இவரோட பெயர் மகேஷ் நீங்க எல்லாரும் மகின்னு கூப்பிடலாம் சப்-இன்ஸ்பெக்டரா இருக்காரு என்று கவிதா அனைவருக்கும் தன்னுடைய வருங்கால கணவரை அறிமுகப்படுத்தினாள். கவிதா கேக்கை வெட்ட அனைவரும் கைதட்டி வாழ்த்தினர். அதற்குப் பின் கவிதா அனைவரிடமும் தனக்கான பரிசை வாங்கிக் கொண்டாள்.

 

அப்போது சிவா ரஞ்சித்திடம் சொன்னது போல கவிதாவின் நீண்ட கால ஆசைகளுள் ஒன்றான ரோலக்ஸ் கைகடிகாரத்தை அவளுக்காக வாங்கியிருந்தான். அதை சிவாவும் ரஞ்சித்தும் சேர்ந்து கவிதா மற்றும் மகியிடம் கொடுத்தனர். உடனே என்னதுடா இது என ஆர்வம் தாங்காமல் கவிதா ரஞ்சித்தின் அன்பளிப்பை மட்டும் அந்த இடத்திலேயே பிரித்துப் பார்த்தாள்.

 

அதைப் பார்த்தவளின் கண் கலங்கியது. அந்த கைகடிகாரத்தை வாங்க காசு இல்லாமல் அல்ல, ஆனால் தனக்காக யாராவது அதை வாங்கி தர வேண்டும் என்கிற அவளுடைய ஏக்கம். ரஞ்சித்தைக் கட்டியணைத்து ரொம்ப தேங்க்ஸ்டா என்றாள் கவிதா. அத நான் யோசிக்கல சிவா கொடுத்த ஐடியா என ரஞ்சித் சொல்ல முயல, அவனுடைய கையைப் பிடித்து நிறுத்தினான் சிவா.

 

ரஞ்சித் கொடுத்த அன்பளிப்பைப் பற்றி மகியிடம் மிகவும் நெகிழ்ந்தாள் கவிதா. சில நேரங்கள்ல நம்ம சொல்ற பொய் கூட நல்லது தான் என சிவா ரஞ்சித்தின் காதில் சொல்ல, அதுவும் சரிதான் என ரஞ்சித் தலையசைத்துப் பதிலளித்தான்.

 

அனைவரும் ஆடிப் பாடி மகிழ்ந்து சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குக் கிளம்பினர். கவிதாவுக்கு நெருக்கமானவர்கள் ஒரு சிலரை தவிர அனைவரும் சென்று விட்டனர். கவிதா, மகி, சிவா, ரஞ்சித், அர்பு, குமார், சரோ, பிரசாத் என சிலர் மட்டுமே அங்கு இருந்தனர்.

 

பிரசாத்தைத் தன்னுடைய நெருங்கிய நண்பன் என அனைவரிடமும் சரோ அறிமுகப்படுத்த, பிரபு மற்றும் ஜோசப்பும் அவர்களோடு இணைந்து கொண்டனர். எங்கடா போனீங்க என ரஞ்சித் கேட்க, சின்ன வேலையா என்ற பிரபு அந்த பேச்சை தட்டிக்கழித்தான். அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

 

கவிதா சிக்னல் கொடுக்க ரஞ்சித் பேச்சைத் தொடங்கினான். என்ன காய்ஸ் யாரெல்லாம் பெங்களூரு ப்ரைடுக்கு வரீங்க எனக் கேட்டான். பிரபு மற்றும் ஜோசப்பைத் தவிர அனைவரும் வருவதாகக் கூறினர். உடனே, என்னடா நீங்க ரெண்டு பேரும் வரலையா என ரஞ்சித் கேட்க, இல்ல சீனியர் நாங்க வரல எங்களுக்கு அதெல்லாம் பிடிக்காது என்றான் ஜோசப்.

 

அப்புறம் என்ன சீனியர் மீசை தாடியோட சேலை கட்டிக்கிறது, அரையும் குறையுமா டிரஸ் போடறது. தன்னோட உடம்பை எக்ஸ்போஸ் பண்றதுன்னு அது என்ன ப்ரைடு மண்ணாங்கட்டி என்றான் பிரபு. உடனே, அது மட்டுமா இந்த மாதிரி இவங்க பேரணி போற அளவுக்கு என்ன சாதனையா பண்ணி இருக்காங்க, ஆம்பளைய புடிக்கும்னு சொல்லுவாங்க. ஏன்னு கேட்டா கொஞ்சம் பேரு பிறவியிலேயே அப்படின்னு சொல்றாங்க. பல பேரு அபியூஸ் பண்ணப்பட்டதா நீலி கண்ணீர் வடிக்கிறாங்க. ஏன் அபியூஸ் பண்ணா மறுபடி மறுபடி ஏன் அதுல அவங்க போறாங்க என்றான் ஜோசப்.

 

இதுல இந்த அரவாணிகள் வேற என பிரபு வாயெடுக்க, ஹலோ சீனியர் தே ஹவ் அ நேம் அஸ் திருநங்கைகள் இல்ல திருநர், நீங்க அத சொல்லி அவங்களைக் கூப்பிடலாம் என்றான் சிவா. அதான நான் சொல்ல மறந்துட்டேனே, ப்ரோநௌன்னு ஒன்னு வேற ஆறடி மீசையும் தாடியுமா இருக்கான், அவன் அவனை ஷி/ஹெர் ன்னு கூப்பிட சொல்றான் இதெல்லாம் சகிக்க முடியல சீனியர் என்றான் பிரபு.
என்னடா இவ்வளவு குற்ற சாட்டுகளை வைக்கிற என்ற கவிதா சிவாவைப் பார்த்து என்னடா எதுவும் சொல்லாம இருக்க எனக் கேட்டாள். சீனியர் நான் முட்டாள்கள் கிட்ட எல்லாம் பேசுறது இல்ல என்றான் சிவா. உடனே, அப்படி இல்ல சிவா ஒருத்தங்களுக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்கிறது தப்பு இல்லயே என்றான் ரஞ்சித்.
​ஒருவேளை ரஞ்சித் மே பி அவன்கிட்ட பதில் இல்லாம கூட இருக்கலாம். என்றான் ஜோசப். என்கிட்ட பதில் இருக்கு உங்க ரெண்டு பேருக்கும் நான் சொல்றதைக் கேட்க தைரியம் இருக்கா என்றான் சிவா. உடனே, சொல்லேன் என்றான் பிரபு. ஓகே, கொஞ்சம் பின்னாடி இருந்து வருவோம்.

 

முதல்ல காமம் அப்படிங்கறது வெறும் தன்னோட ஜீன்களைக் கடத்துறதுக்காக மட்டும் தான் இருந்தது. பரிணாம வளர்ச்சி படிகள்ல மனிதன் உருவாகி வந்த பின்னாலயே உயிரினங்களுக்குள்ள ஒரினசேர்க்கை இருந்திருக்கு. ஏன்னா உடலுறவு வெறுமனே ஜீன்களை மட்டும் கடத்தக் கூடியது இல்ல. அதோட உச்சத்தை அடையும் பொழுது சுரக்கற எண்டார்ஃபின் எந்த உயிரினத்துக்கா இருந்தாலும் நல்ல சுகமான உணர்வைத் தான் கொடுக்கும்.

 

இது ஆரம்பத்தில் இரண்டு பாலினம் மேலும் ஈர்ப்பு கொண்டவர்களிடம் இருந்து ஒரே பாலின சேர்க்கைக்கு நகர்ந்து இருக்கலாம். இயல்பா உங்களோட உடலுறவு தேவையை ஏன் உங்க உடல்வாகு, முக அமைப்பு, ஆண்குறி அளவுன்னு ஏதோ ஒன்ற வச்சு நிர்ணயிக்கிறீங்க. இதுவும் பரிணாம வளர்ச்சியினுடைய தொடர்ச்சி தான்.

 

தன்னோட இணையைக் கவரத் தன்னோட பலத்தைக் காமிக்கும். சில விலங்கினங்கள் தன்னுடைய அழகால பெண்ணைக் கவரும். சில தன்னோட புத்திக் கூர்மையினால கவரும். அதே தான் மனிதனுக்குள்ளேயும் இருக்குது.

 

ஆண்குறி அதோட இயற்கையான வளர்ச்சி தாண்டி வளராது என்பது அறிவியல் பூர்வமா வலியுறுத்தப்பட்டும் ஏன் லேகியம், ஆயில்மெண்ட்ன்னு வாங்க ஆண்கள் அலையறாங்க. ஏன்னா அதன் மூலமா இணைய கவரலாம் என்கிற எண்ணம். அது போல தான் ஜிம் பாடி காட்டுறதும் அவங்க பண்ணுற விஷயம்.

 

அதே நேரத்தில பெண் தன்னோட உணர்வுகளைச் சொல்லக்கூடாது, உடலுறவுல முதல் அடி எடுத்து வைக்கக் கூடாதுன்னு இருக்குற அல்லது இருந்த கட்டுப்பாடுகளுக்குள்ள இருந்து தான் ஓரினச்சேர்க்கை மறைமுகமான ஒன்றாகவும் அருவருப்பாகவும் மாறி இருக்கக்கூடும்.

 

பாபர் மாதிரியான ஒரு அரசர் ஒரு இந்து வாலிபனைக் காதலிச்ச ஒரே ஒரு வரலாறு மட்டும் ஏன் நமக்கு தெரிய வருது. வரலாற்று மறைப்புகள் தானே அது. இன்னும் நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்லிட்டே போகலாம் இப்ப வாங்க உங்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்றேன் என்றான் சிவா.

 

கழுத்து, உதடு, மார்புக் காம்புகள் போன்ற மனித உடலின் பகுதிகள் ரொம்பவே கூச்சத்தையும் ஒரு வகையான மகிழ்ச்சியையும் தர கூடியது. 20 வயது வாலிபன் எட்டு வயது சிறுவனை அந்த மாதிரியான நாசுக்கான இடங்களில் முத்தம் கொடுக்கிறான். அது சரியா தப்பா என்று அந்த சிறுவனுக்குத் தெரியாது. ஆனா அது நல்லா இருக்கும் அப்போ அவனுக்கு மீண்டும் மீண்டும் அதைப் பண்ணனும்னு கியூரியாசிட்டியாகுது.

 

16 வயது பையன் மூணு வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு பண்ணதுக்கு, 3 வயது சிறுமி தானா போய் அந்த பையன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டதா சொல்ற கேடுகெட்ட பிறவி கலெக்டரா இருக்குற இந்த நாட்டுல உங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும் என சிவா சொன்னான்.

 

வளர்ந்த அப்புறம் தனக்கு நடந்த கொடுமைகளை ஏன் சொல்றதில்லை ஏன் உங்களுக்கு தேவிடியா பட்டம் கிடைக்கும்னு பயமா எனக் கேட்டான் ஜோசப். கண்டிப்பா சொல்லலாம் என்னை அபியூஸ் பண்ணுனவன் இப்பவும் மொட்டை பயலா இருந்தா, ஆனா கல்யாணம் பண்ணி அவன் கையால நான் நசுக்கப்பட்ட வயதில் அவனுக்குச் சொந்தமா ரெண்டு பிள்ளைங்க இருக்கு. நான் என்ன பண்ண, அந்த ஈனப்பிறவி பண்ணுன பாவத்துக்கு எதுவுமே தெரியாத மூணு உயிர்களோட வாழ்க்கையைப் பறிக்க நாங்க தயாரா இல்லை என்றான் சிவா.

 

ஏன் பிரபு சார் நான் நாளைக்கு சுடிதார் போட்டுட்டு ஆஃபீஸ் வந்தா உங்களுக்கு ஓகே வா என்றான் சிவா. நோ பசங்க பேண்ட் சர்ட்ல தான் வரணும் அதான் நம்ம கம்பெனியோட ப்ரோட்டகால் என்றான் பிரபு. ஏன் மீசை தாடியோட பொண்ணுங்களோட டிரஸ் போடுறாங்க பிரைடுலன்னு நீங்க கேட்டதுக்கு பதில் இது தான் என்றான் சிவா.

 

ஏண்டி ஜோசப் உனக்கு வீட்டுக்குப் போக லேட் ஆகலையாடி எனக் கேட்டான் சிவா. டேய் நான் பையன் டா என்ன ஏன் வாடி போடின்னு பேசுற என ஜோசப் கேட்டான். என்ன சீனியர் நீங்க சொன்னதுக்கு உங்க ஜூனியர் எதிர்ப்புத் தெரிவிக்குறான் என்றான் சிவா.

 

நீ ஒரு பையன அப்படி கூப்பிட்டா அவன் எதிர்க்க தான் செய்வான் என்றான் பிரபு. எனக்கு அவன் பையன்னு எப்படி தெரியும் அவனோட அந்தரங்க ஃபோட்டோக்களை நான் பாத்தது இல்ல, முடி வேற கழுத்து வரைக்கும் வளத்துருக்கான். மீசை தாடின்னு எதுவும் இல்லையே சீனியர் என்றான் சிவா.

 

ஜோசப்பும் பிரபுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டானர், அப்பறம் எப்படி இவனை நான் பையன்னு கன்சிடெர் பண்ணுறது நீங்க சொன்ன ஆண்மைக்கான அடையாளம் எதுவுமே இல்லையே என்றான் சிவா.

 

அதுக்கு என ஜோசப் கேட்க, உன்னோட ப்ரோநௌன் ஹி/ஹிம்னு என்கிட்ட முன்னாடியே சொல்லிடு என்றான் சிவா. உடனே, அப்போ இந்த ப்ரைடுன்ற பெயர்ல பி. டி. எஸ். எம். ஆடைகளை உடுத்தி அலையறதுக்கு நீ சப்போர்ட் பண்ற அப்படித்தானே என்றான் பிரபு. இது உங்களுக்கு புரிய வைக்க முடியுமான்னு தெரியல ஆனா நான் தனிப்பட்ட முறையில் அதை ஆதரிக்க மாட்டேன், ஆனால் அதுக்காக அவங்க சொல்ற காரணத்துல எனக்கு உடன்பாடு இருக்கு என்றான் சிவா.

 

கோபமாக எழுந்தான் பிரபு. கவிதா நான் கிளம்புறேன் என பிரபு சொல்ல, டேய் அவன் சொல்றத கேட்டுட்டு போ என கவிதா சொன்னாள். இன்னொருவர் தங்களைத் துன்புறுத்தி அவங்க குடும்ப உறவுகளைக் கேவலப்படுத்தி பண்ற உடலுறவு நியாயம்னு பேசியப்பவே எனக்கு இந்த கான்வர்சேஷனை முடிக்கணும்னு தோணுது என்றான் பிரபு.

 

உடனே, விடுங்க சீனியர் அவர் கிளம்பட்டும் ஏதோ ஒரு இடத்துல அவரோட உள்மனசு குத்துது போல என்றான் சிவா. உனக்கு ஒரு காலம் வந்தா எனக்கு ஒரு காலம் வரும் என்றான் பிரபு.

 

வாங்க சீனியர் போகலாம் என்ற ஜோசப் பிரபுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான். உடனே, என்னடா இவனுங்க திருந்த மாட்டாங்களா என கவிதா கேட்க, இவங்க எல்லாம் அடுத்தவங்க வாங்குற உரிமையில் சொகுசு கொண்டாடுறாங்க என்றான் அர்பு. உடனே, என்னடா சொல்ற எனக்குப் புரியல என்றாள் கவிதா.

 

அதற்கு அர்பு, சிவா நீயே சொல்லுடா என்றான். ஒரு நிமிஷம் காய்ஸ் இந்த கால் பேசிட்டு வந்துடறேன் என சிவா செல்ல அவன் பின்னாலயே ரஞ்சித்தும் சென்றான். குமார் பார்ட்டிக்கு வந்ததிலிருந்தே பிரசாத்தைத் திரும்பி கூட பார்க்கவில்லை, ரஞ்சித் சிவாவின் உடனே சுற்றிக்கொண்டிருந்தான்.

 

அப்படி என்கிட்ட இல்லாத என்ன அவனுங்ககிட்ட இருக்குன்னு இவங்க ரெண்டு பேரும் என்னை விட்டுட்டு போனாங்க என பிரசாத் கொஞ்சம் கொஞ்சமாகக் கோபமடைய தொடங்கினான். நான் வந்துட்டேன் என சிவா வந்து அமர அவன் பின்னாலே வந்து அமர்ந்தான் ரஞ்சித். கவிதா.. அர்பு ஏன் அப்படி சொல்றான்னா, பிரபுவும் ஜோசப்பும் பசங்கக்கூட உடலுறவு வச்சிப்பாங்க.

 

ஆனா தங்களுக்குள்ள இருக்குற இந்த மாதிரியான எண்ணங்கள் தப்புன்னு அவங்களே நினைக்கிறதோ, அவங்க கிட்ட ஏதோ குறை இருக்குன்னு நினைக்கிறதோ, இல்ல மத்தவங்கள மாதிரி வாழ முடியலையேன்னு நினைக்கிறதோ ஏதோ ஒரு காரணம் தான் இப்படி நெகட்டிவா அவங்களப் பேச வைக்குது. சீனியர் நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன் என்றான் சிவா.

 

சில பேர் நான் எக்ஸ்ப்ளோர் பண்ணிப் பார்க்க வந்தேன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம் என்றான் பிரசாத். அது உண்மையா இருக்க நிறையவே வாய்ப்பு இருக்கு ஏன்னா சில ஆண்கள் ஒரு தடவைக்கு மேல இந்த மாதிரி உடலுறவு வைக்காம இருக்காங்க.

 

இல்ல ஒரே ஒரு ஆண் கூட மட்டும் வச்சி இருக்கலாம் அவங்களுக்கு வேற ஆண்கள் மேல ஈர்ப்பு வராமலேயே இருக்கலாம் என்றான் சிவா. அப்ப நீங்களும் அப்படித்தானா மகி என்றான் பிரசாத். சாப்பிட்டுக் கொண்டிருந்த மகிக்குப் பொறை ஏற ஆரம்பித்தது. அவனுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்த கவிதா அவனுடைய தலையைத் தட்டியபடி நீ என்ன சொல்ற பிரசாத் எனக் கேட்டாள்.

 

ஆமா என் கூட உங்க வருங்கால கணவர் உடலுறவு வைத்திருந்தார் என்றான் பிரசாத். உடனே கவிதா ஆமா அவர் என்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்காரு என்றாள். உடனே சிவா மகியைப் பார்க்க அவனைப் பார்த்து தலைக்குனிந்து கொண்டிருந்தான் மகி.

 

உடனே பிரசாத், சிவா கூட பண்ணதைச் சொல்லலையா என்று கேட்க, அந்த அறையில் இருந்த அனைவரின் பார்வையும் சிவாவின் பக்கம் திரும்பியது.

 

என்ன கவிதா நாங்க ரெண்டு பேரு தானா இல்ல இன்னும் இருக்காங்களா என்றான் பிரசாத்.

 

-வருவான்…

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன