மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் (GRH) திருநர் மக்களுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சைகளை பெரிய அளவில் மேற்கொண்டு வருவதோடு, மாநிலத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளிலும் இது செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார்.
GRH யில் புதிய உள்கட்டமைப்பைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில மாதங்களில் 207 திருநங்கைகளுக்கு உலகத்தர சிகிச்சை அரசு அளித்துள்ளது என்றார். “இதில் 44 நபர்களுக்கு பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை இலவசமாக செய்துள்ளது,” என்றும் அவர் கூறினார்
குறுகிய காலத்தில் GRH செய்த பெரிய சாதனை என்று கூறிய அமைச்சர், இது போன்ற மருத்துவமனைகள் இல்லையெனில் ஏழை திருநர் மக்கள் அறுவை சிகிச்சைகளுக்காக மும்பை அல்லது தாய்லாந்துக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று கூறினார்.
இத்தகைய கூடுதல் வசதிகள் வழங்கப்படுவதில் GRH முன்னோடியாக இருப்பதாகக் கூறிய திரு. சுப்ரமணியன், இனி மாநிலம் முழுவதும் உள்ள பல அரசு மருத்துவமனைகளிலும் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வர். சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இந்த விவகாரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் கூறினார்.
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏ.ரத்னவேல் கூறுகையில், பேராசிரியர் டாக்டர் பி. சுரேஷ் குமார் தலைமையிலான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை(plastic surgery) குழுவால் 40 திருநம்பிகளுக்கு (பெண் உடலில் இருந்து ஆணாக மாறுதல்) மார்பக நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
GRH எதிர்காலத்தில் திருநங்கைகளுக்கான(ஆண் உடலிலிருந்து இருந்து பெண்களாக மாறுதல்) நபர்களுக்கு மார்பக பொருத்துதலை செய்ய திட்டமிட்டுள்ளது. திருநர் மக்கள் கிளினிக்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீதர் கூறுகையில், நோயாளிகளுக்கு போதுமான மனநல ஆலோசனைக்குப் பிறகு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என அறிவித்துள்ளார்.
-கிரன் குமார்
