சிவா அதெல்லாம் இருக்கட்டும் உனக்கு என்ன பிரச்சனை என கேட்டாள் சிவலட்சுமி, அதெல்லாம் ஒன்னும் இல்ல பைனல் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சது. அதான் ரிசல்ட் நல்லா வரணும்னு நினைச்சிட்டு இருந்தேன் வேற ஒன்னும் இல்லக்கா என்றான் சிவா 

 

நீ சொல்றது உண்மை மாதிரி எனக்கு தெரியல என சிவலட்சுமி சொல்ல அதெல்லாம் இருக்கட்டும் நீ சொல்லு என்ன மேட்டர் என்றான் சிவா.  அது வந்து நெக்ஸ்ட் வீக் சனிக்கிழமை நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போறோம் எனக்கு சாட்சி கையெழுத்துப் போட ரகு வரேன்னு சொல்லிட்டான்.  இவரோட சார்பா கையெழுத்து போட நீ வரணும் என்றாள் சிவலட்சுமி, எனக்கு உங்க கல்யாணத்துல எந்த பிரச்சனையும் இல்ல ஆனா ரொம்ப சீக்கிரமே இந்த முடிவை நீங்கள் எடுத்த மாதிரி இருக்கு என்றான் சிவா.  இல்லடா இதுவே லேட் எங்களுக்கு இன்னும் நிறைய டைம் இல்ல என்றபடி தன்னுடைய வயிற்றை தடவினாள் சிவலட்சுமி 

 

அதைப் பார்த்த சிவா மகிழ்ச்சியில் அவளை கட்டி அணைத்தான், அவளும் ஓகே ஓகே என அவனை சமாளிக்க, இது ரகுவுக்கு தெரியுமா என கேட்டான் சிவா ஆமா அவனுக்கு தெரியும் என சிவலட்சுமி சொன்னாள், உன்னோட வாழ்க்கையோட அடுத்த கட்டத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா என சிவா சிவாலட்சுமியை கட்டி அணைத்தான் 

 

ஓரிரு ரவுண்டுகளுக்கு பின் ரகு மெதுவாக சிவா சொன்னதை செய்ய தொடங்கினான், நல்ல வேலைடா சிவாவோட அம்மா எங்களை பார்த்துட்டாங்க நான் கூட அவனை எப்படி கட் பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் என ரகு சொல்ல.  எனக்கு அது நல்லாவே தெரியும் அதனால தான் நான் அப்படி பண்ணேன் என்று சுடலை சொல்ல, நீ பண்ணியா என்னடா சொல்ற எனக் கேட்டான் ரகு.  

 

ஆமாடா உங்க பையன பூச்சி கடிச்சிருச்சாம் அத்தைன்னு சொன்னேன், அவங்களும் ஓடோடி உங்க தோட்டத்துக்கு வந்தாங்க, ஆனா நீங்க ரெண்டு பேரும் கிஸ் அடிச்சிட்டு இருந்தது என்னோட பிளான் இல்ல அது நீங்களே பண்ணுது என சிரித்தான் சுடலை.

 

அப்ப பேச்சிமுத்து சார் மற்றும் ஸ்டீபன் விஷயத்தையும் என் அப்பா கிட்ட நீதான் சொன்னயா என ரகு கேட்க, இல்லடா பேச்சிமுத்து சார் மட்டும் ஜோசப் விஷயம் தான் நான் சொன்னது, ஸ்டீபன் விஷயம் எனக்கு தெரியாது உங்க அப்பா என்னை கூப்பிட்டு கேட்டப்போ நானும் தெரியாதுன்னு தான் சொன்னேன் 

 

சிவா தன்னுடைய வீட்டின் கதவு திறந்து இருந்ததை பார்த்து அம்மா என்று அழைத்தபடி அவன் உள்ளே வர, இங்க பாரு சிவா எனக்கு உன்கூட பேச ஒன்னுமே இல்லை என்றார் சிவாவின் அம்மா.  உடனே சிவா, அம்மா நான் பண்றது தப்புன்னு நீங்க நினைக்கிறது நான் வேண்டாம்னு சொல்லல ஆனா என்னோட தரப்பு வாதத்தை ஒரு தடவை கேட்க கூட முடியாதுன்னு சொல்றது எந்த வகையில் நியாயம் மா என்றான் சிவா.  

 

ஓஹோ ஏற்கனவே நியாயம் பத்தின பேச்சுவார்த்தை தான் போகுதுன்னா நான் இங்க இருக்க வேண்டியது அவசியமானது தான் போல என ரகுவின் அப்பா குரல் கேட்டு சிவாவும் சிவாவின் அம்மாவும் தங்கள் வீட்டு வாசலை நோக்கி பார்த்தனர் 

 

                           –வருவான்…..

 

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன