அழகிய pride மாதம் என்ன புரியலையா சரி புரியுர
மாதிரி சொல்றேன் வானவில் தோழர்கள், வானவில் நண்பர்கள் , LGPQT மக்கள் தங்களின் வலிகளையும் , வேதனைகளையும், தனக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மறந்து (மறைத்து) ஏன் அதையும் சேர்த்தே கொண்டாடுகிற மாதம் தான் இந்த pride மாதம் .

உங்க Mind voice கேக்குது ஓ…அவங்களா நீங்க, அவனா நீ , அவளா நீ அப்படினு கேக்குறது ஏன் காதுக்கு கேட்கிறது . நீங்க யார்னு நீங்க கேட்டு இருந்தா இப்படி கேட்டு இருக்க மாட்டீங்க இப்படி நான் யார்னே தெரியாத உங்களுக்கு நான் யார் னு காட்ற மாதம் தான் இந்த pride மாதம்.

Build-up over ஆ இருக்கே அப்படின்னு நீ கேக்கலாம் சொல்றேன் கேளுங்க நா ஒரு Transgender, நா ஒரு gay , நா ஒரு lesbian, நா ஒரு bisexual, மொத்தத்துல எங்கள Quear people னு சொல்லுவோம். ஏன்னா
நாங்க ரொம்ப தனித்துவமானவங்க , விசித்திரமானவங்க , வினோதமானவங்க ஆனா இதையெல்லாம் நாங்க சொல்லல நீங்க தான் சொல்ல வச்சீங்க . நாங்க படிச்சிருக்கோம் , நல்ல வேலையில் இருக்கோம் இன்னும் ஏன் உங்கள விட நல்லாவே இருக்கோம். அப்புறம் ஏன் எங்களை வினோதமாகவும் , வித்தியாசமாகவும் பாக்குறிங்க . நீங்க பண்ணாததையா நாங்க பண்ணிட்டோம் , இதுவரைக்கும் Road ல போற இல்ல உன் கூட படிச்ச பசங்கள நீ சைட் அடிச்சது இல்லையா இல்ல அவன் chest நல்லாயிருக்கு, Arms நல்லாயிருக்குனு பார்த்தது இல்லையா , இன்னும் ஏன் அது , இதுன்னு வெளிய வெட்டி நியாயம் பேசிட்டு Instagram, fecebook ல Dm வா Dm வான்னு நாய் மாதிரி நாக்க தொங்கப் போட்டுட்டு comments ல என் மார்புக்கும் , தொப்புளுக்கும் , கவிதை எழுதுற நீயெல்லாம் என்னை இந்த சமுதாயத்தோட சீர்கேடுன்னு சொல்ற …
சொல்லப்போனால் ஒவ்வொரு ஆணும் எதோ ஒரு சமயத்துல Gay வாகவும் , ஒவ்வொரு பெண்ணும் lesbian ஆகவும் இருந்திருக்க கூடும் . நீங்கள் அதை மறைத்துக்கொண்டு வாழ்கிறீர்கள் . ஆனால் நாங்கள் கட்டியக் கண்ணீர் அணைகளையும், மனதில் பூட்டி வைத்திருக்கும் ஆசை கதவுகளையும் உடைத்தெறிந்து விட்டு பட்டாம்பூச்சிகளாய் பறந்து வருகிறோம்.

நீங்கள் எங்களை பார்த்து இரசிக்க வேண்டாம்
எங்களை புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டாம்
வேண்டுமெனில் ஒன்று செய்யுங்கள், எங்களை பிடித்து சட்டையில் ஒட்டி விளையாடிவிட்டு , விரல்களால் நசுக்கி கொள்வதை நிறுத்திவிட்டு
வளர்ந்து வரும் உங்கள் பிள்ளைகளுக்கு பட்டாம்பூச்சிகளாகிய எங்களை அறிமுக படுத்துங்கள் இந்த பட்டாம்பூச்சிகள் பல வலிகளையும், இன்னல்களையும் தாண்டி (தாங்கி) பறந்து கொண்டிருக்கிறது , இந்த செத்துக்கொண்டிருக்கும் gay அம்மாவைப் போல , lesbian அம்மாவைப் போல நீயும் சாகாதே என
பட்டாம்பூச்சிகளைப் போல பறக்க கற்றுக்கொடுங்கள்…

Author – Thamizhiniyan

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன