அவன் அப்படித்தான் 3 

 

கதவை திறந்து உள்ளே வந்த சிவாவின் அம்மா சுடலை சிவாவை இறுக்கிப்பிடித்து இருப்பதையும், அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் நடக்கிறது என்பதையும் புரிந்து கொண்டார்.  என்னாச்சு மருமவனே என சிவாவின் அம்மா கேட்க அது வந்து… அது வந்து… என தட்டுத் தடுமாறி சுடலை கூறினான்.  என்னன்னு தெரியல அத்தை மச்சான் கொஞ்ச நாளாவே என்கிட்ட சிம்பி சிம்பி பேசுறான்.   இப்ப கூட பாருங்க தலை வலிக்குது மாப்ள கொஞ்சம் அந்த கடுங்காப்பிய சூடு பண்ணி தாயேன்னு கேட்டேன் உனக்கு கை கால் நல்லா தானே இருக்கு அப்படின்னு கேட்கிறான் என சுடலை சொன்னதும் சிவாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் அவன் அம்மா என்னல கொழுப்பு ஏறி போச்சோ என கேட்க.  சிவாவுக்கு அழுகை தான் முட்டிக்கொண்டு வந்தது, என்ன ஆச்சு என தன்னுடைய அம்மா தன்னை கேட்காததை விட சுடலை சொன்னதை நம்புகிறாரே என்கிற ஆவேசம் தான் அவனுக்கு அதிகம்.   அவன் அம்மாவை முறைத்து பார்த்துவிட்டு அங்கு இருந்து சென்றான் சிவா.  நீங்க இருங்க மாப்பிள்ளை நான் காப்பியைக் கொண்டாரேன் என சிவாவின் அம்மா அடுப்படிக்குள் நுழைந்தார். 


நல்ல வேலை நான் பேசுனது எதையும் அத்தை கேட்கல என மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட்டான் சுடலை.  வீட்டை விட்டு வெளியேறிய சிவா ஊருக்கு வடக்கு புறமாக உள்ள கரிசல்காட்டுக்குள் சென்றான்.  அமைதியான குளத்தாங்கரையின் மரத்தடி ஒன்றில் அமைதியற்ற மனதோடு உட்கார்ந்தான் சிவா.   தன்னுடைய அம்மா ஏன் தன்னை நம்புவதில்லை, என்னுடைய தரப்பு நியாயத்தை கூட கேட்பதில்லை ஏன் இவ்வளவு ஓரவஞ்சனை என நினைத்து அழுது கொண்டிருக்கும் போது சிவாவின் தோளைப் பின்பக்கத்தில் இருந்து யாரோ தொட திரும்பி பார்த்தான் சிவா.  


அது ரகு, உடனே எழுந்த சிவா ரகுவை இறுக்கமாக கட்டிக்கொண்டான், சிறு குழந்தை தாயை தவற விட்டுவிட்டு மீண்டும் காணும் போது எப்படி இறுக்கமாக கட்டிக் கொள்ளுமோ அப்படி ஒரு இறுக்கம் சிவாவின் பிடியில் ரகுவிற்கு தெரிந்தது.  என்னடா ஆச்சு என ரகு உதிர்த்த அந்த ஒரு வார்த்தை சிவாவை ரகுவிடம் கதறி அழ வைத்தது.   யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க என்ன பெத்த அம்மாவே என்ன புரிஞ்சுக்கல ரகு, நான் சின்ன வயசுல இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்னை யாரெல்லாம் என்ன எல்லாம் பண்ணுனாங்கன்னு நான் யாரு கிட்ட சொல்லுவேன்.

நான் எவ்வளவு மிரட்டல்களை சந்தித்து இருக்கேன் அதெல்லாம் இன்று வரை என்னோட மூளையிலே முட்டிக்கிட்டு கிடக்கு தெரியுமா ரகு.  எத்தனை பல் தடங்கள் என்னோட கழுத்துலயும், மார்புலயும் இன்னும் இருக்கு, என் மீது நடந்த உடல் சார்ந்த முறைகேடுகளை விடவும் எனக்கு நடந்த மெண்டல் அபியூஸ் பத்தி நான் யாருகிட்ட தான் ஷேர் பண்ண ரகு என்றான் சிவா.  நான் இருக்கேன் டா என்கிட்ட சொல்லு என்றான் ரகு. 

 
அந்த நொடி சிவாவை பிடித்திருந்த  மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது, சிவா தனது சுயநினைவை அடைந்தான், என்ன நடந்தது என்பது இப்போது தான் அவனுக்கு புரியத் தொடங்கியது.   அதுவரை ரகுவை கட்டி அணைத்து இருந்தவன் சற்று விலகினான், அங்கிருந்து செல்ல நினைத்த சிவாவின் கைகளை பிடித்து இழுத்த ரகு நீ சொல்ல வேண்டாம் நான் சொல்றதை கேட்கலாம்ல என்றான், ரகுவின் குரலில் தெரிந்த ஒரு வகையான சோகம் சிவாவின் கால்களை நகர விடாமல் செய்தது.  

 
 
               சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வெளியே முருகன் லாட்ஜ் முன்னாள் வந்து நின்ற பைக்கில் இருந்து இறங்கினான் ரஞ்சித்.  தன்னுடைய போனில் காத்திருந்த நபரிடம் நீங்க சொன்ன லாட்ஜ்க்கு முன்னால தான் நான் நிக்கேன் என்று சொல்ல போனில் எதிர்முனையில் இருந்தவர் ரூம் நம்பர் 103க்கு வாங்க என்று சொல்லி போனை துண்டித்தார்.   ஹோட்டலின் வரவேற்பறையில் கேட்டால் என்ன சொல்ல என சிந்தித்துக் கொண்டே சென்ற ரஞ்சித், முதல் தளத்திற்கான படிகள் ஏறும் போது யாரும் எதுவும் கேட்காததால் ரூம் நம்பர் 103 அடைந்தான். 


ரஞ்சித் கதவை தட்ட கதவு திறக்கப்பட்டது, திறந்தவன் என்ன வேணும் எனக் கேட்க ஜிஆரிலிருந்து (GR)  வர சொன்னிங்க என ரஞ்சித் சொன்னதும் ஆமா வாங்க என ரஞ்சித்தின் கையை பிடித்து உள்ளே இழுத்தவன் கதவை பூட்டினான்.  ரஞ்சித் மெதுவாக அவனை மேல் இருந்து கீழாக நோட்டமிட்டான் அனுப்பிய போட்டோ ஃபில்டர் என்பது அறிந்தது தான் என்றாலும் இவ்வளவு ஃபில்டர் போட்டு இருக்கிறானா என எண்ணும் அளவுக்கு அவன் இருந்தான்.   வாங்க ப்ரோ உட்காருங்க என்றபடி, ரஞ்சித்தை பார்த்து அவன் சொன்னான் நீ செமையா இருக்க மச்சி என ரஞ்சித்தின் அருகில் அமர்ந்தான்.  உங்க பேர் என்ன ப்ரோ என ரஞ்சித் கேட்க ராஜா என்றான் அவன், ஓகே என ரஞ்சித் சொல்ல ராஜா ரஞ்சித்தின் தொடையை வருடத்  தொடங்கினான். 


அங்கு அதுவரை இல்லாத அளவு உஷ்ணம் உருவாகத் தொடங்கியது, உதடுகளும் உள்ளாடைகளும் உறிஞ்சப்பட்டன, உடலும் உள்ளமும் உவக்கத் தொடங்கியது.  25 நிமிட இன்ப போராட்டத்திற்கு பிறகு காமனை கைகாட்டி வழி அனுப்பினர் ரஞ்சித்தும் ராஜாவும், உடலுறவு முடிந்ததும் ரஞ்சித் தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்தபின் ராஜா பாத்ரூம் சென்றார்.  தன்னுடைய உடைகளை மாட்டிக்கொண்டிருந்த ரஞ்சித்தின் கைப்பட்டு ராஜாவின் வாலெட் டேபிளில் இருந்து கீழே விழுந்தது அதை எடுத்து வைக்கும் போது தான் ரஞ்சித் கவனித்தான்.  தான் இவ்வளவு நேரம் இருந்தது ராஜா உடன் அல்ல ரத்தினத்தோடு என்று, வெளியே வந்த ராஜா என்னடா டிரஸ் போட்டுட்ட கிளம்புரியா நீ என கேட்க, ஆமா நான் கிளம்புறேன் எனக் கதவை திறந்து ரஞ்சித் வெளியேறிய பின் திரும்பி ஒரு நிமிஷம் என சொல்ல, கதவை பூட்டாமல் திறந்து பிடித்த படி சொல்லுங்க ரஞ்சித் என ராஜா கேட்க நான் போயிட்டு வரேன் ரத்தினம் என அங்கிருந்து சென்றான் ரஞ்சித்.   


பைக்கில் ஏறிய ரஞ்சித்துக்கு என்னடா இது வாழ்க்கை, உண்மையான பெயரை கூட எவனும் சொல்றதில்ல, இதுல இந்த ஆப் ல நம்ம டேட்டிங் பண்ணி நமக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து இதெல்லாம் நடக்கிற காரியமா என எண்ணினான்.  ரஞ்சித் 27 வயது இளைஞன் திருச்சியை  பிறப்பிடமாகக் கொண்டவன், கிண்டியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான்.  தன்னை மகிழ்வன் என அவன் அறிந்து 5 வருடங்கள் ஆகிறது வீட்டில் சொல்லவில்லை என்றாலும் ஏதோ ஒரு வகையான சந்தேகம், வீட்டில் உள்ளவர்களுக்கு ரஞ்சித் மேல் உள்ளது.  தன்னுடைய அப்பார்ட்மெண்டின் முன்னால் பைக்கை நிறுத்திய ரஞ்சித் தன்னுடைய மொபைலில் இருந்து ஜிஆர் யை டெலிட் செய்தான், இனிமேல் இது போன்ற ஹூக் அப்ஸ்  வேண்டாம் என்ற முடிவை எடுத்தான். 

 


               ரகுவின் வலது கையை பிடித்தபடி சொல்லு ரகு நான் கேட்கிறேன் என்று சிவா சொல்ல, எனக்கு உன் அளவுக்கு LGBTQ பத்தி எல்லாம் தெரியாது சிவா, ஆனா எனக்கு பசங்க மேல ஈர்ப்பு வரும் என்பது மட்டும் தெரியும்.  நான் டென்த் படிச்சிட்டு இருந்தபோது நம்ம ஊருக்கு மேற்க சப்பாணி அண்ணன்கிட்ட நான் டியூஷன் போவேன் அப்போ அவர் மேல எனக்கு அப்படி ஒரு கிரஷ், அந்த அண்ணன் மேத்ஸ் குரூப்புக்கு பிளஸ் ஒன் பிளஸ் டூ ல சொல்லி தர மாட்டாங்கன்னு தெரிஞ்சும் அண்ணா நான் உங்க மேற்பார்வைல படிச்சிக்கிறேன் வீட்டுல  இருந்தா படிக்கவே தோணலேன்னு சொல்லி தான் அங்கேயே படிச்சேன் என ரகு சொன்னதும், உடனே வெயிட் வெயிட் அதான் எப்ப பார்த்தாலும் அந்த அண்ணன் ரகு மாதிரி படிக்க யாராவது பிறந்து தான் வரணும்னு சொல்வாரா என சிவா கேக்க.  உடனே அது தெரியல ஆனா நான் அந்த அண்ணாவை தொட்டது கூட கிடையாது அவரை நினைச்சு நிறைய தடவை சுய இன்பம் பண்ணி இருக்கேன்.  எங்க அப்பா அம்மா என்னை திருநெல்வேலி காலேஜ்ல போட்டுட்டாங்க அதனால தான் அங்க தங்கி படிக்க வேண்டியதா போச்சு அப்போ தான் நான் ஸ்டீபனை பார்த்தேன் அவன் என்னோட கிளாஸ்மேட் ஆக அறிமுகமாகி என்னோட சோல் மேட் ஆகவே மாறிட்டான்.  


அப்பா அம்மாவோட பேச்சை தட்டாத நான் அவங்ககிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்சேன், ஹாஸ்டல் சாப்பாடு நல்லா இல்லன்னும் அதனால வெளிய ரூம்  எடுத்து தங்க போறேன்னு சொல்லிட்டு நான் ஸ்டீபன் கூட தங்க ஆரம்பிச்சேன்.   என்னை அவன் நல்லாத்தான் பாத்துக்கிட்டான் நானும் நல்லபடியா தான் அவனை பாத்துக்கிட்டேன்.  பாபநாசம், அகஸ்தியர் ஃபால்ஸ், சங்கரன்கோவில், நெல்லையப்பர் தேரோட்டம், திருவிடை மருதூர், குற்றாலம், செங்கோட்டை, புனலூர், கொல்லம் வரைக்கும் சுத்தி இருக்கோம் ரெண்டு பேரும்.  3வது வருஷம் படிக்கும்போது தான் என்னோட காதலை அவன்கிட்ட சொன்னேன், ஆனா என்ன ரொம்ப கேவலமா பேசிட்டான், நான் உடலுக்கு அலையறதா என்னை அசிங்கப்படுத்தினான், ஆனா என்னை பத்தி யார்கிட்டயும் எதுவும் சொன்னது கிடையாது. 


ஒரு நாள் அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னான், நான் மட்டும் காலேஜ் போனேன் என்னோட அப்பா திடீர்னு என்னோட காலேஜுக்கு போன் பண்ணாரு, உடனே ரூமுக்கு வான்னு கூப்பிட்டாரு நானும் என்னமோ ஏதோன்னு பயந்து போய் அவரை பார்க்க போனேன்.  ஸ்டீபன் எங்க அப்பா கிட்ட என்னை பத்தி என்ன சொன்னான்னு தெரியல நான் ரூம்க்கு போனதும்  என்னோட சாமான்களை அப்பா பேக் பண்ண சொன்னாரு நானும் பண்ணுனேன் எதுக்குன்னு நானும் கேட்கல எங்க அப்பாவும் சொல்லல அதுக்கப்புறம் நான் ஒன்றை வருஷம் காலேஜ் திருநெல்வேலி காலேஜோட பிரான்ச் நம்ம ஊரு பக்கத்துல இருக்கே அங்க தான் கண்டின்னியூ பண்ணினேன்.  


ஆனா ஒன்னு அவன் என்ன பத்தி எதுவும் தப்பா சொல்லி இருக்க மாட்டான் ஆனா அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாம இன்னும் குழப்பமாகவே இருக்கு, ஆனா எம்.இ திருநெல்வேலி காலேஜ்ல தான் படிச்சேன் ஆனா அவன் அப்போ அங்க இல்லை என்ற ரகுவின் கண்களில் விடை தெரியா பல வினாக்களின் ஏக்கம் குடி கொண்டிருந்தது.  அப்போ ஸ்டீபன் சம்மதிச்சு இருந்தா நீ அவன் கூட உன்னோட வாழ்க்கை ஃபுல்லா வாழ்ந்து இருப்பியா எனக்கேட்டான் சிவா.  அது தெரியல ஆனா அந்த காதல் எனக்கு அந்த தைரியத்தை கொடுத்தும் இருக்கலாம் யாருக்கு தெரியும் என்றான் ரகு.


அவனையே பார்த்துக் கொண்டிருந்த சிவாவின் தோள்களை பிடித்து உலுக்கிய ரகு, என்னடா யோசிக்கிற என்று கேட்க இல்ல உன்ன மாதிரி ஒரு பீஸை ஏன் இந்த ஸ்டீபன் வேண்டாம்னு சொல்லி இருப்பான் என்று யோசிச்சிட்டு இருக்கேன் என்றான் சிவா.  டேய் ஒரு வேலை ஸ்டீபன் ஸ்ட்ரெயிட்டா கூட இருக்கலாம்ல என ரகு சொல்லும் போது யாரோ விசில் அடிக்கும் சத்தம் கேட்டது.  உடனே நீ இங்கேயே இரு நான் இதோ வரேன் என்று ரகு கரையை கடந்து அந்த பக்கம் சென்றான், என்ன நடக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள சிவாவும் அவன் பின்னால் போனான். 


கரையின் மேல் நின்றபடி சிவா பார்க்க ரகுவின் எதிரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தனர், ஆனால் அந்த ஆணின் குரல் சிவாவுக்கு மிகவும் பரிச்சயமானதாக தான் தோன்றியது.  சிறிது நேர உரையாடலுக்கு பின் அந்த ஆண் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல அவனுடைய நம்பர் பிளேட்டில் சாய்பாபா படம் போட்டிருப்பதை கண்டு கொண்டான் சிவா.  சிறிது தூரம் நடந்து சென்ற பின் அந்தப் பெண் டிவிஎஸ் எக்ஸெல் புறப்பட்டு சென்று விட்டாள்.   அதன் நம்பரோ அடையாளமோ சிவாவிற்கு தெரியவில்லை, ரகு திரும்ப வருவதற்குள் சிவா மீண்டும் ரகுவோட அமர்ந்திருந்த அதே இடத்தில் சென்ற அமர்ந்து கொண்டான் சிவா.  

 
சாரிடா ஒரு சின்ன சமூக சேவை என்ற ரகு, நீ உன்ன பத்தி சொல்லுடா என சிவாவிடம் கேட்க அதெல்லாம் நீ போகப் போக தெரிஞ்சுப்ப என்ற சிவா பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ரகுவின் கன்னத்தில் நச்சென்று முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு எழுந்து ஓடினான்.  முத்தத்தை ரகு உணர்வதற்குள் சிவா அவனை விட்டு 20 அடி தூரம் சென்று விட்டான்.   நில்லுடா நானும் வரேன் என ரகு சொல்ல, நாளைக்கு வரைக்கும் இந்த முத்தத்தையே நினைச்சுட்டு இரு என சிவா சொல்லிக் கொண்டே சென்றான்.  தனக்குத்தானே சிரித்துக்கொண்டே கன்னத்தை தடவியபடி இரவு கொடைக்கு சென்றான் ரகு.  


குளத்தாங்கரையின் மேல் அருண் சொன்ன இடத்திற்கு வந்து காத்திருந்தான் சிவா, அப்போது சைக்கிளில் வந்த அருண் வாடா போகலாம் என சிவாவையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு இரண்டு பேரும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலமரம் ஒன்றின் பக்கத்தில் சைக்கிளை நிறுத்தினர்.  சிவாவிடம் இருந்த கேரிபேக்கை வாங்கிக்கொண்டு அந்த ஆலமரத்தின் பின்னால் சென்றான் அருண், அங்கிருந்த இடிந்த வீட்டிற்குள் சென்றனர் இரண்டு பேரும் இங்கேயே இருக்கலாம் என சிவா சொல்ல சரி என தான் கொண்டு வந்த கேரிபேக்கில் உள்ள பியரை எடுத்து வெளியே வைத்தான் அருண்.  பீயரை குடித்த சிவா என்னடா கருமம் இவ்வளவு கசப்பா இருக்கு என கேட்க, டேய் எவ்வளவு கசப்பு அதிகமா இருக்கோ அவ்வளவு போதை ஏறுமாம் என அருண் சொல்ல, இதெல்லாம் உனக்கு யார் சொன்னது எனக்கேட்டான் சிவா.  என் ஆளு தான் சொன்னான் என அருண் சொல்ல அது சரி நீ இன்னும் அவனையே நம்பிட்டே இரு என்றான் சிவா. 


அதெல்லாம் இருக்கட்டும் சிவா உன்கிட்ட ஒன்னு கேட்கவா என அருண் கேட்க, கேளுல என சிவா சொன்னான்.  உனக்கு ஏன் ரகுவை பிடிச்சிருக்கு என அருண் கேட்டான், ஏன் பிடிச்சுருக்குன்னு கேட்டா அதுக்கு என்ன பதில்  சொல்ல என சிவா கேட்க.  அப்ப எவ்வளவு புடிச்சிருக்குன்னு சொல்லு என்றான் அருண், நான் அவனை பார்க்கும்போதெல்லாம் என்னோட மூளைல இரத்தம் வேக வேகமா ஓடுற மாதிரி இருக்கும்.  அவன் இடைத்தெரிய வேட்டி கட்டி தொடை குலுங்க நடக்கும்போது நான் நானாகவே இருக்கிறது இல்ல.  ஒரு தடவை அவன் நம்ம ஊரு வயலுக்கு நீர் பாச்ச பக்கத்து ஊருகாரங்க கூட போட்ட சண்டையில ஒரு வார்த்தை கூட அவன் கெட்ட வார்த்தை யூஸ் பண்ணல  தெரியுமா? ஆனாலும் அவங்க பயந்து போற மாதிரி பேசினான்.  அவனோட உடல் அழக விட உள்ளத்தோட அழகு வேற லெவல் டா, அது மட்டுமில்ல இன்னைக்கு தான் தெரிஞ்சது அவன் எனக்கு கிடைக்க வாய்ப்பு இருக்குன்னு என்றான் சிவா.

 

அப்படி என்ன தெரிஞ்சுகிட்ட என அருண்  சிவாவிடம் கேட்க, அதெல்லாம் காலம் வரும்போது உனக்கே தெரியும் என்ற சிவா அந்த இடிந்த வீட்டை கடந்து யாரோ செல்வதை கவனித்தபடி அருண்… அருண்… என அழைக்க அருண் போதையில் மொத்தமாக உறங்கியே போனான்.  யார் என்று தெரிந்து கொள்ள சிவா மெதுவாக அவனை பின் தொடர்ந்து சென்றான், யாரோ சிவாவுக்கு தெரிந்த உருவம் போல தான் தோன்றியது ஆனாலும் உறுதி பண்ணிக்கொள்ள அவனை பின் தொடர்ந்தான் சிவா.  அந்த உருவம் நேராக புஷ்பா ரூமை நோக்கி சென்றது பொதுவாகவே யாரும் அங்கு செல்வதில்லை, பேய் நடமாட்டம் அதிகம் என்பதால், அதனால் தான் சுடலையை கூட அருண் கிண்டல் செய்த போது கூட புஷ்பா ரூம் பக்கம் பார்க்க முடியல என கிண்டல் செய்தான்.  


அப்படிப்பட்ட அறையில் ஏன் அவன் செல்கிறான் என தெரியாமல் சிவா பின்னே செல்ல, அவன் அந்த அறையினுள் சென்றதும் அறையின் கதவு மூடப்பட்டது, யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் சிவா அந்த அறையின் அடியில் இருந்த ஓட்டையின் வழியே பார்க்க முயற்சி செய்ய சிவாவின் நாசியில் ஒரு புல் குத்தி விடவே ஹச் ஹச்  என சிவா தும்மினான்.  அவனுடைய தும்மல் சத்தம் கேட்டு உள்ளே இருந்த இருவர் வெளியே வர கதவை திறக்க எத்தனிக்க சிவா யார் என்று பார்க்க வாசலின் அருகில் மறைந்து நின்றான்.  
 

அந்த அறையில் இருந்து முதலில் வந்தது சுடலை அது சிவாவுக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை, இந்த கேடுகெட்டவன் கூட இங்க வரைக்கும் படுக்க வந்தது யாருடா என பார்க்க ஆர்வமாக மறைந்து இருந்தான் சிவா.  சுடலை சென்றதும் சிறிது நேரம் கழித்து அந்த அறையில் இருந்து இன்னொரு ஆண் வெளியே வர அவரை பார்த்த சிவா அதிர்ந்து போனான்.  நீங்களா!!! என அவர் முன்னால் சிவா நின்றதும் அதிர்ந்து போனார் “அவர்”  
 
 

   வருவான்…

 

 

 

 

 

Comments

  • Avatar

    Mahesram

    27/07/2025 at 6:55 காலை

    Nice story

    Reply

  • Avatar

    Saravanan

    27/07/2025 at 8:26 காலை

    Yeah its going to good and excellent story writing

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன