அர்புவின் நினைவில் குமார் தன்னுடைய வாழ்வில் வந்த நாள் என்றுமே சிறப்பானது தான். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலை 4 மணி அளவில், விடாமல் ஒலித்த தன்னுடைய திறன்பேசியை எடுத்து அழைப்பை ஏற்ற அர்பு, ஹலோ என்று சொல்ல, ஹாய் டார்லிங் என எதிர்முனையில் இருந்து குரல் கேட்க, அதிர்ந்து போனவன் யார் நீங்க என்று கேட்டான்.
உங்க ஆளு தான் என்னை ஞாபகம் இல்லையா என்றான் குமார். விளையாடாம யாருன்னு சொல்லுங்க இல்ல நான் ஃபோனை கட் பண்ணுறேன் என அர்பு கூறினான். ஏய் நான் சிவாவோட ஃப்ரெண்டு குமார் என்றான் எதிர்முனையில் இருந்தவன். உடனே, ஓ… நீங்களா என்ன வேணும் உங்களுக்கு என அர்பு கேட்க, நீங்கதான் வேணும் என குமார் சொல்ல, ஹலோ என்ன நக்கலா என்றான் அர்பு.
அப்புறம் என்னடா, நான் ஈக்காட்டுதாங்கல் கிட்ட நிக்கிறேன், லொகேஷன் அனுப்பு அப்பதானே வர முடியும், அதை விட்டுட்டு நக்கலா விக்கலான்னா என்ன அர்த்தம் என்று குமார் சொன்னான். சாரிங்க என்ற அர்பு வாட்ஸ் அப்பில் தன்னுடைய லொகேஷனை அனுப்பி வைத்தான். சிறிது நேரத்திற்கு பின் எந்த அபார்ட்மெண்ட் என குமார் குறுஞ்செய்தி அனுப்ப, தன்னுடைய அபார்ட்மெண்ட் எண்ணை அவனுக்கு அனுப்பி வைத்தான் அர்பு.
சிறிது நேரம் கழித்து தன்னுடைய வீட்டின் அழைப்புமணி சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்த அர்பு, வாசலில் யாரும் இல்லாததால் தன்னுடைய கழுத்தை வெளியே நீட்டி பார்க்க, ப்பா…. என அர்புவை பயமுறுத்தியபடி குமார் வெளிப்பட்டான். பயந்து போன அர்பு, லூசா நீங்க என்று கேட்க, இப்ப வரைக்கும் இல்ல இனிமே ஆனேன்னா உன்னோட பொறுப்பு தான் என்றான் குமார். ரொம்ப தான் என்ற அர்பு குமாரின் உடமைகளை எடுத்து வைக்க உதவினான்.
என்னோட ரூம் எங்க என குமார் கேட்க, இங்க ஒரு பெட்ரூம் தான் என அர்பு சொல்ல, அப்ப நீ ஹால்ல படுத்துக்கோ எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல என்றான் குமார். ஹலோ என்ன திமிரா என்றான் அர்பு. ஏன்டா நான் என்ன திமிரா பேசினேன் என்ற குமார், சரி ஓகே உன்னை பாத்தாலும் பாவமா தான் இருக்கு பரவால்ல நீ என் கூட தங்கிக்கோ என்றான். ஹலோ நீங்கதான் என் கூட தங்குறீங்க என அர்பு சொல்ல, ஓகே ஓகே என தன்னுடைய உடைகளை எல்லாம் அடுக்கி வைத்தான் குமார்.
அன்று மதியம் அர்புவிடம் சொல்லாமலேயே அவனை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்றான் குமார். இதுவரை அர்புவை யாரும் அவ்வாறு கவனித்துப் பார்த்ததில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக அர்புவை குமாரின் மீது ஈர்ப்பு கொள்ள வைத்தது. அப்படி குமார் நேர்கோடா என்கிற சந்தேகத்தை சிவாவிடமிருந்து தெளிவுபடுத்திக் கொண்டான் அர்பு. குமாரின் குணம், அவனுடைய கலகலப்பான பேச்சு, அவனுடைய தோற்றம் என அனைத்துமே அர்புவை ஈர்க்கத் தொடங்கியது.
தன்னுடைய மனதில் குமாரின் மீதான காதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை அர்பு அப்போது அறிந்திருக்கவில்லை. அவனுடைய ஒட்டுமொத்த உலகமாக குமார் இந்த நான்கு மாதங்களில் மாறிவிட்டான் என்பதைக் கூட அர்பு சில நாட்களுக்கு முன்பு தான் அறிந்தான். அது ஒரு சனிக்கிழமை. மாலை தன்னுடைய நண்பர்களோடு குமார் பார்ட்டிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.
அப்போது சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த அர்புவிடம், டேய் உனக்கு கார் ஓட்டத் தெரியுமா என குமார் கேட்க, இல்ல எனக்கு ஸ்கூட்டி தான் ஓட்டத் தெரியும் என அர்பு சொன்னான். அப்படியா என தன்னுடைய திறன்பேசியில் பேசிய குமார், ஓகே டா நான் ரீச் ஆயிட்டு கால் பண்றேன் என்று அவ்வழைப்பைத் துண்டித்தான். சீக்கிரமா கிளம்பு என தன்னோடு அர்புவையும் அழைத்துச் சென்றான் குமார்.
குமார் இயற்கையான கட்டுமஸ்தான உடல், ஐந்து அடி பத்து அங்குலம் உயரம், அவனுடைய கவரும் தன்மை எப்பொழுதும் அவனுடைய ஆடையைச் சார்ந்தே இருக்கும். உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் கை தேர்ந்தவன் குமார். அவன் தேர்ந்தெடுத்து கொடுத்த ஆடையை அணிந்துக் கொண்டு அர்பு குமாரோடு சென்றான். அது ஈசிஆர் அருகே உள்ள கெஸ்ட்ஹவுஸில் நடக்கும் பார்ட்டி. அந்த பங்களாவில் நுழைந்ததுமே அர்பு அசௌகரியமாக உணர்ந்தான்.
அதை குமார் அறிந்திருந்தாலும் நேரம் ஆக ஆக அவன் சரியாகி விடுவான் என எண்ணினான். குமார் அவனுடைய நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்க அவனை ரசித்துக் கொண்டிருந்தான் அர்பு. குமாரின் உதடுகளைத் தொட்ட குளிர்பானம் அர்புவின் நாவில் சுவையை உணரச் செய்தது. அவ்வளவு ஆழமாக குமாரைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அருகில் உள்ள ஒருவன் ப்ரோ இன்னும் கொஞ்சம் ட்ரிங்க்ஸ் குடிங்க என்று சொன்னபோது, அவன் என்ன தருகிறான் என்பதைக் கவனிக்காமல் குடித்துவிட்டான் அர்பு.
சிறிது நேரத்தில் அவனுடைய மதி மதுவால் மயங்கத் தொடங்கியது. டிஜே ஆன் செய்யப்பட்டு எல்லோரும் நடனமாடத் தொடங்கினர். ஏற்கனவே அர்பு தனக்கு நடனத்தில் இஷ்டம் இல்லை என குமாரிடம் சொல்லி இருந்ததால் அவனை குமார் அழைக்கவில்லை.
குமார் அங்கிருந்தவர்களோடு ஆட ஆட அர்புவின் மனதில் குமாரின் மீதான காதல் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்ந்தது. அதன் விளைவு குமாரோடு ஆடுபவர்களின் மீது பொறாமை படத் தொடங்கினான் அர்பு.
அன்றைய பார்ட்டியின் முடிவில்தான் குமாருக்கு அர்பு குடித்திருக்கிறான் என்பது தெரிய வந்தது. அர்புவைத் தூக்கிக்கொண்டு ஈ சி ஆர் கடற்கரைக்கு சென்ற குமார், அவனைக் கடலில் முக்கி எடுத்தான். என்ன நடக்கிறது என்பது தெரியாமல் அர்பு தள்ளாட டேய் என்பது மட்டுமே அவனுடைய வாயிலிருந்து வெளிவந்தது. சிறிது நேர தத்தளிப்புக்கு பின் குமாரைக் கடலில் தள்ளிவிட்டு போடா லூசு என்றபடி கடற்கரைக்கு வந்தான் அர்பு.
பார்ட்டியில் குமாரோடு நெருக்கமாக ஆடிய ஒருவன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அர்பு ஏளனச் சிரிப்போடு என்னடா இங்கேயும் வந்துட்டியா இவ்வளவு நேரம் கொஞ்சி குலாவுனது போதாதா என்று கேட்க, எதிரே இருந்தவன் மைண்ட் யுவர் வேர்ட்ஸ் என சொல்ல, அதற்குள் குமாரும் அங்கு வந்து சேர்ந்தான்.
என்ன குமார் உன்னோட ஃபிரண்டு என்ன தப்பா பேசறான் என அவன் சொல்ல, டேய் அவன் குடிச்சிருக்கான் டா பிரசாத் என்றான் குமார். ஓஹோ இவன் தானா அந்த பிரசாத் என்ற அர்பு, நல்லா தான்டா இருக்க இந்த மேனா மினுக்கல் எல்லாம் ஆம்பள பிடிக்கிறதுக்கு தானா என அர்பு கேட்க, டேய் நீ சும்மா இருடா என்றான் குமார். ஏன்டா அவனை தடுக்குற என பிரசாத் சொல்ல, அதானே உனக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன என அர்பு ஏதோ சொல்ல வர, அவனுடைய வாயைப் பொத்தியபடி அங்கிருந்து அழைத்துச் செல்ல முற்பட்டான் குமார்.
கொஞ்சம் நில்லு குமார் அவனை ஏன் வாயடைக்கிற வெயிட் பண்ணு அவன் என்ன சொல்றான்னு கேப்போம் என பிரசாத் சொல்ல, என்னடா நான் சொல்லணும் உன்ன மாதிரி எனக்கு ஆம்பள மயக்கத் தெரியாது என அர்பு சொல்ல, அவனை ஓங்கி அறைந்தான் குமார். உடனே குமாரைப் பார்த்து கண்களில் கண்ணீர் நிறைய அர்பு ஐ லவ் யூ குமார் என்று சொன்னான்.
உடனே கைத்தட்டிய பிரசாத், சூப்பர்டா குமார் வெறும் ரூம் மேட்ன்னு சொல்லிட்டு லவ்வர தான் கூட வச்சிருக்க போல என பிரசாத் கேட்க, டேய் அப்படியெல்லாம் இல்லடா எனக்கு அந்த மாதிரி எண்ணம் எல்லாம் இல்லடா என்று சொல்ல, இல்லைன்னு நீதான சொல்ற அவன் சொல்லலையே என அர்புவைக் காட்டினான் பிரசாத்.
அவன் சொல்லனும்னு என்னடா இருக்கு என குமார் கேட்க, என்னோட முன்னால அவன் உனக்கு ஐ லவ் யூ சொன்னானே என பிரசாத் கேட்டான். அதான் உன் பிரச்சனையா, இருடா என்ற குமார் அர்புவை பிரசாத் முன்னால் நிறுத்தி, டேய் நீ சொன்ன ஐ லவ் யூ ஃப்ரண்டா சொன்னேன்னு சொல்லிருடா என சொன்னபடி குமார் பிரசாத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இல்ல குமார் நான் என் மனதாரத்தான் சொன்னேன், உன்னை உண்மையா நான் காதலிக்கிறேன் என்ற அர்பு அங்கிருந்து சென்றான். அர்புவைத் திரும்பி கூட பார்க்காமல் பிரசாத்தை மட்டுமே அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான் குமார். பிரசாத் சிரித்தபடி, பெரிய பெரிய பேச்சு மட்டும் போதாது உண்மையான காதல் வேணும் எனக்கு என்றவன் அங்கிருந்து சென்றான்.
குமார் அப்படியே அந்த கடற்கரையிலேயே அமர்ந்து விட்டான். சற்று தொலைவில் அமர்ந்திருந்த அர்புவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக போதை தெளிய தொடங்கியது. காலை 5 மணி அளவில் அர்பு குமாரின் அருகில் சென்று போகலாமா என கேட்டான். அவன் பக்கம் திரும்பி கூட பார்க்காத குமார் அவனோடு பைக்கில் ஏறி அமர, தங்களுடைய அறையை நோக்கிச் சென்றனர்.
அதற்கு அடுத்தடுத்த நாட்களில் குமாரின் நிராகரிப்பு அர்புவை வெகுவாக பாதித்தது. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் குமார் அவனோடு பேசவில்லை. நிறுவனம் முழுவதும் அர்புவைக் கேலி செய்யும் அந்த நிகழ்வு நான்கு நாட்களுக்கு முன்னால் தான் அரங்கேறியது. அர்புவும் சிவாவும் கான்ஃபிரன்ஸ் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது உள்ளே வந்த குமாரின் கண்கள் சிவந்து இருந்தது. அவன் கோபமாக இருக்கிறான் என்பது நன்றாகவே தெரிந்தது. அதை உணர்ந்த சிவா சொல்லுடா குமாரு என்ன ஆச்சு எனக் கேட்க, நம்ம நட்பு மேல உண்மையான அக்கறை இருந்தா இந்த ரூமை விட்டு நீ போ சிவா என குமார் சொல்ல அர்புவைப் பார்த்தபடி சிவா அங்கிருந்து சென்றான்.
அப்போது ரஞ்சித்தின் அழைப்பு வந்ததால் சிவா அவனோடு பேச சென்று விட்டான். நீ போய் பிரசாத்த பாத்தியா எனக் கேட்டான் குமார். அது வந்து என அர்பு ஏதோ சொல்ல வர அவனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான் குமார். இங்க பாரு எனக்கு நீ பண்ணுன வரைக்கும் போதும் தேவையில்லாம உன்னோட லைஃபையும் கெடுத்து என்னோட லைஃபையும் கெடுக்காத உன் வேலையை மட்டும் நீ பாரு அது போதும் என்றபடி சென்றான் குமார்.
அவன் பேசியதையும் அர்புவை குமார் அடித்ததையும் பிரபுவின் டீமில் உள்ள ஜோசப் ஒளிப்பதிவாக எடுத்து, அதற்கு ஏதேதோ பெயரிட்டு குரூப்பில் போட்டான். அந்த குரூப்பில், ஃபிரஷர் என்பதால் அர்பு, குமார், சிவா போன்றவர்கள் இல்லை என்றாலும் ரஞ்சித் கவிதா போன்ற சீனியர்கள் இருந்தனர். அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் அக்காணொளி அழிக்கப்பட்டாலும் அனைவரும் அந்த அதைப் பார்த்திருந்தனர்.
அதன் விளைவு மூன்று நாட்களுக்கு முன் கேண்டினில் ஜோசப் நின்று கொண்டிருக்க, ஏதோ நினைவில் வந்த அர்பு அவனை இடிக்க, அர்புவின் கையில் இருந்த காபி ஜோசப்பின் மீது கொட்டியது. அர்பு அத்தனை முறை மன்னிப்பு கேட்க, அப்போது அங்கு வந்த பிரபு மற்றும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிலர் அர்புவை அவமானப்படுத்த தொடங்கினர்.
டேய் ஜோசப் என்னடா ஆச்சு என பிரபு கேட்க, இந்த பைத்தியம் என் மேல காஃபிய கொட்டிட்டான் சீனியர் என ஜோசப் சொல்ல, டேய் என்னடா பைத்தியம்னு சொல்ற என்ன தான் இருந்தாலும் அர்பு நம்ம கூட வேலை பார்க்கிற பையன் இல்லையா என்று சொல்லிக் கொண்டே அர்புவின் தோள் மேல் கையைப் போட்டான் பிரபு. தன்னுடைய கண்ணாடியை சரி செய்து கொண்டே அர்பு சாரி சீனியர் என்றான்.
டேய் ஏன் பயப்படுற நாங்க உன்னை அடிக்கவா செஞ்சோம், டோன்ட் வொரி என பிரபு அர்புவின் தோளை அழுத்தினான். உடனே அங்கு இருந்து அர்பு சென்றுவிட்டான். அதற்கு அடுத்த நாள் குமார் அமர்ந்திருந்த டேபிளில் சென்று சாப்பிட அமர்ந்தான் அர்பு. அவன் அமர்ந்ததும் குமார் எழுந்து சென்று விட்டான். இதை பார்த்துக் கொண்டிருந்த பிரபுவும் ஜோசப்பும் அவன் அருகில் சென்று அமர்ந்தனர்.
என்னடா ஆச்சு குமார் ஏன் உன்கிட்ட இப்படி நடந்துக்குறான் என பிரபு கேட்க, ஒன்னும் இல்லை சீனியர் என அர்பு பதில் அளித்தான். உடனே ஜோசப் இன்னைக்கு அடி வாங்க முடியாதுன்னு சொல்லி இருப்பான், அதான் கோபமோ என்னமோ என்று சொன்னான்.
உடனே யாருக்கு தெரியும் கன்னத்தில அடி வாங்கலையோ இல்ல என பிரபு அர்புவின் புட்டத்தைக் கசக்கினான். உடனே அர்பு பிரபுவை முறைத்தான். என்னடா இவன் முறைக்கிறான் என பிரபு ஜோசப்பிடம் சொல்ல, அதானே உனக்கு கோபப்பட எல்லாம் தெரியுமா ஒரு வேலை ரஃப்பா பண்றது தான் பிடிக்கும் போல சீனியர் என்றான் ஜோசப்.
தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு அர்பு பிரபுவிடம் சீனியர் உங்க காமெடி எல்லை மீறுது என்றான். நாங்க இன்னும் எல்லை மீற ஆரம்பிக்கவே இல்லையே அதுதான் உனக்கு பிடிக்கும்னா நாங்க ரெடி தான் என்றான் பிரபு.
ஒருவேளை உனக்கு உன்னை அடிமையா நடத்தினா தான் பிடிக்குமோ என கேட்டான் ஜோசப். எனக்கு புரியலடா என பிரபு அவனிடம் கேட்டான். அதான் சீனியர் ரொம்ப கேவலமா பேசினா, அவங்கள ஒரு அனிமல் மாதிரி நடத்தினா தான் சிலருக்கு பிடிக்கும் என ஜோசப் சொல்ல நம்மளால குமார் அளவுக்கு முடியுமா என பிரபு கேட்டான்.
அதுக்கு அர்பு நம்ம கூட வந்தா தான் தெரியும் என ஜோசப் சொல்லி முடிக்கும் முன் ஜோசப்பின் முகத்தில் அர்புவின் டிபன் பாக்ஸ் சென்று மோதியது. அதை எதிர்பார்க்காத பிரபுவும் ஜோசப்பும் கோபத்தில் அர்புவை அடிக்க தொடங்கினர்.
அப்போது சண்டையைப் பார்த்து நிறுவனத்தில் வேலை செய்யும் சிலர் வந்தனர். அதில் சிவாவும் ஒருவன். சிவாவைப் பார்த்ததும் அர்பு அழுகையை அடக்க முடியாமல் சிவாவின் அருகில் சென்று அவனை அணைத்த படி அழுதான்.
அதைப் பார்த்த பிரபு அவனைக் கூட்டிட்டு போடா சிவா, ஊர் மேயும் போதெல்லாம் மேய்ஞ்சிட்டு உண்மைய சொன்னதும் கோபம் வருது. உன்னையெல்லாம் ஒருத்தன் படுக்கக் கூப்பிடுறதே பெருசு இதுல உனக்கு ஆட்டிட்யூட் வேறயா என பிரபு சொன்னான்.
அவனை முறைத்தபடி பேசுவதை நிறுத்த சொல்லி கையைக் காட்டிய சிவா, மைண்ட் யுவர் வேர்ட்ஸ் சீனியர் என்று சொல்லிவிட்டு அர்புவைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
அவன் சென்ற பின் அந்த சிவாவோட குடுமி ஏதாவது நம்ம கையில வேணும்டா என்ன ஏதுன்னு விசாரி என ஜோசப்பிடம் சொன்னான் பிரபு.
அன்றைய நிகழ்வு தான் நிறுவன கூட்டத்தில் கவிதாவை அவ்வளவு கோபப்பட வைத்தது.
ரஞ்சித்தை பிரபுவின் டீமை பிரிக்க வைத்தது.
குமாரை மிகப்பெரிய மன அழுத்ததிற்குள் கொண்டு சென்றது.
அர்புவை நடைப் பிணமாக்கியது.
இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமே என சிவா நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் சிவாவும் பிரபுவும் கவிதாவோடு கோயம்புத்தூருக்கு செல்ல வேண்டும் என கவிதா சொன்னாள்.
அது ஒரு புதன்கிழமை. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து சிவா, பிரபு, கவிதா கிளம்பினார்கள்.
சிவலட்சுமியும் ரகுவையும் எவ்வாறு எதிர்கொள்வது என நினைத்துக் கொண்டிருந்த சிவாவின் தோளைத் தொட்ட கவிதா சொன்னாள், எல்லாம் நல்லபடியா முடியும் கவலைப்படாதே என்று.
வருவான்…
