சத்யா

(அத்யாயம் 9)

இதுவரை…

ஆதவன், அகிலனின் பேச்சை கேட்டுக்கொண்டு சத்யாவின் மேல் தனக்கு உள்ள காதலை, அவனிடம் கூறினான், சத்யாவோ தன்னால் இப்பொழுது எதுவும் கூறுவதற்கு இல்லை என்றும், தனக்கு யோசிப்பதற்க்கு நேரம் வேண்டும் என்று கூறி சென்றுவிட்டன். ஆதவனோ சத்யாவின் பதிலுக்காக அடுத்த வாரம் ஞாயிறு அன்று மதியம் 3 மணிக்கு வழக்கமாக சந்திக்கும் இடம் ஏரிக்கரையில் காத்திருந்தான், ஆனால் சத்யா வரவில்லை. ஆதவனும் விடா முயற்சியாக காத்திருக்க ஆரம்பித்தான். கிட்டதட்ட ஒரு மாதம் வரை காத்திருக்க ஆரம்பித்தான், அப்பொழுது சத்யா வரவில்லை. ஆதவன் தனக்குண்டான ஸ்டார் ஹோட்டலில் தனக்குண்டான டிரெயினிங்கிற்க்காக வெளி ஊர் சென்று விட்டான். அங்கு ஒரு நாள் ஸ்டாட் ஹோட்டலின் கிச்சனுக்குள் ஆதவன் ஏதோ ஒரு டிஷ் சமைக்க வேண்டி, தேவையான பொருட்களை எடுப்பதற்கா ஸ்டோர் ரூம் சென்றவன் அதிர்சியில் உறைந்து போய் நின்றான்.

இனி…

ஆதவன் ஸ்டோர் ரூமினுள் நுழையும் பொழுது ஸ்டோர் ரூமில் உள்ள பழைய ஸ்டாக்குகளை கணக்கு பார்த்துக்கொண்டிருந்தான் சத்யா. சத்யாவைக்கண்ட ஆதவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று சில நிமிடங்களில் மீண்டான்

சத்யாவுக்கும் அதே அதிர்ச்சி, “ஆதவா நீ இங்க என்ன பன்னுறே?”

“பரவாயில்லையே என் பேர்கூட இன்னும் ஞாபகம் வச்சிருக்கே, என்னைய இன்னும் அடையாளம் வச்சிருக்குறதை நினைச்சு நான் வியக்குறேன்”

“என்ன டா நீ இப்படி பேசுறே, சரி, இங்க நீ என்ன பன்னுறே, அதும் இந்த செஃப் யூனிபாம் எல்லாம் போட்டுக்கிட்டு”

“ஹலோ இங்க நான் டிரெயினிக்கு வந்துருக்கேன், நீ இங்க என்ன பன்னுறே?”

“நான் இந்த ஹோட்டலுக்கு, ரெகுலரா மளிகை சாமான் காய்கரி சப்ளை பன்னற கடையில வேலை பக்குறேன், இங்க ஸ்டாக் செக்பன்ன இங்க வந்தேன், வந்த இடத்துல நீ இருக்கே”

“கருகின டிஷ் கொண்டுபோய் டேபிள் மேல வச்சா என்னோட டிரெனிங்க்கான மார்க் காலியாகிடும், நான் போகனும்”

வழி மறித்து நின்ற சத்யா, “நில்லு ஆதவா, எனக்கு உங்கிட்ட கொஞ்சம் பேசனும், எனக்கு புரியுது என் மேல நீ ரொம்ப கோவத்துல இருப்பேன்னு, ஆனாலும் என் பக்கத்து என்ன நடந்துச்சுன்னு நான் உனக்கு சொல்லுறேன் அப்புறம் நீயே என்னனு முடிவு பன்னிக்கோ”

“எதுவும் இங்க பேச முடியாது…” என கோவத்துடன் கூறினான் ஆதவன்

“புரியுது, அப்ப நைட் 9 மணிக்கு, பஸ்டேண்டு பக்கத்துல ஒரு அம்பேத்கார் சிலை இருக்கும் அது ஒட்டி ஒரு சந்து போகும் அதுல இருந்து மூணாவது தெருவுல…”

“போதும் நிறுத்து இவ்வளவு தூரம் எல்லாம் என்னால அடையாளம் கண்டுபுடிச்சு வரமுடியாது”

“சரி சரி நீ 9 மணிக்கு பஸ்டேண்டுல வெயிட் பன்னு நானே வந்து உன்னைய கூட்டிகிட்டு போறேன்”

“அதே நேரத்தில் சீனியர் செஃப் ஆதவன் இங்க என்ன பன்னிட்டு இருக்கே, உன்னைய முடிக்க சொன்ன டிஷ் ரெடியா?” என்று கேள்வி கேட்டுக்கொண்டே உள்ளே வந்த அந்த தலைமை செஃப், ஆதவனை வித்யாசமாய் பார்த்துவிட்டு சென்றார். அன்றை மாலை வேலையும் அப்படியே முடிந்தது, ஆதவன் சரியாக இரவு 8:30 மணிக்கு, பஸ்டேண்ட்டுக்குள் நுழைந்து சத்யா சொன்ன இடத்திற்கு விரைந்தான், ஆனால் அங்கு ஏற்கனவே சத்யா எம்80 வண்டியில் காத்திருந்தான்.

இருவரின் முகத்திலும் ஆச்சரியம், ஒரு நிமிடத்திற்கு இடைவிடாமல் ஒருவர் முகத்தி ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க இருவரும் பலமாக சிரித்துக்கொண்டனர்.

ஆதவன், “9 மணிக்கு தானே வர சொன்னே, இப்பவே 8:30 தானே ஆகுது, இப்பவே வந்துநிக்குறே”

“நான் வந்தது இருக்கட்டும், உன்னை 9:00 மணிக்கு தானே உன்னைய வர சொன்னோன், 8:30க்கே வந்துட்டே”

“ம்ம்ம்ம், இங்க சோன்பப்படி வண்டி நிக்கும்னு சொன்னாங்க அதை சாப்புடலாம்னு தான் சீக்கிரமா வந்தேன், நீ எதுக்கு முன்னாடியே வந்தே”

“நீ அதை தேடி தான் இங்க வருவேனு தெரியும் அதனால தான் அதை நானே வாங்கி வச்சிருக்கேன், இந்தா…” என்று ஒரு பெரிய கோண் நிறைய இருக்கும் வெள்ளை சோன் பப்படியை ஆதவன் கையில் கொடுத்தான்.

ஆதவன், “உண்மைய சொல்லு சோன் பப்படி வாங்க தான் முன்னாடியே வந்தியா”

“இல்லை, உன்னை ஒரு மாசத்துக்கு மேல காக்க வச்சதுக்கு பிராயச்சித்தமா தான்… அப்படி எல்லாம் சொன்ன நீ நம்பவா போறே, உன்னை மதியானம் பாத்ததுல இருந்தே எனக்கு எந்த வேலையும் ஓடல, ஒரு மணி நேரம் பர்மிசன் சொல்லிட்டு தான் உனக்காக காத்திருந்தேன் அப்ப தான் இந்த தள்ளு வண்டி வந்துச்சு, உண்மையிலயே நீ சோன்பப்படி தான் வாங்க வந்தியா?”

“இல்லை, உன்னை பார்த்ததும் எனக்கும் இருப்பு கொள்ளல, எப்ப டா மணி 9 ஆகும்னு பதட்டமா பார்த்துக்கிட்டே இருந்தேன், இதை பார்த்த சீனியர் செஃப் தான் இன்னிக்கு நீ சரி இல்லைனு கிளம்புனு அனுப்பி வச்சாங்க”

“ம்ம்ம்ம்…”

“இது மட்டும் தான் வங்கி வச்சியாடா?”

“இல்லை, இல்லை, உனக்கு புடிக்குமேனு, பால் (பந்து) ஐஸ்கிரீம், லிட்டில் ஹாட்ஸ் பிஸ்கட், புரூட்டினு எல்லாத்தையும் வாங்கி வச்சிருக்கேன், வா சாப்பிட்டுகிட்டே என்னோட ரூம் போகலாம்”

ஆதவனும் அந்த சோன்ப்படியை சாப்பிட்டுக்கொண்டே செல்ல, சத்யா அவன் M80யை தள்ளிக்கொண்டே, அவன் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

சத்யா, “மொதல்ல என்னை மன்னிச்சுடு டா, அன்னிக்கு நீ உன்னோட காதலை சொன்னதுக்கு அப்புறமா, அன்னிக்கு நைட் 9:00 – 10:30 வரைக்கும் ஒரு ஆணும் ஆணும் எப்படி காதலிக்கமுடியும்னு யோசிச்சேன், 10:30 – 11:30 வரைக்கும் அப்படி காதலிச்சா வெளிய சொல்ல முடியுமானு யோசிச்சேன், 1:30 – 2:00 வரைக்கும் வெளிய சொன்னாதான் ஏத்துக்குவாங்களானு யோசிச்சேன், 2:00 – 4:00 வரைக்கும் அப்படி சொன்ன நம்பளை வாழ விடுவாங்களானு யோசிச்சேன், அப்புறம் 4:00 – 5:00 வரைக்கும் இது பத்தியெல்லாம் நமக்கு என்ன கவலை, உனக்கு என்ன பிடிச்சுருக்கு அது மட்டுமே போதும், காலம் பூரா வாழ்ந்தா உங்கூடதான் வாழுறதுனு முடிவே எடுத்துட்டேன், ஆனா பாரு அடுத்த நாளே, எங்க மேனேஜர், இந்த ஊருல உள்ள மளிகை கடையை எடுத்துட்டு புதுசா டிப்பார்ட்மெட் ஸ்டோர் மாதிரி வெக்குறதாவும் அதுக்கு ஒரு ஸ்டோர் மேனேஜர் வேணும்னு என்னைய இந்த ஊருக்கு அனுப்பி வச்சுட்டாங்க, அதுக்கு அப்புறம் உன்னை என்னால தொடர்புகொள்ளவே முடியல உன்னோட வீட்டு போன் நெம்பரையும் தொலைச்சுட்டேன், உன்னோட வீடுக்கு தான் வழி தெரியும், ஆனா அட்ரஸ் தெரியாது, சரி ஞாயிற்றுகிழமை ஊருக்கு வரலாம்னு நினைச்சா எனக்கு ஞாயிற்று கிழமையும் லீவு கிடையாது, என்னால எதுவும் செய்ய முடியலை, இந்த ஒரு மாசத்துல உன்னைய நினைக்காத நாளே இல்லை நினைக்காத நிமிசமே கிடையாதுனு சொல்லலாம்”

“என் மேல இவ்வளவு காதல் வச்சுக்கிட்டு உன்னால சொல்லமுடியாத வேதனை எப்படி இருக்கும்னு என்னால உணரமுடியுது, அதே மாதிரி என் காதலை சொல்லி ஆமா இல்லைனு எந்த பதிலும் தெரியாம, உன்னையும் பார்க்கமுடியாம நான் அடைஞ்ச வேதனை என்னால வார்தைகளால சொல்ல முடியாது”

“எனக்கு அந்த வேதனை புரியுது டா, என் அருமை காதலா” என்று இருவரும் பேசிக்கொண்டே சத்யாவின் ரூம் வந்து சேர்ந்தனர். அன்றைய இரவு அவர்களுக்கு முதல் இரவு. விடியும் நேரத்தில் மட்டுமே அவர்கள் உறங்க ஆரம்பித்தனர்.

அடுத்த நாள் காலை ஆதவன், எழும்பொழுது கண்கள் மிகவும் எரிச்சலுட்டியது, சோம்பல் முறித்த படியே வந்து திண்ணையில் அமர்ந்துக்கொண்டான்,

பக்கத்துவீட்டிலிருந்த வந்த அங்கிள் ஒருவர் பல் விளக்கிய படியே, “தம்பி யாரு”

“நான் சத்யாவோட பிரண்டு நைட்டு அவங்கூட தான் தங்கினேன்”

“யாரு சத்யாகூடவா, இந்த வீட்டுலையா”

“ஆமா…”

ஆதவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு “சேரி…, சேரி…” என ஒரு மாதிரியாக கூறிவிட்டு “சேரி சத்யா தம்பி எங்க?”

“அவனுக்கு சீக்கிரம் வேலைக்கு போகனும்னு முன்னாடியே கிளம்பி போய்ட்டான்” என்று கூறவும், சீக்கிரம் நீங்களும் போய்டுங்க இங்க இருக்காதீங்க என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆதவனுக்கு எனவோ போல் ஆகிவிட்டது, இதை பற்றி சீக்கிரம் சத்யாகிட்ட பேசனும் என நினைத்துக்கொண்டே அங்கிருந்தே அந்த ஸ்டார் ஹோட்டலுக்கு வழக்கமான நேரத்துக்கு சென்றுவிட்டான். அன்று முதல் சத்யாவின் வீட்டு ஓனரிடம் ஆதவன் பேசி அவனும் சத்யாவின் அறையிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்துகொண்டான். ஆதவன் சத்யாவின் காதல் மெல்ல மெல்ல நடை பயிலும் குழந்தை போல ஆரம்பித்து, ஈருடல் ஓர் உயிர் என்பது போல ஆகிவிட்டிருந்தனர். ஆனால் அந்த பக்கத்துவீட்டு அங்கிள் மட்டும் ஆதவனை ஒரு மாதிரியாய் பார்ப்பது நிறுத்தவில்லை, நாள் தோறும் அவர் பார்க்கும் பார்வையின் அர்த்தம் மட்டும் ஆதவனுக்கு புரியவில்லை, சத்யாவிடம் கூறியதற்கு “புரியாத புதிரை கண்டுக்கொள்ள தேவையில்லை” என்று கூறிவிட்டான்.

கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து ஆதவனுக்கு ஸ்டார் ஹோட்டலில் டிரெயினிங்க் முடிந்தது, அதன் பிறகு ஆதவன் தன் கல்லூரிக்கே சென்றுவிட்டான், அதற்குள் ஆதவனின் ஓட்டு வீட்டு வேலையும் முடித்து அவனது பெட்ரூம் மாடிக்கு மாற்றபட்டுவிட்டது. மீதம் உள்ள 6 மாத கல்லூரி படிப்பை முடிக்கலானான் ஆதவன். அவ்வபொழுது நடப்பதை அனைத்தையும் இளவேனிலிடம் கூறுவான் ஆதவன். இளவேனிலும், தான் ஒரு முறை அந்த சத்யாவை பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான்.

இப்படி ஒரு நாள் ஞாயிறு காலை 10:00 மணி வரையிலும், ஆதவன் கீழிறங்கி வாராது இருப்பதை கண்ட இளவேனில் ஆதவனை மாடிக்கே வந்து எழுப்புவதற்காக கதவை தட்டுவதற்காக கை வைக்க அது திறந்து கொண்டது, பெட்டில் பிறந்த மேனியாக படுத்துக்கொண்டிருந்தான். இளவேனில் அங்கிருந்த போர்வை எடுத்து போர்த்துவிட்டு எழுப்ப, மெதுவாக வாரி சுருட்டி எழுந்துகொண்டு தான் இருக்கும் நிலை கண்டு அதிர

இளவேனில் தான் ஒன்றும் பார்க்கவில்லை, என கூறிய பிறகே அமைதியானான்,

இளவேனில், “உனக்கு மாடியில ரூம் போட்டது ரொம்ப சுந்தந்திரமா போச்சு இல்லை?”

ஆதவன், “அது இல்லை, நேத்து நைட் அவன் வந்திருந்தான்?”

“அவன்னா? யாரு சத்யாவா?”

“ஆமா, வந்தது மட்டும் இல்லை நேத்து நைட்டோட எங்களுக்கு 100 வது இரவு, (இளவேனில் முகத்தில் ஒரு அதிர்வு தெரிய) கண்ணு வைக்கத டா நேத்து மட்டும் இல்லை, ஒவ்வொரு சனிக்கிழமை ராத்திரியும் 10 மணிக்கு மேல வருவான் நைட் எங்கூட தான் தங்குவான், காலையில 5:00 மணிக்கு முன்ன சீக்கிரமா கிளம்பிடுவான், அவன் வந்து போறது யாருக்கும் தெரியாது”

“டேய் உனக்கு மாடியில் ரூம் போட்டது மட்டும் சுந்தந்திரம் இல்லை, அதுக்கு படிக்கட்டும் வெளியில வச்சாங்க பாரு அது இன்னும் உங்க உறவுக்கு வசதியா போச்சு” என கிண்டல் அடித்துக்கொண்டே கீழே சென்றுவிட்டான். இவர்களின் வாழ்க்கை இப்படியே ஆறு மாத்திற்கு சென்றது. ஆதவன் இளவேனில் இருவரின் படிப்பும் முடிந்துவிட்டது. இளவேனிலுக்கு அவன் சொந்த ஊரிலேயே உள்ள ஒரு ஆடிட்டரிடம் வேலை கற்றுகொள்ள ஆரம்பித்தான். ஆதவன் தங்கள் ஊரிலேயே உள்ள ஒரு சிறிய அளவில் உள்ள ரெஸ்டோரண்ட்க்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். ஆதவன் சத்யாவின் உறவு இப்படியே வெளியே யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு சென்றுகொண்டிருந்தது. அவ்வபொழுது இருவருக்கும் சண்டை வரும் சீக்கிரமே சமாதானம் ஆகிவிடுவார்கள். இவர்கள் வாழ்க்கை இப்படியே சென்றுகொண்டிருந்தது.

சில வருடங்களுக்கு பிறகு

ஆதவனுக்கு 27 வயது ஆகிவிட்டது, ஆதவன் தற்பொழுது, மேற்படிப்பு எல்லாம் முடித்து அவன் படித்த அதே கேட்ரிங் கல்லூரியில் புரபசர் ஆகிவிட்டான், தற்பொழுது அவனது அப்பாவும் அம்மாவும் ஆதவனின் திருமணத்திற்க்காக பெண் தேடிக்கொண்டிருந்தனர். ஆதவனும் பார்க்கும் பெண்களை எல்லாம் ஏதாவது நொண்டி சாக்கு சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே இருந்தான். இது பற்றி பேச சொல்லி இளவேனிலிடம் ஆதவனின் அப்பாவும் அம்மாவும் கூற, இளவேனிலும் ஆதவனிடம் “ஏன்டா இப்படி உன் அப்பா அம்மாகிட்ட கல்யாணம்னு வந்த இந்த மாதிரி எடுத்து எரிஞ்சு பேசுறே, அவங்க மனசு எப்படி நோகும் உனக்கு தெரியாதா, அதுக்கு பதில் நீயும் அந்த சத்யாவும் காதலிக்குறதை பத்தி சொல்லிடலாம் இல்லையா”

“ஆமா சொல்லுறாங்க, அவன பத்தி”

“ஏன் டா இப்படி சலிச்சுக்குறே, என்ன உங்க ரெண்டு பேருக்கும் சண்டையா என்ன?”

“ஆமா, போனவாரம் எப்பவும் போல சனிக்கிழமை ராத்திரி இங்க வந்தான், இங்க நடக்குறதை பத்தி எல்லாம் சொல்லி, நம்ப காதல், வாழக்கை பத்தி எங்க அப்பா அம்மாகிட்ட பேசலாம் நாளைக்கு பகல்ல வாடானு சொன்னா, அது எல்லாம் முடியாது, அது உன் பிரச்சனை, நீயே சமாளிச்சுக்கோனு சொல்லிட்டு நடு ராத்திரினு கூட பார்க்காம அம்போனு விட்டு போய்ட்டான்”

“சரி டா, நீ தான் உன் அப்பா அம்மாகிட்ட பேசலாம் இல்லை”

“எதை நம்பி இவனை பத்தி பேச சொல்லுறே, பகல்ல தைரியமா வா பிரண்டுனு சொல்லி கொஞ்ச நாள் வர போக இருந்தா தானே அவங்களும் ஏதோ நம்புவாங்க, இவன் ராத்திரியில மட்டும் வரதை நம்பி நா எந்த தைரியத்துல பேசட்டும் நீயே சொல்லு”

இளவேனின் “நீ சொல்லுறதும் சரிதான், இந்த 2010 ல கூட இப்படியுமா இருப்பாங்க, சரி சத்யா கிட்ட செல் போன் இருக்கு இல்லை அவன் நெம்பர் கொடு நான் வேணா பேசி புரியவைக்க முயற்சி பன்னுறேன்”

“அதெல்லாம் வேஸ்ட் நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தாச்சு, நீ விட்று, நான் பார்த்துக்குறேன்”

“சரி இப்ப உன் அப்பா அம்மா பொண்ணு எப்படி தான் வேணுமா கேட்டு சொல்லுனு கேட்டுருக்காங்க அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்,”

“அவங்கிட்ட பேசிருக்கேன், அவனே சீக்கிரம் நல்ல முடிவா சொல்லுவான்னு சொல்லிடு போதும்” என கல்யாண பிரச்சனைக்கு முற்று புள்ளி ஒன்றை வைத்தான்.

கிட்டதட்ட 6 மாதங்கள் கழித்து மீண்டும் ஆதவனின் அப்பா, ஆதவனிடம், “இங்க பாரு உனக்கு இப்ப என்ன பிரச்சனை, கல்யாணத்துக்கு ஏன் ஓத்துக்கமாட்டிங்குறே, இன்னிக்கு எனக்கு ஒழுங்கான காரணம் சொல்லு, இந்த பொண்ணுக்கு என்ன கொற”

ஆதவனின் அம்மா, “ஏன் இந்த பொண்ணவேண்டாம்னு சொல்லுற, பாருடா மகா லட்சுமியாட்டம் இருக்கா, நம்ப குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு”

“அப்படியா அப்ப நீயே அத கல்யாணம் பன்னிக்கோ”

அப்பா, “டேய் என்ன பேச்சு பேசுறே, உன் வயசு பசங்க எல்லாம் கயாணத்துக்கு அலையுதுங்க, எங்களுக்கும் பேர கொழந்தை கொஞ்ச வேணாமாடா, எங்களுக்கு இருக்குறது நீ ஒரே பையன், பேர கொழந்தை நான் உங்கிட்ட தான் கேக்கமுடியும்”

ஆதவன், “உங்களை யாரு இன்னொன்னு பெத்துக்க வேண்டாம்னு சொன்னா, இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல, ரெண்டாவது ஹனி மூனுக்கு டிக்கெட் போடுறேன் போய்ட்டு எனக்கு தம்பியே தங்கச்சியே ஏற்பாடு பன்னிட்டுவாங்க”

“பேச்சை பாரு கொஞ்சமாச்சும் பெத்தவங்க கிட்ட பேசுறமாதிரியா பேசுறான், உன் பையன், சொல்லிவை அவங்கிட்ட, குதிரை சாட்டை பிஞ்சுடும்னு, (ஆதவனிடம் திரும்பி) ஏண்டா புதுசா இந்த காதல் கத்திரிக்கா, மண்ணாங்கட்டி ஏதாவது இருக்கா என்ன?”

“….”

“அந்த மதிரி ஏதாவது இருந்தா அந்த எண்ணத்தை எல்லாம் முட்டை கட்டிவச்சுக்கோ, இன்னும் குதிரை சாட்டைய நான் துக்கி எல்லாம் போடல, பரன் மேல இருந்து அதை எடுக்க வச்சுடாதே, இன்னும் உனக்கு ஒரு வாரம் அவகாசம் தரேன், அதுக்குள்ள மனச மாத்திக்கிட்டு இந்த பொண்ணை பாக்கபோற வழிய பாரு அடுத்த வாரம் வெள்ளிகிழமை 9:00 – 10:00 அந்த பொண்ணை பாக்க வரோம்னு பொண்ணு வீட்டுல சொல்லியாச்சு, ஒழுங்கா நான் சொல்லுறதை கேட்ட நாங்க இங்க இருப்போம் இல்லாட்டி நாங்களே முதியேர் இல்லத்துக்கு பொய்டுவோம்” என பேசிவிட்டு விடு விடுவென வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். ஆதவனின் அம்மாவோ ஓவென கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஆதவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, தனக்குள்ளே முடிவெடுத்தான் நாளைக்கு சனிகிழமை, சத்யா வருவான் ரெண்டுல ஒன்னு கேட்டுடவேண்டியது தான் என முடிவெடுத்துவிட்டான். அடுத்த நாள் சனிக்கிழமை இரவு 10:30 க்கு ஆதவனின் ரூம் கதவை திறந்து வந்த சத்யாவுடன் வழக்கம் போல காதல் மொழிபேசி கலவி மொழிபேசி விட்டு, பிறகு அப்பா சொன்னவற்றை எடுத்து பிரச்சனையின் தீவிரத்தை கூற, சத்யாவோ, “உன் அப்பாகிட்ட பேச எனக்கு பயமாக இருப்பதாக கூறினான்”

ஆதவன், “நீ ஒன்னும் பேசவேண்டாம் இங்க பார் நான் வேணுங்கிரதை பேக் பன்னிவச்சுட்டேன், இப்பவே வீட்ட வீட்டு வெளியே வர நான் ரெடி உனக்கும் வேலை இருக்கு எனக்கும் வேலை இருக்கு இந்த ஊருல இல்லாட்டியும் எங்கியாவது போய் நாம்ப பொழைச்சுக்கலாம் டா, பிளீஸ்டா இதுக்காச்சும் ஒத்துக்கோடா, நீ இல்லாத வாழ்கைய என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை டா” என கெஞ்ச

சத்யா சில நிமிடங்கள் மௌனமாய் இருந்து யோசித்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தது போல, “இது எல்லாம் வேண்டாம் டா, நானே நாளைக்கு மத்யானம் வீட்டுக்கு வரேன், ஒரு முறை பேசி பார்க்கலாம் ஒத்துக்காட்டி அப்புறம் நீ ஓடி வந்துடு” என தைரியம் கொடுத்துவிட்டு அதிகாலையில் கிளம்பிவிட்டான்.

அடுத்த நாள் காலை முதல் ஆதவன் கொஞ்ச டென்சனாகவே சத்யாவுக்காக காத்திருந்தான். மணி 12ஐ தொட தொட அவனது டென்சன் அதிகரித்துக்கொண்டே சென்றது. எதிபர்த்த படியே சத்யா வரவில்லை, இரவு வரைக்கும் ஆதவன் சத்யா இப்பொழுது வந்துவிடுவான் அப்பொழுது வந்துவிடுவான் என காத்திருக்க ஆரம்பித்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதி வரை சத்யா வரவே இல்லை

ஏமாற்றத்துடனே அன்றை ஆதவனின் இரவு கழிந்தது, தூக்கம் இல்லாத இரவு ஆதவனை பலவாறாக யோசிக்க வைத்தது. பிறகு அதிகாலையில் ஆதவன் உதிக்கும் நேரத்தில் நமது ஆதவனுக்கும் யோசனை ஒன்று உதித்தது. இன்னும் ஓடிப்போவதற்க்காக பேக் செய்யப்பட்ட லக்கேஜ் அப்படி தான் இருந்தது. ஆதவன் உதிக்கும் நேரத்தில் ஆதவுக்குள் உதித்த அந்த யோசனை என்னவென்று தெரிந்து தெரிந்து கொள்ள அடுத்த இதழ் வரை காத்திருக்கவும்.

-இனியவன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன