டிரான்ஸ் மாம்(Trans MoM)
ட்ரான்ஸ் மாம் என்கிற அமைப்பு சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி வந்த மூன்றாம் பாலின குழந்தைகளை கல்வி வழியிலும் வேலைவாய்ப்பு வழியிலும் உதவி செய்து அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் தருவதற்கு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பில் மொத்தம் 30 திருநங்கைகள் உறுப்பினராக உள்ளனர். எங்கள் அமைப்புக்கு நன்கொடையாளர்கள் என்று யாருமில்லை. எனவே எங்கள் அமைப்பின் உறுப்பினர் அனைவரும் வேலைக்குச் சென்றுகொண்டே இந்த அமைப்புக்கு என்று மாதம் ரூபாய் 1000 செலவிடுவோம் அதன்மூலம் உதவி தேவைப்படும் திருநங்கைகளுக்கு உதவி செய்துகொண்டே இருப்போம் சமீபத்தில் கூட கோயம்புத்தூரிலிருந்து ஒரு திருநங்கை என்னிடம் நான் ஒரு சமையல் சேவை நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கான உதவி வேண்டும் என்றும் என்னை நாடினார். நாங்கள் 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவருக்கு சமையல் நிறுவனத்தை அமைத்து கொடுத்து, சமையல் செய்ய தேவையான பாத்திரங்கள் காய்கறிகள் வாங்கி அவரது இடத்துக்கு சென்று கொடுத்தோம். அந்த சமையல் நிறுவனத்தின் மூலம் மேலும் ஒரு பத்து திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.வேலை வாய்ப்பு கிடைத்தது. மேலும் திருநங்கைகளுக்கு கல்வி என்பது மிக முக்கியமானதாக, அவசியமானதாக நாங்கள் நினைக்கிறோம். எனவே நாங்கள் கணினி பயிற்சி வகுப்பும் ஆரம்பித்தோம். பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு திருநங்கைகளும் நன்கு பயிலவும் நாம் சொல்லிக் கொடுப்பதை நன்கு புரிந்து கொள்ளவும் நாங்கள் விரும்பினோம் எனவே நாங்கள் பயிற்சி வகுப்பை தொகுதிகளாக பிரித்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தோம் ஒரு தொகுதிக்கு 6 திருநங்கைகளை தேர்ந்து எடுத்துக் கொண்டோம் பிறகு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து கணினி அடிப்படை விவரங்கள் கணினி மென்பொருள் வடிவமைப்பு போன்றவற்றிலும் நாங்கள் கவனம் செலுத்தி அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தோம் எங்களுக்கு மென்பொருள் வலைத்தள வடிவமைப்பு நிறுவனம் நடத்திவரும் ஆசிரியர் ஜெயராஜ் என்பவர் எங்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் திருநங்கைகளுக்கு இலவச பயிற்சி கொடுத்தார். அவர்தான் எங்கள் அமைப்புக்கான ஒரு வலைத்தளத்தையும் தொடங்கி கொடுத்தார்.மேலும் அவர்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு பயிற்சியை கற்றுக் கொடுத்ததுடன் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அமைத்து தருவதாகும் எங்களுக்கு உறுதிமொழி அளித்தார். நாங்கள் எந்த அமைப்பை சட்டப்படி பதிவு செய்து ஒரு ஆறு மாதங்கள் தான் ஆகிறது ஆனால் அதற்கு முன்னர் நாங்கள் பல சேவைகளை செய்து வந்துள்ளோம் திருநங்கைகளால் மக்களுக்கு எப்படி உதவ முடியும் என்ற நோக்கத்தில் கோயிலில் சுத்தம் செய்யும் பணியை முன்னெடுக்கத் தொடங்கினோம் அதில் ஒரு பகுதியாகத்தான் மருதமலையில் வரும் பக்தர்கள் தொட்டுச்செல்லும் குப்பைகளை நாங்கள் அகற்ற ஆரம்பித்தோம் மருதமலை அடிவாரத்தில் விழும் குப்பைகளை அங்கே இருக்கும் துப்புரவு பணியாளர்கள் அகற்றி விடுவார்கள் ஆனால் மலைக்கு பின்புறம் யானைகள் மற்ற விலங்குகள் அதிகம் நடமாடும் இடத்தில் குப்பைகள், குறிப்பாக நெகிழிக் குப்பைகள் பக்தர்களால் அதிகமாக போடப்படும். அதை யாரும் அகற்ற மாட்டார்கள். வனவிலங்குகள் அந்த இடத்தில் நடமாட கஷ்டப்படும். அந்த இடமும் அசுத்தமாகி காட்சியளிக்கும். நாங்கள் ஒரு 15 திருநங்கைகள் இணைந்து அந்த குப்பைகளை அகற்ற ஆரம்பித்தோம் அகற்றியும் அந்த இடத்தை சுத்தமாக வைத்தோம். ஒவ்வொரு வருடமும் ஒரு தைப்பூச மாதத்தில் நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் சென்று அந்த இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக வைப்போம்ஜல்லிக்கட்டுக்கு கூட எங்கள் ஆதரவாக குரல் எழுப்பி உள்ளோம். நாங்கள் மக்களுக்கான கள வேளைகளில் இரண்டு மூன்று வருடங்களாக வேலை பார்த்து வருகிறோம். இந்த டிரான்ஸ் மாம் என்கிற அமைப்பு அனைத்து LGBTQ மக்களுக்காகவும் ஆரம்பித்தது இதில் திருநங்கைகள் அல்லாமல் மற்ற LGBTQ மக்களும் இணைந்து கொள்ளலாம். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர்கள் தீயவராவதும் நல்லவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்பதை நாங்கள் நன்கு உணர்ந்து கொண்டு இந்த அமைப்பை ஆரம்பித்தோம்.எங்கள் அமைப்பு அவர்களை ஒரு தாய் போன்று பார்த்துக் கொள்ளும்.வீட்டிலிருந்து வெளியேறும் குழந்தைகள் தீயவழியில் செல்லாமல் பாதுகாக்கவும் வழிநடத்தவும் செய்வோம். நாங்கள் விளையாட்டுத் துறையில் கால்பதிக்க வில்லை என்ற ஏக்கம் எங்களுக்கு இருந்தது. விளையாட்டில் சாதிக்க வைக்கும் திருநங்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தோம் திருப்பூரைச் என்ற மங்கையான்வன் என்ற ஏழு பெண் மணிகள் கொண்ட அமைப்பு எங்களைத் தொடர்பு கொண்டு உதவி செய்தது. எங்களுக்கு அவர்கள் எறி பந்து பயிற்சி கொடுக்க விரும்பினார்கள் என்னிடம் ஒரு ஒரு 12 பேர் கொண்ட குழுவை கூட்டச் சொன்னார்கள் நாங்களும் கூடினோம். அவர்கள் எங்களுக்கு எறிபந்து பற்றிய அடிப்படைப் பயிற்சியை முதல் அதை எப்படி விளையாட வேண்டும் என அனைத்து பயிற்சியும் எங்களுக்கு கொடுத்து விளையாட வைத்தார்கள் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டோம். அதில் வெற்றி பெற்ற குழுவிற்கு அவர்கள் பதக்கமும் பரிசும் கொடுத்தார்கள். மேலும் 2021 ஆம் ஆண்டு நாங்கள் அதிகம் இணைந்து இருந்து நான்கு குழுக்களாக இடம் பெற்றோம். எங்களுக்கு வருகின்ற ஜனவரி மாதத்தில் நடைபெறும் மாரத்தான் மற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதி கிடைத்தது நாங்களும் கலந்து கொள்ள பயிற்சி எடுத்து வருகிறோம் மேலும் இன்றைய அவசர காலகட்டத்தில் விளையாட்டு பயிற்சி பெற முடியாத நிலைமையில் உள்ள திருநங்கைகளுக்கும் உதவி செய்து அவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சியும் கொடுக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். எங்களிடம் உதவி கேட்க நினைக்கும் திருநங்கைகளும் ,திருநம்பிகள்,LGBTQ மக்களும் எங்கள் வலை தளம் வாயிலாக கேட்கலாம் அதில் உதவி செய்ய நினைப்பவர்களும் அதில் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் மேலும் உதவி கேட்க நினைக்கும் அனைவரும் அதில் நீங்கள் உங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்தால் நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கான உதவிகள் மற்றும் தேவைகள் ஏதேனும் இருந்தால் பூர்த்தி செய்து வைப்போம் படிக்கும் வயதில் உள்ள குழந்தைகள் பாலின மாற்றம் காரணமாக நிறைய சிக்கல்களும் அவமானங்களும் சந்தித்து வருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம் எங்கள் போன்று எண்ணம் கொண்ட மற்றவர்களும் எங்களுடன் நாங்கள் அதை வரவேற்று ஏற்றுக் கொள்வோம்.
நன்றி.
– பாஸ்கர்.