ஒரு gay இமாமின் வாழ்க்கை வரலாறு
அனைத்தும் மனிதனின் உரிமைகளுக்கும் , சிந்தனைகளுக்கும் உடன்படாத ஒரு சவ்வு தான். இறுதி வரைக்கும் ஒரு செயலை ஏன் செய்கிறோம் என்ற எந்த ஒரு காரணத்தையும் சொல்லாமல் அதனை செய்ய தூண்டும்.
கடவுள் என்ற கற்பிதம் படைத்த மனிதன் அவன் வாழ்ந்த காலநிலையில் இருந்த நடைமுறைகள் கொண்டு மதத்தை கட்டி எழுப்பினான்.கூடவே கடவுளின் சொல் என்று பல விதிமுறைகளை படைத்து அதனை மாற்றவே முடியாது என்ற ஒரு கற்பனையை தெளித்தான்.
யாரேனும் அதில் மாற்றம் கொண்டு வரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்டால் அவனை மதத்திற்கு எதிரான ஒருவன் என்று முத்திரை குத்த தயாராக இருந்தது மட்டும் இல்லாமல் பல ஆராய்ச்சியாளர்கள் கொலைகளையும் நடத்தி காட்டியுள்ளார்கள்.
பல வருடங்களாக பின்பற்றி வரும் மத நடைமுறைகளில் இதுவரை ஒரு மாற்றத்தை கூட நிகழ்த்தாத இஸ்லாம் மதம் குயர் மக்கள் மீது எதிரான கண்ணோட்டமே கொண்டு உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அப்படி பட்ட இஸ்லாமிய மதத்தில் இருக்கும் Mohamed Zahed என்ற இமாம் ஒரு தன்பாலின ஈர்பாலார்ளாக என்னென்ன கஷ்டங்களை சந்தித்தார் என்பதை ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் தமிழாக்கத்தை காணலாம்.
ஒரு இஸ்லாமியாராகவும் அதேசமயம் ஒரு gay வாகவும் நீங்கள் வாழ்வில் சந்தித்த அனுபவங்கள் என்னென்ன?
எனது 17 வயதில் நான் ஒரு gay என்பதை உணர்ந்தேன்.
அந்த சமயம் நான் அல்ஜீரியாவில் வாழ்ந்து வந்தேன்.
அதே காலகட்டத்தில் அல்ஜீரியாவில் போர் நடைபெற்று கொண்டிருந்தது.
எனது பாலின தேர்வை வெளிப்படுத்த எந்த ஒரு வழிமுறைகளும் சந்தர்ப்பமும் எனக்கு அமையவில்லை . 1995 ஆம் ஆண்டு நான் gay என்ற ஒரு முழு புரிதலை வெளிபடுத்தினேன் ஆனால் அதை பற்றி என்னை சுற்றி உள்ளவர்கள் புரிந்து கொள்ள அவர்களுக்கு எந்த ஒரு காரணிகளும் இல்லை. ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொண்டால் மட்டுமே அதில் மீதுள்ள பார்வை மாறும் ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் மதம் சார்ந்த விசயங்களை தீவிரமாக கையாண்டவர்கள் .அதில் கூறப்படும் ஒன்று மட்டுமே இங்கே உண்மை என நம்புபவர்கள் .
அப்படி இருக்கும் பட்சத்தில் எனது பாலின தேர்வு குறித்து அவர்கள் என்மீது வெறுப்பை உமிழ்ந்தார்கள்.
எப்பொழுதும் போரையும் ,மதத்தையும் பிற மத வெறுப்பையும் மட்டுமே சுற்றி வாழுபவர்கள் என்னையும் எனது பாலின தேர்வையும் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும் என்பது எனக்கு புரிந்தது.

இந்த வெறுப்புக்கு மதம் காரணமாக என்று உற்றுநோக்கிய எனக்கு இறுதியில் தான் தெரிந்தது இதற்கு மதம் முதன்மையான காரணம் அல்ல மனிதனின் வெறுப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பான்மையின்மைதான் இங்கு நடக்கும் எல்லாவற்றிக்கும் ஒரு தொடக்க புள்ளி என்று.
அதன் பின் நான் ஒரு பல்கலைக்கழகத்தில் கிட்ட தட்ட 7 வருடங்களாக இருக்க வேண்டிய சூழல் அமைந்தது.அந்த 7 வருடமும் நான் ஒரு இஸ்லாமியராக வாழவில்லை ஒரு மனிதனாகவும் ஒரு gay வாகவும் மட்டுமே வாழ்ந்தேன்.
அந்த சமயம் நான் யார்? எனக்குள் இருக்கும் இந்த மாற்றம் ஏன் ஏற்படுகிறது? என்பது பற்றி மிகவும் ஆழமாக படித்து தெரிந்து கொண்டேன்.
என்னை ஏன் அனைவரும் வெறுக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன் அப்பொழுது எனக்கு கைகொடுத்து மன அமைதியின் மதமான புத்தம் தான்.
ஏழு வருடங்கள் முடிந்த பின்பு நான் திபெத்தை நோக்கி பயணித்தேன்.
அங்கேயும் என்னை போன்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தார்கள்.
நான் இந்த முறை அவர்களிடம் பேச தொடங்கினேன்.எனது பாலினம் பற்றி கூற தொடங்கினேன். நீங்கள் வெறுப்பை காட்டுவதற்கு உங்களது மதம் காரணம் அல்ல உங்களின் சூழலே காரணம்.
நீங்கள் உங்கள் மனதிடம் கேள்வி எழுப்புங்கள் எங்களை போன்றவர்கள் மனிதர்கள் இல்லையா நாங்கள் சிறுபான்மை தான் ஆனால் நாங்களும் மனிதர்கள் தான் என ஆழமாக பேச ஆரம்பித்தேன்..

நீங்கள் வெளியே வந்ததும் உங்கள் குடும்பத்தினரின் எதிர்வினை என்ன? வெளிப்படையாக தன்பாலீர்ப்பாளராக அல்ஜீரிய மனிதராக உங்கள் அனுபவங்கள் என்ன?
உண்மையில் முதலில் எனது குடும்பம் எனது பாலின அடையாளத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.நான் என் குடும்பத்துடன் இந்த விஷயங்களைப் பற்றி முதலில் எதுவும் பேசவில்லை.காரணம் எங்கள் மதத்தை பொறுத்த அளவு இது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.
நான் gay வாக இருந்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் மக்களே உங்களைக் கொன்றுவிடுவார்கள் என்ற பல அச்சுறுத்தல்கள் இருந்தன.
என் தந்தை ஒரு ஆணாதிக்க சமூகத்தில் இருந்து வந்தவர் .அவர் ஆண்மையின் மிகவும் ஆடம்பரமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்தார்.அதனால் அவரிடம் நான் எதுவும் கூறாமல்
21 வயதில் வெளியே வர தாயாரானேன் ஆனால், என் தம்பி மற்றும் என் மாமாவின் மிரட்டல்களுடன் நான் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என நினைத்து முதல் முறை எனது தந்தையிடம் நான் பேசினேன். நீங்கள் என்னை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பா இல்லையெனில் நான் இந்த இடத்தைவிட்டு செல்கிறேன் நான் வெளியே செல்ல தயாராக துணிமணிகளை கட்டி வைத்துவிட்டேன் என்னால் இப்படியே இங்கே இனிமேல் தொடர முடியாது. அப்போது என் தந்தை மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் இது உனது விருப்பம் என்று தலைசாய்த்தார். அவர் எனது விருப்பத்தை ஏற்றுகொண்டார், அவர் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் என்னையும் எனது விருப்பத்தையும் நாம் மதிக்க வேண்டும் அனைவரிடமும் கூறினார். பின்னர் அவர் என்னைப் பார்த்து உனக்கு வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும். என் தோளில் ஏறி அழுது விடாதே நான் உன் விருப்பத்தை செய்துவிட்டேன் என . அதன் பிறகு 10 ஆண்டுகள் நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொள்ளவேயில்லை.அது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. ஆனால் என் சகோதரனுக்கும், சகோதரிக்கும் திருமணம் ஆகியிருந்தது. எங்கள் குடும்பத்துடனான அவர்களது உறவுகளைப் பற்றி என்னிடம் பேசினர், என் அம்மா என்னிடம் வந்தார் – உனக்கு முப்பது வயது “நீ மிகவும் தனிப்பட்டவன், உனது வாழ்க்கையை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டார்கள். எனவே நான் என் வருங்கால இணையரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன், அவர்கள் என் திருமணத்திற்கும் வந்தார்கள், நாங்கள் ரமலான் காலத்தில் கூட அவர்களைப் பார்க்கச் செல்வோம்.
என் அம்மா தன் பாலீர்ப்பு பற்றி நிறைய கற்றுக்கொண்டது எங்கள் மூலமாகவும் எங்கள் உறவின் மூலமாகவும் தான்.அல்ஜீரியா விட்டு மேலை நாடுகளுக்குச் செல்ல முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி என்றுதான் கூறுவேன். ஏனெனில் அல்ஜீரியாவில் எனக்கு இத்தகைய சுதந்திரம் இருந்திருக்காது. என் குடும்பத்தின் எதிர்காலம் மிகவும் மோசமாக இருந்திருக்கும். என் பெற்றோர்கள் என்னை ஆதரித்தனர், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தின் பல உறுப்பினர்களை துண்டிக்க வேண்டியிருந்தது. என் மாமா, எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, என் அம்மாவையும் மிரட்டினார்.
Inclusive மசூதி ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. அதனை எப்படி ஆரம்பித்தீர்கள்?
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பிரான்சில் ஓரினச்சேர்க்கை முஸ்லிம்களின் சங்கத்தை நிறுவினோம். (Homosexuels musulmans de France, அல்லது HM2F). இந்த சங்கத்தின் சிறுபான்மையினர்கள் தங்களது ஆன்மீகத்தைப் பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம் என்பதை வெளிப்படுத்தினர் . அனைவரும் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்யவும் விரும்பினர்.
பெரிய சங்கத்தில் உள்ள பலர் மத நடவடிக்கைகளில் எங்களை சேர்த்து கொள்ள விரும்பாததால், எங்களுக்காக உள்ளடக்கிய ஒரு மசூதியை நாங்கள் நிறுவினோம்.
இந்த மசூதி ஐரோப்பாவின் முதல் inclusive மசூதியாக ஆனது. குயர் சமூகங்கள் உலகில் எல்லா இடங்களிலும் உள்ளன: மேற்கு ஐரோப்பாவில், அமெரிக்காவில், இந்தோனேசியாவில், தென்னாப்பிரிக்காவில், ஆசியாவிலும் கூட.
எங்களது ஆன்மீக சிந்தனைகளால் மக்கள் ஒரு கிறிஸ்தவ LGBT சங்கத்திலிருந்து என்னைத் தேடி வந்தனர். அவர்கள் எங்களுடன் உறுப்பினராகச் சேர்ந்தனர்.
மேலும் ஒரு இளம் திருநங்கை முஸ்லீம் பெண், சமீபத்தில் இறந்துவிட்டார். எந்த முக்கிய இமாமும் மரணத்தைச் சுற்றியுள்ள பாரம்பரிய பிரார்த்தனைகளைச் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் அவர் திருநங்கை.
அதனால் என்னிடம் வந்து சிலர் நீங்கள் இறையியல், மதம் படித்தவர். நீங்கள் ஒரு இமாம் என்றபோது என் வாழ்க்கையில் முதல் முறையாக இமாமாக நடிக்க வேண்டியதாயிற்று.
எனது குயர் அடையாளம் அந்த இமாம் பொறுப்புடன் இன்னும் சமரசம் செய்யவில்லை, அது ஒரு பெரிய பொறுப்பாகும்.
இந்த Inclusive மசூதியை உருவாக்க முயலும் போது ஏற்பட்ட முதல் தடைகள் யாவை? உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் உள்ள எல்ஜிபிடி அல்லாத முஸ்லிம் மக்களின் எதிர்வினை என்ன?
நேர்மையாக, சொல்ல வேண்டும் என்றால் அதிக தடைகள் இல்லை. அந்த முயற்சி மிகவும் நேர்மறையான எதிர்வினையைக் கொண்டிருந்தது. முதலில் எங்களுடன் இணைந்தவர்கள் மிகவும் நேர்மறையாகவும் ஊக்கமாகவும் இருந்தனர்.
பாரிஸில் அனைவருக்கும் சம உரிமை மற்றும் திருமணத்திற்கான முக்கிய போராட்டங்களில் நாங்களும் பங்கேற்றோம். எங்கள் பங்கேற்பாளர்கள் அரசியல் ரீதியாக மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தனர். முற்போக்கு இஸ்லாத்திற்கு அது மிகவும் வளமான காலகட்டம். எங்களுக்கு நிறைய ஊக்கம் இருந்தது, சில அச்சுறுத்தல்கள் இருந்தன ஆனால் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து சென்றோம்.
இஸ்லாம் என்ற வார்த்தைக்கு அரபு மொழியில் “அமைதி” என்று பொருள்,
எங்கள் பங்கேற்பாளர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
நாங்கள் உண்மையான முஸ்லீம்கள் இல்லை என்று மற்றவர்கள் கூறிய போது, கடந்த ஆண்டு ஜெர்மன் தொலைக்காட்சி சேனலான Deutsche Welle இல் எகிப்தின் அலசார் பல்கலைக்கழகத்துடன் விவாதித்தோம். பெர்லினில் உள்ள முற்போக்கான இப்னு ருஷ்த்-கோதே மசூதியின் இமாம் என்னுடன் இருந்தார். அவர்கள் எங்களுடன் விவாதித்தார்கள் எங்களுடன் பேசினார்கள். உரையாடல் திறந்திருக்கிறது இதுவே எங்களது வெற்றி.
உங்கள் இயக்கத்தில் அதிகமானோர் இணைகிறார்களா? கடந்த 10 ஆண்டுகளில் பங்கேற்பு எப்படி மாறிவிட்டது? எதிர்காலத்திற்கான உங்கள் திட்டங்கள் என்ன?
எங்கள் பங்கேற்பாளர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். இந்த தலைமுறையினர் தாங்களாகவே மாற மாட்டார்கள் என்பது தெரியும். மேலும் குயர் சமூகங்களை மேலெழுந்து செல்ல உதவுவது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். என் பங்கிற்கு, இளம் இமாம்களின் கல்வியிலும், மேலும் முற்போக்கான இஸ்லாத்தை கற்பிப்பதிலும் தள்ளுவதிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன். இதுபோன்ற சமூகங்களை உருவாக்க ஆர்வமுள்ள அனைவரையும் முன்னோக்கிச் செல்லவும் நான் ஊக்குவிக்கிறேன்.
அருண் தர்சன்(மொழிபெயர்ப்பு )
