(இதுவரை சாரதாவின் அக்கா குடும்பத்தை பற்றியும் திருநங்கை அலுவலகத்தில் உள்ளவர்களை பற்றியும் பார்த்தோம் இனி)

“சாரதா…சாரதா…”
“என்ன மேரி..?”
“நம்ம ராஜாசாரை பார்க்க ஒருவர் வந்திருக்கிறார்… ஹாலில் உட்கார வைத்திருக்கிறேன்..”
“சரி..நா போயி பார்க்கிறேன்…மல்லிகா கிட்ட சொல்லி குழந்தைகளோட பெட்சீட்களை துவைக்க போட சொல்லு”
“சரி சாரதா”
நான் ஹாலுக்கு சென்றேன்..
ஒரு இளைஞர் உட்கார்ந்து கொண்டிருந்தார்…
“வணக்கம் சார்… சொல்லுங்க.?”
குனிந்து கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.
வாட்டசாட்டமாக அழகாக இருந்தான்‌… அதுவரை நேராக நிமிர்ந்து பேசிய என்னை சில நிமிடம் வெட்கம் தழுவிசென்றது.. ஆறு வருடங்களுக்கு முன்பு இதே போல வெட்கபட்டவள்… பழசை நினைத்து சுதாரித்து கொண்டு மேலும் நிமிர்ந்தேன்.
“வணக்கம் மேடம்..என் பெயர் சந்தோஷ்… எம்.பி.ஏ முடிச்சிருக்கேன்.. வேலைத்தேடி இங்கு வந்திருக்கேன்…”
“ராஜா சார் வர சொன்னாரா.!?
“இல்ல…ஆனா வார்டன் வேலை காலியா இருப்பதாக கேள்விப்பட்டேன்..‌அதான் வந்தேன்”
“எம்.பி.ஏ.முடிச்சிருக்கேனு சொல்றீங்க… அப்புறம் எதுக்கு ஆசிரமத்திக்கு இந்த வேலைக்கு வர நினைக்கிறீங்க!?”
“பொதுவா எனக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும்….. அதுனால எனக்கு இந்த வேலைக்கு வர்றேன்.. அது மட்டும் அல்ல… எனக்கு ஆசிரமத்தில் வேலை செய்யனும்னு ரொம்ப நாள் ஆசை..”
“ஓகே…ராஜா சார் வெளியூரு போயிருக்காரு… நான் போன் பண்ணி கேட்டுட்டு சொல்றேன் வெயிட் பண்ணுங்க ”
“ஓகே மேடம் ”
“ஆறுமுகம்அண்ணா…. அண்ணா…”
“சொல்லும்மா சாரதா”என்று தோளில் போட்டிருந்த டவலில் கைகளை துடைத்துகொண்டே கேட்டார்..
“சாருக்கு ஒரு டீ கொடுங்க”
“இல்ல… வேண்டாம் மேடம் ”
“பரவாயில்லை சாப்பிடுங்க… நீங்க கொண்டு வந்து கொடுங்கண்ணா…”
“ம்…சரிம்மா…”
“நீங்க டீ குடிச்சிட்டு இருங்க… நான் ராஜாசாருகிட்ட பேசிட்டு வந்திடுறேன்”
“ம்… சரிங்க மேடம் ”
நான் அலுவலத்தை நோக்கி நடந்தேன்…
ஏனோ தெரியவில்லை…
என்னை அறியாமலேயே என் கண்கள் மீண்டும் அந்த இளைஞரை பார்த்தது..
நிதானம் தவறிய பார்வையை மாற்றி தலையை சிலுப்பிக்கொண்டு நடந்தேன்.
ராஜாசாருக்கு போன் செய்தேன்.
“ஹலோ அப்பா…”
“ஹலோ சாரதா…சொல்லும்மா!?”
“அப்பா… வார்டன் வேலைக்கு ஒரு இளைஞர் வந்திருக்காருப்பா… நீங்க எப்பப்பா வர்றீங்க!? எப்ப அந்த இளைஞரை வர சொல்லட்டும்!?”
“இதுக்கு ஏம்மா நா வரனும்!? நீயே பார்த்து பேசிடு.. நான் வர்றதுக்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்”
“ம்…சரிங்கப்பா… உடம்பை பார்த்து கொள்ளுங்க… நேரம் தவறாம சாப்பிடுங்க”
“ம் சரிம்மா”
போன் துண்டிக்கப்பட்டது.
அந்த இளைஞரை நோக்கி நடந்தேன்..
“டீ சாப்பிட்டிங்களா சார்?”
“ம்.. இப்பதான் சாப்பிட்டேன் மேடம் ”
“அப்பாகிட்ட பேசிட்டேன்…என்னை டீல் பண்ண சொன்னாரு… ”
“ம்.. சரிங்க மேடம் ”
“இதோ பாருங்க சார்…இங்க சம்பளம் கம்மியா தான் கிடைக்கும் பரவாயில்லையா!?”
“பரவாயில்லை மேடம்… எனக்கு வேலை கிடைத்தால் போதும் ”
“ம்…ஓகே…. உங்கள் ஆதாரங்களையும் சான்றிதளையும் கொடுத்திட்டு நாளைக்கு வேலையில சேருங்க…”
“ரொம்ப தேங்க்ஸ் மேடம் ”
“இட்ஸ் ஓகே ”
“மேடம்.. அப்புறம் ஒரு விஷயம்………!?
என்று இழுத்தார்..
“சொல்லுங்க சார்?”
“இல்ல.. எனக்கு நாளைக்கு வரை தங்க ரூம் இல்லை… ”
“ஓகே…ஓகே..‌மூர்த்தி.. மூர்த்தி ”
“சொல்லுங்க சாரதா?”
“சாரு தான் நம்ம ஆசிரமத்தில புதுசா சேர்ந்திருக்கிற வார்டன்… பழைய வார்டன் இருந்தாருல ரூம்… அந்த ரூம்க்கு இவர அழைச்சிட்டு போயி விடுங்க”
“ம்… சரிங்க சாரதா”
“சார்…இவருகூட போங்க…. உங்களுக்கான ரூமை காட்டுவாரு… ரெஸ்ட் எடுங்க…. அப்பா வந்ததும் சம்பளம் மற்றும் மற்ற விவரங்களை கேட்டு சொல்றேன் ”
“ம் ஓகே மேடம் ”
“ம்…”
“வாங்க சார் போகலாம் “என்றார் மூர்த்தி
அவரும் பேக் எல்லாம் எடுத்திட்டு மூர்த்திகூட கிளம்பினார்…
“சார்… நீங்க எந்த ஊரு ?”
“ராமேஸ்வரம் ”
“கல்யாணம் ஆச்சா சார்”
“இன்னும் இல்லை…”
“ஓகே சார்… அந்த பேக்கை தாங்க சார் நான் கொண்டு வர்றேன்”
“பரவாயில்லை சார்…”
“நீங்க என்னை மூர்த்தினே கூப்பிடலாம் சார்”
“ம்…”
“சார்.. அப்புறம்… அந்த சாரதா கிட்ட ரொம்ப வச்சிக்காதீங்கோ…”
“ஏன்…என்ன!?”
“என்னவா..!? அவ ஆடுற ஆட்டம் தாங்கலடா சாமி…அப்பா.. அப்பானு ஓனரை கைகுள்ள போட்டுகிட்டு எங்க எல்லாரையும் ஆட்டி படைக்கிறா அவ என்னமோ ஓனரு மாதிரியும் நாங்க என்னமோ அவ வீட்டு வேலைகாரங்க மாதிரியும் எங்களை நடத்துறா… இருக்கட்டும் இருக்கட்டும் ஒருநாள் வச்சிக்கிறேன்… அதுனால சார்……”
பேசி முடிப்பதற்குள் சந்தோஷ் குறுக்கிட்டு பேசினார்…
“ஹலோ.. மூர்த்தி… முதலில் ரூமை காட்டுங்க.. தேவையில்லாத பேச்செல்லாம் பேச வேண்டாம்…யாராரு எப்படின்னு எனக்கு போக போகதானே தெரிய போகுது..”
“ஓகே சார்…” என்றார் மூர்த்தி.
“இதான் சார் உங்க ரூம்..பழைய வார்டன் இருந்த ரூம்… கொஞ்சம் குப்பையாக இருக்கு..இருங்க கூட்டிபெருக்க சொல்றேன்…”
“ம்..சரி”
“மேரி…மேரி…”
“என்ன மூர்த்தி?”
“வார்டன் ரூம் சுத்த படுத்தனும்… சீக்கிரம் வா”
“ம்…ஓகே”
சிறிது நேரத்தில் பொன்னி தொடப்பம் கொண்டு சென்றாள்.
“இரு..இரு…நீயேன் வந்தே? நா மேரியதானே செய்ய சொன்னேன்… ”
“மேரியக்காவுக்கு ஏதோ ஆபிஸ்ரூம்ல வேலை இருக்காம்… அதான் என்னைய அனுப்பினாங்க…”
“சரி…சரி..போயி சீக்கிரம் வேலைய பாரு..சாரு வெயிட் பண்றாரு”
“ம்…சரி”என்று பொன்னி கூட்டிபெருக்க ஆரம்பித்தாள்.
“பாத்தீங்களா சார்.. எல்லாம் அந்த சாரதா எடம் கொடுக்கிறது…மேரியும் சாரதாவும் பிரண்ட்ஸ்.. அதுனால மேரிய ஆபிஸ் வேலைய மட்டும் செய்ய சொல்றா அந்த சாரதா… எங்களுக்கு மட்டும் எல்லாம் வேலையும் செய்ய சொல்றா ”
“கொஞ்சம் நேரம் பேசாம இருங்க மூர்த்தி..தொன தொனு பேசிகிட்டே இருக்காம ”
“ஓகே சார் ”
சிறிது நேரத்தில் பொன்னியும் கூட்டி பெருக்கி முடித்தாள்..
“மூர்த்திண்ணா…வேலையை முடிச்சிட்டேன்”
“ம்…சரி…நீ போ…நா பாத்துக்கிறேன் ”
“ம்…சரிண்ணா”
“சார்.. நீங்க போயி ரெஸ்ட் எடுங்க…நா அப்புறம் வந்து பாக்குறேன்…”
சந்தோஷ் தலையை மட்டும் ஆட்டினார்… மூர்த்தி சென்றதும்.. கையில் கொண்டு வந்த இரண்டு பேக்குகளில் ஒன்றை ஓரமாக வைத்து விட்டு ஒன்றை மட்டும் பெட்டில் வைத்து திறந்தார்…
அதில் ஒரு சின்ன பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று இருந்தது…அதை கையில் எடுத்தார்…
‘அம்மா… நீங்க சொன்ன மாதிரி நான் இங்கு வந்துட்டேன்..நா யாருகிற உண்மை யாருக்கும் தெரியாது… நேரம் வரும்போது நானே அந்த உண்மையை சொல்லுவேன்… அதுவரை யாருக்கும் தெரியாம இருக்க நீதாம்மா எனக்கு துணையாக இருக்கனும்..’என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த பேக்கில் அடிப்பகுதியில் வைத்துவிட்டு அந்த புகைப்படத்தின் மீது துணிகளை அடுக்கி வைத்தார்.

மாலை நேரம்… செல்போன் அழைத்தது.
ஓடிபோய் எடுத்து ஆன் செய்தேன்..
“ஹலோ”
“ஹலோ… சாரதா… நான் ராஜாஅப்பா பேசுறேன்..”
“சொல்லுங்க அப்பா..”
“ஒரு டோனர்.. நமக்கும் ஒரு முதியோர் இல்லத்துக்கும் சேர்த்து மளிகை சாமான்களும் செக்கும் தர்றாங்க… அந்த முதியோர்க்கு போய் வாங்கிடும்மா”
“சரிப்பா..நா பாத்துகிறேன்….” என்றேன்.
“ம்..சரிம்மா”
போன் துண்டிக்கப்பட்டது.
சிறிது நேரம் கழித்து –
“மூர்த்தி… மூர்த்தி ”
“மூர்த்தி இல்லை சாரதா”என்றார் ஆறுமுகம்..
“எங்கே!?”
“குழந்தைகளோடு விளையாட்டு கிரவுண்ட்க்கு இப்பதான் போயி இருக்காரு…கூப்பிட்டுமா சாரதா”
“ஆமாண்ணே… வெளியில் காருல போகனும்…”
அதை கேட்டு கொண்டிருந்த சந்தோஷ் குறுக்கிட்டான்..
“உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா…நா கூட வரலாமா…நா நல்லாவே காரு ஓட்டுவேன்”
சிறிது நேரம் யோசித்து விட்டு சரி என்றேன்..
“ஆபிஸ் ரூம் சுவத்துல சாவி இருக்கு எடுத்துட்டு வாங்க”
“ம்…சரி…” சந்தோஷ் ஆபிஸ் ரூம்க்கு சென்றார்…
“ஆறுமுகம் அண்ணா…. அரசி கோணி….ஒரு அஞ்சு எடுத்து காரு டிக்கில போடுங்க…”
“ம்… சரிம்மா ”
“மேரி…மேரி…”
“சொல்லு சாரதா…”
“ஒரு டோனர் மளிகை சாமான்களும் செக்கும் தர்றாங்க…அதை வாங்க நா போயிட்டு வந்துடுறேன்… கொஞ்சம் பாத்துக்க…குழந்தைங்க கிரவுண்ட்க்கு போயிருக்காங்களாம்… வந்ததும் குளிக்க சொல்லிடு… அவங்க குளிச்சிட்டு வர்றத்துகுள்ள டீ போட்டு வைக்க சொல்லிடு ”
“ஓகே சாரதா…நா பாத்துக்கிறேன்”
“பாத்தியாடி…பொன்னி..ஏன் நம்மகிட்ட நம்ம பாத்துக்க மாட்டோமா…ஏன் மேரிக்கு மட்டும் தான் எல்லாம் தெரியுமோ!?”என்றாள் மல்லிகா.
“மல்லிகா அக்கா…. ராஜா சாருக்கு அடுத்து சாரதா அக்கா இருக்காங்க.. அவங்களுக்கு அடுத்து மேரி அக்கா இருக்காங்க..இதுல உங்களுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்… நான் ஏதாவது வருத்தம் படுறேனா… பாருங்க ”
என்று கிசு கிசுத்தார்கள்..
“எல்லாம் அந்த ராஜாசாரு கொடுக்குற எடம்டி…”
“போக்கா.. உனக்கு வேற வேல இல்ல..” என்று சொல்லி விட்டு பொன்னி கிளம்பினாள்…
காரில் ஏறிக் கொண்டேன்..
கார் புறப்பட்டது…
அந்த முதியோர் இல்லத்தின் முகவரியை சொன்னேன்…
“இந்த முகவரி தெரியுமா!?”
“ஏங்க…நா இந்த ஆசிரமத்திக்குதாங்க புதுசு…சென்னையில சில ஏரியா தெரியும்…அதுல இது ஒண்ணு..”
“ஓகே”
“உங்கள பேரு சொல்லி கூப்பிடலாமா!?”
“ம்”என்றேன்..
இப்படியே ஒரு நாற்பது நிமிஷம் ஓடியது… அந்த முதியோர் இல்லமும் வந்தது..
“நீங்க இறங்கி உள்ளே போங்க…நா காரை ஒரு ஓரமாக விட்டுட்டு வந்துடுறேன்…”
“ம்.. சரிங்க..”
“நீங்களும் என்னை சந்தோஷ் என்றே கூப்பிடலாம்”
“ம்… சரிங்க சந்தோஷ்”
உள்ளே சென்றதும்
வரவேற்றனர்..
“வாங்க… வாங்க சாரதா”
“வணக்கம்”என்று தெரிவித்தேன்
“என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்!?”
“ராஜா சாரு சொன்னாரு.”
“ஓகே..ஓகே…”
“உட்காருங்க சாரதா..”
சந்தோஷும் உள்ளே நுழைந்தார்..
“நீங்களும் உட்காருங்க சந்தோஷ்” என்றேன்..
“தம்பி…யாரும்மா!?”
“நம்ம ஆசிரமத்திக்கு புதுசா வார்டனா வந்தாருக்காரு…”
“ஓ…அப்படியா”என்று வணக்கம் தெரிவித்தார்..
பதிலுக்கு சந்தோஷும் வணக்கம் தெரிவித்தார்.
” காவேரி…. காவேரி…. இரண்டு காபி கொண்டு வாம்மா..”
“இல்ல சார்… பரவாயில்லை…”
“பரவாயில்லை… நம்ம ஆசிரமத்திக்கு வந்துட்டு சாப்பிடாம போனா எப்படி!?”
“ம்… சரிங்க ” என்று நாங்க இருவரும் தலையாட்டினோம்…
“டோனர் வந்துட்டு..ஏதோ அவசரம்னு போயிட்டாங்க… இருங்க நா செக்கும் மளிகை சாமான்களும் தர்றேன்…”
“சார்…கோணியும் கொண்டு வந்துருக்கேன்…வேணுமா!?”
“இல்லம்மா வேண்டாம்…மதியமே எல்லாமே எடுத்து வச்சிட்டேன்…” என்று சொல்லிவிட்டு சென்றார்..
“காபி எடுத்துக்குங்க” என்றாள் அந்த பெண்மணி… நாங்க இருவரும் நிமிர்ந்து எடுக்க…
ஒரே அதிர்ச்சி… எனக்கு!
அந்த பெண்மணிக்கும்..
என்னை பார்த்ததும் அவள் அழுது கொண்டே ஓடினாள்…
“யாருங்க அந்த அம்மா!? உங்களை பார்த்ததும் அழுதுகிட்டே போறாங்க..”
“நீங்க காபியை குடிங்க… மளிகை சாமான்கள் வந்துட்டா காருல ஏத்திடுங்க….இதோ வந்திடுறேன்…”
“ம்… சரிங்க சாரதா”
கையில் இருந்த காபி டம்ளரை கீழே வைத்துவிட்டு அந்த அம்மாவின் அருகே சென்றேன்…
சுவற்றின்பக்கமா திரும்பி அழுது கொண்டிருந்தவரின் முதுகை தொட்டேன்…
திரும்பினார்…
“சாரதா….” என்று என்னை கட்டிக்கொண்டு அழுதார்…
(ஆயா வருவாள்

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன