கடந்த 26/6/22, ஞாயிற்றுக்கிழமை, எழும்பூர் இல் நடைபெற்ற சென்னை வானவில் சுயமரியாதை பேரணி இல் LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டதால், சென்னையில் உள்ள லாங்ஸ் கார்டன் சாலையில் வானவில் கொடிகள் வண்ணமயமாக காட்சி தந்தது.
2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஜூன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை இந்த சுயமரியாதை பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாடு வானவில் கூட்டணியின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு நிகழ்வு நடைபெற்றதை ஒட்டி பங்கேற்பாளர்கள் பாரம்பரிய பறை வாத்தியத்தின் தாளத்திற்கு நடனமாடி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுக்கினர் மேலும் வண்ணமயமான கொடிகள் மற்றும் பாடல்கள் ஒலிக்கப்பட்டன . நான்கு மணி நேரத்திற்கும் மேலாக 4,000 நபர்களுக்கும் மேல் மக்கள் கூடினர் .
அவர்கள் தங்கள் உரிமைகள் மற்றும்
சமத்துவத்தைக் கோரும் சின்னமான வானவில் கொடிகள், பலகைகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர். சம உரிமைகள், சமூக அங்கீகாரம் மற்றும் சமூகத்தில் கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றைக் கோருவது இந்த பேரணியின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. நடக்கும்போது சமூகத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் மற்றும் கஷ்டங்களுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்புகிறார்கள்.
அனைத்து பாலியல் நோக்குநிலை மக்களும் தங்கள் பாலினத்தில் பெருமையைக் காட்ட அணிவகுப்பில் கலந்து கொண்டனர் . தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த சுயமரியாதை பேரணி, தங்களின் இருப்பு, கண்ணியம், சுயமரியாதையை நிலைநாட்டும் விதமாக உள்ளது என்றார்.
சமீபத்தில் திருநம்பிகளும் சமூக நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என திருநர் மக்கள் நல வாரியம் 14 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு வானவில் கூட்டணியால் தெரிவித்துள்ளனர் .
“2019 ஆம் ஆண்டில், நாங்கள் சுமார் 3,000 பங்கேற்பாளர்கள் இருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது,” என்கிறார், தமிழ்நாடு வானவில் கூட்டணியை உருவாக்கும் அமைப்புகளில் ஒன்றான நிரங்கள் அறக்கட்டளையின் இணை நிறுவனர் திருநங்கை ஜி சங்கரி. இந்த அணிவகுப்பில் பழைய மற்றும் புதிய பங்கேற்பாளர்களுடன் பல மணி நேரம் ஆரவாரம் செய்து கோஷமிட்டனர்.
நடப்பு திமுக அரசு, திருநர் சமுக மக்களுக்காக பல நல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மாதாந்திர நிதி உதவிய, சலுகைகள், இலவச கல்வி வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. மேலும் பல மருத்துவ உதவிகள், காப்பீடு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
இருப்பினும் பல திருநர் மற்றும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு சட்டப்பூர்வமான திருமண அங்கிகாரம் மற்றும் குழந்தை தத்தெடுப்பு உரிமை வழங்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கை நிலுவையிலுள்ளது. விரைவில் இதற்கான சட்டங்கள் ஏற்றப்படும் என் மக்கள் நம்பியுள்ளனர்.
-கிரன்குமார்
நிழற்பட கலைஞர் : முரளிதரன்
