உழைத்து வாழ்கிறேன்.

திருநம்பி ஜெய்சன் ஜோஸ்வா அவர்களுடன் உரையாடல்.

வணக்கம் என்னுடைய பெயர் ஜெய்சன் ஜோஸ்வா என்னோட மனைவி பெயர் சுகன்யா. நான் ஒரு திருநம்பி. நான் மதுரையில் இருக்கிற ஒரு NGOவில் எச்ஐவி எய்ட்ஸ் out reach வேலை பாத்துட்டு இருக்கேன் . கடந்த மூன்று ஆண்டுகளாக நான் மதுரையில் தான் வசித்து வருகிறேன் அதுக்கு முன்னாடி நான் விழுப்புரத்தில் இருந்தேன். என்னோட பாலினத்தை மாற்றிக் கொள்வதற்காக தான் விழுப்புரம் சென்றேன். என்னோட பாலின மாற்றத்திற்கு அப்புறமா. நான் ஒரு பாத்திரக் கடையில் ஒரு நாளைக்கு 300 ரூபா கூலிக்கு வேலை செஞ்சிட்டு இருந்தேன். என்னோட மனைவி சுகன்யா அங்கிருந்த ஒரு xerox கடையில மாதம் 4500 எனக்கு வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. எங்க ஒருவருக்கு ஒருவர் புடிச்சிருந்தது நாங்கள் காதல் திருமணம் செய்து விட்டோம் ஆனால் அது சாதாரணமா நடக்கல. பல போராட்டங்களுக்கு அப்புறம்தான் நாங்க ரெண்டுபேரும் ஒன்ன சேர்ந்தோம் எங்கள பத்தின செய்தி வலைதளங்களில் கூட வந்திருக்கு.

எங்களோடு திருமணத்துக்கு அப்புறமா நானும் என்னோட மனைவியும் சேர்ந்து ஒரு கஸ்டமர் கேர் வேலை பார்த்துட்டு இருந்தோம். அங்க நான் ஒரு திருநம்பி அப்படின்னு அது தெரிய வந்துச்சு அதனால என்னைய வேலையை விட்டுப் போக சொல்லிட்டாங்க. என்ன… கொஞ்சம் மரியாதையா ஐடி கார்டை கழட்டி வச்சிட்டு போப்பா அப்புறம் உன்னோட மனைவிய வர சொல்லி எழுதி கொடுத்திட்டு போ அப்படின்னு சொல்லி சொன்னாங்க. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியல அதனால நான் மதுரைக்கு வந்துட்டேன். மதுரையில பாரதிகண்ணம்மா என்ற திருநங்கை மூலமா ஒரு NGO வேலைக்கு சேர்ந்தேன். அங்க எனக்கு மூணு மாசத்துக்கு ஒரு தடவை தான் சம்பளம் கொடுப்பாங்க அதுவும் 8500 ரூபா.

வலைதளங்களில் என்ன பத்தி வந்த ஒரு வீடியோ அந்த வீடியோவால் மதுரையிலும் என்னால நிரந்தரமாக இருக்க முடியல காரணம் என்னைப் பற்றிய விவரங்கள் தெரியவந்தது என்பதால் யாரும் எங்களுக்கு வீடு வாடகை வீடு‌ கொடுக்க முன்வரவில்லை. வாடகைக்கு இருந்த வீட்டையும் உடனே காலி பண்ண சொல்லி பிரச்சினை செய்தார்கள். அதுக்கு அப்புறமா ரொம்ப கஷ்டப்பட்டு நான் ஒரு வீடு கண்டுபிடிச்சேன் இப்போ அந்த வீட்ல தான் சந்தோஷமா இருக்ககோம்.

8500 வெச்சுட்டு வாழ்க்கையை ஓட்ட முடியுமா என்று நினைத்தேன். கண்டிப்பா முடியாது அதனால் ஏதாவது பிசினஸ் மாதிரி எதுனா பண்ணலாம்னு நான் யோசிச்சேன். அப்போ எனக்கு தோணுது ஒரு தள்ளுவண்டி. காரணம் என்னோட மனைவி குடும்பம் ஒரு ஓட்டல் ரன் பண்ணிட்டு இருந்தாங்க அதனால என் மனைவிக்கு ஓட்டல் உணவு செய்வதைப் பற்றி நல்லாவே தெரியும்.
எனினும் தள்ளுவண்டி கடை திறப்பதற்கு பணம் தேவைப்பட்டது பல பேர்கிட்ட நான் உதவி கேட்டால் யாருமே எங்களுக்கு உதவி பண்ணல என்னோட கழுத்துல இரண்டரை சவரன் செயின் இருந்தது அதை வச்சு தான் நான் முதல் முதல்ல தள்ளுவண்டி கடை ஆரம்பிக்க யோசிச்சேன். அந்த தள்ளு வண்டிக்கு மாதம் 3 ஆயிரம் வாடகை கொடுக்கணும்.
அவங்க ஆரம்பத்துல மட்டன் சூப் சிக்கன் ப்ரை அப்புறம் சிக்கன் ஈரல் தொக்கு பண்ணி கொடுப்பாங்க. தள்ளு வண்டில ஒரு மணி நேரம் தான் நிப்பேன் கொண்டுபோன எல்லாம் பொருளுமே சீக்கிரமா விட்டு முடிஞ்சிடும். நல்ல வருமானம் எனக்கு கிடைச்ச. அது மட்டும் இல்லாம ரொம்ப ஆரோக்கியமான பொருள் மற்றும் விலையும் கொஞ்சம் கம்மியா இருந்ததுனால அந்த பகுதி மக்களுக்கு எங்களோட கடையை ரொம்ப புடிச்சிருந்துச்சு. சில மாதங்களுக்குப் பிறகு இந்த தள்ளுவண்டி கடையும் சரியாக ஓடவில்லை பொருள் நாளைக்கு 40 ரூபா 50 ரூபா தான் கையில காசு கிடைக்கும் அதை வச்சு என்ன பண்ண முடியும். அதனால அந்த வேலைய நிறுத்திட்டு. நைட் சிப்ட் ல செக்கியூரிட்டி வேலைக்கு போனேன். நான் மட்டும் இல்லாம என்னோட மனைவியும் என் கூட அந்த வேலைக்கு வந்தாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போராடி காசு சேர்த்து வைத்து இருந்த கடன் எல்லாத்தையும் அடைத்து விட்டோம்.

அதற்குப் பின் நாங்கள் என்ன யோசித்தோம் என்றால் எப்பவுமே எல்லா நேரத்திலும் வியாபாரம் ஆகுற மாதிரி ஒரு கடையே ஆரம்பிக்கணும்னு ஒரு ஃபேன்சி ஸ்டோர் ஆரம்பிச்சோம். எங்க ஃபேன்சி ஸ்டோர் ஆரம்பிக்கிறதுக்கு பிரியாபாபு அவங்க வந்து ரொம்ப உதவி பண்ணுனாங்க. அவங்களுக்கு நான் ஒரு எஸ்டிமேட் மாறி போட்டுக் கொடுத்தேன் அதை வச்சு அவங்க எனக்கு லோன் வாங்கி கொடுத்தாங்க. இப்போ அந்த ஃபேன்சி ஸ்டோர் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. இந்த பேன்ஸி ஸ்டோர்ல நான் எந்த ஒரு கெட்ட பொருள்களையும் நான் வாங்குவதில்லை உதாரணத்துக்கு போதை பொருட்கள். குழந்தைங்களோட உடலுக்குத் தீங்கு விளைவிக்கிற உணவு பொருட்கள். இதெல்லாம் நான் விக்கிறதில்லை காரணம் எனக்கு. வியாபாரத்தை விட என்னோட வாடிக்கையாளர் அவர்களோட உடல்நிலை தான் ரொம்ப ரொம்ப முக்கியம். அதனாலேயோ என்னவோ என்னோட வியாபாரம் இன்னிக்கு நல்லா போயிட்டு இருக்கு.

என்னோட ஸ்டோரில் எல்லாவிதமான ஃபேன்சி பொருட்களும் இருக்கு. ஸ்டேஷ்னரி, தின்பண்டங்கள் போன்ற மற்ற பொருள்களையும் இங்க நாங்க வியாபாரம் பண்ணிட்டு இருக்கோம். நான் காலையில வேலைக்கு போயிடுவேன் என்னோட கடையை முழுக்க முழுக்க என்னோட மனைவிதான் பாத்துப்பாங்க. மாலை நான்வீட்டுக்கு வந்தவுடனே கடைக்கு போவேன் நானும் என் மனைவியும் சேர்ந்து சாயங்காலத்தில் கடையில சேர்ந்து வியாபாரம் பார்ப்போம். இப்ப நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் காரணம் இப்ப இருக்கற இந்த வாழ்க்கை. இருந்தாலும் கூட இன்றைக்கு வரைக்கும் என்னால நான் ஒரு திருநம்பி என்றுவெளிப்படையா சொல்லிக்க முடியாத காரணம் என் வாழ்க்கையை அடிக்கடி நடந்த கசப்பான அனுபவங்கள். கண்டிப்பா ஒரு நாள் நான் என்னோட முழு அடையாளத்தை இந்த உலகத்துக்கே வெளிப்படையா சொல்லனும்னா ஆசைப்படுறேன் அந்த காலம் வரும்ன்னு காத்துட்டு இருக்கேன்.

நன்றி வணக்கம்.

-அகமகிழ் செய்திகள் பிரிவு.

 

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன