ஒரு முறை பிரைட் என்ற சொல்லை எனது நண்பன் அருண் ஒலிக்கும் போது என் மனதில் ஒரு வியப்பு எழுந்தது. அதனைப் பற்றி அவன் விவரிக்கையில் எனது இரு செவிகளும் நேர்கோட்டில் குவிந்து அவனை நோக்கி திரும்பியது. அப்பொழுதுதான் அதனைப் பற்றி எனக்கு சிறிது ஆவல் எழுந்தது.  அந்நொடியில் இருந்து இலகு காத்த கிளி போல என் மனம் அதனை நினைத்துக் கொண்டே இருந்தது. சிறிது நாட்களுக்குப் பிறகு பெங்களூர் பிரைட் என்ற வார்த்தையை எனது மற்ற நண்பர்கள் பேசுகையில் எனது ஆவல் தூண்டி விட்ட சுடர் போல பளிச்சிற்று. இருப்பினும்,  பொருளாதார நெருக்கடியின் காரணமாக இயல முடியாத நிலை ஏற்பட்டது.  பின் நண்பர்கள் உதவியாளர் யாருக்கோ சுட்ட தோசை என் தட்டில் வந்து விழுந்தது போல வேறொருவர் செல்ல வேண்டியதற்கு மாற்றாக நான் சென்றேன். செல்வதற்கு முன்தினம் தூக்கம் வரவில்லை எவ்வாறு இருக்கும் என்ற எண்ணம் மனதினை புரட்டிக் கொண்டிருந்தது. மறுநாள் பொழுதில் பிரைட் செல்வதற்கான உடையை எடுத்து வைத்துக் கொண்டும் எனது சகோதரி மற்றும் தோழியாக விளங்கும் அன்பின்  அழைப்பிற்காக காத்திருந்தேன் . அவளும் மிகக் கடுமையாக சூழ்நிலையிலும் பேரணி வகுப்பிற்கு தயாரானால் மேலும் எனது வளர்ப்புத் தாய் அவளது வண்டியினை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு அவளும் நானும் எனது தோழியும் ரயில் நிலையத்துக்கு செல்ல தயாரானோம் ரயில் நிலையத்தினை அடைந்தோம் நமது கூட்டமைப்பின் கொடியினை எனது வளர்ப்புத் தாய் அசைக்க எங்களது பயணம் தொடங்கியது. முதல் நடைமேடையில் நின்று கொண்டு இருந்த வேளையில் ரயில் எத்திசையில் இருந்து வரும் என்பதை கூட அறியாத நிலை.  கண்கள் இரண்டும் இருபுறமும் வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை போல அலைந்து திரிந்தது அது மட்டுமல்ல தொலை தூரப் பயணம் மற்றும் புதிய இடத்திற்கும் செல்லும் முதல் அனுபவம் என்னை தன் நிலையில் இருந்து தழுவ விட்டது.இறுதியில் நான் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த ரயில் வந்தது. அலப்பெரிக்கும் மகிழ்ச்சியுடன் ஏறினேன். பெங்களூர் செல்லும் வரைக்கும் ஆவலுடன் கூடிய ஆட்டம் பாட்டம் களிப்புடன் தூங்கி விழித்து பார்க்கும் போது வந்து விட்டோம் என்ற ஆவல். ரயில் ஓசூர் சந்திப்பிற்கு வந்து நின்றது இன்னும் சில நேரத்தில் சென்று விடுவோம் என்ற குரல். இறுதியில் பெங்களூர் வந்தவுடன் மகிழ்ச்சியுடன் கூடிய ஆனந்தம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றோம். செல்லும் வழியில் வீதிகள் அனைத்தும் திறம்பட மொழுகி தூய்மையாக பேணிஇருக்கும் முற்றம் போல் இருந்தது. அதனை கண்டு வியந்தேன். மேலும் தெருதோறும் சாராயக் கடை சண்டைகள் ஏதும் இல்லாத ஒரு சூழலையும் நோக்கினேன். மேலும் பேருந்தின் அமைப்பையும் பார்த்தேன். இறுதியில் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு மூவரும் வந்து இறங்கினோம். பேருந்து நிலையம் அதன் மேல் நடைமேடை ஆகியவற்றையும் பார்த்தேன். அடுத்து  மூவரும் தங்குவதற்கு அறைகள் தேடி நகர்ந்தோம். செல்லும்போது நாளை எவ்வாறு செல்ல போகிறோம் என்பதையும் சொல்லியவாறு தங்கும் ஹோட்டலை வந்தடைந்தோம். எங்களுக்கு அறை எண் 303 வழங்கப்பட்டது. பெங்களூரின் குளிர்ச்சியை ஒப்பிடும்போது குளிரூட்டும் வசதி கொண்ட அறை கூட தேவையில்லை என்றவாறு தான் இருந்தது. இறுதியில் தங்கும் அறைகள் கிடைத்த பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு அங்குள்ள கடைகள்  வீதிகளின் அழகினை தங்களுக்கு ஏற்ப விரிந்த பார்வையில் நோக்கினேன். சாதாரணமாக மது மற்றும் புகையிலை போன்ற பொருட்களின் வியாபாரம். மேலும் தேநீர் கடைகளில் புதுவகையான சுவை கொண்ட தேநீர் ஆகியவை என் பார்வையில் இருந்து இன்றும் அகலவில்லை. மாலைப்பொழுது ஆகியது அவ்வேளையில் எனது வளர்ப்பு தாயின் கைபேசியிற்கு மேன்மிதா என்பவரின் அழைப்பு வந்தது அதில் அவர் ஒரே ஹோட்டலில் தான் அறை பிடித்து இருக்கிறோம் என்றும் அறையின் எண் 201 என்றும் கூறினார். நிறுவனத்தின் அவரையும் அவரின் நண்பர்களையும் சந்திக்க சென்றோம்.அவர்களைப் பார்த்து பேசியபோது மேலும் அழகு கடந்த மகிழ்ச்சியுற்றேன். அவர்தான் மாலை நேரம் அனைவரும் ஒன்று கூடும் இடத்திற்கு செல்வதாக கூறி எங்களையும் அழைத்தனர். பின் நாங்கள் அனைவரும் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்திற்கு சென்று அங்குள்ள நம் மக்களின் கடைகளை பார்வையிட்டோம். அப்பொழுது அங்குள்ள நம் மக்களை காணும் பொழுது தனி மரம் தோப்பாகாது என்பதற்கு மாறாக நானும் ஒரு தோப்பில் ஒரு மரம் என்று களிப்புற்றேன். அதற்கு அடுத்து நாங்கள் அனைவரும் அங்குள்ள பாட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்றோம் அங்கிருந்து சிவப்பு வண்ண ஒலிக்கட்டைகள் எனக்கு ஏதோ ஒரு வகையான போதை மயக்கத்தை கொடுத்தது.  நானும் என் சகோதரியும் நடனமாட ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம் அதற்கான நேரமும் வந்தது பகாடி மதுவை சுவைத்துக்கொண்டே ஆட ஆரம்பித்தேன். மதுவை சுவைப்பது எனக்கு இதுவே முதல் நிகழ்வு ஆகும். மகிழ்ச்சி ததும்பி வழியும் அளவிற்கு மகிழ்ச்சியுடன் இருந்தோம். நிகழ்ச்சி முடிவில் சில நடனம் ஆடும் மாடல்களின் நடனங்களை கண்டு இன்புற்று அன்றைய சனிக்கிழமை முடிவுற்றது.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை எதற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமோ அந்த நாள் எனது முதல் பேரணி வகுப்பிற்கு கதிரவன் வருகைக்கு முன்பு எழுந்து தேநீர் குடிப்பதற்கு கடை வீதிக்கு சென்றேன். குளிர்ந்த வேலையில் இதமான தேநீரை குடித்துவிட்டு பேரணி வகுப்பிற்கு உடைகளை மறு தையல் செய்வதற்காக நேற்று கொடுத்திருந்த கடையில் அதனைப் பெற்றுக் கொண்டு அறைக்குச் செல்லும் போது மற்ற நண்பர்கள் ஷாப்பிங் செல்வோம் என்று அழைத்தனர். ஆனால் ஷாப்பிங் செய்து விட்டு மீண்டும் வந்து அவசர அவசரமாக பேரணி வகுப்பிற்கு செல்ல எங்களுக்கு மனம் இல்லாததால் ஷாப்பிங் இருக்கு செல்ல    வரவில்லை என்று கூறி விட்டோம். மதிய வேலை நெருங்கிக் கொண்டு இருந்தது. அதற்கு தயாராகிய நிலையில் இருந்தோம். நான் எதிர்பார்த்திருந்த அந்த நிகழ்வு நெருங்கியது நான் மற்றும் என் உடன் இருந்தோர் அனைவரும் தங்களுக்கு பிடித்த உடைகளை அணிந்து எல்ஜிபிடி க்யு ஐ மக்கள் இருக்கும் இடத்தில் ஒன்றிணைந்தோம். அங்கு சென்று அங்கு இருந்த மற்ற நண்பர்களின் உடைகளை கண்டோம் மற்றும் அவர்களிடம் பேசி மகிழ்ந்தோம். இறுதியில் பேன்டு ஒலி துவங்கிய நிலையில் எங்களின் பேரணி வகுப்பு தொடங்கியது பேரணி வகுப்பின் துவக்கத்தில் குலவை ஒலியின் மூலம் எங்களின் பங்களிப்பும் இடம்பெற்றது. நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக ஆட தொடங்கினோம். அளப்பெரிக்கும் அளவிற்கு ஆனந்தம். நம் மக்கள் என்று சொல்லும் போதே என் இரு இதழ்களும் தழுவிக் கொள்கிறது போல மகிழ்ச்சியுடன் நானும் தழுவி கொண்டேன். எந்தவித கலாச்சாரம் பாரம்பரியம் போன்ற தடைகள் இன்றி இதுவரை சமூகத்திற்காக போடப்பட்ட வேஷம் என்று எனது முழு விருப்பம் மற்றும் நான் விரும்பும் இயல்பான நிலையையும் நான் சுவைத்து இன்பமுற்றேன். இறுதியில் நிகழ்ச்சி முடிவிற்கு பிறகு ரயில் நிலையத்திற்கு சென்று நின்று கொண்டு இருக்கும் பொழுது இனிமையான நினைவுகள் வந்து தழுவியது ரயில் வண்டி வந்த பிறகு ஏறும் தருவாயில் சென்று விடப் போகிறோமா என்று எனது கால்கள் பிரல எனது மனது கவலைவுறாதே இன்னும் ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் வருவாய் எனக் கூற ஒரு வருடமா என்று கால்கள் கலைப்புற்று ரயில் வண்டியில் ஏறி அடுத்து வர இருக்கும் பேர் அணி வகுப்பிற்காக காத்திருந்தது…..

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன