ரஞ்சித்தும் அரை நிர்வாணமாகத் தான் நின்று கொண்டிருந்தான். உடனே தன்னுடைய முகத்தை திருப்பிக் கொண்ட சிவா, சீனியர் நீங்க பிஸினா நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் என திரும்பி நடக்க தொடங்கினான். சிவா நீ உள்ளவாடா இங்க ஒன்னும் நடக்கல என்றான் ரஞ்சித். அவனே போய்ட்டு வரேன்னு சொல்றான் இவன் ஏன் கூப்பிடுறான் என மனதில் ரஞ்சித்தைத் திட்டிக் கொண்டே பிரசாத் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான்.
சிவா நேரடியாக படுக்கையறைக்குள் சென்றான். படுக்கை நேர்த்தியாக இருந்தது, ரஞ்சித் படுக்கும் பகுதியில் மட்டும் கசங்கி இருந்தது. அது ரஞ்சித் தூங்கி எழுந்ததன் அடையாளமே. என்ன தான் இந்த மூன்று மாதங்களில் சிவா ரஞ்சித்தின் நட்பு நெருக்கம் ஆகி இருந்தாலும், ரஞ்சித் மற்றும் பிரசாத்திற்கு இடையில் செல்ல சிவா விரும்பவில்லை.
வேகமாக தன்னுடைய உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவன், நான் சூப்பர் மார்க்கெட் போறேன் சீனியர், உங்களுக்கு ஏதாவது வேணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க என பிரசாத் பக்கம் திரும்பியவன், பாய் பிரசாத் என வெளியேறினான். அவன் சென்ற பின் ரஞ்சித் சிவாவுக்கு சங்கடமாக இருப்பதைப் புரிந்து கொண்டான். சிவா சென்ற சிறிது நேரத்தில் தனக்கும் பிரசாத்திற்கும் காபி போட்டு வந்த ரஞ்சித் அதை குடித்துக்கொண்டே தன்னுடைய பேச்சைத் தொடங்கினான்.
அப்புறம் லைஃப் எப்படி போகுது என ரஞ்சித் கேட்க, எனக்கு என்னடா நல்லாதான் போகுது ரெண்டு மாசமா அம்மாகூட இருந்ததுல ரொம்பவே ஹாப்பியா இருக்கேன் என்றான் பிரசாத். சூப்பர் டா வேற என ரஞ்சித் பேச்சை தொடர, நீ சொல்லுடா என பிரசாத் கேட்டான். பிரசாத் நமக்குள்ள இருக்கிற இந்த டேட்டிங்கை நான் முடிச்சுக்கலாம்னு நினைக்கிறேன் எனக்கு உன் மேல லவ் ஃபீலிங்ஸ் வரலடா என்றான் ரஞ்சித்.
பிரசாத்திற்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் என்னை விட்டுட்டு இவன் யார் கூட போகப் போறான் என்று தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டான். உடனே, அப்ப வேற யாரையாவது லவ் பண்றியா என கேட்டான் பிரசாத்.
இல்லடா இனிமேல் நானா லவ் தேடப் போறது கிடையாது. எனக்கு தேவையானது காதல் இல்லை ஒரு நல்ல சக்சஸ்ஃபுல்லான வாழ்க்கை. என் கரியர்ல நான் பண்ண வேண்டியது நிறையவே இருக்கு, அதுக்கு அப்புறம் தான் நான் இதெல்லாம் யோசிப்பேன் என்றான் ரஞ்சித்.
ஓகேடா உன் கூட ஸ்பென்ட் பண்ணுன இந்த நாட்கள நான் மறக்க மாட்டேன் என்ற பிரசாத் ரஞ்சித்தின் வீட்டிலிருந்து வெளியேறினான். சூப்பர் மார்க்கெட் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் சிவா நடந்து சென்று கொண்டிருந்தான்.
அவன் பின்னால் வந்து நின்றது ரஞ்சித்தின் கார். திரும்பிய சிவா நீங்க என்ன இங்க என்று கேட்டான். த்ரி டேஸ் கோவை போயிட்ட மறந்துட்டியா இன்னைக்கி நம்ம ஒண்ணா சேர்ந்து வீடு சுத்தம் பண்ணனும், தேவையான பொருட்கள் வாங்கிட்டு வரணும்னு ஏற்கனவே பேசி இருந்தோமே என்றான் ரஞ்சித்.
ஆமால என அவனோடு காரில் ஏறினான் சிவா. இன்னைக்கு காலங்காத்தாலேயே மூட் அவுட் ஆகிருச்சு என்றான் ரஞ்சித். ஏன் என்ன ஆச்சு சீனியர் என சிவா கேட்டாலும், மனதுக்குள் பிரசாத் மற்றும் அவனுக்கு இடையில் தான் வந்ததைத்தான் ரஞ்சித் அப்படி சொல்றானோ என எண்ணிக்கொண்டிருந்தான் சிவா.
பக்கத்து வீட்டு பூனை வீட்டுக்குள்ள வந்துருச்சுடா. அதை விரட்ட நான் ட்ரை பண்ணிட்டு இருக்க காலிங் பெல் சத்தம் கேட்டுச்சு, நான் போய் கதவைத் திறந்தேன். கையில ஜூஸ் வச்சுக்கிட்டு பிரசாத் நின்னான். வாடான்னு கூப்பிட்டு, அவன் உள்ள வரும்போது பூனை அவன் மேல தாவி ஜூஸை அவன் மேல கொட்டி விட்டுருச்சு சோஃபா ஃபுல்லா ஜூஸா ஆயிடுச்சு.
அவனோட ட்ரெஸ்ஸ காய வச்சிட்டு நீ வர வரைக்கும் சோஃபாவ சுத்தம் பண்ணிட்டு இருந்தேன் என்றான் ரஞ்சித். அதற்கு பின் சிவா தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பினான். இரண்டு பேரும் பல்பொருள் அங்காடிக்கு சென்றனர். அந்த மாதத்திற்கு தேவையான பொருட்களை சிவா வாங்கத் தொடங்க, அவனோடு டிராலியைத் தள்ளிக் கொண்டு ரஞ்சித்தும் சென்று கொண்டிருந்தான்.
அப்போது, டேய் போன வாரம் ஒரு சாப்பாடு பண்ணியே அது கூட கத்திரிக்காய் போட்டு குழம்பு வச்சயே என ரஞ்சித் சொல்ல, உளுந்தஞ்சோறா என கேட்டான் சிவா. ஆமாடா நல்லா சூப்பரா இருந்துச்சு என ரஞ்சித் சொன்னான். அவர்கள் பேசிக்கொண்டு சென்று கொண்டிருக்கும் போது ஆணுறைகள் வைக்கப்பட்ட பகுதி வந்தது. ரஞ்சித் முன்னால் சென்று கொண்டிருக்க அவனை அழைத்தான் சிவா.
சீனியர் உங்களுக்கு தேவையானது இங்க இருக்கு என்றான். எதை அவன் சொல்கிறான் என தெரியாமல் முழித்தான் ரஞ்சித். அங்கும் இங்குமாக பார்த்தவன் அருகில் இருந்த சிவாவைப் பார்த்து எதை சொல்கிறீங்க ஜூனியர் எனக் கேட்க, அதோ என ஆணுறைகள் நிறைந்த அந்த நிலைதாங்கியைக் காட்டிய சிவா வேகமாக முன்னே நடக்க முயற்சிக்க, அவனுடைய கையைப் பிடித்து தன் பக்கமாக ரஞ்சித் இழுத்தான்.
சிவா தடுக்க முயன்றும் முடியாமல் ரஞ்சித்தின் மார்பில் சாய்ந்தான். அதுதான் முதல் முறை இருவரும் இவ்வளவு நெருக்கமாக நிற்பது. ரஞ்சித்தின் மூச்சுக்காற்று சிவாவின் நெற்றியைத் தழுவியது. சிவா கைகளுக்கு ரஞ்சித்தின் இதயத்துடிப்பு தெரிந்தது, மெதுவாக ரஞ்சித்தின் முகத்தை ஏறெடுத்து சிவா பார்த்தான்.
அவர்களின் கண்களுக்கு இடையே காந்த அலைகள் ஆரவாரம் செய்து கொண்டன. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த கடை ஊழியரின் காலடி சத்தம் அவர்களின் பார்வையை இடமாற்றியது.
உடனே, சொல்லுங்க ஜூனியர் 10 பீஸ் பாக்கெட் வேணுமா இல்ல மூணு பீஸ் வேணுமா என ரஞ்சித் சிவாவிடம் கேட்டான். உடனே, சீனியர் என்ன என்கிட்ட கேக்குறீங்க என்று சிவா கேட்க, ஆமா ஐ வாண்ட் சம்திங் டிஃபரண்ட் என சிவாவைப் பார்த்து ரஞ்சித் சிரிக்க, அவனைப் பார்த்து முறைத்த சிவா மூன்று ஆணுறைகளைக் கொண்ட கட்டு ஒன்றை அவர்களது சாமான் கூடையில் போட்டு சென்றான்.
ரஞ்சித்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. லிட்ரலி சிவா ஓகே சொல்லிட்டு சென்றானா என எண்ணி எண்ணி அவனுடைய மனதில் மகிழ்ச்சி தாளவில்லை. சிறிது தூரம் சென்ற சிவாவை ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டது.
இல்ல சிவா நீ ரகுவைப் பாத்துட்டு வந்தப்புறம் உனக்குள்ள ஏற்பட்ட உணர்ச்சி மாற்றங்களுக்கு நீ ரஞ்சித்தை யூஸ் பண்ண போறியா என்று சிவாவின் மனசாட்சி அவனைக் குத்தத் தொடங்கியது. சிரித்தபடி அந்த பகுதியைத் தாண்ட எண்ணிய ரஞ்சித்தை ஒரு கேள்வி தடுத்து நிறுத்தியது.
டேய் நீ அவன் கூட ஃபிளர்ட் பண்ணது சரி, ஆனா அவன் உடல் ரீதியா உனக்கு கிடைப்பான்னு தெரிஞ்ச அப்புறம் ஏன் இவ்வளவு சந்தோசம். அவன் உன்னோட க்ரஷ்தானே அவன் மேல காதல் உணர்வு தானே உனக்கு இருந்தது என பல்வேறு எண்ணங்களுக்கு பின் ரஞ்சித் அந்த ஆணுறை கட்டை, அது இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வந்தான்.
பணம் செலுத்திவிட்டு வீட்டுக்குப் போகும்வரை சிவா மற்றும் ரஞ்சித்தின் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. வீட்டிற்கு சென்ற உடனே வாங்கி வந்த பொருட்களை சமையலறையில் வைத்த ரஞ்சித், சிவா கொஞ்சம் பொருட்களை அரேஞ்ச் பண்ணிடு நான் ஒரு க்ளைண்ட் கால் அட்டென்ட் பண்ண போறேன் என ரஞ்சித் சிறிது நேரத்தில் வெளியேறினான்.
அவன் சென்ற பின் சமையலறைக்குள் சென்ற சிவா, நான் ஏன் இந்த மாதிரி நடந்துகிட்டேன், ரஞ்சித் என்னை பத்தி என்ன நினைச்சிருப்பான். நான் எப்படி இவ்வளவு கேர்லஸ்சா என்னோட உணர்வுகளை வெளிப்படுத்திட்டேன் என்ற எண்ணங்களோடு சாமான்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.
அதில் ஆணுறைகளின் கட்டு இல்லை என்பது தெரிந்ததும் புரிந்து கொண்டான் ரஞ்சித் எவ்வளவு நேர்மையானவன் என்பதை. அன்று இரவு இரண்டு பேரும் உணவருந்தி முடித்து பால்கனியில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிவா ரஞ்சித்தின் கையைப் பிடித்து தேங்க்ஸ் சீனியர் என்றான். அவனுடைய முகப்பாவனை ரஞ்சித்துக்கு அவன் ஏன் தாங்க்ஸ் சொல்லுறான் என்பதை உரைத்தது. உடனே சிவாவின் தோளைப் பிடித்தபடி, சிவா யூ ஆர் கோயிங் த்ரு எ லாட் ஆஃப் திங்ஸ். அது எனக்கு நல்லாவே தெரியும் எப்பொழுதும் நான் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க மாட்டேன் என்றான் ரஞ்சித்.
எனக்கு புரியல என சிவா ரஞ்சித் இடமே கேட்க, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் சிவா என்னோட வாழ்க்கையில நான் ரொம்ப சந்தோசமா இருந்த நாட்கள்னா அது உன் கூட இருந்த இந்த நாலு மாசம் தான். இதுக்கு ஏதாவது ஒரு பெயர் கொடுக்கணும்னு எனக்கு தோணல ஆனால் உன்னோட உடல் மேல மட்டும் எனக்கு ஈர்ப்பு இருக்கிற மாதிரி நான் சூப்பர் மார்க்கெட்ல பேசிட்டேன்னு தோணுச்சு.
அதான் நீ ஏற்கனவே ஒரு காதல் தோல்வியில இருக்கும் போது நான் அந்த மாதிரி உன்கிட்ட பேசி இருக்க கூடாதுல என்றான் ரஞ்சித். அவனுடைய கண்கள் லேசாக கலங்கியதைக் கண்ட சிவா தன்னுடைய கைகளால் ரஞ்சித்தின் கன்னங்களைப் பிடித்தான். என்னை பாருங்க சீனியர் நானா நினைக்காம எதையும் எப்பவும் நான் பண்ண மாட்டேன்.
இன்னைக்கு எனக்கும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, என்னோட பிரேக்கப் பீலிங்ஸ்ல இருந்து வெளியே வரதுக்கு உங்களை யூஸ் பண்ண பார்த்தேன்னு, அதனால எல்லா தவறும் உங்களோடது மட்டும் இல்ல சீனியர் எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் என்றான் சிவா.
நான் நிம்மதியா, கூட தூங்குன ரெண்டாவது ஆம்பள நீங்கதான் முதல்ல என்னோட அப்பா கிட்ட மட்டும் தான் எனக்கு அந்த ஒரு கம்போர்ட் ஸோன் இருந்திருக்கு என்றான் சிவா.
இருவரின் கண்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன, மெதுவாக சிவாவின் நெற்றியோடு தன்னுடைய நெற்றியை பொருத்தினான் ரஞ்சித். இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று இணைந்தது, உதடுகள் நான்கும் தீண்டி கொண்டன. அந்த இடமே அமைதியாக இருக்க வானத்தில் நிலா ஒளி வீசி இருவரின் காதல் உணர்வையும் தூண்டிவிட அங்கே இருவரின் உதடுகளும் இணைந்தது.
அது சிவாவுக்கோ ரஞ்சித்துக்கோ முதல் முத்தம் அல்ல. ஆனால் மனதார ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டதன் அறிகுறி. ஆனால் தாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என்பதை கூட அறியாத இரண்டு உள்ளங்களின் உணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே அது.
அந்த முத்தத்திற்கு சாட்சி சந்திரனும் அவன் அருகில் இருந்த இரண்டு நட்சத்திரங்களின் மின்னல்களுமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பின் முத்தங்களைத் தாண்டி இருவரும் செல்லும் நிலையில் ரஞ்சித் சிவாவின் இடுப்பைப் பற்றி இருந்த தன்னுடைய கையை எடுத்தான். அப்போது தான் சிவாக்கு புரிந்தது இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதன் நிலை.
ரஞ்சித்திடமிருந்து விலகிய சிவா உடனே சமையலறைக்குள் சென்றான். ரஞ்சித் பல்தடம் பதிந்த தன் கீழ் உதட்டை மேலுதட்டால் பிடித்தபடி சிரித்தான் சிவா. அடுத்தடுத்த நாட்களில் இருவருக்கும் உள்ள நட்பு அதை தாண்டிய நிலைக்கு சென்றது. அதை அவர்கள் அறிந்திருந்தாலும் வெளிப்படுத்த இருவருக்குள்ளேயும் ஏதோ ஒரு வகையான தயக்கம் இருந்தது உண்மை.
சிவா அன்று மதியம் கேண்டினில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவன் அருகில் வந்து அமர்ந்தனர் பிரபு மற்றும் ஜோசப். அவர்கள் ஏதோ பிரச்சனை செய்ய தான் வந்திருக்கிறார்கள் என்பதை சிவா உணர்ந்து தான் உட்கார்ந்திருந்தான். மெதுவாக தன்னுடைய பேச்சை தொடர்ந்தான் பிரபு.
என்னடா ஜோசப் உன்னோட ரூம் மேட் இப்பல்லாம் உன் கூட வரதில்லை என்றான் பிரபு. அதுவா சீனியர், நம்ம தேவைகளைப் பூர்த்தி செய்யாதவனை ஏன் கூட வெச்சிக்கணும் அதான் அனுப்பிவிட்டேன் என்றான்.
ஓ அதான் காரணமா! ஏன்டா அப்ப தேவைகளுக்கு தான் ரூம் மேட்டா என்றான் பிரபு. பின்ன என்ன சீனியர் இருக்க இடமும் ஒரு பாதுகாப்பான சூழலும் அவங்களுக்கு கஷ்டமே இல்லாம நம்ம கொடுக்கும் போது, நமக்காக கொஞ்சூண்டு கஷ்டத்தை ஏன் அவங்க ஏத்துக்க கூடாது என்றான் ஜோசப்.
அப்போ தேவைகளைப் பூர்த்தி பண்றவங்களை மட்டும் தான் நீ ஒரு ரூம் மேட்டாக வச்சிருப்ப அப்படித்தானே என்றான் பிரபு. நான் மட்டும் இல்லை சீனியர் இங்க இருக்குற எல்லாரும் அப்படித்தான். நீங்க வேணா சிவா கிட்ட கேளுங்க ரஞ்சித் அவனை தன்னுடைய ரூம் மேட்டா வச்சிருக்காரு என்றான் ஜோசப். இது சிவா ஏற்கனவே எதிர்பார்த்தது தான் அதனால் சிவா எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் இருக்க, அப்படியா சிவா என்றான் பிரபு.
ஓ என்னை பத்தி தான் பேசுறீங்களா என்றான் சிவா. பிரபுவும் ஜோசப்பும் சிரித்தபடி ஆமாம் என்று சொல்ல, கண்டிப்பா ரூம்மேட் தேவைகளும் நம்மளோட தேவைகளும் ஒன்னா இருந்தா, ஏன் நம்ம அதை பூர்த்தி பண்ணக்கூடாது.
அதுவும் நம்ம ரூம்மேட் பப்ளிக் டாய்லெட் எல்லாம் போய் தன்னோட காம இச்சைகளைத் தீர்த்துக்காதவனா இருந்தா ரொம்பவே நல்லது தானே என்றான் சிவா. அது மட்டும் இல்ல தன்னுடைய ஈர்ப்பு பற்றி புரிஞ்சுகிட்டு கல்யாணம் பண்ணாம இருக்கான்னா அது எவ்வளவு பெரிய விஷயம். இங்க சில ஜென்மங்கள் கல்யாணம் பண்ணியும் அந்த பொண்ணையும் ஏமாத்திக்கிட்டு ஒரு பையனையும் ஏமாத்திட்டு திரியுதுங்க என சிவா சொன்னதும் பிரபுவின் முகம் கோபமாக மாறத் தொடங்கியது.
அண்ட் ஒன் மோர் திங் ஜோசப், நம்ம ரூம் மேட்டுக்கு நல்ல பெரிய டூலா இருந்துச்சுன்னா அதுவும் ஒரு தடவைக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல தாக்குபிடிக்கிற ஆளா இருந்தா என்ன பிராப்ளம், நல்லா என்ஜாய் பண்ணலாமே என்றான் சிவா.
பாவம் உன் ரூம்மேட், நானெல்லாம் ரஞ்சித் போக சொன்னா கூட போக மாட்டேன் பா, அவனை விட ஹாப்பிநெஸ் கொடுக்க யாரால முடியும் என்ற சிவா எழுந்து நடக்க, கோபத்தில் ஜோசப்பும் பிரபுவும் அவன் முன்னால் சென்று நின்றனர்.
பொட்ட நாயே யாரடா இப்படி எல்லாம் பேசிட்டு போற என பிரபு சிவாவை அடிக்க கையை ஓங்கினான்.
-வருவான்…
