என்னடா உனக்கு வாய் அதிகமா இருக்கு என்றான் ஜோசப். ஆமா ரஞ்சித்தோடது ரொம்ப பெருசில்ல, அதான் வளர்த்துட்டு இருக்கேன் என்றான் சிவா. இங்கு நடப்பதை எல்லாம் சற்று தொலைவில் மறைந்து பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சித்.
சிவா பேசிய சில வார்த்தைகளில் சற்று வெட்கமும் கொண்டான் ரஞ்சித். என்னது இது என கவிதா கேட்க, அவன் என்னைப் பத்தி சொல்ல சொல்ல எனக்கு ஒரு மாதிரி ஷையா இருக்கு என்றான் ரஞ்சித். என்ன கருமமோ என்ற கவிதா நாம போவோமா எனக் கேட்க, என்னோட பேபி நல்லா தானே சமாளிக்கிறான் வெயிட் பண்ணு போகலாம் என்றான் ரஞ்சித்.
ரொம்ப.. பேபி.. து.. எனத் துப்பினாள் கவிதா. அவளுடைய முகத்தைப் பார்த்து ஏய் பொறாமையில பொங்காதடி என்றான் ரஞ்சித். போடா என கவிதா சொல்ல, சிவாவை அடிக்க பிரபு கையை ஓங்க அவனுடைய கையை எட்டி பிடித்த சிவா, இங்க பாருங்க பிரபு நான் அர்பு இல்ல வாங்குனதத் திருப்பிக் கொடுக்கத் தெரியாம இருக்க என்றான் சிவா.
உடனே ஜோசப், என்னடா ரொம்ப ஓவரா பேசுற என்று சிவாவை நெருங்க, அவனது அந்தரங்கத்தின் மீது ஒரு மிதியை விட்ட சிவா பிரபுவின் கைகளை வளைத்துப் பிடித்து அவனுடைய பின்னால் கொண்டு சென்றான். அவனுடைய காதருகில் சென்றவன் இங்க பாரு பிரபு இது உன்னோட லாஸ்ட் சான்ஸ் இதுக்கப்புறம் என்கிட்டயோ என் ஃபிரண்ட்ஸ் கிட்டயோ பிரச்சனை பண்ணாத என்றவன் அவனை ஜோசப்பின் மீது தள்ளிவிட்டு நகர்ந்தான்.
வாவ் தட்ஸ் மை பாய் என ரஞ்சித் குதூகலிக்க, அவன் முன்னால் கைகட்டியபடி நின்ற கவிதா, டேய் இது கொண்டாடுற விஷயம் இல்ல இவங்க எல்லாரையும் ஒன்னா உட்கார வச்சு பேச வைக்கணும் என்றாள்.
உடனே, ஓகே நாளைக்கு உன்னோட பர்த்டேல நம்ம அவங்கள ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸ் பார்ட்டிக்கு கூப்பிடலாம் என்றான் ரஞ்சித். செம ஐடியா நாளைக்கு நானும் என்னோட வருங்கால கணவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போறேன் என்றாள் கவிதா.
சூப்பர் வீ ஆர் வெயிட்டிங் என்ற ரஞ்சித், கம்பெனி குரூப்பில் நாளை நடக்கவிருக்கும் கொண்டாட்டம் (பார்ட்டி) சார்ந்த விவரங்களைப் பதிவிட்டான். கவிதா முக்கியமான அறிவிப்பு விடுக்கப் போவதாகவும், எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டும் என்பதாகவும் இருந்தது அப்பதிவு. அந்த அழைப்பில் நிகழ்விடம் மற்றும் ஆடைக் குறியீடு கருப்பு நிறம் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்று மாலை சிவாவை அழைத்துக் கொண்டு நாளைய கொண்டாட்டத்திற்கான துணிகளை வாங்க சென்றான் ரஞ்சித். வடபழனியில் உள்ள நெக்ஸஸ் மால் சென்ற சிவாவும் ரஞ்சித்தும் தங்களுக்கான உடைகளைத் தேடிக் கொண்டிருக்க, அப்போது சிவாவின் அருகில் வந்த ரஞ்சித் இந்த குர்த்தா எப்படி இருக்கு எனக் கேட்க எனக்கு ஓகே தான் உங்களுக்கு ஓகேவான்னு பாத்துக்கோங்க என்றான் சிவா.
உடனே ரஞ்சித்தின் முகம் மாறியது. நீ ரேசிஸ்ட்டா சிவா, ஏன் கருப்பா இருந்தா இந்த மாதிரியான டிரஸ் போட கூடாதா? இவ்வளவு நாள் இப்படி நிறவெறி பிடிச்ச ஒருத்தன் கூடவா ரூம் மேட்டா இருந்தேன், கடவுளே என ரஞ்சித் நடிக்க ஆரம்பித்தான்.
அவனுடைய நெஞ்சில் கையை வைத்து தள்ளிய சிவா, கெட் அவுட் ரஞ்சித் என்றான். இல்ல எனக்கு புரியல ஐ வாண்ட் ஆன்சர் என ரஞ்சித் கேட்க, உங்களுக்கே தெரியும் சீனியர் என்றான் சிவா.
நீ ஒரு தடவை சொல்லு நான் கேட்கிறேன் என்றான் ரஞ்சித். உடனே இது கன்வெர்சினல் ஃபேப்ரிக்ல பண்ண டிரஸ். உங்களுக்கு இந்த ஃபேப்ரிக் அலர்ஜி அண்ட் உன்னோட சைஸ் எக்ஸ் எல். ஆனா இந்த கம்பெனி அஃபிஸியலா இந்த மாடல்ல எல் க்கு மேல உள்ள சைஸ் காலின்னு சொல்லிட்டாங்க, அண்ட் ஒன் மோர் திங் உங்களுக்கு ஸ்கின் எக்ஸ்போஸ் பண்ற மாதிரி டிரஸ் போட பிடிக்காது, இந்த டிரஸ்ஸ நல்லா பாருங்க என்றான் சிவா.
என்னோட அலர்ஜி வரைக்கும் இவனுக்கு எப்படித் தெரியும் என ரஞ்சித் நினைத்துக் கொண்டிருக்க, சிவா ஒரு டிரஸ் எடுத்துக்கொண்டு வந்து, நான் இதை எடுக்கலாம்னு இருக்கேன் என்றான். உடனே அவனிடம், இதில என்னோட சைஸ் இருக்குமா என்று கேட்டான் ரஞ்சித்.
தேடிப் பார்த்துவிட்டு, இருக்கு என்ற சிவா, வாங்க ட்ரையல் ரூம்ல போய்ப் போட்டுப் பார்க்கலாம் என்றான். சரியென இரண்டு பேரின் அளவிலும் ஆடையை எடுத்துக்கொண்டு அவர்கள் ட்ரையல் அறைக்குள் சென்றனர்.
ரஞ்சித் முதலில் செல்ல சிவாவும் அவன் பின்னால் சென்றான். உடனே, டேய் ஒரே ரூம்ல உனக்கு ஓகேவா என ரஞ்சித் கேட்க, இதுல என்ன இருக்கு ஜஸ்ட் டிரஸ் ட்ரை பண்ண போறோம் என சிவா சொன்னான்.
ஓகே என உள்ளே சென்ற ரஞ்சித் கண்ணாடியை நோக்கி நிற்க, அவனுக்கு பக்கமாக சிவா நின்றான். தன்னுடைய பைசப் பார்ப்பது மீசையை முறுக்குவது என இருந்த ரஞ்சித்தைப் பார்த்த சிவா, சீனியர் நாம பெண் பார்க்க வரல ஜஸ்ட் டிரஸ் ட்ரை பண்ண தான் வந்திருக்கோம் என்று சொல்ல, ஓகே ஓகே என்ற ரஞ்சித் டீசர்ட்டின் பொத்தான்களை கழட்டாமலேயே டிசர்ட்டைக் கழட்ட அது அவனுடைய கழுத்தில் மாட்டிக் கொண்டது.
ஆ… ஆ… என ரஞ்சித் திணற, சிவா அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினான். என்னடா சிரிக்கிற என ரஞ்சித் சிவாவைப் பார்த்து திரும்ப, அப்போது ரஞ்சித்தின் உடலின் வாசனையில் தடுமாறத் தொடங்கினான் சிவா.
பறந்த மார்பகம் பசியால் வாடியது போன்ற இடையும் வனப்பமான தொடைகள் என ஆணின் அசர வைக்கும் வடிவம் அவனிடம் இருந்தது. அந்த வாடை சிவாவை மதி மயக்கியது. மெதுவாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சிவா ரஞ்சித்துக்கு உதவ கையைக் கொண்டு செல்ல, அவனுடைய முகம் ரஞ்சித்தின் விம்மி புடைத்த மார்பை இடிக்க, சிவா சற்று தன்னை மறக்கத் தொடங்கினான்.
மெதுவாக ரஞ்சித்தின் வயிற்றிலிருந்து மார்பு வரை சிவாவின் கைகள் படரத் தொடங்கின. அதுவரை டி-ஷர்ட்டை அவிழ்க்க அலைந்த ரஞ்சித்தின் கைகள் அந்தத் தொடுதலில் மயங்கி நின்றன.
மெதுவாகத் தன்னுடைய முகத்தை ரஞ்சித்தின் மார்பில் புதைத்தான் சிவா. அவனுடைய மார்பு குழியில் சிவாவின் தாபம் புதையுறத் துடிக்க மெதுவாக ரஞ்சித்தின் சட்டை பொத்தான்களை சிவா அவிழ்த்து விட, தன் தலையை விடுவித்த ரஞ்சித் மெதுவாகக் குனிய சிவாவின் மூக்கும் ரஞ்சித்தின் மூக்கும் இடித்துக் கொண்டன.
அவர்களது மூச்சுக்காற்று அந்த அறையைச் சற்று உஷ்ணமாக்கியது. சிவா மெதுவாக முதலடி எடுத்து வைத்தான். ரஞ்சித்தின் உதடுகளை நோக்கி தன்னுடைய உதடுகளை முடுக்கிவிட்டான்.
ரஞ்சித் உதடுகள் அந்த முத்தத்திற்காக ஏங்கித் துடித்தன. தன்னுடைய அன்பால் சிவாவின் மனதை வென்று விடலாம் என எண்ணிய ரஞ்சித்தின் எண்ணம் நிறைவேறக் காத்துக் கொண்டிருந்தது.
சிவாவின் மனசாட்சி ட்ரையல் அறையின் கண்ணாடியில் இருந்து சிவாவைப் பார்த்து, இது வெறும் ஹூக்கப் தானா இல்ல உன்னோட வாழ்க்கைய இவன் கூட புதுசா தொடங்கப் போறியா என்றது.
உடனே சிவா சுதாரித்துக் கொண்டு தன்னுடைய கையில் இருந்த குர்த்தாவை ரஞ்சித்தின் மார்பில் வேகமாக வைத்தவன் சீக்கிரம் போடுங்க சீனியர் என்றான்.
உடனே அதை வாங்கிக்கொண்டு அணிந்தான் ரஞ்சித். அதற்கு பின் சிவா தன்னுடைய சட்டையைக் கழட்ட, ரஞ்சித் திரும்பிக்கொண்டான். என்னாச்சு சீனியர் என சிவா கேட்க, உனக்கு அன்கம்ஃபோர்ட்டாகக் கூடாதுன்னு தான் என்றான் ரஞ்சித்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல ஒளிஞ்சு ஒளிஞ்சு வீட்ல கண்ணாடில பார்க்கிற மாதிரி இங்கேயும் பார்க்க போறீங்களா என்றான் சிவா. என்னடா சொல்ற என்ன போய்.. அடப்பாவி நான் அப்படிப்பட்டவன் எல்லாம் இல்ல டா என ரஞ்சித் திரும்பினான்.
அப்போது சிவாவின் மார்பின் காம்புகளைக் கண்டவன் சற்று வாயடைத்து நின்றுவிட்டான். அவன் முகத்துக்கு முன்னால் சொடுக்குப் போட்டு, ஹலோ என்ற சிவா, என்ன சீனியர் முகத்தைப் பார்த்து எல்லாம் பேசவே மாட்டீங்களா என கேட்டான்.
சிவா தன்னைக் கிண்டல் செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட ரஞ்சித், அவன் இடுப்பைத் தன்னுடைய கைகளால் பிடித்து தன்னோடு இறுக்கிப் பிடித்தான். சீனியர் என சிவா சொல்லி நிமிர்ந்து பார்க்க, உண்மையா கெட்டவன்னா எப்படி இருப்பான்னு உனக்கு காட்டவா எனக்கூறிய ரஞ்சித் சிவாவின் நெற்றியில் தன் உதடுகளைப் பதித்தான்.
மெதுவாக சிவாவின் நெற்றியில் இருந்து மூக்கை அடைந்த ரஞ்சித்தின் உதடுகள் சிவாவின் கண்களுக்கு இடம் பெயர்ந்தன. அங்கிருந்து சிவாவின் காதுகளை ஈரப்படுத்திய ரஞ்சித், சிவாவின் கழுத்தில் தன் உதடுகளின் சுவடுகளைப் பதியத் தொடங்கினான்.
சிவா உணர்ச்சி பெருக்கில் தன்னுடைய கண்களை மூடியபடி இருக்க அவனை நிமிர்ந்து பார்த்த ரஞ்சித், மறுபடியும் குனிந்து சிவாவின் கழுத்தில் தன் முத்திரையைப் (லவ் பைட்ஸ்) பதிக்கத் தொடங்க, அவனுடைய எண்ணம் அறிந்த சிவா, சீனியர் என்ன பண்றீங்க என்ன பண்றீங்க என ரஞ்சித்தைத் தள்ளி விட முயல ரஞ்சித் அவனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.
தன்னுடைய வேலை முடிந்த பின் சிவாவை விட்ட ரஞ்சித் இதுதான் கெட்ட பையன் பண்ற வேலை என்று சொல்ல, சீனியர் உங்களைக் கொல்லப் போறேன் என கண்ணாடியில் தன்னுடைய கழுத்தைப் பார்த்தபடி சிவா சொன்னான்.
உடனே டிரஸ் போடுடா கிளம்பலாம் என அந்த உடையைத் தேர்வு செய்து அதை வாங்கிக்கொண்டு, இரண்டு பேரும் வீட்டிற்கு வந்தனர். கவிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான நாள் வந்தது. அன்று மூணு மணிக்கு எல்லோரும் அலுவலகத்திலிருந்து கிளம்பினர். சிவாவும் ரஞ்சித்தும் வீட்டிற்கு வந்தனர். டேய் எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு என ரஞ்சித் சொல்ல, ஏன் சீனியர் என சிவா கேட்டான்.
கவிதாவுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கணும்னு குழப்பமா இருக்கு என்றான் ரஞ்சித். உடனே சிவா அவன் காதில் ஏதோ சொல்ல ஓகே என்ற ரஞ்சித், தன்னுடைய திறன்பேசியை எடுத்துக் கொண்டு படுக்கையறைக்குப் பக்கத்தில் உள்ள பால்கனிக்குச் சென்றான். அவன் பேசுவதற்குள் சிவா குளிக்கச் சென்றான். பேசி முடித்து படுக்கையறைக்குள் ரஞ்சித் வர, சிவா கதவைத் திறந்து கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தான். இந்த முறை சிவா ரஞ்சித்தின் கண்களுக்கு அவனுடைய எதிர்காலத்து வாழ்க்கைத் துணையாகத் தெரிந்தான்.
சிவா கோயம்புத்தூர் சென்று வந்ததிலிருந்து மிகவும் மகிழ்ச்சியாகவும் தெளிவாகவும் இருக்கிறான். கவிதா சொன்னது போல சிவாவினுடைய பழைய காதலை விட்டு வெளியே வந்து விட்டான் என்பதை ரஞ்சித் உணரத் தொடங்கினான்.
ஹலோ சீனியர் என்னைப் பாக்குறதை விட்டுட்டு குளிக்கப் போங்க என்றான் சிவா. நமட்டு சிரிப்போடு ரஞ்சித் சென்றான். ரஞ்சித் கிளம்பியதும் சிவா, ரஞ்சித், குமார் மூன்று பேரும் ரஞ்சித்தின் காரில் கிளம்பினர்.
காரில் சென்று கொண்டிருக்கும் போது, என்னடா அர்பு வரலையா என சிவா கேட்க, தெரியலடா நீ அவன்கிட்ட சொன்னியா இல்லையா எனக் கேட்டான் குமார். நான் சொன்னேன் என சிவா தன்னுடைய திறன்பேசியை எடுத்து அவனை அழைக்கப் போக, டேய் நான் அவன அர்பன்ஸ்கொயர் வரச் சொல்லிட்டேன் அவன் அங்க வந்துருவான் என ரஞ்சித் சொல்ல, அங்கு சென்று அர்புவை ஏற்றிக்கொண்டு நான்கு பேரும் கிளம்பினர்.
இந்தாங்க சீனியர் நீங்க கேட்டது என ஒரு பார்சலை நீட்டினான் அர்பு. டேய் சிவா அதை ஓபன் பண்ணிக் கொடுடா எல்லோருக்கும் என்றான் ரஞ்சித். ஓகே சீனியர் என்ற சிவா அதிலிருந்த காபிகளை நான்கு பேருக்கும் கொடுக்கப் பேசிச் சிரித்தபடி சென்றனர்.
ஆனால் அர்பு சிரிக்கவும் இல்லை குமாரின் பக்கமாகத் திரும்பவும் இல்லை, அதை சிவா கவனித்துக் கொண்டான். ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸில் அனைவரும் கூடினர் இரவு 8 மணி அளவில் அனைவரும் வாழ்த்துகள் சொல்ல கவிதா கேக் வெட்டத் தயாராக இருந்தாள்.
அப்போது யாருக்கு வெயிட் பண்ற கவிதா என ஜோசப் கேட்க, சம் ஒன் ஸ்பெஷல் என்ற கவிதா வாசலில் வந்து நின்ற காரைப் பார்க்க அதிலிருந்து மிடுக்கான உடையுடன் ஒருவர் இறங்கி உள்ளே வந்தார்.
ஹாய் காய்ஸ் என அவர் அனைவரிடமும் சொல்ல, இவர் பேரு மகேஷ் நீங்க மகின்னு கூப்பிடலாம் என்னுடைய வருங்கால கணவர். போலீஸ் டிபார்ட்மென்ட்ல சப் இன்ஸ்பெக்டரா இருக்காரு என கவிதா சொல்ல எல்லோரும் கைதட்டினர்.
சிவாவின் முகம் மட்டும் சோகமானது, அதை குமார் மட்டும் கவனித்தான்..
வருவான்…
