சத்யா

(அத்யாயம் 7)

 

ஆதவனும் சத்யாவும் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி பழகினர், நல்ல நண்பர்களாய், நலம் விரும்பிகளாய், இருவரும் அடிக்கடி சில பல பொது இடங்களில் சந்தித்து மணக்கனக்கில் பேசுவது இவர்களுக்குள் வாடிக்கையாகி இருந்தது. அப்படி ஒரு நாள் ஆதவன் சத்யாவின் வருகைக்காக அவர்கள் ஊரின் ஏரி கரையில் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் காத்திருந்தான்.

 

இனி….

 

ஆதவன் ஆலமரத்தின் அடியில் தன் காதலன் சத்யாவுக்காக காத்திருந்தான், அதற்கு மாறாக அகிலன் வந்தான். அகிலன் ஆதவனின் கேட்ரிங்க் வகுப்பு தோழன்,

 

அகிலன், “ஹேய் ஆதவா, என்ன அதிசயம் ஆச்சரியம், இந்த நேரத்துக்கு இங்க இருக்கே”

 

“ஒன்னும் இல்லை சும்மா தான்…”

 

“இதை என்னை நம்ப செல்லுறியா?, ஏன் டா, உன் வீட்டு பக்கத்துல உள்ள கிரௌண்டுக்கு ஞாயித்துக்கிழமை கிரிக்கெட் விளையாட கூப்பிட்டா கூட எனக்கு விளையாட தெரியாதுன்னு வர மாட்டே, இன்னிக்கு இங்க இப்படி உக்காந்துருக்கே, அது தான் என்ன விஷயம்னு கேட்டேன்”

 

“நிஜமாவே ஒன்னும் இல்லை சும்மா தான் இங்க உக்காந்திருக்கேன், நீ கொஞ்சம் கிளம்புறியா”

 

“என்ன டா துரத்துறே, நீ உக்காந்திருக்குறதை பார்த்தா காதலன் காதலிக்காக காத்திருக்குற மாதிரி தெரியுது?”

 

“அது எல்லாம் ஒன்னும் இல்லை, எனக்கு கொஞ்சம் மனசு சரியில்லை கொஞ்சம் குழப்பமா இருக்கு அது தான்”

 

“எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லுடா?”

 

“வேண்டாம் டா, அதுக்கான நேரம் இது இல்லை, நான் அப்புறமா உங்கிட்ட சொல்லுறேன்”

 

“என்ன ஆதவா பிரிச்சு பாக்குறே இல்லை, சரி இது உன் பர்ஸ்னல் விஷயம் சொல்லுறதும் சொல்லாததும் உன் விருப்பம், நான் யாரு உனக்கு வெறும் வகுப்பு தோழன் தானே”

 

சில பல நிமிடங்களுக்கு பிறகு ஆதவன் சத்யாவை முதன் முதலில் சந்தித்தலிருந்து சத்யாவின் மேல் உள்ள காதல் வரைக்கும் கூறிவிட்டான், இதை அனைத்தும் பொறுமையாக கேட்ட அகிலன்,

 

“இப்ப நான் என்ன சொல்லனும்னு நினைக்குறே,”

 

“இப்ப என் காதலை நான் சத்யா கிட்ட சொல்லவா வேண்டாமா, எனக்கு அவன் மேல காதல் இருக்குற மாதிரி அவனுக்கும் என் மேல காதல் இருக்குமா, அவன் என்னை தப்பா நினைப்பானா, ஒரு வேலை என்னை தப்பா நினைச்சு விலகி போய்ட்டா என்னால அதை எல்லாம் தாங்கிக்கவே முடியாது”

 

“இங்க பார் ஒரு ஆண் இன்னொரு ஆணை காதலிக்குறது தப்பா சரியாங்குற விவாதத்துக்கு எல்லாம் நான் வரலை, அது பத்தி எல்லாம் எனக்கு தெரியாது, என்னை பொறுத்தவரைக்கும் காதல்ன்னு வந்துட்டா, சம்பந்தபட்டவங்ககிட்ட பொறுமை அவங்க மேல நமக்கு எவ்வளவு காதல் இருக்குனு சொல்லலாம் தப்பில்லை, அதை விட்டுட்டு மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் இதயம் முரளி மாதிரி சொல்லாம இருந்தா, வாழ்கை பூரா அவங்களை நேர்ல பார்த்து பேசும் போது அந்த வலியோட சாகுறவரைக்கும் இருக்குறது கொடுமை, அதுக்கு பதில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு சொல்லிட்டு ரெண்டுல ஒன்னு என்ன முடிவுனு தெரிஞ்சுக்குறது நல்லதுனு எனக்கு படுது, உடனே நான் சொன்னதுக்காக எல்லாம் சொல்லவேண்டாம், இது என்னோட முடிவு சொல்லுறது சொல்லாம இருக்குறதும் உன்னோட முடிவு நான் கிளம்புறேன், நாளைக்கு கிளாஸ்ல பார்க்கலாம்” என அங்கிருந்து கிளம்பிவிட்டான் அகிலன்.

 

ஆதவன் மனது இப்போது கலங்கி இருந்த குளம் போல குழப்பமாய் இருந்தது இந்த குழப்பத்துடனே அமர்ந்திருக்க சில நிமிடங்களிலேயே சத்யா வந்துவிட்டான்,

 

சத்யா, “ம்க்கூம்,,,,” என்று தொண்டையை கணைக்க

 

தூக்கத்திலிருந்து எழுந்தவனை போல திடுக்கிட்ட ஆதவன்

 

சத்யா, “என்ன ஆச்சு என்ன பலமா யோசனை பன்னிட்டு இருக்கே”

 

ஆதவன், “ஒன்னும் இல்லையே…”

 

“உன் வாய் தான் ஒன்னும் இல்லைனு சொல்லுது ஆனா உன் கண்ணு ஏதோ ஒன்னு உன்னை குழப்பிட்டு இருக்குறதா சொல்லுது, அது என்னு எங்கிட்ட சொல்லுறதுனா சொல்லலாம்”

 

“நேரம் வரும் போது சொல்லலாம்னு தான் இருந்தேன், ஆனா இப்பவே அதுக்கான நேரம் வரும்னு நான் எதிர் பார்க்கல, உனக்கு என்னை புடிக்குமா சத்யா”

 

“இது என்ன கேள்வி, உன்னை புடிக்காம தான் உன் கூட ஊரு சுத்திக்கிட்டு இருக்கேன்னா”

 

 

“அது வேற நான் கேக்கவந்தது வேற, சரி ஒப்பனாவே சொல்லுறேன், உன்னை என்னைக்கு நான் கல்யாண மண்டபத்துல பார்த்தேனோ அன்னைக்கே உன்னை நான் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன், நான் காதலிக்குறதுனால நீயும் என்னை காதலிக்கனும்னு ஒன்னும் கட்டாயம் இல்லை, உனக்கும் என் மேல காதல் இருந்தா சொல்லு, நம்ப வாழ்கைய முடிவு பன்னி சேர்ந்து வாழலாம், எல்லாம் உன் கையில தான் இருக்கு”

 

சத்யாவுக்கு, “இதுக்கு நான் என்ன சொல்லுறதுனே தெரியலை எங்கியாச்சும் ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளைய காதலிக்கமுடியுமா, இது இந்த உலகம் ஒத்துக்குமா, இந்த சமூகம் ஒத்துக்குமா”

 

“இங்க பார் இது 1998 இன்னும் ரெண்டு வருஷத்துல மில்லினியம் வரப்போகுது, என் படிப்பும் அடுத்த வருஷம் முடிஞ்சுடும், எப்படியும் ஏதச்சும் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் இல்லாட்டியும் ஒரு 3 ஸ்டார் ஹோட்டல்லையாச்சும் வேலை கிடைச்சுடும், உலகம் ஒத்துக்குறது, சமூகம் ஒத்துக்குறது பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை, உனக்கும் என் மேல காதல் இருக்கானு மட்டும் சொல்லு”

 

“எனக்கு சொல்ல தெரியலை டா…. எனக்கு கொஞ்சம் டைம் வேணும், நான் யோசிச்சு சொல்லுறேன்”

 

“மறுபடியும் எப்ப பார்க்கலாம்”

 

“எனக்கு வேலை நேரம் அதிகமாகிடுச்சு, இனி நாம வாரத்துக்கு நடுவுல எல்லாம் சந்திக்கமுடியாது, அதனால, ஞாயித்துக்கிழமை மதியம் 3 மணிக்கு இதே இடத்துல சந்திக்கலாம்” என கூறிவிட்டு ஆதவனின் பதிலை எதிர் பார்க்காமல் கிளம்பிவிட்டான்.

 

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆதவன் நடை பிணம் போல இருப்பதை பார்த்துவிட்டு, ஆதவனின் அப்பா, இளவேனிலிடம் கேக்க, அடுத்த சனிக்கிழமை இளவேனிலும் வீட்டுக்கு வந்தான் அவனும் ஆதவனிடம் கேக்க, நடந்ததை பற்றி இளவேனிலிடம் கூற,

 

இளவேனில், “அடப்பாவி என்ன டா இப்படி பன்னிட்ட, சரி அதுவும் நல்லதுக்கு தானே, காதலை எத்தனை நாளுக்கு தான் இப்படி ஓளிச்சு வைக்க முடியும், அது தான் அவன் டைம் வேணும்னும்னு சொல்லிருக்கான் இல்லை அவன் முடிவு சொல்லட்டும் பார்க்கலாம்” என பேசிக்கொண்டிருக்க ஆதவனின் அப்பா உள்ளே நுழைய

 

“என்ன இளா, ஆதவன் என்ன சொல்லுறான்?”

 

“ஒன்னும் இல்லை மாமா, வெளிய இருக்குற செங்கல் மணல பத்தி கேட்டேன் எனக்கு எதுவும் தெரியாதுனு சொல்லிட்டு இருந்தான்”

 

“எப்படி தெரியும் வீட்டுல என்ன நடக்குது ஏது நடக்குதுனு கொஞ்சம் கவனிச்சா இல்லை தெரியும், எந்த நேரம் பார்த்தாலும் ஏதோ கவலையாவே இருந்தா எப்படி, இந்த வயசுல அப்படி என்ன கவலை, எதாச்சும் காதல் கீதல்னு பைத்தியகாரதனாமா பேசிக்கிட்டு இருக்கானா அவன்” எனக்கொஞ்சம் கோவமாய் கேட்டதை காதலை பற்றி ஆதவனின் அப்பாவின் மனசில் என்ன நினைக்கிறார் என்று ஆதவனும் இளவேனிலும் புரிந்து கொண்டனர்.

 

ஆதவன், “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை பா, கடைசியா நடந்த பரீச்சையில சரியா எழுதலை அதுதான் பெயில் ஆகிடுவேனோனு, அதோட அடுத்த மாசத்துல இருந்து பக்கத்து ஊருல இருக்குற ஒரு பெரிய ஹோட்டல்ல 15 நாளைக்கு டிரெயினிங்க் அது பத்தி தான் யோசனை”

 

“இது எல்லாம் ஒரு விஷயமா, இதுக்கு போய் கவலை பட்டுகிட்டு, பரிச்சைனு ஒன்னு இருந்தாத்தான் நாம எந்த அளவுல படிச்சுக்கிட்டு இருக்கோம்னு தெரியும் படிக்கலைங்குறதுக்காக பரிச்சையே எழுதாம இருக்குறதை விட அதை தைரியமா நம்பிக்கையா எழுதி இருக்கே இல்லை, அந்த நம்பிக்கை உன்னை காப்பாத்தும்”

 

இளவேனில், “நம்பிக்கை எல்லாம் காப்பாத்தும் மாமா, நீங்களாவது சொல்லுங்க செங்கலும் மணலும் எது”

 

“ஏண்டா அது என்ன சாப்புடுறத்துக்கா வாங்கி போடுவாங்க, இந்த ஓட்டு கூரைய மாத்தி கொஞ்சம் தார்சு போட்டு அப்படியே ஆதவனுக்கு மாடியிலயே ரூம் போடலாம்னு பிளான்பன்னி தான் இது எல்லாம் வங்கி போட்டேன் அதனால இன்னும் 2 நாள்ல பக்கத்து வீட்டு மாடியில ஒரு போர்சன் இருக்கு அங்க மாற போறோம் இனி இங்க வேலை நடக்கும்”

 

 

அன்றை நாள் அப்படியே முடிந்துவிட்டது, அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை மதியம் 3 மணி ஆதவன் சத்யாவின் வருகைக்காக ஏரிக்கரையில் அதே ஆலமரத்திற்கு காத்திருந்தான், ஆனால் சத்யா வரவில்லை மணி 3:30, 4:00, 4:30 என மணித்துளிகள் கரைந்து கொண்டே இருந்தது ஆனால் சத்யா வருவது போல தெரியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவனுக்கு வெறுத்துவிட்டது மிகப்பெரிய ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினான், விஷயத்தை இளவேனிலிடம் கூற,

 

“நீ நினைக்குற மாதிரி எல்லாம் அவன் ஒன்னும் உன்னைய விட்டு எல்லாம் போகமாட்டான் அவனுக்கு எதாச்சும் வேலை வந்துருக்கும் அது தான் வரமுடியாம இருக்கும்” என தைரியம் சொன்னான். ஆதவனும் சத்யாவின் நினைப்பிலேயே இருந்தான், “நான் பாட்டுக்கு சும்மாதானே இருந்தேன், இந்த அகிலன் பையனா வந்தா அவன் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிகுழப்பிட்டு போய்ட்டான், ஒரு வேளை சொல்லாம இருந்திருந்தா, நட்பாவது மிஞ்சியிருக்குமே, சரி நடந்தது நடந்து போச்சு, முடிஞ்சது பத்தி பேசி பிரயோஜனம் இல்லை, இனி ஆக வேண்டியதை பார்க்கலாம்” என வார வாரம் ஞாயிற்று கிழமையும் வந்தது ஆதவனும் மதியம் 3 மணி முதல் இருட்டும் நேரம் வரையிலும் அந்த ஏரிக்கரை ஆலமரத்தின் அடியில் காத்திருப்பதை தன் வார செயல் பாடுகளில் ஒன்றாக்கிவிட்டான்.

 

இத இடைவெளி காலத்தில் ஆதவனின் வீட்டு வேலை முடிந்து அவனுக்கு என்று ஒரு அறை மாடியில் கட்டப்பட்டுவிட்டது, அந்த மாடி அறைக்கும் வீட்டுக்கும் சம்பந்தமே இல்லாமல், அதன் படிக்கட்டுகள் வீட்டுக்கு வெளியே அமைப்பட்டு இருந்தது. அது ஆதவனுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது, இப்பொழுது எல்லாம் ஆதவன் இரவு உணவை முடித்துக்கொண்டு இரவில் தங்கள் தெருவை சுற்றி நடந்து வருவதை வாடிக்கையாக்கிக்கொண்டான்.

 

 

ஆதவனின் காத்திருப்பிற்கு பலன் கிடைக்கவே இல்லை, சத்யாவால் ஆதவன் தான் செல்ல வேண்டிய ஸ்டார் ஹோட்டல் டிரெயினிங்க்கு செல்வதை தள்ளி போட்டுக்கொண்டே வந்தான், ஒரு கட்டத்திற்க்கு மேல் அந்த டிரெயினிங்கை தள்ளி போட முடியாமல் போகவே ஆதவன் அந்த ஸ்டார் ஹோட்டலில் ஒரு மாதத்திற்க்கு டிரெயினிகிற்க்காக சென்றான். முதல் ஒரு 4 நாட்களுக்கு ஆதவனின் டிரெயிங்னிங்க் வழக்கம் போல தான் சென்று கொண்டிருந்தது. 5 ஆம் நாள் ஆதவன் அந்த ஸ்டார் ஹோட்டலில் ஏதோ ஒரு டிஷ்சை சமைத்துக்கொண்டிருக்க, ஆலில் ஆயில் தீர்ந்துவிட்டது, அதை எடுக்க ஸ்டோர் ரூமுக்கு சென்றவன் அப்படியே உறைந்து போய் நின்றான்.

 

ஆதவன் அந்த ஷோட்டலின் ஸ்டோர் ரூமில் உறைந்து போய் நிற்கும் அளவிற்கு அங்கு என்ன இருந்து என அடுத்த இதழில் தெரியும்.

 

 

 

– இனியவன்

 

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன