ஏன்டா இவ்வளவு பெரிய வீட்டுல தனியாவா இருக்க என சுந்தரின் வீட்டைச் சுற்றிப் பார்த்தபடி சிவா கேட்டான். ஆமா சீனியர் அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சி எல்லாரும் திருச்சி போயிட்டாங்க. நான் என்னோட காலேஜ்க்காக இங்கேயே தங்கிட்டேன் என்றான் சுந்தர்.
பரவால்லடா வீட்ட சுத்தமா வச்சிருக்க எனச் சொல்லிக்கொண்டு சுந்தரின் பெட் ரூமுக்குள் சென்ற சிவா அதிர்ச்சி அடைந்தான். அந்த அறையில் சிவாவின் போட்டோக்கள் நிறைய காணப்பட்டது.
சுந்தர் சிவாவின் காலேஜில் ஒரு வருடம் தான் படித்தான். அந்த ஒரு வருடத்தின் போட்டோக்கள் மட்டுமின்றி சுந்தர் அந்த கல்லூரியை விட்டு சென்ற பின்னும் கூட சிவாவின் போட்டோக்களைத் தன்னுடைய நண்பர்களிடம் இருந்து வாங்கி வைத்திருக்கிறான்.
அப்போது அந்த அறையில் காபி கோப்பையோடு நுழைந்த சுந்தர், சாரி சீனியர் உங்களுக்கு தெரியாம உங்க போட்டோவ நான் வாங்குனதுக்கு என்றபடி சிவாவின் கையில் காபியைக் கொடுத்தான் சுந்தர். இந்த போட்டோவைப் பாருங்களேன், நீங்க மூணாவது வருஷம் நம்ம காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல கவிதை சொன்னப்போ எவ்வளவு அழகா இருக்கீங்க பாருங்க.
இது உங்க இன்டர்வியூ அப்போ எடுத்தது. முதல் தடவை உங்கள ஃபார்மல் டிரஸ்ல பார்த்து நான் செமையா மயங்கிட்டேன். அந்த நேவி ப்ளூ கலர் ஷர்ட் உங்களுக்கு அவ்வளவு சூட் ஆகுது என்ற சுந்தரையே பார்த்துக் கொண்டிருந்த சிவாவை சுயநினைவுக்கு கொண்டு வந்த சுந்தர், என்னாச்சு சீனியர் என்று கேட்டான்.
டேய் சுந்தர் நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன், எனக்கு உன் மேல அந்த மாதிரி என சிவா சொல்ல வருவதைச் சொல்லி முடிக்கும் முன் சுந்தர் பேசத் தொடங்கினான்.
உங்களுக்கு என் மேல காதல் ஃபீலிங் வரல, இனிமேலும் வருமான்னு தெரியல, ரகு உங்கள காதலிக்கவே இல்லைன்னு சொல்லிட்டாரு. அம்மா இறந்துட்டாங்க, சிவலட்சுமி அக்காவோட வாழ்க்கைல ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்கள், அப்படி இப்படின்னு இப்போதைக்கு உங்களால காதல் பத்தி எல்லாம் யோசிக்க முடியாது கரெக்டா என்றான் சுந்தர்.
அப்புறம் ஏன்டா இதெல்லாம் என சிவா கேட்க, இது என்னோட அன்கண்டிஷனல் லவ் சீனியர். எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், அதுக்காக உங்களுக்கும் என்னை பிடிக்கணும்னு தேவையில்ல. என்னோட இந்த பாசம் உங்க கூட படுக்கையை ஷேர் பண்ணதுனால வந்ததுன்னு நினைச்சா நீங்க தப்பு, நம்மளோட முதல் மீட்டிங் உங்களுக்கு ஞாபகம் இருக்கா சீனியர் என சுந்தர் கேட்க ஆமா என தலையாட்டினான் சிவா.
நீங்க ஜி.ஆர்ல வர சொன்ன பையன் நான் இல்ல அது உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டான் சுந்தர். என்னடா சொல்ற என சிவா கேட்க, என்னை பத்தி உங்களுக்கு நிறைய தெரியாது சீனியர் நான் சொல்றேன் கேளுங்க.
எங்க அப்பாவுக்கு ஏற்பட்ட எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபயர்னால பொறந்தவன் நான். என்னோட அம்மா எனக்கு 11 வயசுல இறந்துட்டாங்க. என்னோட அப்பா ரொம்ப கெட்டவனெல்லாம் இல்ல. அவரோட சொந்தக்காரங்க வீட்டு பக்கத்துல உள்ள ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து என்ன பாத்துக்கிற பொறுப்ப அவங்க கிட்ட கொடுத்தார்.
எனக்கு பண விஷயத்துல என்னைக்கும் அவர் விட்டுட்டு போனதில்ல, ஆனா என்னோட பாதுகாப்புக்காக இருந்தவங்க வீட்ல உள்ள அவங்க பையன் அவனுடைய தாழ்வு மனப்பான்மைக்கு என்னை இறையாக்கினான்.
என்னோட ஃபோட்டோவ உங்களுக்கு அனுப்பி என்னை உங்க கூட படுக்கவும் அனுப்பினான். அதுக்கு முன்னாலையும் அப்படி எல்லாம் பண்ணி இருக்கான். நான் வெளியே சொன்னா எனக்கு இருக்கிற ஆண்கள் மீதான ஈர்ப்பு பத்தி வெளிய சொல்லிடுவேன்னும் மிரட்டுவான். அப்படி அவனோட கட்டாயப்படுத்துதல் காரணமா தான் நான் உங்கள மீட் பண்ண வந்தேன்.
ஆனா உங்களோட நான் இருந்த அந்த ஓர் இரவு என்னுடைய வாழ்க்கையை மாத்திடுச்சு. நீங்க எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தீங்க. எப்படி உங்க வாழ்க்கை உங்கள பாடாய் படுத்துச்சு, அதுல இருந்து எப்படி தைரியமா மீண்டு வந்தீங்கன்னு என்கிட்ட சொன்னீங்க. என்ன அவ்வளவு நல்லா யாருமே அதுக்கு முன்னால பாத்துக்கிட்டதில்ல சீனியர். இன்னொரு விஷயம் என்னை நீங்க சின்ன பையனா நினைக்கிறீங்க, நான் உங்கள விட ரெண்டு வயசு மூத்தவன், பார்க்க சின்ன பையன் மாதிரி இருப்பேன்.
உங்களுக்காக தான் ஆர்ட்ஸ் காலேஜ்ல செகண்ட் இயர் படிச்சிட்டு இருந்தவன் இன்ஜினியரிங் காலேஜ் வந்து சேர்ந்தேன். அப்புறம் ஏன்டா சென்னை வந்தன்னு நீன்னு நீங்க கேட்கலாம். நீங்க உங்களோட காதலை அடைய நிறையவே முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தீங்க.
அதான் நான் இருந்தா அது உங்கள இன்னுமே கஷ்டப்படுத்தும். அது மட்டும் இல்லாம கடைசியா நீங்க என்கிட்ட பேசும்போது எனக்கு உன் மேல வெறும் காம உணர்வு மட்டும் தான் இருக்குன்னு சொன்னீங்களா, அதை என்னால தாங்கிக்க முடியல. சோ உங்கள டிஸ்டர்ப் பண்ணி என்னை நான் கஷ்டப்படுத்திக்கிறதுக்கு உங்கள விட்டு தூரமா போனா உங்க காதலாவது உங்களுக்கு கிடைக்கும்னு தான் இங்க வந்துட்டேன்.
என்னோட அம்மாவோட வீட்ட வித்துட்டு, அப்பா மூலமாக இந்த ஃபிளாட்டை வாங்கினேன். அப்பாக்கு டிரான்ஸ்ஃபர் எல்லாம் அப்போ ஆகல, இப்ப போன வருஷம் தான் ஆனார். அவரோட வாழ்க்கையில அவர் பிசியா இருக்காரு, நான் என்னோட வாழ்க்கையில என சுந்தர் சொல்லி முடிக்கும் போது சிவா ஓடிச் சென்று அவனைக் கட்டி அணைத்தான்.
இவ்வளவு கஷ்டத்தையும் உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு நான் உன்ன வேண்டாம்னு சொன்னதையும் தாங்கிக்கிட்டு எப்படிடா இருந்த நீ. என்னால முடியல சுந்தர் நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் இந்த உலகமே என்னை நிராகரிக்கிற மாதிரி இருக்குடா. நான் என் வாழ்க்கையில எதை நோக்கி போறேன், என்ன பண்ண போறன்னு எனக்கு எதுவுமே தெரியல டா என தன்னுடைய வாழ்வின் துயரங்களைச் சொல்லிக் கதறி அழுதான் சிவா.
அவன் அழுவது எல்லாம் கேட்டு தன்னுடைய மனதில் அவனுடைய வாழ்க்கை நல்லபடியாக மாறனும் என்கிற வேண்டுதலோடு அவனைக் கட்டி அணைத்து நின்று கொண்டிருந்தான் சுந்தர். சிவா முழுவதுமாக தன்னுடைய மனப்பாரம் எல்லாம் சொல்லி அழுது முடித்ததும், சிவாவும் சுந்தரும் சாப்பிட்ட பிறகு சுந்தரின் வீட்டிலேயே சிவா தூங்கினான்.
மறுநாள் கவிதா சொன்னது போல ஆஃபீஸ்ல உள்ள கிளாஸ் அட்டென்ட் பண்ணலாம் என நினைத்தபடி எழுந்த சிவா தன்னுடைய அருகில் சுந்தர் இல்லாததால் எழுந்து வெளியே வந்து பார்க்க சுந்தர் ஹாலில் உள்ள சோஃபாவில் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவனுக்கும் சேர்ந்து காபியைப் போட்டுவிட்டு வந்த சிவா அவனை எழுப்பினான். என்ன டா இங்க தூங்குற எனக் கேட்டான் சிவா. அதற்கு சுந்தர், இல்ல சீனியர் இன்னைக்கு காலேஜ் டிரிப் போறோம் நேத்து நைட்டு ரொம்ப நேரம் நீங்க தூங்குனதுக்கு அப்பறம் பேக்கிங் பண்ணினேன், அப்படியே இங்க தூங்கிட்டேன் என்றான் சுந்தர்.
சரிடா, எங்க போற என சிவா கேட்க, ஆந்திரா சைடுல சீனியர் என்ற சுந்தர் தன்னுடைய வேலையைப் பார்க்கத் தொடங்கினான். சிவாவும் கிளாசுக்கு கிளம்பினான்.
கவிதாவின் மூலம் சிவா வந்திருப்பதை அறிந்து கொண்டு ரஞ்சித்தும் அன்றைய கிளாஸ்க்கு வந்தான். கிளாஸ் முடிந்து அனைவரும் செல்லும் போது சிவாவை ஹாய் என்று அழைத்த கவிதா அவனைத் தன்னுடைய கேபினுக்குள் வரச்சொன்னாள். அங்கு நுழைந்த சிவா, ஏற்கனவே ரஞ்சித் அங்கு இருப்பதைப் பார்த்து அவனுக்கு விஷ் செய்துவிட்டு சேரில் அமர்ந்தான்.
என்ன சிவா லைஃப் எல்லாம் எப்படி போகுது, சென்னை உனக்கு செட் ஆகிடுச்சா இல்லையா என கவிதா கேட்டுக்கொண்டே சிவாவின் முன்னால் காபி கோப்பையை நீட்டினாள். அதை வாங்கிக் கொண்ட சிவா, எல்லாமே ஓகே என்று சொல்லிட முடியாது சீனியர், சீக்கிரமா ஓகே ஆகணும்னு நானும் நினைக்கிறேன் என்றான்.
ஆனா அதுக்காக நீ எவ்வளவு நாள் இப்படியே இருக்க முடியும் என்றாள் கவிதா. எனக்கு அது ஒரு வலி தான் சீனியர், ஆனா இப்ப என்னோட பிரச்சனை அது இல்ல என சிவா சொல்லவும், உனக்கு பிராப்ளம் என்னனு நீ சொல்லு நாங்க முடிஞ்ச ஹெல்ப் பண்றோம் என்றாள் கவிதா.
எனக்கு தங்குவதற்கு இடம் தான் பிரச்சனை. தனியா தங்க என்கிட்ட பைசா இல்லாம இல்ல. எனக்கு நிறைய நைட்மேர்ஸ் எல்லாம் இருக்கு சீனியர், தனியா படுத்தா எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு என்ற சிவா அருகில் இருந்த கவிதாவை இடுப்போடு கட்டி அணைத்துக் கொண்டு செத்திடலாம்னு தோணுது சீனியர் என்றதும் ரஞ்சித்தை ஏறெடுத்து பார்த்த கவிதாவின் கண்களும் கண்ணீரால் நிரம்பி இருந்தது.
சிவா தன்னுடைய பேச்சை தொடர்ந்தான். என் நண்பன் அருண் பாலவாக்கம் சைடுல தான் இருக்கான், ஆனா அவனோட லைஃப்ல பெரிய பிரச்சனைகள் இருக்கு, அதுல நானும் அவனைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். என்னுடைய ஜூனியர் ஒருத்தன் என்கூட இருக்கலாம் வாங்கன்னு கூப்பிட்டான். நானும் அங்க போனேன் ஆனா என அன்று காலை சுந்தர் வீட்டில் நடந்ததைச் சொன்னான் சிவா.
காலையில நான் ஆஃபீஸ்க்கு கிளம்பி கீழ வந்தப்போ அங்க இருந்த வாட்ச்மேன் கிட்ட ஒரு பையன் பேசிட்டு இருந்தான். அவன் என்னோட ஜூனியர் பெயரைச் சொல்லிப் பேசிட்டிருந்தான். அவன கூப்பிட்டு சுந்தர் மேல தான் இருக்கான்னு சொன்னேன். உடனே அவன் நீங்க யாருன்னு கேட்டான். நான் பேசத் தொடங்கும் முன் ப்ளீஸ் சிவான்னு மட்டும் சொல்லாதீங்க என்றான் அவன்.
ஏன் என நான் கேட்க, ப்ரோ இந்த பெயரைக் கேட்டாலே சுந்தர் பைத்தியம் ஆகிடுவான். அந்த பெயர் உள்ள பர்சன்னால தான் நான் ரெண்டு வருஷமா ப்ரொபோஸ் பண்ணியும் அவன் ஒத்துக்க மாட்டேங்கிறான் அப்படின்னு சொன்னான்.
அப்போ நீங்க டேட் பண்றீங்களா என்று நான் கேட்டேன். உடனே அந்த பையன் அப்படித்தான் என்னை சமாதானப்படுத்தி வச்சிருக்கான் சுந்தர் என்று சொல்கிறான். என்னுடைய ஜூனியர் மேல எனக்கு எந்த ஃபீலிங்ஸும் இல்ல, இனிமேலும் நான் அவனுக்கு ஹோப் கொடுக்க முடியாது என்றவன் கவிதாவை விட்டு பிரிந்தான்.
சிவாவின் முன்னால் வந்த கவிதா சிவா எனக்கு புரியுது, உன்னோட வாழ்க்கையில இழக்க கூடாத ஒன்றை நீ இழந்திருக்க, நான் பிஜில தான் இருக்கேன் என கவிதா சொல்லிக் கொண்டிருக்க, என்னோட ரூம் இருக்குன்னு சொல்லு என ரஞ்சித் சொல்ல அவனை முறைத்து பார்த்துவிட்டு கவிதா, நாளைக்கு சண்டே மட்டும் எனக்கு டைம் கொடு நான் என்னோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு சொல்றேன் என்றாள்.
ஓகே சீனியர் நான் கிளம்புறேன் என சிவா கிளம்பினான். அவன் சென்ற பின், ஏன்டி கிராதகி அவன் கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல என்றான் ரஞ்சித். ஏன் நான் சொல்லணும் உன்னோட ஃப்ளாட்ல அந்த பையன் பெயர் என்ன பிஞ்சுவா குஞ்சுவா, ஏதோ ஒருத்தன் கூட தானே இருக்க என்றாள் கவிதா. அவனைக் கழட்டி விடறது பெரிய விஷயம் இல்ல என்றான் ரஞ்சித்.
அப்ப நீயே சிவாவைப் பேசி கூப்பிடு என்று கவிதா கூற, சரி ஓகே நான் பாத்துக்குறேன் என ரஞ்சித் சிவாவின் பின்னால் ஆஃபீஸை விட்டு வெளியே வந்தான். ஹாய் சிவா என ரஞ்சித் கூப்பிட ஹாய் சீனியர் என்ற சிவா நிற்காமல் நடக்கத் தொடங்கினான்.
நீ என்னோட ஃப்ளாட்டுக்கு வேணும்னா வந்துரு என ரஞ்சித் சொல்ல நடந்து கொண்டிருந்த சிவா சற்று நின்றான். சீனியர் தொடச்சிக்கோங்க என்று சொல்ல என்னடா எனத் தன்னுடைய தலையையும் துணியையும் பார்த்த ரஞ்சித் சிவாவைப் பார்க்க, ஜொல்லு நிறைய வடியுது தொடைங்கன்னு சொன்னேன் சீனியர் என மீண்டும் நடக்கத் தொடங்கினான் சிவா.
ஹலோ ஜூனியர் நீங்க என்ன கேரக்டர் அசாசினேட் பண்றீங்க என்றான் ரஞ்சித். உடனே சிவா, அப்படியா நீங்க எப்படிப்பட்டவர் என்று என்னை இண்டர்வியூ எடுக்க வந்த அன்னைக்கே தெரியும். இந்த கம்பெனில ஜாயின் பண்ண ஒன் வீக்ல இன்னும் நல்லாவே புரிஞ்சுகிட்டேன் என்ற சிவாவின் கையைப் பிடித்து நிறுத்தினான் ரஞ்சித். இங்க பாருங்க ஜூனியர் நீங்க ரொம்பவே என்னைக் காயப்படுத்துறீங்க என்னோட கண்ணெல்லாம் கலங்குது எனக் கண்ணை கசக்கிய ரஞ்சித்தைப் பார்த்து, சீனியர் அர்பன்ஸ்கொயர் வந்துருச்சு வாங்களேன் ஏதாவது சாப்பிட்டுகிட்டே உங்க பத்தினி தன்மையைப் பத்தி பேசலாம் என்றான் சிவா.
ஓகே என இரண்டு பேரும் கேஎஃப்சிக்குள் சென்று தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டு அமர்ந்தனர். இப்ப சொல்லுங்க ஜூனியர் என்னோட கேரக்டரை அசாசினேட் பண்ணினதுக்கு சாரி என ரஞ்சித் சொல்ல, நான் ஏன் சாரி கேக்கணும் உங்களோட கேரக்டர் பத்தி சொல்லுறேன் அதுக்கு அப்புறம் நாம சாரி கேட்கிறதை பத்தி பேசலாமே என சிவா ஆர்டர் செய்த பர்கரை சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்கினான்.
என்னோட இன்டெர்வியூ அப்போ என்கிட்ட நீங்க பண்ணுன ஃப்ளர்ட் பத்தி சொல்லவா, இல்ல ஓப்பனிங் அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் கார் இருந்தும் என்னோட பின்னால நடந்து வர்றீங்களே அதை சொல்லவா? நான் என்னோட டெஸ்க்ல இருக்கனான்னு ஒரு நாளைக்கு நீங்க நாலு தடவை பாக்குறது, டீ காபி குடிக்கிற பழக்கமே இல்லாத நீங்க டீ டைம்ல நான் போறேன்னு அதே கடைக்கு வரீங்க, நான் ஜிஆர்ல உங்க கூட பேசலன்னு ஏகப்பட்ட ஃபேக் ஐடியில வரீங்க இதெல்லாம் போதாதுன்னு டின்டர்ல உங்கள ரைட் ஸ்வைப் பண்ணலேன்னு ஏகப்பட்ட தடவ எனக்கு ரைட் ஸ்வைப் கொடுக்குறீங்க, என்னோட ப்ராஜெக்ட்ல மட்டும் ஒரு வாரத்துல உங்களுக்கு பத்து தடவைக்கு மேல டவுட் வந்து இருக்கு.
ஆனா என்னோட டி எல் சொன்னா புரியாத ப்ராஜெக்ட், வந்து ஒரே வாரத்துல நான் சொல்லி புரிஞ்சிருச்சா என்ற சிவாவிடம், உங்களோட திறமைய நீங்களே குறைத்து மதிப்பிடுறீங்க ஜூனியர் என்றான் ரஞ்சித்.
அதெல்லாம் விட ஆஃபீஸ்ல அண்ட் பாத்ரூம்லன்னு நிறைய இடத்தில கண்ணாடி இருக்கும், அது கூட தெரியாம உங்க கண்ணாலேயே என்னை கற்பழிக்கிறத நிறுத்துங்க சீனியர் என சிவா நடக்கத் தொடங்கினான். என்ன இவன் நம்மள இப்படி திணறடிக்கிறானே என நினைத்த ரஞ்சித் சிவாவின் முன் சென்று அழக ரசிக்கிறதுல தப்பில்லன்னு எனக்கு தோணுது ஜுனியர் என்றான்.
சிவாவின் கையில் ஒரு பேப்பரை கொடுத்து இது என்னோட அட்ரஸ் உங்களுக்காக என்னோட வீடு எப்போதும் திறந்தே இருக்கும் என்றபடி ரஞ்சித் அங்கிருந்து சென்றான்.
மறுநாள் ஞாயிறு இரவு 11 மணியளவில் ரஞ்சித் வீட்டின் காலிங் பெல் அடிக்க, யார்ரா இந்த நேரத்தில எனக் கதவைத் திறந்த ரஞ்சித்தின் முன்னால் மழையில் நனைந்தபடி சிவா நின்றான்.
– வருவான்…
