சிவா கண்களைத் திறந்த போது ரஞ்சித்தின் வீடு மாறி இருந்தது. பார்க்கவும் சகிக்காத நேற்றைய சோஃபா இன்று கண்களைக் களவாடும் புதிய சோஃபாவாக மாறி இருந்தது. வரவேற்பறையில் இருந்த அவனுடைய பழைய சாமான்களில் சில தூசி தட்டப்பட்டு இருந்தது, சில புதியதாக மாற்றப்பட்டிருந்தது.
மெதுவாக சிவாவைத் தன்னுடைய படுக்கையறைக்கு அழைத்து சென்றான் ரஞ்சித். அங்கு ஏற்கனவே இருந்த சின்ன படுக்கையை மாற்றிவிட்டு கிங் சைஸ் படுக்கையாக மாற்றி இருந்தான் ரஞ்சித். அவனுடைய படுக்கையறை முழுவதுமாக மாறி இருந்தது. அதைப் பார்த்த சிவா ரஞ்சித்தைப் பார்த்து என்ன இதெல்லாம் என்று கேட்டான்.
அது வந்து என சற்று தயங்கிய ரஞ்சித், தன்னுடைய தொண்டையைச் சரி செய்து கொண்டு, உன்னோட சீனியரா எனக்கு சில கடமைகள் இருக்கு அதுல ஒன்னு உனக்கு கம்ஃபர்ட்டான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கிறது. அதனால தான் என்னோட ரூமை கொஞ்சம் மாத்தி இருக்கேன். ரெண்டு சிங்கிள் பெட் போட்டா ரொம்பவே ப்ளேஸ் இல்லாம போயிரும் அதான் ஒரே கிங் சைஸ் பெட் போட்டு இருக்கேன்.
உன்னோட கண்ணியத்துக்கு எந்த பங்கமும் வராமல் நான் பார்த்துப்பேன் டோன்ட் வொரி, உனக்காக எக்ஸ்ட்ரா ஒரு லாக்கர் இங்க அட்டாச் பண்ணி இருக்கேன், கொஞ்சம் கிச்சனையும் சரி பண்ணி இருக்கேன் என்றான் ரஞ்சித்.
உடனே, சீனியர் எனக்காக ஏன் இதெல்லாம் நீங்க பண்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? என சிவா கேட்க, அது வந்து என ரஞ்சித் ஏதோ சொல்ல தயங்க, இட்ஸ் ஓகே நான் எதுவும் கேட்கல என சிவா படுக்கையறையை விட்டு வெளியேறத் தொடங்கினான்.
ஏன்னா ஐ அம் கே சிவா என்றான் ரஞ்சித். அதிர்ச்சி கலந்த சிரிப்போடு சிவா திரும்பினான். என்ன சொல்றீங்க என சிவா ரஞ்சித்தை நோக்கி கேட்க, ஆமா நான் ஒரு மகிழ்வன். என்னோட வாழ் நாள்ல கிட்டத்தட்ட 13 வருஷமா நான் தனியா இருக்கேன். என்னைக்காவது எனக்குன்னு ஒரு பார்ட்னர் வருவாங்கன்னு ஆரம்பத்துல ரூம் மேட்டாக வர இருந்தவங்களையும் என்னோட செக்ஸுவல் ஓரியண்டேசன் பத்தின இன்செக்யூரிட்டில நான் வேண்டாம்ன்னு சொன்னேன்.
காலம் போகப் போக என்னோட ஒரியண்டேஷனால மத்தவங்க என்னை விட்டு விலகிப் போக ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள இருந்த ஹோப் கரைய ஆரம்பிச்சது. என் கூட ரூம் மேட்டா இருக்க ஒருத்தர் இருந்தா போதும்னு நினைக்கும்போது திரும்பி பார்த்தா யாருமே என் கூட இல்லடா.
நீ ஒன்னா இருக்க சம்மதிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு ஹாய் சொல்ல, குட் மார்னிங் குட் நைட் சொல்ல, எனக்கு தலை வலிக்குது ஒரு காஃபி போட்டு தரியான்னு கேட்க கூட ஒருத்தர் இல்லாத சமயத்துல நீ என்கூட தங்க ஒத்துக்கிட்டது எனக்கு ரொம்பவே சந்தோஷம் என்றான் ரஞ்சித்.
அவன் சொல்வதை நம்புமாறு ரஞ்சித்தின் கன்னத்தில் கோடிட்டு கெஞ்சியது கண்ணீர். சிவா தன்னையும் அறியாமல் ரஞ்சித்தின் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, உனக்குன்னு லைஃப்ல ஒருத்தர் வரவரைக்கும் நான் கண்டிப்பா உன் கூட இருப்பேன் என்றான். தேங்க்யூ என ரஞ்சித் சொல்ல, ஆனா எனக்கு சில ரூல்ஸ் இருக்கு என சிவா சொன்னான்.
என்ன ரூல்ஸ்னாலும் எனக்கு ஓகே என்றான் ரஞ்சித். சீனியர் நான் சொல்றத கேளுங்க முதல்ல என்ற சிவா தொடர்ந்தான். நீங்க உங்களோட செக்ஸுவல் பார்ட்னர்ஸ் யாரையும் இங்க கூட்டிட்டு வரக்கூடாது, நானும் கூட்டிட்டு வர மாட்டேன். நான் வெளியூருக்கு போனா நீங்க உங்க இஷ்டத்துக்கு இருக்கலாம், ஆனா நான் சென்னையில் இருக்கும் போது அந்த மாதிரி யாரும் வரக்கூடாது.
நான் ரெண்ட் தரேன்னு சொன்னா உங்களுக்கு ஓகேவா என சிவா கேட்க, நோ என்பதாக தலையாட்டினான் ரஞ்சித். அப்போ சாப்பாட்டு செலவு என்னோடது, எக்ஸப்ட் யுவர் ப்ரோட்டீன் பவுடர் என சிவா சொல்ல, இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும் என்பது போல ரஞ்சித் பார்த்தான். எஸ் ஐ நோ தட்ஸ் கொயட் எக்ஸ்பென்சிவ், வீக்லி ஒன்ஸ் நான் வீட்டை ஃபுல்லா சுத்தம் பண்ணுவேன் நீங்களும் என் கூட அதைப் பண்ணனும் என்றான் சிவா.
ஓகே என தலையசைத்தான் ரஞ்சித். சரி என சிவா பெட்டில் படுத்தான், என்ன ஆச்சு என ரஞ்சித் கேட்டான். லைட்டா தல சுத்துது என சிவா சொல்ல, ஐயோ நான் டாக்டருக்கு கால் பண்ணவா என ரஞ்சித் கேட்க, சீனியர் இது கொஞ்சம் ஓவரா இருக்கு முடிஞ்சா ஒரு பிளாக் காஃபி போட்டு குடுங்க போதும் என்றான் சிவா.
சிவா கேட்டவுடனேயே ரஞ்சித்தும் அவனுக்கு காஃபி போட்டு கொடுத்துவிட்டு படுக்கையின் மறுமுனையில் அமர்ந்தான். சிவாவை வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித், நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா என்று கேட்டான். அதை சற்றும் எதிர்பாராத சிவா சற்று இருமிக்கொண்டே ஏன் திடீர்னு இந்த கேள்வி என கேட்க, சும்மா தான் இவ்வளவு அழகா இருக்க, அறிவா பேசுற எப்படியும் உன்னை யாராவது லவ் பண்ணி தானே இருப்பாங்க என்று கேட்டான் ரஞ்சித்.
நான் லவ் பண்ணினேன் அவங்க பண்ணாங்களான்னு எனக்கு தெரியாது என்றான் சிவா. என்னடா சொல்ற உனக்கே ஓகே சொல்லலையா என்று கேட்க, இல்ல அவங்களுக்கு ரீசண்டா கல்யாணம் ஆயிடுச்சு என்றான் சிவா. பிறகு தன்னுடைய உடைகளை எடுத்து சிவா அடுக்கி வைக்க சென்றான்.
சிவாவின் காதல் ஒருதலையானது என எண்ணிக் கொண்ட ரஞ்சித், அவன் மீது கருணை கொண்டான். இட்ஸ் ஓகேடா எல்லாம் சரியாகிவிடும் உடையாத வரை இந்த இதயத்தை இதயம் என்றே சொல்வதில்லை யாரும், காதல்களிலேயே இந்த ஒரு தலை காதல் எவ்வளவு சுகமானதோ அவ்வளவு வலி மிகுந்ததும் கூட என ரஞ்சித் உச்சி கொட்டினான்.
ஹலோ என்னோட லவ் ஒன் சைடுன்னு யார் சொன்னா என்றான் சிவா. அப்ப டபுள் சைடா அப்புறம் என்ன பிராப்ளம், இந்த பொண்ணுங்களே இப்படித்தான் உருகி உருகி காதலிப்பாங்க ஆனா பெத்தவங்க முன்னால உண்மையை என்னைக்கும் ஒத்துக்க மாட்டாங்க என்ன தான் வேலையோ இது என ரஞ்சித் புலம்பினான். ஹலோ இதெல்லாம் கொஞ்சம் உனக்கு ஓவரா தெரியல என சிவா கேட்க, சாரிடா என்னதான் இருந்தாலும் உன்னோட காதல் பற்றி நான் பேசுறது அநாகரீகமானது தான் என்றான் ரஞ்சித்.
சிவா தன்னுடைய உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். உடனே, நான் போய் நைட்டுக்கு சமைக்கிறேன் என சமையலறையை நோக்கி சென்றான் ரஞ்சித். அவன் சென்ற திசையை நோக்கி சிரித்த சிவா ஓவர் ஆக்டிவா இருக்கானே என மனதில் நினைத்துக் கொண்டு தன்னுடைய உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.
அருண்… அருண்… என ராமின் குரல் கேட்டு கண்விழித்த அருண், என்னடா சொல்லு என்று கேட்க சிவா சொன்ன மற்ற விஷயங்களைப் பற்றி என்ன நினைக்கிறியோ தெரியல டா ஆனா உனக்கு இப்ப தேவை பார்ட்னர் இல்ல தெரபிஸ்ட் தான் என்றான் ராம். உடனே, எனக்கு புரியுதுடா நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன் என்ற அருண், நா ஒன்னு சொல்லவா என்று கேட்க, சொல்லுடா என்றான் ராம்.
நாம ஏன் கோயம்பேடு பக்கம் ரூம் பாத்து போக கூடாது எனக் கேட்டான் அருண். டேய் உனக்கு ஒர்க் கு ரொம்ப கஷ்டமா இருக்குமே என ராம் கூற, இல்லடா நான் பேப்பர் போட போறேன் கொஞ்சம் சேவிங்ஸ் என்கிட்ட இருக்கு ஒரு ஒன் இயர் என்ன நான் நல்லா கவனிக்கணும்னு நினைக்கிறேன் என்று அருண் கூற, சரிடா உன்னோட பேப்பர் பீரியட் முடியறதுக்குள்ள நம்ம வீடு தேடலாம் என்றான் ராம்.
நான் ஆஃபீஸ் போயிட்டு வரேன் டா என்று சொல்ல சோகம் நிறைந்த முகத்தோடு கண்களை மூடினான் அருண். அவன் நினைவில் சுதன் குடியேறினான். இரவு உணவுக்காக ரஞ்சித் சமைத்து விட்டு சிவாவைச் சாப்பிட அழைத்தான். உணவுகளை ரஞ்சித் எடுத்து வைத்துக் கொண்டிருக்க சோஃபாவில் அமர்ந்திருந்த சிவா நான் உங்க கூட இருக்கிறதில உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஓகே, ஆனா உங்க பாட்னருக்கு ஏதாவது ப்ராப்ளம் வரலாம்ல என்று கேட்டான்.
என்னோட பார்ட்னரா என்னடா சொல்ற என சிவா கேட்க, ஆமா பிரசாத் பத்தி தான் கேட்கிறேன் என சிவா சொல்ல, பிரசாத் என் பார்ட்னரா என்ன சொல்ற என ரஞ்சித் கேட்க அவனுடைய பதட்டத்தைப் பார்த்த சிவா ஏன் இவ்வளவு பதட்டம் ஜஸ்ட் நான் கேட்டேன் என்று சொன்னான். நான் ஏன் பதட்டப்பட போறேன் நானும் பிரசாத்தும் டேட் பண்ணிட்டு இருந்தோம் அவன்கிட்ட சொல்லி அத நான் எண்ட் பண்ண போறேன் என்றான் ரஞ்சித்.
அப்போ இதுவரைக்கும் பண்ணல அப்படித்தானே என்றான் சிவா. நீ ஓகே சொன்ன உடனே பண்ணிடுவேன் என சன்னமான குரலில் ரஞ்சித் சொல்ல, என்ன சொல்றீங்க சீனியர் எனக்கு கேட்கல என சிவா மறுபடி கேட்க, சாப்பிட்டு கிட்டே பேசலாமே எனப் பேச்சை மாற்றினான் ரஞ்சித்.
ரஞ்சித்துக்கு தன்னுடைய காதல் வாழ்க்கையைத் தன்னுடன் பகிர சங்கடமாக உள்ளது என எண்ணிய சிவா அந்த பேச்சை அப்படியே விட்டு விட்டான். ரஞ்சித் அன்று இரவு உணவில் தேங்காய் பால் சாதம் அதோடு சேர்த்து சாப்பிட உருளைக்கிழங்கு பொரியல் செய்திருந்தான். முதலில் சிவாவுக்கு பரிமாறினான் ரஞ்சித்.
சிவா சாப்பிட சாப்பிட அவனை ரசித்துக் கொண்டிருந்தான் ரஞ்சித். சிவாவும் புன்முறுவலோடு சாப்பிட்டு முடித்தான். இன்னும் கொஞ்சம் சாப்பிடுடா என ரஞ்சித் சொல்ல, இல்ல சீனியர் எனக்கு வேணாம் போதும் என தட்டைச் சமையலறையில் வைத்து விட்டு சிவா படுக்கையறைக்குள் சென்றான். அவன் சென்ற பின் தனக்கு பரிமாறிக் கொண்ட ரஞ்சித் பரவாயில்ல இன்னைக்கு இந்த சமையல் என் மானத்தைக் காப்பாத்திடுச்சு என்றபடி ஒரு கைச் சாதத்தைத் தன்னுடைய வாயில் போட்ட ரஞ்சித் உடனே அதைத் துப்பினான்.
உருளைக்கிழங்கு பொரியலைச் சாப்பிட்டவன் ஒரு செம்பு தண்ணீரைக் குடித்தும் காரம் அவனுடைய நாக்கை எரியச் செய்தது, அவனுடைய கண்கள் கலங்கின. உடனே படுக்கையறைக்குள் சென்றவன் படுத்திருந்த சிவாவை, டேய் எப்படிடா சாப்பிட்ட இவ்வளவு காரமா இருக்கு, அது மட்டும் இல்லாம சாப்பாடு அடியில பிடிச்சு போச்சு கசப்பா இருக்கு என சிவாவிடம் கேட்டான். படுத்திருந்த சிவா எழுந்து அமர்ந்தான்.
நீங்க எதுக்காக சாப்பிடுறீங்கன்னு எனக்கு தெரியாது சீனியர் என்று சிவா கூற, வாழ்வதற்காக தான் சாப்பிடுவாங்க என்றான் ரஞ்சித். அப்போ ஏன் சீனியர் ருசி பார்த்து சாப்பிடுறீங்க? நம்ம வேலை பார்க்கிறது சாப்பிடுற சாப்பாட்டுக்கோ வாழறதுக்கோ எதுவா இருந்தாலும் நான் அப்படி இல்ல சீனியர். வாழ்க்கை கொடுத்த கசப்பும் நெருக்கமானவங்க கொடுத்த அதிர்ச்சியும் வாழனும்னு சாப்பிடுறத விட உயிரோட இருக்கணும்னு நான் சாப்பிடுறேன் என்றவன் மீண்டும் தூங்க சென்றான்.
அடுத்தடுத்த நாட்கள் சிவா மற்றும் ரஞ்சித்துடைய நட்பு நன்றாகவே வளரத் தொடங்கியது. சிவா தன்னுடைய ஓய்வு நாட்களை முடித்துவிட்டு மீண்டும் வேலைக்கு செல்லத் தொடங்கினான். சிவா எப்பொழுதும் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி நல்ல மற்றும் கெட்ட விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வான். அப்படி அவனுடைய கண்களில் இருந்து தப்பித்தது அவனுடைய கல்லூரி நண்பன் குமார் மற்றும் அர்புக்கு இடையே இருக்கும் மறைமுகமான காதல்.
கிட்டத்தட்ட சிவா மற்றும் அவனோடு வேலைக்கு சேர்ந்த புதியவர்கள் தங்களுடைய முதல் கால்பங்கு பணிக்காலத்தை முடித்துவிட்டனர். அவர்களின் பணி நேர்த்தி மற்றும் கம்பெனியின் பத்தாவது வருட விழா பற்றி ஆலோசனை மேற்கொள்ளவும் கவிதா அனைவரையும் மீட்டிங்கிற்காக அழைத்தாள்.
வணக்கம் எல்லாருக்கும் எப்படி இருக்கீங்க என கவிதா சேரில் அமர்ந்தாள். குட் சீனியர் என அனைவரும் கூற, ஓகே லெட்ஸ் டாக் அபௌட் அவர் நெக்ஸ்ட் குவாட்டர்லி டார்கெட் அதுக்கு முன்னால இந்த குவாட்டர்ல நீங்க எல்லாரும் ரொம்ப நல்லாவே ஒர்க் பண்ணுனீங்க.
இந்த குவாட்டர்லையும் அதே ஃபாலோ பண்ணுங்க. நம்ம கம்பெனியோட ஃபைனான்சியல் காரணங்கள்னால இன்னும் ரெண்டு வருஷத்துக்கு நம்ம கம்பெனில நம்ம ரெக்ரூட்மெண்ட் பண்ண போறது இல்ல.
அதனால ஒர்க் பிரஷர் அதிகமாகும். பிரமோஷன் கம்மியாவும் இருக்கும். கம்பெனியோட இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில நீங்க எல்லாரும் துணையா இருப்பிங்கன்னு நான் நம்புறேன். நம்ம பழைய க்ளைண்ட்ஸ் பிரஷர் அதிகமா இருக்கு, புது க்ளைண்ட்ஸ் நம்ம நிறைய பேரைக் கொண்டு வர வேண்டி இருக்கு.
இன்னும் மூணு மாசத்துக்கு ஓவர் டைம் எல்லாம் நிறையவே இருக்க வாய்ப்பு இருக்கு அண்ட் குமார் அண்ட் அர்பு ரெண்டு பேரையும் வேற வேற டீம்ல மாத்தி இருக்கேன். இனிமேல் ஏற்கனவே நடந்த மாதிரி நடக்காம இருந்தா உங்களுக்கும் கம்பெனிக்கும் நல்லது இனிமேல் இது மாதிரி நடக்காம பாத்துக்கோங்க இத பத்தி யாரும் இனிமே பேசக்கூடாது.
அர்பு உங்களோட ரெசிகேஷனை நான் அக்சப்ட் பண்ணல உங்கள அவதூறா பேசினவங்களுக்கு உங்க வேலையினால பதில் சொல்லிட்டு நீங்க போங்க என்றாள் கவிதா. யாருக்காவது ஏதாவது கேள்வி இருக்கா என கவிதா கேட்க, இல்லை என அனைவரும் தலையசைக்க கவிதா அங்கிருந்து வெளியேறினாள்.
தன்னுடைய சேரில் இருந்து எழுந்த ரஞ்சித் டீஎல் எல்லாரும் இருங்க மத்தவங்க போகலாம் என்று கூற, ஏழு டீஎல் தவிர அனைவரும் சென்றனர். சொல்லுங்க உங்களோட ப்ராஜெக்ட் எல்லாம் எவ்வளவு முடிந்திருக்கிறது என தன்னுடைய மடிக்கணினியை நோண்டிக்கொண்டே ரஞ்சித் கேட்டான். அனைவரும் அதற்கு பதில் சொல்ல உங்களுடைய புது டீம்மெட்ஸ் எல்லாரோட பேரும் மெயில் பண்ணி இருக்கேன்.
சரோவைத் தவிர எல்லாருடைய ஒர்க் முடிஞ்சிடுச்சு, சோ புது ப்ராஜெக்ட்க்கு உங்க புது டீம்மேட்ஸ் கூட வேலை பாருங்க என ரஞ்சித் அனைவரையும் அனுப்பி வைத்தான். எல்லோரும் வெளியேற பிரபு மட்டும் தயங்கி தயங்கி நின்றான்.
என்னாச்சு பிரபு ஏதாவது ப்ராப்ளமா என்கிட்டே சொல்லு என ரஞ்சித் கேட்க, ஒன்னும் இல்ல என்னோட டீமை நல்லா ட்ரைன் பண்ணி வச்சிருந்தேன், திடீர்னு மாத்திட்டீங்க அதான் என்ற பிரபுவிடம் ஆமா பிரபு எதுல எல்லாம் ட்ரெயின் பண்ணி வச்சிருந்தீங்கன்னு கம்பெனி பூராவும் கடந்த ஒரு வாரமாவே தெரியும் போய் வேலையைப் பாருங்க எனச் சொல்லி ரஞ்சித் பிரபுவை அனுப்பி வைத்தான். அன்றைய மாலை நேரத்தில் குமார் கம்பெனியின் அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்திருப்பதைப் பார்த்த சிவா அவன் அருகில் சென்று அமர்ந்தான்.
அதைக் கண்டும் காணாதது போல குமார் அமர்ந்திருக்க, அவனுடைய கையை அழுத்தினான் சிவா. உடனே திரும்பியவன் சிவாவின் தோளில் சாய்ந்து கதறி அழுதான். நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் நான் உண்மையா அவனை ஹர்ட் பண்ணனும்னு செய்யலடா என புலம்பினான் குமார். இதை எல்லாம் சற்று தூரத்தில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த அர்பு குமாரோடு சிவா இருக்கிறான் என்ற தைரியத்தில் தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான்.
தன்னுடைய வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வுகளைத் தன்னுடைய நினைவலைகளில் அசைபோட்டுக் கொண்டே நடந்தான் அர்பு.
-வருவான்…
