வணக்கம் மாலினி. Pride மாதத்த முன்னிட்டு உங்களோட pride அனுபவத்தை பத்தி நேர்காணல் எடுக்கிறது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களோட முதல் வானவில் சுயமரியாதை பேரணி பத்தின உங்க அனுபவங்களை சொல்லுங்க.
முதல் pride-ல நான் என்னோட சட்டைல சோற்றுக்கத்தாழை ‘Hug Me’-ன்னு சொல்ற மாதிரி ஒரு badge போட்ருந்தேன், அப்றம் face mask போட்ருந்தேன். அப்ப meaning-ன்னுல்லாம் ஏதும் இல்ல. கருப்பு சட்டை போட்டுட்டு, mask போட்டுட்டு கெளம்பியாச்சு. அப்ப ஆடிட்டு இருக்கும்போது தோழர் லீனா மணிமேகலை ‘எதுக்கு mask போட்டுட்டு, கழட்டி தூக்கி எறி’-ன்னு சொன்னாங்க. அந்த கூட்டத்துல ஆடிட்டு இருக்கும்போதே mask-அ தூக்கி வானத்துல எறிஞ்சுட்டு ஆட ஆரம்பிச்சேன். இந்த pride வரை ஆடிட்டே இருக்கேன். இந்த pride ரொம்ப special. நான் 2014-ல முதல் தடவ போகும்போது நெறய பொண்ணுங்க இருந்தது கெடயாது. 8-10 பேருதான் இருந்துருப்பாங்க. அதும் நம்ம நண்பர்களாத்தான் இருந்துருப்பாங்க. ஆனா இந்த pride அளவிட முடியாத அளவுக்கு பெண்களோட பங்களிப்பு இருந்துச்சு. முன்னாடிலாம் transmen, gay men அப்டி ஆண்கள் நெறய இருப்பாங்க. ஆனா lesbian women-ஓ, bisexual women-ஓ பெண்கள் வந்தது ரொம்ப கம்மி அப்பல்லாம். இப்ப கண்கொள்ளாக்காட்சி. அவ்ளோ கூட்டம். அவ்ளோ மக்கள். கிராமத்துல இருந்து ஒரு அப்பா, அம்மா அவங்களோட பதின்பருவத்து பெண்-அ கூட்டிட்டு வந்தாங்க. மேளதாளத்துக்கு நடுல அவங்களும் ஆடிட்டு இருந்தாங்க. அது ரொம்ப inspiring-அ இருந்துச்சு. அப்டி இந்த மாதிரி நிறைய மாற்றங்கள் நான் கலந்துக்கிட்ட முதல் pride-க்கும், இப்ப நடந்த pride-க்கும். என்னயப் பாத்து ‘நீ இதெல்லாம் இப்பவே பேசாத. உன்ன யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. இந்த உரிமைகள்லாம் கிடைக்க இன்னும் 100 வருஷம் ஆகும்’ன்னு சொன்னவங்களுக்கெல்லாம் இப்ப நடக்குற நிகழ்வுகள் தான் பதிலடியா இருக்கு.
Stonewall-ல இருந்து இந்த pride walk ஆரம்பிச்சுச்சுன்னு தெரியும். நம்ம சமூகத்துல, அதாவது சென்னை, கோவை மாதிரி ஊர்கள்ல இந்த pride walk-ஓட அவசியம் என்ன-ன்னு நீங்க நெனைக்குறிங்க?
Pride walk-ஓட அவசியங்கள் 2 இருக்கு. ஒன்னு LGBTQIA+ மக்கள் தங்களோட சுயமரியாதை நடை போடுறது. ரெண்டாவது allyship-அ அதிகப்படுத்துற இடம் இது. ஆதரவாளர்கள், queer மக்களோட நேரடியா சந்திச்சு கொண்டாடுற ஒரு get together மாதிரி, தெரிஞ்சவங்க, தெரியாதவங்க யாராவேணா இருக்கலாம். ஒருத்தர ஒருத்தர் தங்களைக் கொண்டாடிக்குற இடம் தான் இந்த pride walk. எங்கெங்கோ இருந்து pride walk-காகவே சென்னை வந்து ரெண்டு நாள் தங்கி இருந்து இத ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுற மக்கள் அதிகம். வேடந்தாங்கல்ல பறவைகள் எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை ஒன்னுக்கூடும் இல்லையா, அந்த மாதிரியான ஒரு கொண்டாட்டம் தான். ஒன்றுகூடல் ரொம்ப முக்கியம். நான் எப்பயுமே சொல்லுவேன், நம்மல்லாம் சாருண்ய ஒற்றுண்ணிய வாதிகள். சார்ந்து ஒற்றி ஒண்ணா வாழுற மனுஷ சமூகம்தான், பொய்த்துப் போகும்போது நமக்கு தனிமை பெரிய கடவுளா தெரியும். எவ்ளோ முரண்கள் இருந்தாலும் pride-னா ஒண்ணா சேந்து நடந்து போவோம். யாரா இருந்தாலும் நமக்காக நடக்குறதுன்றது பெரிய ஒற்றுமையான விஷயமா நான் பாக்குறேன்.
8 வருஷமா நீங்க கலந்துக்கிட்ட pride-ல உங்களுக்கு மறக்க முடியாத தருணம், மகிழ்ச்சியா இருக்கலாம் இல்லை துன்பமா இருக்கலாம், மறக்க முடியாத pride தருணம் அப்டினு ஏதாவது இருக்கா?
Mask-அ வானத்துல தூக்கி எறிஞ்சுட்டு குத்தாட்டம் போட்டேன். அந்த mask வானத்துல போய்ட்டு கீழ வர்ற வரை வாழ்க்கை அவ்ளோ அழகா இருந்துச்சு.
இன்னும் நெறய மக்கள் பல கரணங்கள்னால நேர்ல pride-ல கலந்துக்க முடியாம அவங்களோட phoneல வீடியோ-ல மட்டும் பாத்துட்டு ஏங்கிட்டு இருக்கவங்க இருக்காங்க. அப்படிப்பட்ட நம் queer சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு pride-ல கலந்துக்கிட்டு நீங்க, இங்க இருந்து என்ன சொல்ல விரும்புறீங்க?
உங்கள்-ல ஒருத்தியோ, ஒருவனோ தான், நான். முதல் pride-ல mask போட்டுட்டு, கூச்ச பட்டுட்டு, சுத்தி இருக்க மக்கள் கூட பேசணும்னு ஆசை இருந்தும் பேசாம தயங்கி, இறுகி நின்னுட்டு, உங்கள மாதிரி கிராமத்துல இருந்தோ இல்ல சென்னைல இருந்தோ செய்திகள்லயும், தொலைக்காட்சிலயும் பாத்துட்டு உக்காந்துட்டு இருந்த ஆள் தான் நானும். கிராமத்துல நான் நானா நடக்கவே யோசிச்சிக்கிட்டு, நெறய தடைகளை உள்ள வெச்சுட்டு இருந்த ஆள் தான் நான். இப்போ இந்த கட்டுரை வழியா உங்ககூட பேசிட்டு இருக்கேன். அவ்ளோதான்.
நெறய பேர் உங்களோட ஆடணும், selfie எடுத்துக்கணும்னுலாம் ஆசைப்படறாங்க. அவங்களுக்கும் நீங்க இதுலயே ஒரு பதில் சொல்லிடுங்க.
நான் கூட இல்லனாலும், நான் உங்கள பாக்கலனாலும், நீங்களும் நானும் ஒன்னா உக்காந்து ஒரு தேநீர் கோப்பை, சிற்றுணவு உண்ணலைனாலும், என் குரல், என் வார்த்தைகள் உங்களோட பயணுச்சிக்கிட்டே இருக்கும்.
ரொம்ப நன்றி மாலினி pride பத்தி பேசினத்துக்கு.
நன்றி. வணக்கம்.
