அவன் அப்படித்தான் – 02

 

தன்னுடைய அறையின் கண்ணாடியின் முன் நின்றபடி தனக்குத்தானே வசைபாடிக் கொண்டிருந்தான் சிவா. டேய் உனக்கு அறிவு இருக்கா, ஆகஸ்ட் வந்தா 20 வயசு, ஆனா அவன் முன்னால நிக்க கூட முடியல உன்னால, ஏண்டா இப்படி மானத்தை வாங்குற அவன் என்ன நினைச்சுருப்பான்.   உன்னையெல்லாம் ஆம்பளைன்னு சொல்லிக்காத, எல்லாம் அந்த சிவலட்சுமி அக்காவால வந்தது.   நாளைக்கு கோயில் கொடையில இருக்கு அவளுக்கு, என்றபடி கண்ணயர்ந்து போனான் சிவா.

 

ஏல சிவா.. சிவா.. என அம்மாவின் குரல் கேட்டு எழுந்தவன் என்னம்மா இன்னைக்கு தான் கோவில் கொடைக்காக காலேஜ் லீவு போட்டு இருக்கேன்ல அப்புறம் என்னம்மா என தூக்கக் கலக்கத்தில் சிவா கேட்க, இன்னைக்கு நம்ம வீட்ல இருந்து நியமனம் செலுத்தனும், அம்மனுக்கு கண்மலர் எடுத்து  வைத்து இருக்கிறேன் என்றார்.

 

ஏம்மா அதுக்கு நான் என்ன பண்ணனும் என சிவா கேட்க ஏல அப்பா இறந்துட்டாவ நான் கைமண்ஜாதி நானா கண்மலரை தூக்கிட்டு ஊர் சுத்த முடியும் உங்க அக்காவும் அத்தானும் கிளம்பிட்டோம்னு போன் பண்ணாவ சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகு 10 மணிக்கு கோவிலில் இருந்து வருவாங்க என மற்ற வேலைகளில் மூழ்கிப் போனார் சிவாவின் அம்மா.

 

பாத்ரூம் சென்ற சிவா பல்லை தேய்த்துக் கொண்டே கண்ணாடியை பார்த்தான்.  அது நேற்று இரவு “அவன்” நினைவுகளால் நித்திரை இல்லாது போன தடயங்கள் கண்டு சற்று வெட்கம் கொண்டான்.  குளித்து முடித்து வெளியே வந்த சிவாவிடம் புதிய துணிகளை கொடுத்தார் அவனுடைய அம்மா, அதை வாங்கிப் பார்த்தவன் இது என்னமா வேஷ்டி துண்டு மட்டும் இருக்கு என கேட்க டேய் கோவிலுக்கு நியமனம் செலுத்த சட்டை எல்லாம் போடக்கூடாது சாமி அது மட்டும் இல்லாம அம்மா கஷ்டம் உனக்கு தெரியாது என்று சொன்னார்.

 

அப்போது வாசலில் இருந்து அம்மா அம்மா என்று அழைத்தபடி சிவாவின் அக்கா உள்ளே வர அவள் பின்னாலேயே அவளுடைய கணவரும் 8 மாத குழந்தையை தூக்கிய படி வந்தார்.  வாமா வாங்க மருமவனே என அவர்களை சிவாவின் அம்மா வரவேற்றார்.   அவர்கள் வீட்டின் ஹாலில் அமர்ந்திருக்க சிவாவின் அறையின் உள்ளே சென்ற சிவாவின் அம்மா ஏல வந்தவுகளை வாங்கன்னு கேட்டுட்டு வா என சொல்ல, வேண்டா வெறுப்பாக வெளியே போனவன் வா அக்கா வாங்க மாமா என்று அழைத்தபடி திரும்பவும் தன் அறைக்குள் சென்று விட்டான்.

 

என்ன அத்தை மச்சான் ரூம விட்டு வெளியே வர மாட்டானா அடை காக்குறான் போல என சொல்ல சிவாவின் அக்காவும் அம்மாவும் சிரித்துக் கொண்டனர்.  அப்போது கொட்டு சத்தம் கேட்க கோவிலில் இருந்து நியமனம் எடுக்க வந்துட்டாக போல என சிவாவின் அம்மா சொல்லிக்கொண்டே  வாசலை நோக்கி சென்றார்.  வாங்க என அனைவரையும் வரவேற்றனர் சிவாவின் வீட்டில் உள்ளவர்கள் சிவாவின் வீட்டின் சாமி அறையில் ஏற்கனவே எல்லாவற்றையும் எடுத்து வைத்திருந்தார் சிவாவின் அம்மா.   ஏலே சிவா என சிவாவின் அக்கா அழைக்க தன்னுடைய ரூமில் இருந்து வெளிவந்தவன் துண்டைக் கொண்டு தன்னுடைய மேலுடம்பை மறைத்தபடி நிற்க அந்த துண்டை இடுப்பில் கட்ட சொன்னார் சிவாவின் அம்மா.

 

சிவா துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டிருக்க பூஜை அறையில் இருந்து வெளியே வந்த கோவில் கோமரக்காரர்.  ரகு அந்த மாலையை தூக்கி போட்டு விடு என்றார்.  “ரகு” என்ற பெயரை கேட்டதும் சிவா திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான் ஆம் அது சிவாவின் “அவனே” தான்.  அவ்வளவு அருகில் நின்றபடி ரகு சிவாவின் கழுத்தில் மாலையிட்ட பொழுது சிவா சற்று மெய் மறந்து தான் போனான்.  சிவாவின் உடலில் ரகு சந்தனத்தை பூசி விட்டு கண்மலர் மற்றும் அம்மனுக்கான பட்டுப் புடவை எடுத்து வைத்திருந்த தட்டையும் தூக்கிக் கொடுத்தான்.  அனைவரும் குலவை விட சிவா வீட்டு நியமனம் அவன் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்லும் தன்னுடைய பயணத்தை தொடங்கியது.

 

கொட்டு முன்னே செல்ல, சிவா அதன் பின்னால் செல்ல, சிவாவின் இடதுபுறம் ரகு செல்ல, மற்ற கோவில் கோமரக்காரர்களும் சிவா வீட்டு ஆட்களும் பின்னால் நடந்து வர, சிவா தனக்கும் ரகுவுக்கும் இடையேயான உயரச் சோதனையை மேற்கொண்டு வந்தான். சிவா 5 அடி 11 அங்குலம் என்றால் ரகு ஆறடி இரண்டு அங்குலம் நல்ல உயரம் தான் என சிவா நிமிர்ந்து பார்க்க ரகுவின் தாடியும் மீசையும் சிவாவை முத்தமிட அழைத்துக் கொண்டே இருந்தது.

 

நியமனம் கோவிலில் சென்று கொடுக்கப்பட்டது அந்த அம்மன் கோவில் மூன்று அறைகள் கொண்டது.  அவை ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும் மூன்றாவது அறையில் அம்மன் அமர்ந்திருப்பாள், இரண்டாவது அறை கருவறையை விட சற்று பெரியது ஆனால் காற்றோட்டம் அற்றது, வெளியறை சற்று விசாலமானது.  அதற்கும் வெளியே தான் பொதுவாக மக்கள் எல்லோரும் நின்று அம்மனை தரிசனம் செய்வார்கள், அன்று நியமனம் செலுத்திய பின் சிவா வெளியே நிற்க அவனது கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்ற ரகு சிவாவை இரண்டாவதறைக்கு அழைத்து சென்று நல்லா சாமிய பார்த்து கும்பிடு என சொன்னான்.

 

ஆனால் சிவாவின் கண்கள் தன் கையை ரகு பிடித்ததை எண்ணிய குதூகளித்துக் கொண்டிருந்தது அவனுடைய கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி அந்த அறையில் வீசிய திருநீறு குங்கும வாசனைகள் மாறி சிவாவின் நாசியில் ரகுவின் வாசனை மெதுவாக படரத் தொடங்கியது ஒரு ஆண் வியர்வையை சிவா கண்டதுண்டு முதல் முறையாக உணர்ந்தான்.

 

சாமி தீபாராதனை காட்ட கண்மூடி வேண்டிக்கொண்டிருந்த சிவாவின் முகத்தில் தனது கைகளால் கற்பூரத்தை எடுத்து ஒத்தி வைத்தான் ரகு.  அவ்வளவு தான் அந்த நொடியில் சிவா தனது சுயநினைவை இழந்தே போனான் என்று தான் சொல்ல வேண்டும் சிவா மற்றும் அவனுடைய அம்மா இரண்டு பேரும் கோவிலில் இருந்து கிளம்பும் போது சிவா என ரகு அழைக்க சிவாவின் அம்மா திரும்பி பார்த்தார்.

 

அவர்கள் அருகில் வந்த ரகு இந்தாங்கம்மா பிரசாதம் வாங்காம போறீங்க என்ற படி கொடுக்க அதை வாங்கிக் கொண்ட சிவாவின் அக்கா கணவன், இன்னும் ஏதாவது கொடுக்கணுமா என ரகுவை பார்த்து கேட்க, ஏன்டா சுடலை உனக்கு வாங்க மட்டும் தான் தெரியுமா என்றான் ரகு.  தேவை இல்லாம பேச வேண்டாம் ரகு என சன்னமான குரலில் சொன்ன சுடலை சிவாவின் அம்மா மற்றும் அக்காவை கூட்டிக்கொண்டு சென்று விட்டான்.

 

அவர்கள் சிறிது நேரம் சென்ற பின் ரகுவிடம் தேங்க்ஸ் என சிவா சொல்ல எதுக்கு என ரகு கேட்க தெரியல சொல்லணும்னு தோணுச்சு எனச் சொன்னான் சிவா.  சரி மதிய கொடைக்கு வந்துருங்க என சொல்லி அங்கிருந்து நகர்ந்தான் ரகு,  தன்னுடைய கையை பிடித்து ரகு அழைத்து சென்றது, அவன் தனக்கு மாலையிட்ட அந்த நொடி, அவன் கைகளால் தீபாராதனை எடுத்து தன்னுடைய முகத்தில் வைத்தது என சிவா எண்ணிலடங்கா எண்ணங்களை தன் நினைவலைகளில் பொதிந்து வைத்தபடி நகர்ந்து கொண்டிருந்தான்.

 

சிவா வீட்டுக்குள் நுழைந்ததும் மருமவனே சிவாவை கூட்டிட்டு வாங்க என சிவாவின் அம்மாவும் அக்காவும் கோவிலை நோக்கி சென்றனர்.   தன்னுடைய அறைக்கு சென்ற சிவா உடையை மாற்றிக் கொண்டிருக்க கதவை தட்டியபடி உள்ளே நுழைந்தான் சுடலை.  கதவை தட்டினா பதில் சொன்ன அப்புறம் தான் உள்ள வரணும் என்றான் சிவா.  ஏன் நான் பார்க்காததா என சுடலை கேட்டான், நீ என்ன மட்டுமா பார்த்த ஊரையே பார்த்து இருக்க என்றான் சிவா.  ஏய் அதெல்லாம் எனக்கு தேவையில்லை, உனக்கும் அந்த ரகுவுக்கும் இடையில என்ன ஓடிட்டு இருக்கு என சுடலை கேட்க என்ன ஓடினா உனக்கு என்ன என திருப்பி கேட்டான் சிவா.

 

இங்க பாரு சிவா நான் உங்க அக்காவ கல்யாணம் பண்ணி இருக்கேன்.  உங்க அம்மாவை பொறுத்தவரைக்கும் நான் தான் இந்த வீட்டோட பெரிய மனுஷன் என்ன பகைக்கிறது உனக்கு தான் தேவையில்லாத கஷ்டத்தை உருவாக்கும் என்றான் சுடலை.  இங்க பாருங்க மாமா நீங்க என்ன மாட்டி விடறதுக்கு முன்னால நான் உங்களை பத்தி சொன்னா எங்க அக்கா உங்க கூட வாழ கூட மாட்டா அதுவும் நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதம் பத்தி நானும் என சிவா ஏதோ சொல்லும் போது அருண் வந்தான்.

 

என்னடா கிளம்பலையா என சிவாவிடம் அருண் கேட்டுக் கொண்டே, ஹாய் மாம்ஸ் எப்படி இருக்கீங்க இப்ப எல்லாம் புஷ்பா ரூம் பக்கம் வரதில்ல போல என்று சுடலையை பார்த்து நக்கலாக கேட்டான் அருண்.  எலே உங்களுக்கெல்லாம் வாய் கூடி போச்சுல்ல இருங்க எனக்கும் காலம் வரும் அப்ப நான் பேசிக்கிறேன் என்றபடி சுடலை அங்கிருந்து நகர்ந்தான்.  என்ன தாண்டா இவன் பிரச்சனை இதுல உங்க அக்காவ வேற கட்டி வச்சிருக்கீங்க இவனுக்கு என்றான் அருண்.

 

சிவாவின் முகம் சற்று சோகமானது என்னடா என்ன ஆச்சு என அருண் கேட்க, உனக்கு தெரியுமில்ல எங்க அம்மா எங்க அப்பாவை கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாலேயே எங்க அக்கா நாலு வயசு பிள்ளை.  அதுவும் கல்யாணம் ஆகாமலேயே எங்க அக்காவ எங்க அம்மா பெத்துகிச்சு எங்க அப்பா தான் எங்க அம்மாவ கல்யாணம் பண்ணி ஊரு நாட்டோட சேர்த்துச்சு.

 

எனக்கும் எங்க அக்காவுக்கு இடையில ரொம்ப எல்லாம் பேச்சு வார்த்தைலாம் கிடையாதுடா திடீர்னு நாலு வருஷம் முன்னால இவனை லவ் பண்றேன்னு வந்து சொல்லுச்சு.   அப்பா வேற இறந்துட்டாங்க அம்மாவால ஒன்னும் பண்ண முடியல.  ஆனா இந்த கேடு கெட்டவன் என்ன பத்தி தெரிஞ்சுக்கிட்டு கல்யாணம் ஆன நாலாவது நாளே தப்பா நடந்துகிட்டான்.  நான் முடியாதுன்னு சொன்னேன் என்ன பத்தி எங்க அம்மாகிட்டயும் எங்க அக்கா கிட்டயும் சொல்லுவேன்னு மிரட்டுனான்.

 

அதுல பயந்து ஒரே ஒரு தடவை அவனுக்கு நான் இடம் கொடுத்துட்டேன்.  ஆனா சுடலை அதுக்கு அப்புறம் என்ன டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சான். போன வருஷம் ஒரு தடவை கால்ல விழுந்து என்ன கூப்பிட்டான், என் அக்கா பிரசவத்துக்கு ஹாஸ்பிடல்ல இருந்தப்போ அதை நான் வீடியோ எடுத்து வச்சேன் அதனால இப்ப கொஞ்ச நாளா மூடிகிட்டு இருக்கான்.  இன்னைக்கு ரகு என் கூட நெருக்கமா இருந்தான்ல அதனால அவன்கிட்ட ஏதோ மொறச்சான் அவன் இவனுக்கு நல்ல பதிலடி கொடுத்துட்டான் என்ற சிவா வாடா கொடைக்கு நேரமாச்சு போலாம் எனச் சொல்ல அருணும் சிவாவும் கோவிலை பார்த்து சென்றனர்.

 

இங்க பாரு சிவா நம்ம வாழ்க்கையில இது மாதிரி நிறைய பார்த்திருக்கோம், பாத்துட்டு இருக்கோம் இன்னும் பாப்போம் இதெல்லாம் நெனச்சு கவலைப்படாம உங்க ஆளை பாக்குற வேலைய மட்டும் ஒழுங்கா பாரு என்றான் அருண்.   நீ வேற இன்னைக்கு நியமனம் எடுக்கும்போது அவன் தான் எனக்கு மாலை போட்டு விட்டான், கோவில் உள்ள வரைக்கும் என்ன கூட்டிட்டு போயி அதுவும் கைய புடிச்சு கூட்டிட்டு போயி சாமி தரிசனம் எல்லாம் காமிச்சான் என சிவா சொல்ல, அப்போ உன்னோட லைன் கிளியர்னு சொல்லு என அருண் கேட்க அப்படியெல்லாம் சொல்ல முடியாது, ஆனா அவனை எப்படியும் என்னை லவ் பண்ண வச்சுடுவேன் என்றான் சிவா.

 

ஏலே ஓவர் கான்ஃபிடன்ட் உடம்புக்கு ஆகாதுடா என அருண் சொல்ல அதை யாரு சொல்றாங்க பாரு என சிவா சொல்ல பேச்சும் சிரிப்புமாய் இரண்டு பேரும் கோவிலை சென்றடைந்தனர்.  மதியவேளை அம்மன் கோவிலின் காவல்காரசாமி ஊர்காவலப்பெருமாள் சாமிக்கு கொடை, அந்த சாமி ஊரின் குளத்தாங்கரை ஓரமாக கோவில் கொண்டுள்ளார்.  பூடமாகத்தான் அந்த கோவில் இருக்கும் ஆனால் கோவில் கொடை அன்று மட்டும் ஜெகஜோதியாக அலங்காரங்களுடன் இருக்கும் அந்த ஊர்காவலப்பெருமாள் தான் ரகுவின் குலதெய்வம், 7 ஆண் பிள்ளைகளோடு இருந்த அந்த வம்சத்தில் இன்று எட்டாவது தலைமுறையாக ரகு ஒருவன் தான் மிஞ்சியுள்ளான்.

 

மேளதாளங்கள் முழங்க கணியன்  அழைக்க அந்த ஊர்காவலப்பெருமாள் ரகுவின் மீது வந்து இறங்கி அருள்வாக்கு சொன்னார்.  ஊர் மக்களிடம் என் உள்ளம் குளிர்ந்தது, நாடு செழிக்கும் நல்ல மழை பெய்யும், ஊரு செழிக்கும் உற்ற மழை பெய்யும், ஊர் மக்களை எல்லாம் நான் காப்பாற்றி தாரேன் என வாக்கு கொடுத்து நீங்கினார்.  அனைவரும் திருநீறு பூசிக்கொண்டு கூட்டம் கலையத் தொடங்கியது.

 

அப்போது குளத்தங்கரையின் மீது அருணும் சிவாவும் பேசிக்கொண்டே செல்ல, சிவா சிவா என சத்தம் கேட்க, திரும்பினான் சிவா.  அவன் அருகில் வேகமாக வந்த ரகு தன்னுடைய கையில் இருந்த மாலையை சிவாவின் கையில் கொடுத்துவிட்டு ஏன் எங்க கிட்ட வந்து திருநீறு பூசிக்க மாட்டீகளோ என சிவாவுக்கு திருநீறு பூசி விட்டு தன்னுடைய கையால் சிவாவின் கண்களை மூடியபடி ஊதி விட்டுச் சென்றான்.  ரகு மட்டும் திரும்பி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அந்த மூச்சுக்காற்றில் சிவா கிறங்கி அருணின் கைகளில் சரிந்தது.

 

டேய் டேய் என அருண் சிவாவின் கன்னத்தை தட்டி எழுப்ப அவர்களை கடந்து சென்ற சிவலட்சுமி, என்னடா இப்படி தட்டிக்கிட்டு இருக்க என ஓங்கி சிவாவின் கன்னத்தில் அறைந்தாள்.  திடுக்கிட்டு எழுந்த சிவா என்னவாம் இவளுக்கு என கேட்க, என்னடா அவ(ள்) இவன்னு சொல்ற என சிவலட்சுமி கேட்க.  சரி விடு நீ கெளம்பு நம்ம பொறுமையா பேசிக்கலாம், நான் இப்ப லவ் மூட்ல இருக்கேன் என சிவா சொல்ல என்னமோ பண்ணு என சிவலட்சுமி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

 

என்னடா இதெல்லாம் என அருண் கேட்க, அது ஒரு பெரிய கதை டா, என் ஆளோட முறை பொண்ணு சிவலட்சுமி அக்கா கொஞ்சம் பொசசிவ் ஆகத்தானே செய்வாள் என சிவா சொல்ல, என்னமோடா நீ நடத்து என அருண் அங்கிருந்து செல்ல சிவா தன்னுடைய வீட்டை அடைந்தான்.  சிவாவின் அம்மா பரிமாற அவனுடைய அக்காவும் சுடலையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  சிவா வாடா நீயும் வந்து சாப்பிடு என சிவாவின் அம்மா சொல்ல தான் கொண்டு வந்த மாலையை சாமி அருகில் வைத்துவிட்டு கை கால்களை கழுவி விட்டு வந்தான் சிவா.

 

குழந்தை அழுததால் சிவாவின் அக்கா சென்றுவிட சிவாவின் அம்மா அவனுக்கு அப்பளம் பொறிக்க அடுப்படிக்கு செல்ல சிவா இலையை விரித்து வைத்து சாப்பாட்டை தனக்கு தானே பரிமாறிக் கொண்டிருந்தான்.   என்ன சிவா வர வர உன் போக்கே சரியில்ல என சுடலை கேட்க, அதை நீ சொல்ற பாரு அதான் வேடிக்கையா இருக்கு என சிவா நக்கலாக சிரித்தபடி சாப்பாட்டை சாப்பிட தொடங்கினான்.  இன்னைக்கு நைட்டு உனக்கு வசமா இருக்குடா என சுடலை மனதில் நினைத்துக் கொள்ள, அடுப்படியில் இருந்து வந்த சிவாவின் அம்மா சிவா நாளைக்கு காலைல ஒரு கிலோ ஆட்டுக்கறி சொல்லிடு என்றார், சரிமா என சிவா சாப்பிட்டு எழுந்து சென்றான்.

 

தன்னுடைய வீட்டில் விரதம் இட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ரகு, அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த சிவலட்சுமி, என்ன ரகு புதுசா மாலையெல்லாம் வேற கைக்கு போகுது என பேச்சை தொடங்கினாள்.  என்ன புதுசு பழசுன்னு உளறிட்டு இருக்க அந்த பையன் நேத்து மாலை கேட்டான்னு நீ தானே சொன்ன அதான் சாமி மாலை ஆசைப்பட்டு கேட்கிறான், இதுல என்ன இருக்கு என ரகு சொல்ல.   ஓஹோ அப்போ அந்த திருநீறு வச்சு விட்டது அதை ஊதி விட்டதெல்லாம் காந்தி கணக்கா என சிவலட்சுமி சொல்ல. ஏதாவது லூசு மாதிரி பேசிட்டு இருக்காத என சாப்பிட்டு முடித்த ரகு கோவிலுக்கு கிளம்புவதாக சொல்லிச் சென்றான்.

 

அன்றிரவு மணி பத்தை கடக்க சிவா சிவா என சிவாவின் அம்மா அவனை எழுப்ப என்னம்மோ என விசும்பியபடிக் கேட்டான் சிவா.  ராத்திரி கொடை பார்க்க வரலையா என சிவாவிடம் அவன் அம்மா கேட்க அருண் என்ன கூப்பிட வருவான் நான் வந்துகிறேன் என சொல்ல சிவாவின் அம்மா அவனுடைய அக்காவோடு கிளம்பினார்.  என்னடி உன் புருஷன் வரலையா என சிவாவின் அம்மா சிவாவின் அக்காவிடம் கேட்க, அவருக்கு தலை வலிக்குதாம்மா கொஞ்ச நேரம் கழிச்சு வாரேன்னு சொன்னாக எனக்கு வில்லுப்பாட்டு பாக்கணும் போல இருக்கு என சிவாவின் அக்கா சொல்ல இரண்டு பேரும் கோவில் நோக்கி சென்றனர்.

 

தூங்கிக் கொண்டிருந்த சிவாவின் காலில் யாரோ கையை கொண்டு தடவுவது போல தெரிந்தது, தூக்கத்தில் கண்களை திறந்து பார்த்தவன் யாரும் இல்லாததால் மீண்டும் கண்களை மூடி தூங்கினான்.  சிறிது நேரம் கழித்து மீண்டும் யாரோ தொடுவது போல தோன்ற கண்ணை திறந்து பார்த்தான் சிவா.

 

அது சுடலை தான் சிவாவின் சாரத்தை முட்டு வரை தூக்கி அவனுடைய கால்களை வருடிக் கொண்டிருந்தான்.  சடாரென்று எழுந்த சிவா என்ன பண்ற நீ என கேட்க, உனக்கு இப்படி பண்ணுனா ரொம்ப பிடிக்குமே என சுடலை சொல்ல தேவையில்லாம பேசாத மாமா என தன்னுடைய டி ஷர்ட் யைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறினான் சிவா.

 

அவனுடைய கையைப்பிடித்து இழுத்து சுவற்றோடு நிறுத்திய சுடலை.  ஒரு தடவை மட்டும் நாம பண்ணிக்கலாம், ஒரே ஒரு தடவை என சொல்ல, இந்த பாரு மாமா நான் எங்க அம்மா கிட்ட சொல்லிடுவேன் என சிவா சொல்ல, யாருகிட்ட உங்க அம்மாகிட்டயா அவளே ஒரு நடத்தகெட்டவ, ஏதோ உங்க அப்பன் எனக்கு மாமா அதான் உங்க அக்காவ கட்டி வாழ்க்கை கொடுத்தேன்.  இல்லன்னா யாரு கட்டுவாங்க உன் அக்காவ சொல்லு என சுடலை சொல்ல, அப்புறம் ஏன் என்னை தொல்லை பண்ற என சிவா கேட்டான்.

 

அதெல்லாம் அப்படித்தான் என சுடலை சிவாவை இறுக்கிப் பிடித்தபடி உதட்டில் முத்தமிட எத்தனிக்க, சிவா மறுத்துக் கொண்டிருக்க, வீட்டுக் கதவு திடீரென திறக்க அதிலிருந்து சிவாவின் அம்மா வீட்டின் உள்ளே வந்தார்.

– வருவான்…

 

Comments

  • Avatar

    Raja

    20/07/2025 at 7:18 காலை

    அருமை

    Reply

  • Avatar

    Mahesram

    20/07/2025 at 12:14 மணி

    Nice story

    Reply

  • Avatar

    Aji

    23/07/2025 at 4:57 காலை

    Nice 🥰🥰🥰

    Reply

  • Avatar

    Aji

    23/07/2025 at 4:57 காலை

    Nice 👏👏👏

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன