இன்னும் எத்தனை நாள்!
பரவாயில்லை!
நாங்கள் காத்திருக்கிறோம்!
எதை எதையோ பார்த்து
எத்தனையோ பட்டு எழுந்து!
நடை பழகிக் கொண்டிருக்கிறோம்.

பரவாயில்லை நாங்கள்
காத்திருக்கிறோம்!

மஞ்சள் பூச எண்ணிய
மலர் கைகளில்!
மலத்தை இன்னும்
எத்தனை நாள்!
கொடுப்பீர்கள்!

இடை நெளிந்த எங்கள்
நடைக் கண்டு இன்னும்
எத்தனை நாள்!
தொடை சொருக
நினைப்பீர்கள்!

இரயிலோ ஊந்தோ பாராது
இன்னும் எத்தனை நாள் – எங்கள்
பிட்டம் தடவி ஆர்கஸம்
அடைவீர்கள்!

எங்கள் அவன்கள் மீது
நாங்கள் கொண்ட காதல்கள்
இன்னும் எத்தனை நாள்!
உங்கள் இயர்போன்ஸ்லேயே
மறைந்திருக்கும்!

எங்கள் கொஞ்சம் பேச்சுக்கு
நீங்கள் இட்ட பெயர் பெட்டை
என்றால் இந்த பெட்டகள்
கொஞ்சியே உங்களை
மரணம் செய்யும்!

காலம் காட்சிகள் மாறும்
எங்கள் கலங்கிய
குட்டைகள் மீண்டும்
தெளியும்!
நம்பிக்கை கொண்ட
எங்களை கண்டு!….

காவற்றுறையோ, அரச
ஆளுமைகள் அத்தனையும்
அரவணைக்க – அச்சாரம்
நீங்கள் ஏற்பதெப்போ?

உடன் குடியோரே!
பரவாயில்லை நாங்கள்
காத்திருக்கிறோம்!….

-கவிஞர் மரக்கா

மேலும் படிக்க

Comments

  • Avatar

    லாரன்ஸ் எல். தினகரன்

    16/03/2022 at 2:57 காலை

    எங்கள் கலங்கிய
    குட்டைகள் மீண்டும்
    தெளியும்!
    நம்பிக்கை கொண்ட
    எங்களை கண்டு….! (மரக்கா)

    தங்களுக்கும் சேர்ந்து கலமாட காத்திருக்கிறோம் இறையியல் பயணத்தில்…. 🤝

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன