எனை மூழ்கடிக்கவும் வேண்டாம்..
என்னால் மூழ்கி தத்தளிக்கவும் வேண்டாம் !
இந்த தீராக்காதலை யெல்லாம்
என்னில் திணிக்கவோ ,
உன்னில் விழுங்கவோ
வேண்டவே வேண்டாம்..
தீர்ந்துப்போகும் காதலோடே வா
போதும் .. ! தேவைப்பட்டால்
திரும்பவும் கூட
பரிமாறிக் கொள்வோம்
போதா அக்’காதலை ..!
உனக்கான எல்லையில் நீயும் ..
எனக்கான எல்லையில் நானுமாய்
இருந்தபடி
திகட்ட திகட்ட ‘ வென்றல்லாமல்
அளவோடே அமிர்தம் பருகுவோம் வா !!! ( அளவோடு காதல் பகிர்வோம் )
ஒருவரையொருவர் கட்டுக்குள் அடக்காத ” சுதந்திர காதலர்களாய் ! ”
அட ! என்ன பெரிய எதிர்ப்பார்ப்புகள்??? !!! நடைப்பயணங்களுக்கு
சிறு தூர கைக்கோர்ப்பு …
எப்போதுமாய் தோள் சாய் அரவணைப்பு … கொஞ்சம் விழி வழி உரையாடல் …
ரகசிமாய் காதோர கிசுகிசுப்பு …
நினைக்கும் பொழுதிலெல்லாம்
பரிமாறி கொள்கிற லவ் யூக்கள் … தொலைதூரமென்று உணர்கையில் உதிர்க்கின்ற மிஸ் யூக்கள் …
தோன்றினால் கொஞ்சி கொள்ளவும்
அதீதம் தோன்றினால்
திட்டி தீர்த்து கொள்ளவும்..
சண்டையிட்டு சண்டையிட்டு
சமாதானத்தின் பெயரில்
மீண்டும் மீண்டுமென
கெஞ்சல் வழி கொஞ்சலுக்குள்
தொலைந்து மீள்வோம் !
இங்கு நிகழ்வதையெல்லாம் தெரிவித்து
அங்குள்ள நிலவரங்களை அறிவித்து
மாற்றி மாற்றி பகிர்ந்து கொள்வதில் தானே நாமும் நம்மை
தொலைத்து லயித்திருப்பதெல்லாம்.. ?!
இன்னும் இன்னுமென்று எத்தனையும் இருக்கலாம் ! தவறில்லை…
யார் சொல்வது
காதல் இன்னது தானென்று?
யார் யாரோ வகுத்த வரையறைகளின்
முற்றுப்புள்ளியிலெல்லாம்
சிக்க போவதில்லை
இனிவரும் காதல் கதைகள்..
உனக்கொன்று தெரியுமா ?!
காதலென்றால்,
எதுவெதுவாகவோ இருந்த என் அகராதியில் இப்போது காதல் காதலாகவே இருக்கிறது..
உணர்வை உணர்வென்பதையன்றி
என்னவென்றுரைப்பது? சகா !
பிறரை நேசிக்கும் முன்
காதலை காதலித்து பழகு !
காதல் அதி அற்புதங்களின் மாயா ஜாலமில்லை !
காதல் வியக்கதக்க ஓர் பெரும் விந்தையுமில்லை !
” காதல் ஓர் எதார்த்தம் …. !!! ”
ஆம், அவ்வளவு அற்பமானது தான் இந்த காதல் …
அற்பங்களில் தொலைந்து போ..
எதார்த்தத்தை
எதார்த்தத்தின் போக்கில்
இயல்பாய் நேசி…
எந்நிலையில் காதல் பிறக்கிறதோ அந்நிலையை
கைத்தாங்கலாய் கடத்திச் செல் !
இறுதிவரை காதலோடிரு !
காதலை காதலி !!
-தோழி கவிகாரிகை 🤍🌼🦋

Seshasalam
08/02/2023 at 4:07 காலை
மிக சாதாரணமாக
அவரவர் இயல்புகளில் இருந்தே காதலை உற்று நோக்கும் எதார்த்த நிலை
வியக்க வைக்கிறது
தோழி காரிகைக்கு வாழ்த்துக்கள்