ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் எப்போது வரும் என்று ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் பல உயிர்களைப் போல் தான் நான். இந்த மாதத்திற்கு இவ்வளவு பெரிய மகிமை உண்டு என்று நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் என்றால் யார் ..?! ஏன் இந்த பெரும்பான்மைச் சமூகத்தில் இருந்து நான் என்னை என் அடையாளத்தை தனித்து காமிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நாங்கள் என்ற ஒற்றை வார்த்தையில் இருக்கும் சுயமரியாதை தான் இந்த இவ்வளவு நேசிக்க வைக்கிறது. ஆம் ஜூன் மாதம் என்றாலே தெரியும் இப்போது சிறிய காலங்களாக தெரிகிறது இது சுயமரியாதை மாதம் அதுவும் வானவில் சுயமரியாதை மாதம், Lgbtqia+ இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்ல அவர்கள் பேரணியாக நடந்து செல்ல தங்கள் இணைஞர்களை நண்பர்களை தங்கள் ஆதரவாளர்களை ஒரே இடத்தில் பார்க்க ஆரத் தழுவி அன்பை கொள்ள, ஆடையை எந்தவித பாலின வேறுபாடுகளையும் தாங்காமல் உடுத்திக் கொள்ள இந்த ஜூன் மாதம் அவசியமாக LGBTQIA+ மக்களுக்கு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் எப்போது வரும் என்று ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் பல உயிர்களைப் போல் தான் நான். இந்த மாதத்திற்கு இவ்வளவு பெரிய மகிமை உண்டு என்று நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் என்றால் யார் ..?! ஏன் இந்த பெரும்பான்மைச் சமூகத்தில் இருந்து நான் என்னை என் அடையாளத்தை தனித்து காமிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நாங்கள் என்ற ஒற்றை வார்த்தையில் இருக்கும் சுயமரியாதை தான் இந்த இவ்வளவு நேசிக்க வைக்கிறது. ஆம் ஜூன் மாதம் என்றாலே தெரியும் இப்போது சிறிய காலங்களாக தெரிகிறது இது சுயமரியாதை மாதம் அதுவும் வானவில் சுயமரியாதை மாதம், எப்போதும் போல சென்னையில் நடக்கும் சுயமரியாதை நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றேன் இந்த முறை என்னுடைய பேரணி என்பது நண்பரின் இல்லத்தில் இருந்தே தொடங்கியது. ஜிகு ஜிகு என்ற ஆடைகளை அணிந்து கொண்டு எப்பொழுதும் தலையில் தொப்பி போன்று ஏதாவது வைக்க வேண்டும் என்று ஆவல் நிறைய உண்டு அதனால் எனக்கு பிரத்தியேகமாக அனார்கலி அவர்கள் அணிந்திருக்கும் தொப்பி போன்று இறகுகள் வைத்து தலையில் அணிய வேண்டும் என்று ஆசை இருந்தது, அதன்படியே கைவினைக் கலை செய்யும் சகோதரரிடம் அந்த தொப்பி செய்ய சொல்லி விண்ணப்பம் செய்தேன் அதன்படி அவரும் செய்து கொடுத்தார். அவர் கொடுத்த தொப்பியையும் கழுத்து நிறைய வெள்ளை நிற முத்து மாலை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் நான் செல்லும்போது சென்னை சாலை ஓரங்களில் இருந்த மக்கள் என்னை கண்கொட்டாமல் பார்த்தார்கள். சிறிதளவு கூட எனக்கு நெருடதில்லை அவர்களின் பார்வையை. நம்முடைய இருப்பு நம்முடைய அடையாளம் நம்முடைய செயல் நம்முடைய போராட்டம் இது அனைத்தும் நம் உடைகளிலும் நம் அணிந்திருக்கும் நம் ஆபரணங்களிலும் வெளிப்பட்டால் வெளிப்படட்டுமே என்ற தன்னம்பிக்கை மட்டுமே என்னுள் இருந்தது. ஒரு வழியாக பேரணி நடக்கும் இடத்தை வந்தடைந்தேன்.. ஒவ்வொரு முறையும் நான் சுயமரியாதை நடக்கும் வீதிகளில் என்னை பிறக்கச் செய்கிறேன்.. நான் பிள்ளைகளைப் பெற்றது போல் தாய்மையும் உணர்கிறேன்.. ஒத்த உணர்வுடைய அத்தனை உயிர்களும் ஒருங்கே நடந்து சென்று நம்முடைய உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.. பேரணிக்கு வந்த முதல் நாளும் பேரணி முடிந்த அடுத்த நாளும் இந்த சமூகம் எங்கள் மீது வன்மங்களையும் தீண்டாமைகளையும் தொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தெரியும் இருந்போதிலும் பெரும்பான்மை மத்தியில் காதலாலும் காமத்தாலும் வேறுபட்டுக்கிடக்கும் எங்கள் சமூக மக்கள் ஒன்று கூடலை ரசிக்காமல் எப்படி இருப்பது , பறை இசை முழங்க வண்ண வண்ண உடைகள் உடுத்த ஆட்டமும் பாட்டமும் இணைந்து வியர்வைகள் படிந்த எந்தவித வேறுபாடும் இன்றி அள்ளித்தெளித்த அத்தனை உயிர்களையும் காண நிச்சயம் என் உயிர் உள்ளவரை சுயமரியாதை பேரனுக்கு வருவேன் எங்கள் உரிமைகளை இந்த உலகிற்கு உரக்கச் சொல்வேன் என்று கத்திச்சொல்லி இறுகிய மனதுடன் வீட்டுக்கு திரும்பினேன் ‌.

-அழகு ஜெகன்

நிழற்படம் : முரலி

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன