சிவாவின் கம்பெனியின் அமைப்பு கவிதா மற்றும் ரஞ்சித்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது.  அவர்கள் இருவரையும் தவிர ஷேர் ஹோல்டராக கவிதாவின் அண்ணனும் அண்ணியும் உள்ளனர்.

 

கவிதாவின் அண்ணியின் உடல்நிலை காரணமாக கடந்த ஏழு வருடங்களாக அவளுடைய அண்ணன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.  கவிதாவும் ரஞ்சித்தும் இணைந்து இந்த கம்பெனியை அதனுடைய விளிம்பு நிலையிலிருந்து உயர்த்தியதற்காக அவளுடைய அண்ணனின் பரிசு இருவருக்கும் தலா 25% ஷேர் ஹோல்டர் ஆகும் வாய்ப்பு.

 

பொதுவாக அந்த கம்பெனியின் உள்நாட்டு விஷயங்களை கவிதா பார்த்துக் கொள்வதால் அவளுக்கு கீழே 6 டீம்கள் உள்ளன.  அதோடு கோயமுத்தூரில் அவளும் ரஞ்சித்தும் தொடங்கிய ஸ்டார்ட் அப்பில் இரண்டு டீம்கள் கவிதாவின் கீழ் உள்ளன.

 

கோயம்புத்தூர் கம்பெனிக்கு கவிதாவும் ரஞ்சித்தும் தான் பார்ட்னர்ஸ். ரஞ்சித்தின் கீழ் சென்னையில் நான்கு டீம்களும், கோவையில் மூன்று டீம்களும் உள்ளன.  ஏனெனில் அவன் கம்பெனி சார்ந்த வெளிநாட்டு விஷயங்களைக் கண்காணித்துக் கொள்கிறான்.

 

அவர்கள் தங்கள் கம்பெனியை எக்ஸ்பன்ட் பண்ணவே கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அதிகமான ஃபிரஷர்சை வேலைக்கு எடுக்கிறார்கள்.

 

என்னதான் அருண் தன்னுடைய நெருங்கிய நண்பனாக இருந்தாலும், அவனை அதிகமாக தொல்லை பண்ண சிவாவுக்கு பிடிக்கவில்லை.  அதோடு பாலவாக்கத்திலிருந்து கிண்டியின் தூரமும் ஒரு சின்ன காரணம் தான். இதையெல்லாம் சிந்தித்தபடி தன்னுடைய அலுவலகத்தை அடைந்த சிவா, வாசலில் நின்ற குமாரைக் கண்டதும், ஹாய் டா என ஓடிச்சென்று கட்டி அணைத்தான்.

 

குமாரும் அவனைக் கட்டி அணைத்துவிட்டு என்னடா உன் ஆளை விட்டு வர மனசு இல்ல போல என்று கேட்க,  யாரடா சொல்ற என சிவா கேட்க, அந்த அருணை தான் சொல்றேன் என்றான் குமார்.

 

டேய் அவன் என்னோட க்ளோஸ் ஃபிரண்டு மட்டும்தான் என சிவா சொல்ல, அப்புறம் ஏன் எனக்கு இன்ட்ரோ கொடுக்க மாட்டேங்குற என குமார் கேட்க,  மூடிட்டு வாடா என்ற சிவா பக்கத்தில் உள்ள அர்புவையும் அழைத்துக் கொண்டு மூன்று பேரும் கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு சென்றனர்.

 

அவர்களோடு இன்னும் சில ஃபிரஷர்ஸ் வந்து அமர்ந்திருந்தனர். உடனே சிவா, டேய் குமாரு இதுல எதெல்லாம் நம்ம பீஸா இருக்கும்னு நினைக்கிற என்று கேட்டான்.  உடனே குமார் சுற்றி முற்றி ஒரு நோட்டம் விட்டு விட்டு மொத்த 12 பேர் வந்திருக்கோம், நம்ம மூணு பேரைத் தவிர்த்தா ஏழு பேரும் நம்ம பீசுங்கன்னு தான் நினைக்கிறேன் என்றான் குமார்.   ஆனா உனக்கு ஏத்த பீசு ஒன்னும் கண்ணுக்கு தெரில என குமார் சொல்ல, ஏன்டா அப்படி சொல்ற என சிவா கேட்டான்.

 

ஆமா எனக்கு தெரியாதா, உனக்கு சும்மா கருகருன்னு இருந்தா தான பிடிக்கும் என்றான் குமார். மூடுங்க ப்ரோ நீங்க என சிவா சொல்ல, அனைவருக்கும் குட் மார்னிங் சொன்னபடி உள்ளே வந்தாள் கவிதா. அவளுக்கு ஃபிரஷர்ஸ் அனைவரும் குட் மார்னிங் சொல்ல, அவள் தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்தாள்.   எல்லோரும் ரெடியா என கவிதா கேட்க, யெஸ் ரெடி என அனைவரும் பதிலளித்தனர்.  ஓகே இந்த கம்பெனியில சில ரூல்ஸ் இருக்கு, அத நீங்க கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்.

 

முதல் விஷயம் காலைல 9 மணிக்கு ஆஃபீஸ் வரதும் ஆறு மணிக்கு வீட்டுக்கு போறதும், ஏன்னா நாங்க ஓவர் டைம் ஒர்க் பண்றதை சப்போர்ட் பண்றது இல்ல.   அதே மாதிரி உங்களோட ஸ்கில்ஸ் டெவலப் பண்ணனும்னு உங்களுக்கு தோணுச்சுன்னா இங்க ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் நம்ம ஜாப் சம்பந்தப்பட்ட கிளாசஸ் எவ்ரி சனிக்கிழமை ஃப்ரீயாவே நாங்க கண்டெக்ட் பண்றோம்.

 

டீஎல்ஸ் கிட்ட சொல்லிட்டு அதை நீங்க அட்டென்ட் பண்ணிக்கலாம். எந்த டீம் தன்னோட வேலைகளை முடிக்க ஓவர் டைம் பண்ண நினைக்கிறார்களோ அவர்கள் 6 டு 9 எக்ஸ்ட்ரா ஒர்க் பண்ணிக்கலாம்.  அவங்களுக்கு டின்னர் கம்பெனியோட செலவு எக்ஸ்ட்ரா சேலரி எல்லாம் கிடையாது, அதுக்காக நான் பண்ண மாட்டேன்னு நீங்க சொல்லவும் முடியாது.

 

உங்க டீம் லீடர் கம்ப்ளைன்ட் பண்ணினா மூணு வார்னிங் கொடுப்போம் அப்புறம் உங்களோட பேப்பர் பீரியடை நாங்களே டிசைட் பண்ணிடுவோம்.  டீம் உள்ள நடக்கிற பிரச்சனைகள் வேற டீமுக்கு தெரியக்கூடாது.  அதே மாதிரி கம்பெனில நடக்கிற பிரச்சனை வேற கம்பெனிக்கு தெரியக்கூடாது.

 

நான் கவிதா இந்த கம்பெனியோட எம்டி இன்னொருத்தர் ரஞ்சித். உங்க டீம் லீடர்ஸ்லாம் கூப்பிடுறேன் என எச்ஆர்-க்கு போன் செய்த கவிதா, இன்னும் ரஞ்சித் வரலையா என்று கேட்க, இல்லை என பதில் வந்தது.

 

தெரிஞ்சது தானே, சரி டீம் லீடர்ஸ் எல்லாரையும் வர சொல்லுங்க என கவிதா சொல்ல, ஏழு பேர் கான்ஃபரன்ஸ் ஹாலின் உள்ளே வந்தனர்.    இவங்க தான் இந்த கம்பெனியோட டாப் மோஸ்ட் டீஎல்ஸ் என்று அறிமுகப்படுத்தினாள் கவிதா.

 

எல்லோருக்கும் ஃபிரஷர்ஸை அலர்ட் பண்ணிய கவிதா, டேய் சரோ சிவலட்சுமி உன்னோட டீம்ல தானே இருந்தா என்று கேட்க, ஆமாம் என தலையசைத்தான் சரோ.  அப்ப நீ சிவாவை உன் டீம்ல வச்சுக்க என்று சொன்னாள் கவிதா.

 

இந்த சிவாங்கிற பெயருக்கும் எனக்கும் ராசி இல்ல போல, டீ எல் ஆன இந்த மூணு வருஷத்துல இது நாலாவது சிவா. வாங்க ப்ரோ நீங்களாவது நிலைச்சு இருக்கீங்களான்னு பாப்போம் என முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினான் சரோ.

 

அவனுக்கு பின்னால் கான்ஃபரன்ஸ் ஹாலை விட்டு வெளியே வந்த சிவாவின் மீது வந்து மோதினான் ரஞ்சித். இடியட் பார்த்து வர மாட்டீங்களா என சிவா ரஞ்சித் நின்று கொண்டு இருந்ததைப் பார்த்தான்.

 

சிவாவின் சீவிய தலைமுடியும், இரண்டு புருவங்களை இணைக்கும் குங்குமப்பொட்டும், தேன் சொறியும் இதழும், அவன் திட்ட வாய் திறக்கும் போதெல்லாம் ரஞ்சித்தைக் களவாடும் முத்துப்போன்ற பற்களும், அவன் சட்டையை முட்டி எட்டி பார்க்கும் மார்பின் காம்புகள், மன்மதன் வடிவமைத்த இடை, அதை பிடித்து நின்ற பிரவுன் கலர் பெல்ட் என ரஞ்சித் சிவாவை ரசித்துக்கொண்டு இருந்தான்.

 

உடனே பின்னால் வந்த கவிதா, நீங்க போங்க சிவா அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த உலகத்துக்கு வந்துருவான் என்று சொல்ல, சிவா சரோவோடு சென்றான்.

 

ரஞ்சித்தின் மார்பைக் கிள்ளி அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தாள் கவிதா. ஸ்…ஸ்..ஆ வலிக்குதுடி என்ற ரஞ்சித்தை கான்ஃபிரன்ஸ் ஹால் உள்ளே அழைத்து சென்றவள்,  ஏன்டா இப்படி வழியுற எனக் கேட்க, அப்படிலாம் ஒன்னும் இல்லையே என்றபடி, என்னடி ஃபர்ஸ்ட் நாளே எல்லாருக்கும் ஒர்க் ஆரம்பிச்சுட்ட போல யாரை யாரோட டீம்ல போட்டு இருக்க என டேபிள் மேல் இருந்த ஃபைலை எடுத்து பார்த்தான் ரஞ்சித்.

 

அடிப்பாவி ஏண்டி இந்த கொலவெறி உனக்கு என்றான் ரஞ்சித். அங்கிருந்த சேரில் அமர்ந்தபடி, நான் என்னடா பண்ணினேன் என கவிதா கேட்க, பின்ன என்னடி சிவாவை டொமஸ்டிக் அஃபைர்ஸ்ல போட்டு இருக்க, நான் இன்டர்நேஷனல் அஃபைர்ஸ்ல பார்க்கிறேன் என்றான் ரஞ்சித்.  நொட்டுவாங்க, ஏற்கனவே உனக்கு என்கிட்ட இருந்த ட்ரெயின்டு பசங்க எல்லாம் கொடுத்தாச்சு, இதுல ஃபிரஸர்ஸ் வேறயா. உன்னோட ஒரே ஒரு டீமுக்கு மட்டும் தான் ஃபிரஷர்  கொடுத்துருக்கேன், அதுவும் அந்த பிலிப்பைன்ஸ் ப்ராஜெக்ட் பண்றவங்களுக்கு. அர்பு ஏற்கனவே இங்கிலீஷ் மீடியம்ல படிச்ச பையன் சோ சீக்கிரமா பிக்கப் பண்ணிப்பான் என்றாள் கவிதா.

 

சரி டி சிவாவை ஏன் சரோ டீம்ல போட்ட என ரஞ்சித் கேட்க, அது ஏற்கனவே சிவலட்சுமிய கோயம்புத்தூர் பிரான்சுக்கு அனுப்பிட்டோம், அண்ட் சரோக்கு ஏழு ப்ராஜெக்ட் இருக்கு, அதுக்கு தான் கொடுத்திருக்கேன் என்றாள் கவிதா.

 

தன்னுடைய டீமுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் சரோ. அவனிடம் நான்கு ஃபிரசர்ஸ் வந்திருக்கிறார்கள். ஏற்கனவே நான்கு பேர் டீமில் இருக்கிறார்கள். லஞ்ச் டைம் எல்லாரும் பேசலாம் என ஃபிரஷர்களுக்கு சில விஷயங்களைச் சொல்லிவிட்டு தன்னுடைய வேலையில் மூழ்கினான் சரோ.

 

மதியம் அனைவரும் லஞ்சு பிரேக்குக்காக ஒன்று கூடினர். அப்போது சரோ தன்னோட டீமில் உள்ள அனைவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னான்.

 

சிவாவின் முறை வந்த போது அவன் பேசத் தொடங்கினான். என்னோட பேரு சிவா நான் தூத்துக்குடியிலிருந்து வரேன. அப்பா 12 வருஷத்துக்கு முன்னால இறந்துட்டாரு, அம்மா லாஸ்ட் மே ல தான் இறந்துட்டாங்க. நோ சிம்பத்தி ஐ அம் ஆல் ரைட். இதை தவிர என்ன பத்தி சொல்லிக்க ஒன்றும் இல்லை என்றான் சிவா.

 

ஓகே புதியதாக வந்த ஃபிரஷருக்காக நான் என்ன இன்ட்ரோ பண்ணிக்கிறேன். நான் சரோ, ஊரு ஸ்ரீவில்லிபுத்தூர், அப்பா, அம்மா, அண்ணா, அக்கா எல்லோரும் இருக்காங்க. சிப்லிங்ஸ் ஆர் மாரிட், நான் வடபழனில ஸ்டே பண்ணி இருக்கேன்.

 

உங்களுக்கு என்ன டவுட்னாலும் என்கிட்ட கேட்கலாம், என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட கேட்கலாம் என்றான் சரோ.  ஓகே என அனைவரும் சாப்பிட்டு விட்டு தங்களுடைய வேலைகளுக்குச் சென்றனர்.

 

மாலை 5:50 மணி அளவில் ஓகே காய்ஸ் நீங்க எல்லாரும் இந்த ஒன் வீக் 6 மணிக்கு வீட்டுக்கு போலாம், நெக்ஸ்ட் வீக் மே பி 3 பேரும் 9 மணிக்கு கிளம்ப வேண்டி வரலாம் என்றான் சரோ.   ஓகே என சிஸ்டமை லாக் அவுட் பண்ணிவிட்டு ஆறு மணிக்கு சரோவோடு சிவாவும் கீழே இறங்கி வந்தான்.

 

அங்கு பைக்கில் இருந்து இறங்கிய ராம், ஹாய் பேபி என சரோவைப் பார்த்து ஓடி வர, ஹாய் என தன் கைகளை சரோ விரிக்க, அவன் கைக்கு கீழாக சென்ற ராம், சரோவின் பின்னால் வந்த சிவாவைக் கட்டி அணைத்தான்.

 

நீ எப்படி இருக்க என சிவாவும் அவனைக் கட்டி அணைக்க, என்ன ஏதுன்னு தெரியாம சரோ முழித்துக் கொண்டிருந்தான்.   சிவாவின் தோளில் கையைப் போட்டபடி சரோவின் அருகில் அழைத்து வந்த ராம், டேய் இது சிவாடா என்னோட ரூம் மேட் அருண் ஓட ஃபிரெண்ட் என அறிமுகப்படுத்தினான்.

 

அவனோட ஃப்ரெண்டு கூட நீ என்ன இவ்வளவு க்ளோசா இருக்க என சரோ கேட்பதில் இருந்து சரோ பொசசிவ் ஆகின்றான் என தெரிந்து கொண்ட சிவா தன்னுடைய தோளில் இருந்த ராமின் கையை எடுத்து அதை முறுக்கி முதுகுக்கு பின்னால் வைத்து இரண்டு குத்து குத்தினான்.

 

ஏன்டா நான் வந்து 20 நாள் ஆச்சு, ஒரு எட்டு பார்க்க வரல இப்ப என்ன சீனா என சிவா கேட்க, டேய் என்னடா என்ன போய் அப்படி நினைச்சுட்ட, நீ வா என சரோவையும் சிவாவையும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஜூஸ் கடைக்குச் சென்றான் ராம்.

 

மூன்று ஜூஸ் என கடையில் ஆர்டர் செய்தவன், உன்கிட்ட அருண் எதுவுமே சொல்லலையா என கேட்டான் ராம்.   என்ன சொல்லல என சிவா கேட்க, டேய் நீ வந்தப்புறம் அவனோட ஆள் வந்து போக இடைஞ்சலா இருக்குன்னு என்னை வர வேண்டாம்ன்னு அவன் தான் சொன்னான்.

 

உனக்காக த்ரி பெட்ரூம் வீடு பார்த்துட்டு இருக்கோம், ஆனா அதுல நிறைய பிரச்சனை வருது என்றான் ராம். ஓஹோ அதான் நைட்டு நம்ம கிட்ட தூங்கலாம் தூங்கலாம்னு அவசரப்படுத்தினான் போல, சரி அவனை டிஸ்டர்ப் பண்ணாம நாமளே கிளம்பிடலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஜூஸை குடித்தான் சிவா.

 

ராம் ஹலோ என சிவாவை அழைத்தபின் சிவா சுய நினைவுக்கு வந்தவன், ஓகே டா எனக்கு புரியுது ஆனா உன்னோட வேலைக்கு நீ எப்படி போயிட்டு வர என்று கேட்க,  அதெல்லாம் நோ ப்ராப்ளம் நான் மேனேஜ் பண்ணிப்பேன் என்றான் ராம். சரி நான் சீக்கிரமா அங்கிருந்து வந்துருவேன், ரொம்ப தூரமா இருக்கு என்றான் சிவா.   சரிடா நாங்க கிளம்புறோம் என சரோ சொல்ல, ஓகே சீனியர் நானும் கிளம்புறேன் என சிவா அங்கிருந்து கிளம்பினான்.

 

அந்த வாரம் முழுவதும் சிவாவுக்கு அலைச்சல் அதிகமாகவே இருந்தது. அருணின் திடீர் மாற்றம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அர்பு மற்றும் குமாரோடு தங்கலாம் என நினைத்தாலும், ஏற்கனவே ஒரு முறை குமார் அர்புக்கு இன்னொருத்தன் வந்தாலே கம்ஃபர்ட் இருக்காதுன்னு சொல்றான் எனச் சொன்னது நினைவுக்கு வந்தது.

 

அந்த வாரத்தின் கடைசி நாள் சிவா மெரினா சென்றிருந்தான். கடவுளே என்னால ஏன் அருண் ராம்ன்னு எல்லோரும் கஷ்டப்படணும், நான் யாருக்கும் பிராப்ளம் இல்லாம இருக்கவே முடியாதா என்று எண்ணிக் கொண்டிருக்க, சீனியர் என்ற சத்தம் கேட்டு திரும்பினான் சிவா.

 

அவன் எதிரில் சுந்தர் நின்று கொண்டிருந்தான். டேய் வாடா ஜூனியர் என்ன பண்ணிட்டு இருக்க என சிவா கேட்க, தன்னோடு வந்த நண்பர்களிடம்  நான் சொல்லி இருக்கேன்ல என்னோட சிவா, இல்ல இல்ல  என்னோட சீனியர் சிவா என்ற சுந்தர் சொன்ன உடனே அவர்கள் அவனுடைய தோளைத் தட்டி ஏதோ சொல்லிச் செல்ல, சுந்தர் சிவாவின் அருகில் அமர்ந்தான்.

 

என்னடா உன் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் போறாங்க என்றான் சிவா. அவங்களை விடுங்க சீனியர் நீங்க எப்படி இருக்கீங்க என்று கேட்டான் சுந்தர்.  ஓகே தான்டா என சிவா சொல்ல, உங்க ஓகேவே சரியில்லயே சீனியர் என்ற சுந்தரிடம், என்னை விடு உன்னைப் பற்றி சொல்லு கேட்கலாம் என்றான் சிவா.  தன்னுடைய இரண்டு வருட கதையைச் சொல்லி முடித்தான் சுந்தர். யார் கூடவும் கமிட்டாகவே இல்லையா நீ எனக் கேட்டான் சிவா.

 

நீங்க ஓகே சொன்னா இப்பவே உங்க கூட ஆகுறேன் என்றான் சுந்தர். இன்னும் அப்படியே இருக்கியேடா என்றான் சிவா.  வாங்க சீனியர் என்னோட ரூமுக்கு போகலாம் என்றான் சுந்தர்.  இல்லடா நான் எதுக்கு என சிவா சொல்ல, சீனியர் உங்க கற்பு என் கூட இருக்கும்போது பாதுகாப்பா இருக்கும் கவலைப்படாதீங்க என்ற சுந்தரைப் பார்த்து சிரித்தபடி அவனோடு சிவா சென்றான்.

 

என்ன அந்த சிவாவைப் பார்த்ததும் ஓவரா இளிக்கிற என சரோ கேட்க, இங்க பாரு அவன் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது, ரொம்ப நல்ல பையன். நான் லாஸ்ட் டைம் அவனைப் பார்க்கும்போது அவனுடைய காதலுக்காக எதையும் செய்ய தயாரா இருக்கிறவனா பார்த்தேன். ஆனா இப்போ அவன் வாழ்க்கையில அந்த காதலே இல்ல என்றான் ராம்.  அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை, அவனுடைய லைஃப்ல என்ன நடக்குதுனு எனக்கு தெரியாது, ஆனால் என்னோட லைஃப்ல அவனால எதுவும் நடக்காம இருந்தா ஓகே தான் என்றான் சரோ.  உன்கிட்ட எதுவும் பேசி ஒன்னும் ஆகப் போறது இல்ல என்றபடி பைக்கை ஓட்ட தொடங்கினான் ராம்.

 

தன்னுடைய பெட்டில் படுத்திருந்தபடி சிவாவைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருந்தான் ரஞ்சித்.  அப்போது அவன் அருகில் வந்த பிரசாத் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்து காம மயக்கத்திற்கு அழைத்துச் சென்றான். இருவரின் உடல்களும் ஒன்றோடு ஒன்று இணைய, காம மயக்கத்தின் உச்சத்தில் தன்னை மறந்து ப்ளீஸ் சிவா இன்னும் நல்லா என்ற வார்த்தையை ரஞ்சித் உதிர்த்தான்.

 

உடனே அவனை விட்டு விலகிய பிரசாத் ரஞ்சித்தை முறைத்துப் பார்த்தபடி தன்னுடைய உடைகளை அணிந்து கொண்டு வெளியேறினான்.

 

 

– வருவான்…

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன