மாதவிடாய் காலத்தில இன்னும் பெண்களை வீட்டை விட்டு தூரமா ஒதுக்கி வைக்குற சமூகத்தில தானே இன்னுமும் வாழ்ந்துட்டு கிடக்கோம்.

 

இந்த சமூகம் எல்லோருக்கும் பெரும்பாலும் என்ன கத்துகுடுக்க போகுது வன்மம் போட்டி பொறாமை இந்த மாதிரி குணங்கள் தானே.

 

 

நூத்துல ஒருத்தர் வேணா அவுங்க புள்ளைக்கு மனிதம் பத்தி சொல்லிகுடுப்பாங்க.

 

ஆனால் பெரும்பாலான மக்கள் எப்பயுமே முன்னோர் வழி,மத வழி,சாதி வழி,இன வழினு ஆளாளளுக்கு ஒவ்வொரு வழில போயிட்டு இருப்பாங்க…

 

அவங்க கிட்ட நம்ம மனிதம் பத்தி வகுப்பு எடுத்தா நம்மள ஒரு மாதிரி பார்த்து யப்பா விடுங்கடா சாமினு ஓடிபோய்டுவாங்க.

 

இப்போ எதுக்கு நான் உங்களுக்கு மனிதம் பத்தி கிளாஸ் எடுக்கிறேன்னா மனிதம்னா  என்னன்னு தெரிஞ்சுகிட்டா தான் மத்த மக்களோட மனசு புரிஞ்சுக்க முடியும்.

 

அப்படி புரிஞ்சுக்கும்போது தான் இந்த உலகத்தை ரசிக்க முடியும்.

அந்த ரசனையோடு தான் மனிதன் கிட்ட இருக்க ஒவ்வொரு பண்புகளையும் ஏத்துக்க முடியும்.

 

அப்படி ஏத்துக்க முடிஞ்சா தான் குயர் மக்களும் நம்மள மாதிரி உயிர் தானு மதிக்க முடியும்.

 

 

குயர் மக்கள்னா இங்க எல்லாருக்குமே பொதுவா யார தெரியும் தெரியுமா திருநங்கை மட்டும் தான்.

இப்ப ஏதோ சமூக ஊடகங்கள் அதிகரிச்ச காரணத்தினால திருநம்பிகள் பத்தியும் நல்லாவே தெரிஞ்சிக்கிறாங்க.

 

ஆனா அவங்கள பத்தின புரிதலும் இவங்களுக்கு கொஞ்சம் கம்மியா தான் இருக்கு .

 

திருநங்கையா இருந்தா ஓகே .

அக்சப்ட் பண்ணிக்கிற மனநிலைக்கு கொஞ்சம் வந்துட்டாங்க.

 

இதே திருநம்பி அவங்களோட பார்ட்னர் பொண்ண லவ் பண்ணா இவங்களோட கேள்வி பெரும்பாலும் என்னவா இருக்கு தெரியுமா,

நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி என்ன பண்ணிப்பீங்க.

அவ்வளவுதான் அவங்களுக்குள்ள அந்த திருநம்பிகள் பத்தி போயிருக்க புரிதல்.

 

 

இப்படிலாம் இருக்க பொதுவான மக்கள் கிட்ட இதை தாண்டி ஒரு பாலினம் இருக்குன்னு நம்மளால புரிய வைக்க முடியுமானு கேட்டா நிஜமாவே கஷ்டம் தான்.

 

 

இப்ப நான் பேச போறேன் பாலினம் பெரும்பாலும் எல்லாருக்குமே தெரியாத ஒரு பாலினம்.

 

ஏன்னா அந்த பாலினத்த பத்தி அந்த அளவுக்கு பொது ஜனங்களுக்கு எந்த ஒரு செய்திகளுமே சென்றடையவே இல்லை.

 

இடைபாலினத்தவர்கள் அதாவது (Intersexual)

மக்கள் அப்படின்னு ஒரு பாலினம் இருக்காங்க.

 

பிறக்கும் பொழுது ஒரு ஆணின் உருவமாக சொல்லக்கூடிய அந்த உடல் அமைப்புல பிறந்த கர்ப்பப்பை உடைய ஒரு ஆண்.

 

இதே மாதிரி பெண்குறி ஆண்குறி இரண்டும் சேர்ந்து பிறக்குற மக்களும் இருக்காங்க.

 

இப்படி பல பாலினத்தார்கள் மத்தியில இருக்கும் Intersexuallity people என்ன மாதிரியான பிரச்சினைகள் சந்திக்குறாங்க தெரியுமா.

பெண்களுக்கு மட்டும் தான் மாதவிடாய் வர மாதிரியும் அவங்கள ஒதுக்கி வைக்கும் இந்த சமூகம் இந்த மாதிரியான இடை பாலினத்தார்கள் பத்தி தெரிஞ்சுதுன்னா அவங்களையும் மாச மாசம் வீட்டுக்கு வெளியே உட்காரு என்று தான் சொல்லுவாங்க.

 

 

நம்ம தமிழ்நாட்டிலேயே ஒரு பிரபலமான திரை துறையில் இருக்க ஒரு இடைப்பாலின இனத்தவர் தன்னுடைய 11 வயசுல தன்னுடைய ஆண்குறியில்  ரத்தப்போக்கு ஏற்படுவதை பார்க்கிறார்.

இதை பத்தி அவங்க அம்மாகிட்ட சொல்லும் பொழுது டாக்டர் கிட்ட கூட்டி போறாங்க .

 

டாக்டரும் உங்க பையனுக்கு வந்தது மாதவிடாய்னு சொல்றாங்க . அதுக்கப்புறம் தான் அந்த பையனோட அம்மா அவன்கிட்ட உண்மைய சொல்றாங்க.

 

 

உனக்கு கர்ப்பப்பை இருக்கு அதனாலதான் மாதவிடாய் வருது இதெல்லாம் பெருசா எடுத்துக்காத அப்படிங்கற ஒரு தாய்மையை விதைச்சிருக்காங்க.

 

மாதவிடாய் ஓட அந்த ஆண் பல வருஷமா வாழ்ந்துட்டுதான் இருந்திருக்காரு.

 

இது மாதிரி இந்த உலகத்துல எத்தனையோ ஆண்கள் என்று அழைக்கக்கூடிய இடைப்பாலினத்தவர்கள் தன்னோட ஆண்குறி வழியா மாதம் மாதம் மாதவிடாய் போக்க அனுபவிச்சிட்டு தான் வராங்க .

 

 

ஒரு பெண்ணுக்கு உண்டான அந்த நாப்கின்ஸ் ஆணுக்கு வரும் மாதவிடாய எப்பயுமே சரி செஞ்சு விடாதன்னு தான் சொல்றாங்க.

 

 

ஏன்னா அனைத்து நஆப்பஇன்களஉம் பெண்ணுறுப்பை பொறுத்து வடிவமைக்கப்பட்டிருகு.

 

ஆனா என்னைக்கும் ஆண்குறிக்கு ஏத்த மாதிரியான நாப்கின்ன பத்தி அவங்கள யோசிச்சி இருக்கவே மாட்டாங்க .

 

 

இந்த மாதிரியான பாலினத்தோர்களும் இந்த உலகத்துல இருக்காங்கன்னு நீங்க இன்னும் தெளிவாக தேடி புரிஞ்சுகிட்டே அவங்கள மதிப்பீங்கனு நம்புகிறேன்.

 

 

தோழர் டயானா

 

 

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன