சென்னை புத்தகக் காட்சி சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டு தோறும் நிகழ்த்தப்படும் ஓரு புத்தகத் திருவிழாவாகும். இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு – பொங்கல் காலத்தில் பத்து நாட்கள் நடைபெறும்.
நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்தும் பன்மொழிப் பதிப்பகங்களும் வந்தாலும், 2000 வருட தொன்மையும் சிறப்பையும் கொண்ட தமிழ் இலக்கண இலக்கியம் சார்ந்த தமிழ்நாட்டின் முக்கியமான சில தமிழ்ப் பதிப்பகங்களும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்
முதல்முறையாக மெட்ராஸ் புத்தகக் கண்காட்சி என்ற பெயரில் 1977 டிசம்பர் 14 மற்றும் 24 க்கு இடையில், தமிழ்நாட்டின் முக்கிய பதிப்பக நிறுவனங்களின் சங்கமான தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) மூலம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
Queer சமூகத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக திருநர் மற்றும் தன்பால் ஈர்ப்பாலர்களுக்கு இந்தியாவில் மிகவும் திறந்த மாநிலமாக தமிழ்நாடு குறிப்பிட்டதக்கது மற்றும் பல நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு Queer மக்களுக்கும் அவர் வாழ்க்கை ஏற்படுத்தி உள்ளது.
இதில் கடந்த 46 ஆண்டு புத்தக கண்காட்சி வரலாறில் முதல்முறையாக 45 ஆண்டுகளின் மறுப்பு மற்றும் பாகுபாடு பிறகு LGBTQIA+ சமூகத்தினரின் படைப்புகளை வெளிப்படுத்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பல போராட்டத்திற்கு பிறகு பால்புதுமையினர் சமூகம் அதன் சொந்த விற்பனையகத்தைப் பெற்றுள்ளார். இதில் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளும், பல திருநர் மக்களின் படைப்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.
டிரான்ஸ் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் கிரேஸ் பானு டிரான்ஸ் ரைட்ஸ் நவ் கலெக்டிவ்v(the trans rights now collective) நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 70க்கும் மேற்பட்ட queer மக்கள் மற்றும் திருநர் உள்ளனர். கிரேஸ் பானு தனது முதல் புத்தகமான “டாக்ஸ் ஆஃப் கிரேஸ் பானு”வை(Talks of Grace Banu) எழுதியபோது, அவர் தனது புத்தகத்தை வெளியிடுவதற்கான தேடலில் நிறைய நிராகரிப்புகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே அவர் இறுதியாக 2019 இல் அதை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு தனது அமைப்பின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவுடனான உரையாடலின் போது, தனது சமூகத்தைச் சேர்ந்த சிலர் எழுத விரும்புவதைக் கண்டுபிடித்தார். எனவே கிரேஸ் பானு தனது புத்தகத்தை வெளியிட முயற்சித்தபோது தான் எதிர்கொள்ளும் வேதனையான பாகுபாடுகளை தனது மக்கள் சந்திக்க வேண்டியதில்லை என்று தனது சொந்த பதிப்பகத்தைத் தொடங்க முடிவு செய்தார். Queer publishing house அப்படித்தான் துவங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, கிரேஸ் பானு மற்றும் அவரது குழுவினர் புத்தகக் கண்காட்சியில் பல்வேறு ஸ்டால்களில் தங்கள் புத்தகங்களைக் காட்சிப்படுத்த முயன்றனர், ஆனால் நிராகரிப்புகளை மட்டுமே எதிர்கொண்டனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) ஆண்டுதோறும் சென்னை புத்தகக் கண்காட்சியை அறிவித்தவுடன், அவர்கள் உடனடியாக தங்கள் சொந்த விற்பனையகம் மற்றும் புத்தகங்களை பால்புதுமை எழுத்தாளர்கள் மூலம் பெற முடிவு செய்தனர்.
1,000க்கும் மேற்பட்ட விற்பனையகம் கொண்ட இந்த அரங்கில் queer சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அவர்களின் பதிப்பகம் இதுவே முதல் முறை. விற்பனையகம் என் 28 -யில் நுழைவாயிலில், பதிப்பகத்தின் லோகோவை வைத்திருக்கும் புத்தரின் சிலை உள்ளது, இது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதைக் குறிக்கிறது.
“முந்தைய ஆண்டுகளில், எங்கள் படைப்புகளை காட்சிக்கு வைக்க முடியுமா என்று பிற விற்பனையகத்தைக் கேட்க வேண்டியிருந்த நிலையில். இந்த ஆண்டு, கண்காட்சிக்கு முன்னதாக நாங்கள் மூன்று புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம், அவை இங்கு விற்பனைக்கு உள்ளன, அதே போல் மற்ற ஆசிரியர்கள் மற்றும் பால்புதுமை சமூகத்தின் உறுப்பினர்களின் புத்தகங்களையும் அறிமுகப்படுத்தினோம், ”என்று விஜே நேகா கூறியுள்ளார்.
கிரேஸ் பானு, டிரான்ஸ் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் டிரான்ஸ் ரைட்ஸ் நவ் கலெக்டிவ் நிறுவனர் மற்றும் எஸ் நேகா, விஜே-தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், புத்தக கண்காட்சியில் விற்பனையகம் வைத்திருக்கும் போராட்டம், அவர்களின் வெளியீடுகள், புதிய கவிதைப் புத்தகங்கள், திரையில் பால்புதுமை சமூகத்தின் சித்தரிப்பில் ஏற்பட்ட மாற்றம், பால்புதுமை ஸ்டீரியோடைப்களை(queer stereotypes) வாசகர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என இருவரும் சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Queer publishing house தமிழில் மூன்று புத்தகங்களுடன் தொடங்கியுள்ளது. திருநம்பி அருண் கார்த்திக்கின் “எண்ணில் இருந்து பார்”, “ஒரு கலையின் கவிதைகள்”, திருநங்கை அஜிதாவின் கவிதைகள், திருநங்கை மற்றும் எழுத்தாளர் நேகாவின் “RIP”. . இந்தப் புத்தகங்கள் அனைத்தும் LGBTQIA+ சமூகத்தால் எழுதப்பட்டவை. கல்கி சுப்ரமணியம் எழுதிய “நாம் மற்றவர்கள் அல்ல, ரேவதியின் “வெள்ளை மொழி”, லிவிங் ஸ்மைல் வித்யாவின் “நான் வித்யா”, மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.
இதனுடன் நம் அநியம் அறக்கட்டளை சார்பில் புதிதாக துவக்கப்பட்ட அநியம் பதிப்பகம் அதன் சார்பில் தோழர் அக்னி பிரதீபின் “அதரப்பூச்சி” , மற்றும் தோழர் மரக்காவின் “மெல்லக் கொள்ளும் மன்னிப்புகள்” என்ற இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
மக்களும் இதை ஆதரித்து புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றன. சட்டம், மருத்துவம், கல்வி, தொழில் போன்ற பல துறைகளில் சாதித்து இன்று இலக்கியத்திலும் சாதித்துள்ளனர். நாள்தோறும் இந்த பால்புதுமை சமுகம் பல இன்னல்களை சந்தித்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் queer மக்கள் மீண்டும் பல துறைகளில் வெற்றி பெற ஊக்குவிக்கிறது. இந்த வெற்றிகளுக்கு அரசும் பக்கபலமாக இருந்து வருகிறது.
கிரன் குமார்
இதழியல் மாணவன்
