பேராளுமை மலாய்க்கா

அறைக்கு வெளியே

கைத்தட்டல் சத்தம் என்னைக்கும் இல்லாம அன்னைக்கு அதிகமாகவே இருந்துச்சு…வெளியே எல்லோரும் அந்தத் தருணத்துக்காகக் காத்திட்டு இருந்தாங்க. வண்ண பல்பு எல்லாம் கண்சிமிட்டிட்டுருந்துச்சு மேடையில எல்லா ஏற்பாடும் தடபுடலா நடந்துட்டு இருந்துச்சு.. பல கனவுகளோடு  கண்ணாடி முன்னாடி அவள் நின்னு அவள பாத்து ரசிச்சா.

அந்த கண்ணாடியே அன்னைக்கு  பொறாமைபட்டுருக்கும்,  நம்ம முன்னாடி பேரழகு நிக்குதேன்னு… மெதுவா புன்முறுவல் செஞ்சுட்டே பக்கத்தில திரும்பி தன்னோட சக போட்டியாளர பாத்தா மலாய்கா.

அவள் மலாய்க்கா பாத்தத கண்டும் காணாம தன்னை ஒப்பனை செய்ய ஆரம்பிச்சா. ஆனால் மலாய்க்கா மனசுல அவ்ளோ சந்தோஷம்.

போட்டி முடிஞ்சு இன்னும் முடிவு அறிவிக்கவேயில்லை .ஆனாலும் அவ மனசுல ஏதோ ஜெயிச்சுட்ட மாதிரி ஒரு சந்தோசம்.

இருக்காதா பின்ன…? இவங்க கூடல்லாம் நாங்க மாடலிங் பண்ணனுமா?!. இதுங்கெல்லாம் மாடலிங் பண்ணலனு யார் அழுதா?!…

எவன் உள்ள விட்டான்னு தெரியல?!…. இவளை எப்படியாச்சும் வெளிய விரட்டனும்… இப்படிலாம் வசை சொல் கேட்டும் கலங்கவே இல்லை அவள்.

அவளோட நோக்கம் ஒண்ணு தான் எப்படியாச்சும் நான் ஜெயிக்கனும் அது மட்டும் தான் அவ மனசுக்குள்ள இருந்துச்சு…..

அவங்க இப்படிலாம் பேசுறதால எனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லையே…

இதெல்லாம் எனக்கொண்ணும் புதிசில்லயே… அப்படினு நினைச்சதால மட்டும் தான் இவ்ளோ தூரம் வர முடிஞ்சது.

இதுக்கு மேல எனக்கு என்ன பேரானந்தம்…..

Dear ladies and gentlemen 2007 ஆம் ஆண்டுக்கான மிஸ் சென்னை யாருன்னு இப்போ அறிவிக்க போறோம்.‌‌ இந்த மகுடத்த சூட போற அழகி யாருன்னா கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஒன் டூ த்ரீ இந்த வருசத்தோட மிஸ் சென்னை மலாய்க்கா……

அந்த தருணம் அவ மட்டும் ஜெயிக்கல. மொத்த திருநங்கை சமூகமே ஜெயிச்ச மாதிரி அவளுக்கு கண்ணீர் சொட்டியிருக்கும். அவ இந்த அளவு வரதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பான்னு அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

எல்லோருக்கும் மாதிரி வாய்ப்பு திருநங்கைகளுக்கு கிடச்சிடறது இல்லை…சென்னையிலே பிறந்து வளர்ந்த மலாய்க்காவுக்கு, அங்கே பிச்சை எடுக்கும், பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகள பாத்து மனசு வலிச்சது. ஆனாலும் நான் இப்படி இந்த வேலைக்கு போயிடகூடாது. எதாச்சும் சாதித்து திருநங்கை சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்திரனும்னு நினைச்சு, வழக்கமா திருநங்கைகள் சந்திக்கிற எல்லாம் பிரச்சினையும் படிக்கிற இடத்துலயும் சந்திச்சாங்க.

இந்த சமூகத்திற்கு அப்படி என்னதான் இந்த திருநங்கை சமூகம் மேல கோவம்னு தெரியல…

அனைத்து துயரையும் வாங்கிட்டு படிச்சு, கேட்டரிங்க் காலேஜ் வர வந்து வேலைக்கு போனாலும் பல பிரச்சனைகளையும் சந்திச்சாங்க.ஒரு காலத்துலயும் அவங்க துவண்டு போகவேயில்லை.

சரி நம்ம இங்க இருக்க வேணாம். வெளியே போகலாம்னு பெங்களூருக்கு போயி, அங்க திருநங்கை சமூகம் படற எல்லா கஷ்டத்தையும் பார்த்து தான் எவ்ளோ கஷ்டப்பட்டாலும்  தாங்கிக்கிற மாதிரி தன்னோட மனசை வடிவமைத்து கிட்ட மலாய்க்கா,

திரும்ப சென்னைக்கே வந்து, தனது நண்பர்கள் மூலம் மாடலிங் துறையில் போயி மிஸ் சென்னை ஆகறாங்க.  அதுமட்டுமில்லாம, மிஸ் இந்தியா போட்டியில் கலந்துக்கறாங்க அத்தோடு நிறுத்தாமல் மிஸ் வேர்ல்ட் போட்டியில கலந்துக்கிட்டு,  தன்னை இந்தத் துறையை விட்டு துரத்த நினைச்ச எல்லோருக்கும், என்னாலயும் முடியும்னு சாதிச்சு, திருநங்கை சமூகம் மேல இருந்த பார்வையை மாத்த ஒரு பெரும் முன்னுதாரணமா இருக்காங்க.  என்கிட்ட பேட்டி எடுக்காத சேனல் இல்லை. அப்படிங்கற அளவுக்கு தன்னை உயர்த்திக்கிட்ட மலாய்க்காவ பார்த்து உண்மையிலேயே பிரமித்துப் போய் தான் நம்ம எல்லாம் நிக்கணும்.

இதுவரை இரண்டு தமிழ் படங்களில் நடிச்சிருக்கும் மலாய்க்காவுக்கு சினிமா துறையில் சரியான அங்கீகாரம் கிடைக்கலை. இருந்தாலும், இதுநாள் வரை போராடிட்டு தான் இருக்காங்க. வாழ்க்கையை வாழ்ந்தாகனுமே.

தனது மகள் அப்சராவுடன் சேர்ந்து திருநங்கைகள் பிரச்சனைகளையும் அவங்க தேவைகளையும் பூர்த்தி செஞ்சுட்டுவராங்க.

யாரையும் துன்புறுத்தாமலும்,ஏமாற்றாமலும் திருநங்கைள் பொது சமூகத்தோடு இருக்கனும். எந்த ஒரு சமயத்திலும் அடுத்தவங்களை துன்புறுத்தாதிங்கன்னு மலாய்க்கா ஒட்டு மொத்த திருநங்கை சமூகத்திடமும் கேட்டுக்கிறாங்க.

மாடலிங் துறையிலும் திருநங்கைகளால சாதிக்க முடியும்னு உணர்த்திகாட்டிய  மலாய்க்காவ பால்மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைப்பதில் ரொம்ப பெருமிதம் கொள்கிறது.

 

-அருண் தர்ஷன்

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன