பிரபு அர்புவை அவமானப்படுத்தியதில் இருந்தே அவனைப் பற்றிய செய்திகளைச் சேமித்து வைத்திருந்தான் சிவா. கவிதா கோவை செல்ல பிரபுவை தங்களோடு அழைத்ததற்கான காரணத்தை சிவா அறிந்திருக்கவில்லை என்றாலும் இந்த மூன்று நாள் பயணத்தில் நிச்சயம் பிரபுவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதை மட்டும் நினைத்துக் கொண்டான்.
ஆனால் அவனுடைய மிகப்பெரிய கவலை சிவலட்சுமி மற்றும் ரகுவை எப்படி எதிர் கொள்வது என்பதாகவே இருந்தது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ரகுவைப் பற்றிய நினைவுகளைவிட சிவலட்சுமியைப் பற்றிய நினைவுகள் தான் சிவாவிற்கு அதிகமாக இருந்தது.
ரகுவின் நிலையற்ற முடிவுகள் அவனை அடிக்கடி அச்சுறுத்தியது. என்ன ஆனாலும் ரகுவின் முன்னால் தான் உடைந்து போய் இருப்பதை மட்டும் காட்டவே கூடாது என தனக்குள்ளேயே சபதம் செய்து கொண்டான் சிவா.
கோயம்பேட்டில் சிவாவை விட வந்த ரஞ்சித் கவிதாவிடம், இப்ப கூட ப்ராப்ளம் இல்லடி நான் போறேன் ப்ளீஸ் என்று சொன்னான். கொன்னுடுவேன் ரஞ்சித் உன்னுடைய க்ளைண்ட்ஸ் கூட உனக்கு ரெண்டு நாளைக்கு மீட்டிங் இருக்கு அது மட்டும் இல்ல இந்த குவாட்டர்ல நம்ம கம்பெனி என்ன நிலைமையில் இருக்கு, அடுத்த குவாட்டர் நம்ம எப்படி முடிக்கணும்னு உனக்கே நல்லா தெரியும்.
உன்னோட இந்த காதல் கண்றாவி எல்லாம் கொஞ்ச நாளைக்கு ஓரமா வைடா. நான் சீரியஸா சொல்றேன் ரஞ்சித், லாஸ்ட் குவாட்டர்ல உன்னோட க்ளைண்ட்ஸ் எல்லாம் என்ன சொன்னாங்கன்னு நியாபகம் இருக்கா? ப்ளீஸ்டா நம்ம பர்சனல் லைஃப் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு கம்பெனியோட வளர்ச்சியும் முக்கியம் தான் என்றாள் கவிதா.
சரி ஓகே என்ற ரஞ்சித் பிரிய மனமில்லாமல் சிவாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். ரஞ்சித் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்த சிவாவின் அருகில் வந்த கவிதா, என்னடா அவன விட்டு பிரிய மனம் இல்லையா என்று கேட்டாள். அப்படியெல்லாம் இல்ல சீனியர் அவன் கூட சண்ட போடாத நாளே கிடையாது இதுல நீங்க வேற என சிவா சொல்ல, யார் கூட குமார் கூடவா எனக் கேட்டபடி கவிதா மற்றும் சிவாவின் அருகில் வந்தான் பிரபு. இல்ல சீனியர் இது கொஞ்சம் பர்சனல் என்றான் சிவா.
ஓகே கேரி ஆன் என்ற பிரபு தான் ஒப்பனை அறைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றான். சிறிது நேரத்திற்கு பின் கவிதா மற்றும் சிவாவின் முன் வந்த பிரபு, இந்த காலத்துல ஆம்பளைங்களுக்கு கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்லை. இப்போலாம் பாத்ரூம் உள்ள வயசான பெருசுங்க எல்லாம் காமநோய் பிடிச்சு நிக்குதுங்க என்றான்.
உடனே கவிதா, என்னடா சொல்ற எனக் கேட்க, அதெல்லாம் விளக்கமா உன்கிட்ட சொல்ல முடியாது கவிதா என பிரபு சொல்ல, என்னமோ உளறிகிட்டே இரு என பேருந்தில் ஏறி அமர்ந்தாள் கவிதா. பிரபு பேருந்தில் ஏற, அவன் பின்னால் சிவாவும் ஏறினான். பிரபு மற்றும் சிவா அருகருகே அமர்ந்திருக்க, என்னடா உனக்கு இந்த மாதிரி பாத்ரூம் சீன் எல்லாம் நடந்து இருக்கா என பிரபு கேட்டான்.
உங்க வயசு ஆளுங்களே என்னை தொல்ல பண்ணி இருக்காங்க சீனியர். அதுவும் ஒரு தடவ மெரினா பீச்ல உள்ள பாத்ரூம்ல அவன் பேரு கூட பிரபுன்னு தான் சொன்னான். ஒரு 40 வயசு ஆள் கூட உடலுறவு பண்ணிட்டு இருக்கும்போது நம்ம சரோ சீனியர் பார்த்துட்டாராம் என்ற சிவாவின் வார்த்தைகள் ஏதோ பிரபுவுக்கு தன்னைக் குத்துவதாக இருந்தது.
ஆனால் அவன் சொன்ன கதையில் பிரபு ஒரு 40 வயது ஆளோடு இருந்ததைப் பார்த்தவன் ஜோசப். ஓஹோ இந்த ஜோசப் என்ன பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டானா என சிந்தித்தபடி அந்த பேச்சை அதோடு விட்டு விட்டான் பிரபு.
சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவலட்சுமி, என்னடா உன் ஆளு வரப்போறான், நீ எதுவும் சொல்லாம இருக்க என்று ரகுவிடம் கேட்டாள். நான் அவனை ஆளுன்னு சொல்ல தகுதி இல்லாதவன் சிவலட்சுமி, என்னால ஒரு பையன் நடைப்பிணமா சுத்திட்டு இருக்கான். இதுல அவனை மறுபடி மறுபடி நான் கஷ்டப்படுத்தனுமா என்று யோசிச்சிட்டு இருக்கேன் என்றான் ரகு.
என்னடா சொல்ற எனக்கு எதுவுமே புரியல என சிவலட்சுமி கேட்க, நான் நாளைக்கு காலையில என் ஃபிரண்டு வீட்டுக்கு போறேன். மூணு நாள் கழிச்சு அவங்க கெளம்புனதுக்கு அப்புறம் வரேன் என்றான் ரகு. ஏன்டா, எனக்கு சிவாவ பத்தி நல்லா தெரியும் அவன் கண்டிப்பா உன்னை ஏத்துப்பான் என சிவலட்சுமி சொன்னாள்.
இங்க பாரு உனக்கு நான் என்னவா வேணும்னாலும் இருக்கலாம். என்னை பொறுத்தவரை நீ என்னோட மனைவி, உன்னோட வயித்துல வளர்ற என்னோட குழந்தைங்க தான் இப்போதைக்கு என்னோட எல்லா தேவைகளுக்கும் ஆதாரம். அது உடல் தேவையா இருந்தாலும் சரி மனதேவையா இருந்தாலும் சரி.
எப்போ குழந்தைங்க பிறப்பாங்கனு காத்துகிட்டு இருக்கேன். அவங்களோட இருக்க போற அந்த நாட்கள் தான் என்னோட பழைய காயங்களுக்கு மருந்தாகும். நான் அடுத்தவங்களுக்கு கொடுத்த காயங்களை என்னால மறக்க முடியும் என்ற ரகு, சாப்பிட்டுட்டு தூங்கு சிவலட்சுமி நான் என்னோட ரூமுக்கு போறேன் என அங்கிருந்து சென்றான். அவன் சொல்லியதற்கு தான் என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல், அவன் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவலட்சுமி.
கோவை பீளமேட்டில் இறங்கிய மூன்று பேரும் அங்கு இருந்த கடையில் காபி குடித்தனர். ஓகே சிவா நீ இந்த அட்ரஸ்க்கு போ, நான் என்னோட ஃபிரண்டு வீட்டுக்கு போறேன். பிரபு உனக்கு ஹோட்டல்ல ரூம் போட்டு இருக்கேன் நீ அங்க போ. 11 மணிக்கு எல்லோரும் ஆஃபீஸ் வந்துருங்க என கவிதா கூறினாள்.
நான் ஏன் இந்த அட்ரஸ்க்கு போகணும் சீனியர் என சிவா கேட்க, நீ போயேன்டா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என கவிதா சொன்னாள். சரியென தனக்கான முகவரியில் சென்று இறங்கினான் சிவா. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காவலாளியிடம் அவன் 11E போகணும் என்று கூற அவரும் தொலைபேசியில் அழைத்துக் கேட்டுவிட்டு சிவாவை மின்தூக்கி வரை சென்று ஏற்றி விட்டார்.
11வது மாடியை அடைந்த சிவா முகவரியில் இருந்த 11E யை நோக்கி நடந்தான். அவனுடைய மனது மிகவும் பாரமாக இருந்தது. ஏனென தெரியாமல் அழைப்புமணியை அடித்தான் சிவா. இதோ வரேன் என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது சிவாவுக்கு. அது ஏற்கனவே கேட்ட குரல் போல தெரிய, கதவைத் திறந்தாள் சிவலட்சுமி. நைட்டியில் 7 மாத வயிற்றுடன் அவளைக் கண்டதும் சிவா தன்னையறியாமல் கட்டியழுதான். சிவா இட்ஸ் ஓகே என்றபடி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள் சிவலட்சுமி.
சிறிது நேர அழுகையும் அரவணைப்பும் அங்கே அரங்கேறியது. அதற்குப்பின் சற்று அமைதி, அந்த அமைதிக்கு பின் சிவலட்சுமி பேசத் தொடங்கினாள். என்னடா எப்படி இருக்க என கேட்க, கண்களைத் துடைத்த படி இருக்கேன் என சிவா சொல்ல, என்னடா உன் இருக்கேன் சரியில்லையே என்றாள் சிவலட்சுமி.
என்னோட பழைய காதலன் உன்னோட புது புருஷன். நான் என்னோட உணர்வுகளை எல்லாம் உன்கிட்ட கொட்டித் தீர்த்தா உன்னோட வாழ்க்கை எப்படி நல்லா இருக்கும்னு நீ நினைக்கிற அக்கா என்றான் சிவா. அதுக்காக நீ எப்படி இருக்கன்னு கூட கேட்காம என்னால எப்படி இருக்க முடியும் எனக் கேட்டாள் சிவலட்சுமி.
உன்னுடைய இடத்துல நீ சரிக்கா, என்னோட இடத்துல நான் சரி என்ற சிவா, நான் ஃபிரஷப் ஆகிட்டு வரேன் எனச் சொல்ல, இந்த ரூம் யூஸ் பண்ணிக்கோடா என சிவலட்சுமி கையைக் காட்டினாள். அந்த அறையின் கதவைத் திறந்த சிவா சற்று நேரம் நின்று விட்டு, திரும்பி சிவலட்சுமியைப் பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்துவிட்டு அந்த அறையில் சென்று கதவை மூடினான் சிவா.
சிவலட்சுமி ஏன் தன்னை அந்த அறையில் அனுப்பினாள் என்பதை சிவா அறிவான். அதை நினைத்து சிரித்துக்கொண்டான். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு ஓலை அனுப்பிய மாதவி தன்னுடைய தலைமுடியில் அதை கட்டி அனுப்பியதாக ஒரு காட்சி உண்டு. ஏனெனில் அவள் கூந்தலின் மனம் கோவலனைத் தன்னிடம் கூட்டி வரும் என மாதவி நம்பினாள். அதுபோல சிவலட்சுமி ட்ரை பண்றா போல என எண்ணிக்கொண்டு குளிக்க சென்றான் சிவா. தன்னுடைய ஆடையைத் துவைத்து அந்த அறையில் உள்ள கொடியில் காய வைத்தவன், மாற்றுடை அணிந்து வெளியே வந்தான்.
ஓகே டா, நம்ம அம்மாங்க நம்ம கூட இருந்தா இந்த நேரத்துல நான் நினைச்சதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பேன். எனக்கு உங்க அம்மா பண்ற உளுந்தஞ்சோறு ரொம்ப பிடிக்கும். எனக்காக அது பண்ணி தரியா எனக் கேட்டாள் சிவலட்சுமி. சரிக்கா என்ற சிவா, சிவலட்சுமி அருகில் நின்று பேசிக் கொண்டிருக்க சமைக்க தொடங்கினான். உளுந்தஞ்சோறு, கருவாட்டு குழம்பு, வட்டலாப்பம் என சிவலட்சுமி அவனைச் செய்ய சொன்னாலும் அதில் வட்டலாப்பம் ரகுக்காக என்பதை சிவா நன்றாக அறிவான். வட்டலாப்பம் சாப்பிடும்போதெல்லாம் சிவலட்சுமி முட்டை நாற்றம் அடிக்குது என்று சொன்னது சிவாவுக்கு நினைவு வந்தது. அவளுடைய முயற்சிகளை சிவா தடுக்க நினைக்கவில்லை. ஏனென்றால் அவனுக்கு நன்றாகத் தெரியும் தான் என்ன செய்ய வேண்டும் என்று.
சமைத்து முடித்து சிறிது நேரத்தில் ரகுவுக்காக சாப்பாட்டைக் கட்டி ராப்பிடோவில் கொடுத்து விட்டாள் சிவலட்சுமி. அதைப் பார்த்த சிவா இந்த நாலு மாதங்கள் இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். சிவலட்சுமி அனுப்பிய சாப்பாட்டை வாங்கி திறந்த உடனே ரகு புரிந்து கொண்டான் சிவா செய்திருக்கிறான் என்று. அதை சாப்பிடும் பொழுது ஏனென்று அறியாமல் ரகுவின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
சிவலட்சுமியும் சிவாவும் சாப்பிட்டு முடித்து சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏதோ சிவலட்சுமி சொன்னதற்கு தன்னையும் அறியாமல் சிவா சிரித்தான். அவனை பார்த்த சிவலட்சுமி, நீ இப்படி சந்தோஷமா இருக்கணும் அதான் எனக்கு வேணும் என்றாள். அவளுடைய கையைப் பிடித்து தன்னுடைய கைகளுக்குள் வைத்த சிவா, என்னை பாரு அக்கா என்று சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு அவனைப் பார்த்தாள் சிவலட்சுமி.
நான் ரகுவ லவ் பண்ணிட்டு இருந்தது உண்மைதான், ஆனா அவனோட என்னுடைய எதிர்காலத்தை எல்லாம் நான் கற்பனை பண்ணதில்லை. அது மட்டும் இல்லாம அவனோட முதல் காதல் நீ தான் அது உனக்கு தெரியுமா? நீ அவன் மகிழ்வன்னு நினைச்சு உன்னோட மனச மாத்திகிட்ட, அவன் மனுசுல தைரியம் வரவழைத்து அவனோட காதலைச் சொல்ல வரும்போது நீ மாரிமுத்துவ லவ் பண்றேன்னு அவன்கிட்ட ஓபன் பண்ணின. அதான் காரணம் அவன் என் பக்கமா வந்ததுக்கு. மாரிமுத்துவுடைய இழப்பை ரகு நிரப்புவானான்னு கேட்டா எனக்கு தெரியல அக்கா. ஆனால் உனக்கு ஒரு நல்ல பார்ட்னரா அவன் இருப்பான் என்றான் சிவா.
என்னை சமாதானப்படுத்த நீ சொல்லாதடா என்றாள் சிவலட்சுமி. நான் ஏன் அக்கா அப்படி சொல்லணும். நான் உன்கிட்ட ஒன்னு சொல்றேன் நல்லா கேளு ஒரு நாள் பேசிட்டு இருக்கும்போது ரகுகிட்ட கேவலமான ஒரு கேள்வி நான் கேட்டேன். நானும் சிவலட்சுமியும் ஒரே நேரத்துல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்கோம், நீ யாரை வந்து முதல்ல பார்ப்பன்னு, அதுக்கு அவன் கொஞ்சம் கூட யோசிக்காம சிவலட்சுமியை தான்னு சொன்னான். நான் கொஞ்சம் மூஞ்ச தூக்கினேன். அதுக்கு என்கிட்ட அவன் என்ன சொன்னான் தெரியுமா? டேய் அவ என்னோட முதல் காதல்டா, அதுமட்டுமில்ல நான் தவற விட்ட பொக்கிஷம் அவள்ன்னு சொன்னான்.
எனக்கு அப்போ உன் மேல பொறாமையா இருந்துச்சு. ரகுவோட நான் பார்த்த அந்த பக்கம் தான் நீ அவனோட வாழனும்னு என்ன நினைக்க வைக்குதுக்கா என்றான் சிவா. நானே அவன் கூட வாழனும்னு நினைச்சாலும் அவனுக்குள்ள இருக்குற குற்றவுணர்ச்சி அவனை என் கூட வாழ விடும்னு எனக்கு தோணல என்றாள் சிவலட்சுமி. அதைப் பத்தி நீ கவலைப்படாத, அதை என் கையில விட்டுடு. அவனை அதுல இருந்து வெளியே கொண்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு என்றான் சிவா.
டேய் நான் உன்னோட வாழ்க்கையைத் தட்டி பறிக்கிற மாதிரி ஃபீல் ஆகுது என்றாள் சிவலட்சுமி. மெல்லிய புன்னகையை உதிர்த்த சிவா சொன்னான், இந்த சமூகம் என்கிட்ட இருந்து பறிச்சதை விட குறைவு தான் அக்கா என்றான்.
நீ ஃபோன் பண்ணி சாயங்காலம் ரகுவ வரச் சொல்லு நான் பேசிக்கிறேன் என்றான் சிவா. ரகுவை அழைத்த சிவலட்சுமி மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு வரும்படி கூறினாள். மாலை 6:30 மணி அளவில் கவிதாவுடன் சிவலட்சுமி கோயிலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றாள்.
சிவாவின் மனதில் என்ன ஆனாலும் இன்று தான் உருகி உருகி உருவாக்கிய காதலை உதறி தள்ளி விட வேண்டும். இன்று எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்க வேண்டும் என எண்ணினான்.
மணி மாலை ஏழைக் கடந்தது. சோஃபாவில் அமர்ந்திருந்த சிவா கண்ணயர்ந்து போனான். கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்த சிவா கதவைத் திறக்க, அவன் எதிரே நான்கு வருடங்களாக தான் உருகி உருகி காதலித்தவன், ஆனால் தன்னை நிராகரித்தவன் நின்றான்.
சிவாவின் உணர்வுகள் அவனை அருகில் செல்ல உந்தி தள்ளியது. ஆனால் ரகு சிவாவைத் தாண்டி வீட்டினுள் செல்ல, கதவைப் பூட்டிவிட்டு சிவா திரும்புவதற்குள் சிவாவின் உதடுகளை சிறை பிடித்தன ரகுவின் உதடுகள். சிவா விலக முயற்சி செய்தாலும் அவனை விட்டு பிரிய இயலாமல் சிவாவும் அந்த முத்தத்தில் மூழ்கி போனான்.
சிவாவுடைய அங்கங்களைத் தொட்ட ரகுவின் கைகளின் வேகம் சொன்னது சிவாவை அவன் சிவாவை இழந்து எவ்வளவு வாடினான் என்பதை. மெதுவாக முத்தத்தின் வேகம் குறைந்து ஆடை அவிழும் நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டு சிவா திரும்பினான்.
– வருவான்…
