“ஆயா” தொடர்கதை
********
பாகம்-2
(இதுவரை- சாரதா யார்? அவளுக்கு அந்த இல்லத்தில் கிடைக்கும் மரியாதைகள்… சாரதா ஆயாவின் குணங்களை பற்றி பார்த்தோம்… இனி சாரதாவின் நடை நந்தினியை நோக்கி…)

“பாருங்க சாரதா… உங்க நந்தினி பண்ண வேலைய… ரூம் பூரா ட்ரெஸ்ல எறச்சி போட்டுக்கா… தட்டு டம்ளர் எல்லாத்தையும் தூக்கி வீசிருக்கா…” என்றார் மூர்த்தி…
“சரி விடுங்க… அதான் வந்துட்டேன்ல… நான் பார்த்துக்கிறேன்” என்றவாறே நந்தினி அருகே சென்றேன்.
“நந்து குட்டி…என் செல்லம் ஏன் கோபமா இருக்கு.?”
முகத்தை திருப்பி கொண்டாள், நந்தினி.
அவள் முகம் திருப்பி கொண்ட பக்கம் போய் நின்றேன்… மறுபடியும் முகத்தை வேறு பக்கமாக திருப்பி கொண்டாள்.
“நான் யாருகூடயும் பேச மாட்டேன்… எனக்கு யாரையும் புடிக்கல… யாரும் என்பேச வேண்டாம்…”என்றாள் நந்தினி கோபமாக…
“இதோ பாருங்க மூர்த்தி… என் நந்தினி கூட யாரும் பேச கூடாது… நான் மட்டும் தான் பேசுவேன்… ஓகேவா…”
“நான் உங்களைத்தான் சொன்னேன்” என்றாள்.
“நானா… நா என்ன செஞ்சேன்…?”
” இன்னைக்கு ஏன் எனக்கு எழுப்பால… நா எப்பவும் உங்க முகத்துல தானே முழிப்பேன்… எக்சைஸ் செய்ய அழைச்சிட்டு போகல.. என்ன குளிப்பாட்ட வரல… இப்ப மட்டும் எதுக்கு வந்திங்க..‌!?”
“இதோ பாருடா தங்கம்..‌.. இந்த இல்லத்தில எத்தனையோ குழந்தைங்க இருக்காங்க.. ஆனா நா அதிகமா பாசம் வச்சிருக்கிறது எம்மேல தான்…அது உனக்கும் தெரியும்…ஏன் இந்த இல்லத்தில உள்ள எல்லாருக்கும் தெரியும்…”
“தெரியுதுல அப்புறம் ஏன் வரலையாம்!?”
” இந்த பாபுபைய இல்ல.. அவன் ரொம்ப மத்த ஆயாக்களுக்கு தொல்லை கொடுத்திட்டு இருந்தான்… அவனை நாலு போடு போட்டு குளிக்க வச்சிட்டு வந்தேன்”
“நிஜமா பாபுவை அடிச்சிங்களா…!?” சிறு புன்னகையுடன் திரும்பி கேட்டாள்…
“அட ஆமாங்கிறேன்….”
“நல்லா வேணும் அவனுக்கு… நேத்து என்னை கீழே தள்ளிட்டான் பாபு… அப்ப அவன்கிட்ட இரு..இரு…சாரதா ஆயா கிட்ட சொல்லி உன்ன அடிக்க சொல்றேனு சொன்னேன்.. ”
” உன்ன அவன் கீழே தள்ளியத கேள்விப்பட்டதும் நா துடிச்சி போயிட்டேன்…
அதுனாலதான்… ஏன்டா என் நந்துகுட்டிய கீழே தள்ளிவிட்டேனு சொல்லி அடிச்சுபுட்டு குளிக்க வச்சிட்டு வந்தேன்.. அதான் லேட்டு…ஓகேவா…”
“சாரதா… நாங்க தியான மண்டபத்திற்கு போறோம்… நீங்க நந்தினிய அழைச்சிட்டு வாங்க…”என்றாள் மேரி..
“நீங்க போங்க…நானும் என் நந்துகுட்டியும் தியான மண்டபத்திற்கு வந்து விடுகிறோம்..”
“ஆயா…இங்க வாயேன்..” என்றாள் நந்தினி..
கிட்ட போனதும் இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்… நானும் அவளை வாரி அணைத்து முத்தமிட்டேன்…
நந்தினிக்காக நா சொல்லிருந்தாலும் அதான் உண்மை… இந்த இல்லத்தில் எல்லா குழந்தைகளிடமும் அதிக அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறேன்… ஆனால் ஒருபடி மேல் நந்தினியிடம் வைத்திருக்கிறேன்… காரணம் அவள் இந்த இல்லத்திற்கு வந்த நாள்தான்… நான் வந்த நாள்… நாங்க இருவரும் சந்தித்த தருணம் இன்னும் என் நெஞ்சுக்குள் இருக்கிறது… மறக்கமுடியாத நாள்… எனக்கு தாய்மை உணர்வை உணரவைத்தவள் நந்தினி! சாகுற அளவுக்கு நான் கோழையல்ல… ஆனாலும் நடைபிணமாய் வந்த எனக்கு வரபிரசாதமாய் கிடைத்தவள் நந்தினி! எல்லாத்துக்கும் காரணம் இந்த இல்லத்தின் ஓனர் ராஜாசார் தான்!
சரி..சரி…என்னை பேசவிட்டால் பேசிகிட்டேதான் இருப்பேன்… தியான மண்டபத்திற்கு நேரமாச்சு…நானும் என் நந்துகுட்டியும் கிளம்புறோம்…
தியான மண்டபத்தில் எப்பொழுதும் அமைதியாக இருக்கும்… அங்கு யாருமே சத்தமாக பேசக்கூடாது… பேசவும் மாட்டோம்… பூஜைநேரம் காலை 6.30 டூ 6.45
நான் சொன்னுது போலவே…பூஜை செய்ய எல்லா பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்திருந்தாள்… பொன்னி!
நான் சென்று குத்துவிளக்கை ஏற்றி சாமிபடங்களுக்கு மாலை போட்டேன்…பிறகு சாம்பிராணி புகையிட்டு ஊதுபத்தி கொளுத்தி அருகில் இருந்த ஸ்டான்டில் சொருகினேன்… விபூதிகுங்கும தட்டில் கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்தேன்… எல்லோரும் ஊழியர்களும் மற்றும் குழந்தைகளும் சாமி கும்பிட்டார்கள்.. பிறகு பத்து நிமிடங்கள் யாருடனும் பேசாமல் கண்களை இறுக மூடி தியான நிலையில் இருந்தோம்.
பத்து நிமிடங்களுக்கு பிறகு…
“ஆறுமுக அண்ணே.. தியானம் முடிஞ்சிடுச்சி.. குழந்தைங்க எல்லாருக்கும் டீ கொண்டு வாங்க.. அப்படியே எனக்கும் கொண்டு வாங்கண்ணே”
“இதோ வரேம்மா”
எல்லோருக்கும் டீ கொடுக்கபட்டது…
“குழந்தைகளா…. பதினைந்து நிமிஷம்தான் டைம் அதுக்குள்ள டீ குடிச்சிட்டு எப்பொழுதும்போல படிக்க புத்தகத்தை எடுத்துகிட்டு தியான மண்டபத்திற்கு வந்திடுங்க…”
“சரிங்க ஆயா” என்று ஒட்டுமொத்தமாக கூறினார்கள்.
காலை 7 டூ 7.30 மணிவரை படிக்கும் நேரம்..7.30 டூ 8வரை ஓடி ஆடி விளையாடுவார்கள்..
நான் அவர்களுக்கு படிக்கும் நேரத்தில் டியுசன் எடுப்பேன்… விளையாடும் பொழுதில் அவர்களுடன் இணைந்து விளையாடுவேன்..
காலை எட்டு மணி-
“சாரதாம்மா.. சாரதாம்மா…”
“என்ன ஆறுமுக அண்ணே!?”
“காலை சாப்பாடு ரெடி ஆகிடுச்சும்மா..”
“ஓகே அண்ணே…”என்று சொல்லிவிட்டு பிள்ளைகளிடம் திரும்பினேன்..
“பிள்ளைகளா… காலை சாப்பாடு ரெடி ஆகிடுச்சு… எல்லோரும் கைகால்களை கழுவிட்டு போயி உட்காருங்க…”
“ஓகே ஆயா” என்று கூட்டமாக ஒன்று சேர்ந்து சொன்னார்கள்.
“மூர்த்தி…மேரி எல்லா உணவையும் ரெடியா எடுத்து வையுங்க… தட்டு டம்ளர் எல்லாத்தையும் எடுத்து வையுங்க..”
“சரி சாரதா..”
நானும் போயி கைகால்களை கழுவிவிட்டு வந்தேன்… ஒரு தட்டில் ஒரு வாழை இலையை விரித்தேன்..எல்லா உணவையும் அதில் எடுத்து வைத்தேன்.. மொட்டமாடிக்கு சென்று காக்கைக்கு எடுத்து வைத்துவிட்டு “கா…கா..கா…”என்று கத்தினேன்…
எப்பொழுது நான் சாப்பாடு வைத்தாலும் சரி… காக்கைகள் பறந்தோடி வந்துவிடும்… நான் வைத்த காலை உணவை காக்கைகள் குத்தி உண்டது…
மற்றொரு தட்டில் ஒரு வாழை இலையை விரித்து எல்லா உணவையும் அதில் எடுத்து வைத்து பூஜையறையில் உள்ள சாமிக்கு எடுத்து வைத்தேன்.. பிறகு எல்லா குழந்தைகளையும் உட்கார வைத்தேன்.
“குழந்தைகளா… எல்லோரும் அமைதியா வரிசையாக வந்து உட்காருங்க…” என்றேன்..
எல்லா குழந்தைகளும் நான் சொன்னது போலவே வரிசையாக வந்து அமர்ந்தார்கள்..
எல்லோருக்கும் தட்டு வைத்து காவை உணவு பரிமாறப்பட்டது… நானும் உணவை பரிமாறிகொண்டு டம்ளரில் எல்லோருக்கும் தண்ணீர் ஊற்றி வைத்தேன்.
“குழந்தைகளா.. எல்லாரும் சாமி கும்பிடுங்க… இப்ப நா சொல்ற மாதிரி எல்லாரும் சொல்லுங்க”என்றேன்..
எல்லோரும்”ஓகே” என்று தலையாட்டினார்கள்.
“உண்ண உணவும்
உடுக்க உடையும்
இருக்க இடமும்
அளித்த இறைவா- உனக்கு
இருகரம் சேர்த்து வணங்கி
நன்றி சொன்னோம்!
நன்றி சொல்கிறோம்!!
நன்றி சொல்வோம்!!!
அனைத்து உயிர்களையும் எப்பொழுதும் காப்பாயாக!!!
நன்றி! வணக்கம்!”
நான் சொல்ல சொல்ல என் பின்னாடியே அவர்களும் சொல்லி முடித்தார்கள்..
“எல்லோரும் சாப்பிடுங்கள்…”
எல்லோரும் சாப்பிட்டார்கள்..
“ஆயா…”
திரும்பினேன்
நந்தினி என்னை கைகாட்டி கூப்பிட்டாள்.
அவளருகில் சென்றேன்.‌
“என்ன நந்துகுட்டி!?”
இட்லியை புட்டு சாம்பாரில் நனைத்து எனக்கு ஊட்ட கைநீட்டினாள்‌..
“நீங்க மொதல்ல சாப்பிடுங்க ஆயா”
“சிரித்துக்கொண்டே அதை வாயில் வாங்கிகிட்டேன்..
“ஆயாவுக்கு போதும்… நீ சாப்பிடும்மா”என்று நானும் ஒரு இட்லியை புட்டு சாம்பாரில் நனைத்து அவளுக்கு ஊட்டி விட்டேன்.
அனைவரும் சிறிது நேரத்தில் சாப்பிட்டு முடித்தார்கள்…
“எல்லோரும் போயி பள்ளிக்கு கிளம்புங்கள்” என்று சொன்னேன்..
எல்லோரும் தலையாட்டிகொண்டே சென்றார்கள்..
“ஆறுமுக அண்ணே… நம்ம ஊழியர்கள் எல்லாரையும் சாப்பிட சொல்லுங்க…”
“சரிம்மா… நீயும் வந்து சாப்பிடும்மா..”
“இல்லண்ணே… ராஜா அப்பாவுக்கு கொண்டு போய் சாப்பாடு கொடுத்திட்டு வந்து சாப்பிடுகிறேன்… நீங்க எல்லாரும் போயி சாப்பிடுங்க..”
“சரிம்மா”
நான் பூஜையறையில் வைத்து படைக்கப்பட்ட உணவை எடுத்துக் கொண்டு ராஜா அப்பா இருக்கும் அறைக்கு சென்றேன்…
“அப்பா… ராஜா அப்பா…”
“ஆங்‌..இதோ வரேம்மா..”
தலை வாரிகிட்டே வந்தாரு..
“சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் அப்பா'”
“இதோ கை கழுவிட்டு வந்து விடுகிறேன்ம்மா”
“சரிப்பா”
கை கழுவிட்டு வந்து அமர்ந்தார்.
நான் கொண்டு வந்த சாப்பாட்டை அவர் முன் வைத்தேன்..
“சாப்பிடுங்க அப்பா…”என்று சொல்லி கொண்டே ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி எடுத்து வைத்தேன்.
“நீ சாப்பிட்டியாம்மா..”
“இன்னும் இல்ல அப்பா.. நீங்க மொதல்ல சாப்பிடுங்க.. நா அப்புறம் சாப்பிடுகிறேன்…”என்று சொன்னேன்..
அவரு சாப்பிட்டுகிட்டே என்னிடம் பேசிகொண்டிருந்தார்.. எங்கள் பேச்சை நிறுத்தும்படியாக திடீரென்று ஒரு சத்தம்! எங்கள் இருவருக்கும் கேட்க..
நாங்க இருவரும் பேச்சை சட்டென்று நிறுத்திவிட்டு திரும்பினோம்.
ஆயா வருவாள்……

 

-கவிஞர் கமலி

மேலும் படிக்க

Comments

  • Avatar

    Thilakaraj

    05/04/2022 at 4:07 மணி

    Really very intersting story like it very much. Thxz fr posting this story promisely am waiting fr next epic.

    Thank you🙏

    Reply

    • Avatar

      அழகு ஜெகன்

      06/04/2022 at 8:47 காலை

      nantri

      Reply

  • Avatar

    Thilakaraj

    05/04/2022 at 4:09 மணி

    Am eagerly waiting for your story. Really very good very intersting story like it very much. Lovely 😍 story. Heartlg wishes fr ur paal manam pudhumai story. Lovely.

    Thank you 🙏

    Reply

    • Avatar

      அழகு ஜெகன்

      06/04/2022 at 8:48 காலை

      nantri

      Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன