ட்வீட் நிறுவனம் மூலம் கடந்த மார்ச் மாதம் 12 மற்றும் 13 தேதிகளில்
தலைநகர் டெல்லியில் உள்ள ஏரோ சிட்டி என்ற இடத்தில் திருநம்பிகள் மாநாடு  நடைபெற்றது.
இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநம்பிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
இதில் குறிப்பாக தமிழ் நாடு சார்பாக தமிழ்நாடு திருநம்பிகள் சங்கத்தின் நிறுவனர் தோழர் சோனேஷ் அவருடன் தோழர். அருண் கார்த்திக் அவர்களும் கலந்துக் கொண்டனர்.

முதல் தினத்தில் தங்களை அறிமுகப்படுத்தும் வண்ணம் சின்ன சின்ன விளையாட்டுகள், கேள்விக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இங்கு வந்து கலந்து கொண்ட அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் ஒவ்வொரு நிறுவனத்தை சார்ந்தவர்களாக இருந்தனர். அங்கு வந்திருந்த எல்லோரும் எதோ முன் பார்த்து பழகிய சகோதர்கள் போல் மிக சாதாரணமாக எளிமையாக பழக கூடியவர்களாக இருந்தார்கள். முதல் நாள் அறிமுக நாளாக கடக்ககையில் அடுத்த தினம் மிக துல்லியமாக குறித்த நேரத்தில் அட்டவணை படுத்தப்பட்ட அனைத்தும் அதனதன் நேரத்தில் நடந்தது. ஒரு மாநாடுக்குரிய ஒழுங்கின்படி இந்த நிகழ்வு நடைபெற்றது என்பது சிறப்பு. தொடர்ந்து அன்றைய நாளில் திருநம்பிகளுக்கான புது புது திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது அதிலும் குறிப்பாக கரிமா கிரஹா (shelter) எனும் திட்டம் நாட்டின் முக்கியமான நகரங்களில் மட்டுமே உள்ளது எனவும் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு நகரங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தேசிய சமூகப்பாதுகாப்பு நிறுவனத்திலிருந்து (National Institute of Social Defence) திருமிகு கிரிராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார், உண்மையில் அவர் ஒரு சிஸ் ஆணாக இருந்தாலும் அனைவருடன் எந்த ஒரு பாரபட்சமும் பாராமல் மிக அழகாக கலந்துரையாடினார். வைத்த கோரிக்கைகளை மிக பொறுமையாக கேட்டு அதை செய்து தருவதாகவும் வாக்களித்தார். அதுமட்டுமின்றி குறைகளை கேட்க நேரமின்றி அடுத்த நாள் தனது அலுவலகம் வர செய்து குறைகளை கேட்டறிந்தார்!

அடுத்ததாக தேசிய சமூகப்பாதுகாப்பு நிறுவன செயலாளர் திருமிகு. ராதிகா சக்ரவர்த்தி அவர்கள், கொடுத்த குறைந்த நேரத்தில் பொறுமையாக அமர்ந்து ஒவ்வொருவரின் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து குறிப்பெடுத்து அந்தந்த துறையில் தீர்வு காண வாக்களித்தார். முக்கியமாக திருநர் மக்களின் பிரச்சனைகளை முதல் இடம் கொடுத்து தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

மற்றுமொரு முக்கியமான விடையம் என்னவென்றால் கலந்து கொண்ட அனைத்து மாநில பிரதிநிதிகளுடனாக கலந்துரையாடல்களில் மற்ற மாநில அரசுகள் போல் இல்லமால் நம்முடைய தமிழ் நாடு அரசு மிக மிக சிறப்பாக திருநர் மக்களின் வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களையும் தனி துறைகளையும் அமைத்து ஒரு அங்கிகாரம் கொடுத்துள்ளது. முக்கியமாக சில மாநிலங்களில் இதற்கான அடிப்படை புரிதல் கூட இல்லமால் இருப்பது வருத்தம் அளிக்கிறது. எடுத்துகாட்டாக ஆதார் பெயர் மாற்றத்திற்கு கூட வீடு தேடி வந்து பிரச்சனை செய்யும் அளவுக்கு தான் அவர்களின் புரிதல் உள்ளது.
மற்ற மாநிலங்களில் இருந்து வந்து தமிழ் நாட்டில் இலவச பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு செல்கிறார்கள் என்பது தமிழக அரசுக்கு கிடைத்த பெருமையாகும்.

அடுத்தாக திருநம்பிகளுக்கான பிரத்தியேக பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த பாடல் திருநம்பியால் இசை அமைக்கப் பட்டு மற்றுமொரு திருநம்பியால் பாட பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு மன்றத்தில் உறுபினராக உள்ள திருமிகு. லக்ஷ்மி திருப்பாத்தி, திருமிகு. ஆரிய பாஷா போன்றவர்கள் வந்திருந்தனர். அனைவரும் அனைவரிடமும் எந்த ஒரு பாரபட்சமும் பாராமல் பேசி பழகினார்கள்.
முக்கியமாக தமிழ் நாட்டின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கை, பல்வேறு தனியார் மருத்துவமனைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக வரும் திருநர் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள் இதனால் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்றும் இதற்காக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்க்கப்பட்டது. அதற்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்கள்.. அடுத்ததாக ஒரு நிறுவனத்தை எவ்வாறு துவங்கி நடத்த வேண்டும் எந்த மாதிரியான சவால்கள் வரும் அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும், நோக்கம், செயலாக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கற்று தந்தார்கள்.
டிவிட் நிறுவனத்தின் நிறுவனர் திருமிகு. அபினா ஹர் ஒரு திருநங்கையாக இருந்தாலும் தனது நிறுவனத்தை முழுக்க முழுக்க திருநம்பிகளுக்காகவே நடத்தி வருகிறார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து திருநம்பிகளின் மொத்த செலவுகளையும் ட்வீட் நிறுவனமே ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயம் இப்படிபட்ட நிகழ்வுகள் இன்னும் அதிகமாக நடைபெற வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாற்றம் உருவாக வேண்டும்!

-கரு : சோனேஷ்
(தமிழ்நாடு திருநம்பிகள் சங்கம்.)
எழுத்து : மரக்கா

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன