கண்றாவி:
காக்கை செய்யும்பொழுதும்
சரி,
கடவுள் செய்யும்பொழுதும்
சரி,
காதலுக்கு காதலென்றுதான்
பெயரிட்டனர்..!
ஆனாலென்ன, நான்
செய்யும்பொழுதுமட்டும் அதற்கு
பதவியுயர்வுக் கொடுத்து
‘கண்றாவி’யென பெயர்சூட்டினர்…
அடிமைப்படுத்துதலுக்கும்
ஆசிட்டடிப்பதற்கும்
கற்பழிப்பதற்கும்
கொலைசெய்வதற்கும்
காதலென்று பெயரெனில்,
என்னருமை காமக்கொடூரக்
காதலர்களே!
நான் செய்வதற்கு
‘கண்றாவி’ என்பதே
கச்சிதமான பெயர்தான்..!
