சத்யா

(அத்யாயம் 7)

 

இதுவரை…

 

ஆதவன் சத்யாவுக்கு தெரிந்த இடத்தில் வேலை வாங்கி தருவதாகவும், குறிப்பிட்ட நேரத்துக்குள், நேர்முகத்தேர்வுக்கு வரவேண்டும் என சத்யாவிடம் கூறிவிட்டு ஆதவன் காத்திருக்க, எதிர்பாராமல் சத்யா வரவில்லை, ஏன் வரவில்லை என கேட்டுக்கொள்வதற்க்காக ஆதவன், சத்யாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஆதவன் சோகமாய் இருபதைக்கண்டு, இளவேனிலிடம் கேட்டுவிட்டார். இளவேனிலும் அவன் பங்குக்கு ஆதவனை கலகலப்பாக்க முயற்சிக்க, அப்பொழுது தான் ரிலீஸ் ஆன “துள்ளாத மனமும் துள்ளும்” படத்திற்க்கு அவன் நண்பர்களுடன் அழைத்துச்சென்றான். படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியே வரும் நேரம் பயங்கரமாக மழை பெய்த்துக்கொண்டிருந்தது.

 

இனி….

படம் பார்த்து முடித்த, மொத்த கூட்டமும் திரையங்கின் வாசலில் நின்றுக்கொண்டு “இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவம் இல்லை…” என்ற படலை பாடிக்கொண்டு இருந்தது. ஆதவன் & கோ மட்டும் அதற்க்கு விதிவிலக்கா என்ன? அதே நேரம் இளவேனிலின் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் ஒருவர் அடுத்த காட்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு காத்திருப்பதை பார்த்த ஒருவன்

 

“டேய் இங்க பாருங்க டா, வெற்றி வாத்தி….”

 

“டேய் எங்க டா…”

 

“டேய் இதோ இங்க தான் டா பாக்குறான் டேய் தெரிச்சு ஓடுங்க டா…” என கூச்சலிட்டுக்கொண்டே ஆளுக்கு ஒரு மூளையாக தெரித்து ஓடிய இளவேனிலின் நண்பர்களுடன் இளவேனிலும் ஆதவன் காதில் “மச்சி அந்த பஸ் ஸ்ட்டாபுல நிக்குறேன் வந்துடு” என கடித்துவிட்டு கொட்டும் மழை என்றும் பாராமல் ஓடிவிட்டான். அதே நேரத்தில் அந்த வெற்றி என்ற பேராசிரியரும். மாணவர்களை பார்த்த பின்னர், மறைந்து மறைந்து, ஒளித்து, ஓளித்து, தன்னுடன் அழைத்து வந்திருந்த காதலியை, திரையரங்குக்குள் அழைத்து சென்றார். மழையும் நின்ற பாடு இல்லை. உடன் இருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் வந்த சைக்கிள் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தனர். ஆதவனும் மெதுவாய் இளவேனில் கூறிய பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த சாலையில் அதிகமாய் ஆள் நடமாட்டம் இல்லை, அடுத்ததாய் வந்த இடது பக்க திருப்பத்தில் திரும்பிய பொழுது அங்கு சத்யா நிற்பதை கண்ட ஆதவன் அப்படியே திகைத்து நின்றான்.

 

திகைத்து நின்ற ஆதவனின் கைகளை எடுத்த சத்யா, “அடி… என்னை அடி ஆதவா…, என்னை அடிச்சு உன் கோவத்தை போக்கிகோ….”

 

“உன்னை அடிக்க நான் யாரு, நான் எதுக்காக உன்னை அடிக்கனும் உனக்கும் எனக்கும் என்ன இருக்கு?” என பேசிக்கொண்டே இரண்டு அடிகளை முன்னோக்கி எடுத்து வைக்க சத்யா, ஆதவனின் வலது கையை இழுத்து பிடித்தபடியே

 

“சரி சரி நான் பன்னினது தப்பு தன், இல்லனு சொல்லலை, அதுக்கு என்னையவே யாருனு கேப்பியா, நீ”

 

“ஆமா கேப்பேன், ஒரு தடவை இல்லை 100 தடவை கேட்பேன் யாரு நீ? யாரு நீ? யாரு நீ?”

 

“சரி கேட்டாச்சு இல்ல, நீ கிளம்பலாம், ஆனா ஒன்னு, கோர்ட்டுல கூட குற்றவாளி தரப்புல பேசுறத்துக்கு வாய்ப்பு கொடுப்பாங்க ஆனா நான் இங்க தப்பே பன்னாம குற்றவாளியா இருக்கேன், நான் என்ன தான் சொல்லவரேன்னு கேட்க கூட நீ தயாரா இல்லாதப்ப, நான் ஏன் உன்னை தடுக்கனும், என்னையவே நீ யாருனு கேட்டத்துக்கு அப்புறம், இது எல்லாம் பேச நான் யாரு”

 

ஆதவன் அங்கேயே நிற்க,

 

“அது தான் சொல்லிட்டே இல்லை யாரோனு அப்புறம் எதுக்கு நிக்குறே போ போ, உனக்கு மட்டும் தான் வீம்பு இருக்கனுமா, எனக்கு இல்ல வீம்பு, போ.. போ…”

 

ஆதவன் மனதில், என்ன இவங்கிட்ட கோவமா இருக்குற என்னை கொஞ்சி சமாதானம் பன்னுவான்னு பார்த்தா இவன் ரொம்ப அடம் புடிக்குறான் சரி நின்னு என்னன்னு கேட்டு பார்க்கலாம். என முடிவெடுத்து, நிற்க, சத்யா அங்கிருந்து, சில அடிக்கள் பின்னால் வைத்து திரும்பி மெல்ல நடக்க ஆரம்பிக்க ஆதவன்

 

“ஐயோ முதலுக்கே மோசமாகிடும் போலயே” ஆதவன் சத்யாவின் பின்னால் சென்று அவன் கையை பிடித்து இழுக்க,

 

சத்யா, “அப்படி வா வழிக்கு” என்று கூறி சத்யா ஆதவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்த பூட்டப்படிட்டிருந்த கடை ஒன்றின் வாசலில் ஒதுங்கி நின்றனர்.

 

“சொல்லு டா சொல்லு”

 

“என்ன சொல்ல,”

 

“எதோ மரண வாக்குமூலம் மாதிரி எதோ சொன்னியே அதை சொல்லு”

 

 

“அதுவா, நீ சொன்ன கடைக்கு தான் இண்டர்வியூவுக்கு தான் அன்னிக்கு கிளம்பி பஸ்ல வந்துக்கிட்டு இருந்தேன் திடீர்ன்னு ஒரு போன் ” என்ன எங்க அக்கா புருஷனுக்கு ஒரு ஏக்சிடண்ட், ரத்தம் வேணும்னு சொன்னாங்க அது ஏற்பாடு பன்னிகொடுக்க அங்க போகவேண்டியதா போச்சு அதனால தான் என்னால வரமுடியலை, அதுக்கு அப்புறம் அவரை பக்கத்துல இருந்து பார்த்துக்கவும் ஆள் இல்லை அதனால் ஒரு வாரமா நான் அவர் பக்கத்துலயே இருந்து பார்த்துக்கிட்டேன்”

 

“ஐயோ அப்புறம்…”

 

“துன்பத்துலையும் ஒரு இன்பம் என்னான்னா, எங்க அக்கா, அவ புருஷனோட சேர்ந்துட்டா”

 

“எது எப்படியோ நல்லது நடந்தா சரிதான், அப்ப ரெண்டு நாள்ல வேலைக்கு வறியா?”

 

“முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன், எனக்கு வேலைக்கும் ஒரு ஏற்பாடு பன்னிட்டாங்க டா”

 

“எங்க?”

 

“அக்கா புருஷன் வேலை செய்யுற ஆப்பீஸ்லயேதான், நான் குடோன் சூப்பர்வைசர்”

 

“எது எப்படியோ உனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சிருக்கு, சரி உன் வேலை நேரம் எப்படினு சொல்லு”

 

“காலையில 9:30 க்கு போனா, சாயுங்காலம், 7:00 மணிக்கு முடியும், சில சமயம் 8:00, 9:00 போகும்”

 

“சரி நாம எப்ப பாத்துக்குறது எப்போ பேசிக்கிறது?”

 

சில நிமிடங்கள் யோசித்த சத்யா, எனக்கு ஒவ்வொரு வியாழக்கிமையும், சாயுங்காலம் கண்டிப்பா 6:00 மணிக்கு முடிஞ்சுடும், 6:30மணிக்கெல்லாம் நான் பஸ் ஸ்டேண்ட் வந்துடுவேன், நீ அங்கேயே வந்துடு பார்த்துக்கலாம்”

 

“சரி எந்த இடத்துல வெயிட் பன்னட்டும்”

 

“ம்… ம்…. ம்…. ம்…. ம்…. பஸ் ஸ்டேண்டுல மினி பஸ் நிக்கும் இல்லை அந்த இடத்துல ஒரு சோடா கடை இருக்கும் அங்க நில்லு வந்துடுவேன் அதிகபட்சம் 6:45க்குள்ள வந்துடுவேன் அப்படி நான் வராட்டி, நீ கிளம்பிடு”

 

“சரி நான் அப்ப நான் கிளம்பட்டுமா, அடுத்த தெருவுல உள்ள பஸ் ஸ்ட்டாப்புல என் அத்தை பையனும் அவன் பிரண்ட்ஸ்ம் வெயிட் பன்னுறாங்க”

 

“அங்க என்ன?”

 

“இந்த இந்திரா தியேட்டருக்கு தான் துள்ளாத மனமும் துள்ளும் படம் பாக்க வந்தோம் வந்த இடத்துல, அவங்க புரசர் ஒருத்தர் வந்துட்டாரு அதனால அவர் கண்ணுல படாம தப்பிச்சு ஓடிட்டானுங்க”

 

“சரி பார்த்து போ, வர வியழக்கிழமை உனக்காக பஸ் ஸ்டேண்ட்ல காத்துக்கிட்டு இருப்பேன்” என கூறிவிட்டு சத்யா விடை பெற்றுவிட்டான். ஆதவன் கொட்டு மழையில் நினைந்துக்கொண்டே இளவேனில் கூறிய பஸ் ஸ்ட்டாப்புக்கு ஆடிக்கொண்டு பாடிக்கொண்டும் வந்துவிட்டான். சிறிது நேரத்தில் பஸ் வந்துவிட, இளவேனிலும் ஆதவனும் வீட்டுக்கு வந்து தலையை துவட்டிக்கொண்டே, ஆதவனின் அம்மா கொடுத்த காப்பியை குடித்துக்கொண்டே,

 

இளவேனில், “என்ன டா அதிசயமா இருக்கு?”

 

“எது?”

 

“நீ இப்படி சந்தோசமா இருக்குறது?”

 

“என்ன டா இது நாட்டுல சந்தோசமா இருக்குறது ஒரு குத்தமா என்ன?”

 

“நீ சந்தோசமா இருக்குறது ஒன்னும் குத்தம் இல்லை, ஆனா அந்த சந்தோசம் படத்துக்கு போனப்ப இல்லை, ஆனா படம் விட்டு பஸ் ஸ்ட்டாப்புக்கு வரும் போது எப்படி வந்துச்சுங்குறது தான் என் கேள்வி, நீ விஜய் படம் பாத்து இப்படி சந்தோசப்படுற ஆளும் கிடையாது, ஆனாலும் எப்படி இது நடந்துச்சு? நீ மட்டும் தனியா பஸ் ஸ்ட்டாப் வர கேப்புல என்னமோ நடந்திருக்கு, என்ன ஆச்சு எனக்கு தெரிஞ்சே ஆகனும், சொல்லு”

 

“அதுவா…. நீங்க புரபசரை பார்த்து பயந்து போய் ஓடி வந்துட்டீங்களா, ஆனா அவர் உங்களை பார்த்து பயந்து அவர் கூட கூட்டிட்டு வந்த ஒரு பொண்ணை ஓளிச்சு ஒள்ளிச்சு தியேட்டர்க்குள்ள கூட்டிட்டு போய்ட்டாரா, நானும் வேற வழியில்லாம மழையிலயே நினைஞ்சுட்டே நடந்துவந்தேனா, அங்கே சத்யாவை பார்த்தேன்….” என ஆரம்பித்து இருவரும் பேசிக்கொண்டது, வேலை கிடைத்தது, அப்புறம் வியாழக்கிழைமை தோறும் இருவரும் சந்தித்துக்கொள்ள திட்டம் தீட்டியிருப்பது வரை கூறினான்.

 

“அது தான் பார்த்தேன் இந்த சந்தோசத்துக்கு காரணம் சத்யா தானா, அப்புறம் என்ன ஒரு நல்ல நாளா பார்த்து, சந்தர்ப்பம் கிடைக்கும் போது, உனக்கு அவன் மேல உள்ள காதைலை சொல்லிட்டு”

 

“காதலா அது எல்லாம் இப்ப வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் பார்த்துக்கலா” என மறுத்து விட்டான்.

 

இப்பொழுதெல்லாம், ஆதவன் இளவேனிலின் கல்லூரி கேட்டுக்கு அருகில் உள்ள டீக்கடையில் காத்திருப்பது இல்லை, தன்னுடைய கேட்ரீங்க் கல்லூரி வகுப்பு முடிந்தவுடன் வீட்டுக்கு வந்துவிடுவான், ஆனால் தவறாமல் ஆதவனும், சத்யாவும் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று மாலை 6:30 மணி அளவில், பஸ் நிலையத்தில், அந்த சோடா கடைக்கு முன்பு உள்ள பார்க் பெஞ்சிலோ அல்லது அருகே உள்ள பார்க்கிலோ சென்று இருட்டும் வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு, தோன்றியதை எல்லாம் சாப்பிட்டு விட்டு, இருவரும் அவர் அவர்கள் வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். நாளடைவில் இது வாடிக்கையாக நடக்கும் ஒரு நிகழ்வாகவும் வாழ்வில் ஒரு அங்கமாகவும் ஆகிவிட்டது.

 

ஒரு சில சமையங்களி ஆதவனுக்கும் சத்யாவுக்கும் சேர்ந்து வரும் விடுமுறை நாட்களில் இருவரு சேர்ந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற ஆரம்பித்தார்கள், ஏரிகரை, கோவில், வயல் வெளி, பள்ளி மைதானம், என தோன்றிய இடத்தில் எல்லாம் ஊர் சுற்ற ஆரம்பித்தார்கள்.

 

அப்படி ஒரு விடுமுறை நாள் ஆதவன் சத்யாவுக்காக ஏரிக்கரையில் காத்திருந்தவனுக்கு தூரத்தில் தன் கேட்ரீங்க வகுப்பு தோழன் அகிலன் சைக்கிலில் வருவது போல தெரிந்தது. ஆதவன், அகிலன் தன்னை பார்த்துவிடக்கூடாது என்பதற்க்கா அவன் பார்வையை வேறு எங்கோ திருப்பிக்கொண்டான், ஆனால் அகிலன் இவனை விடுவதாக இல்லை, ஆதவனை தேடி வந்து

 

அகிலன், “என்ன ஆதவா, இங்க உக்காந்துட்டு என்ன பன்னுறே?”

 

“ஒன்னும் இல்லை சும்மா தான்” சரியாக அதே நேரத்தில் சத்யாவும் அங்கு வந்துவிட,

 

“என்ன சும்மா தான் நான் இந்த ஏரியா தான் எத்தனையோ தடவ நம்ப பசங்க இங்க ஏரிகுளிக்கலாம் வானு கூப்பிட்டப்போ எல்லாம் வராத ஆளு இன்னிக்கு சும்மா இங்க என்ன வேலை?”

 

“நிஜமாவே ஒன்னும் இல்லை சும்மாதான் இங்க இருக்கேன், இது வழியா போனேன் காத்து நல்லா அடிச்சுதேன்னு உக்காந்து இருக்கே”

 

“நீ உட்காந்து இருக்குறதை பார்த்தா காதலன், காதலிக்காக காத்திருக்குற மாதிரி தெரியுதே”

 

“நீ ரொம்ப தமிழ் சினிமா பார்த்து கெட்டுபோய்ட்டே, நான் இங்க சும்மா தான் இருக்கேன்”

 

“சரி அப்ப வா எங்க வீட்டுக்கு போலாம்…” என அகில அழைக்க, இது எல்லாம் ஒரு புதர் மறைவில் ஏரியை பார்த்து அமர்ந்திருந்த சத்யா கேட்டுக்கொண்டுதான் இருந்தான்.

 

அகிலன் சத்யாவை பற்றி தெரிந்துக்கொண்டானா, இல்லை ஆதவன் அகிலனின் வீட்டுக்கு சென்றான், சத்யாவின் நிலை என்ன, இதை எல்லாம் தெரிந்துகொள்ள காத்திருங்கள் அடுத்த இதழ் வரை காத்திருங்கள். (தொடரும்…)

 

– இனியவன்

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன